அ.ந.கந்தசாமியின் ‘மதமாற்றம்’! – செ.கணேசலிங்கன்

– அறிஞர் அ.ந.கந்தசாமியின் ‘மதமாற்றம்’ நாடகம் ‘எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தினால் நூலாக வெளியிடப்பட்டபோது அதற்கு எழுத்தாளர் செ.கணேசலிங்கன் எழுதிய சிறப்புரை இது –


மதமாற்றம் 'நாடக ஆசிரியரான அறிஞர் அ.ந.கந்தசாமிசெ.கணேசலிங்கன்விழாக்களிலும் சடங்குகளிலும் ஆடலும் பாடலும் இயல்பாக ஏற்பட்டன; பின்னர் மதச்சார்பான கதைகளும் கிராமியக் கதைகளும் ஆடியும் நடித்தும் காட்டப்பட்டன. இதுவே இந்திய நாடகத்தின் தோற்றவாயில் என ஆய்வாளர் கூறுவர். கூத்து என்ற கலைவடிவம் தமிழரிடை இதே தோற்றுவாயுடன் ஏற்பட்டது எனக் கூறின் தவறாகாது.. கூத்து, ஆடல் பாடல் சார்ந்தது; நீண்டகாலமாக நிலைபெற்று வந்துள்ளது. ‘கூத்தாட்டவைக் குழாத்தற்றே” என்றார் வள்ளுவர்.

சிலப்பதிகாரமும் கிராமியக் கூத்து வடிவில் பிரபல்யமடைந்திருந்த கதையையே இளங்கோ காவியமாக்கினர் என்பர். “பாட்டிடையிட்ட உரைநடையாக” காவியம் அமைத்திருப்பதும் இக் கருத்தை நிரூபிக்கிறது. புலவர்களாலேயே நாடகம் போன்ற கலை வடிவங்களும் உலகெங்கும் எழுதப்பட்டன என்பர். இளங்கோ, காளிதாசன், சேக்ஸ்பியர் யாவரும் கவிஞர்களே.

இன்றைய நாடகம் என்ற கலைவடிவம் எமக்குப் புதிதே. கலைவடிவங்கள் நாட்டுக்கு நாடு, மொழிக்கு மொழி வேறுபடலாம், உற்பத்தி உறவுக்கேற்ப இவை மாற்றமடையும். உதாரணமாக நவீன காலத்தில் பிரபல்யமடைந்துள்ள நாவல், சிறுகதை என்ற கலை வடிவங்கள் முதலாளித்துவத்தில் – கூலி உழைப்பு உற்பத்தி உறவுக்காலத்தில் எழுந்தவையே. எமது சிறுகதை, நாவல் போன்று இன்றைய நாடகமும் மேல் நாட்டிலிருந்து நாம் பெற்ற கலைவடிவமே. ஆங்கிலத்தின் மூலம் இங்கு நாம் பெற்றபோதும் இன்றைய மேடை நாடகம் ஆங்கிலேயர் ஆரம்பித்ததல்ல. ஹென்றிக் இப்சன் (1826-1906) என்ற நோர்வே நாடகாசிரியர் ஐரோப்பாவிற்குத் தந்த வடிவமே இன்று உலகெங்கும் மேடை நாடக வடிவமாகப் பரவியது; பல்வேறு பரீட் சார்த்தங்களுடன் வளர்ச்சி பெற்று வருகிறது. இங்கிலாந்தில் இப்சனுக்கு முன்னர் நாடக மரபு இருக்கவில்லை என நான் கூறவரவில்லை. சேக்ஸ்பியர் (1564 – 1616) மார்லோ (1564-93) அன்றிருந்த நாடக மரபிற்கு வலுவூட்டியவரே. இன்று வரை நிலை பெற்றுள்ளனர்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 239 : நான் மதிக்கும் இலக்கிய ஆளுமைகள் – எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம்

எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம்இவரது சிறுகதைகள் அடங்கிய `தியானம்` தொகுதி `பூரணி` வெளியீடாகவும்எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் இலங்கையிலிருந்த காலத்திலேயே ‘பூரணி’ சஞ்சிகையின் இணையாசிரியர்களிலொருவராக இருந்தவர். எழுத்தாளர் அமரர் மு.தளையசிங்கத்தின்பால் பெருமதிப்புக் கொண்டவர். கவிதை, கட்டுரை, சிறுகதை மற்றும் மொழிபெயர்ப்பு என்று பன்முக இலக்கியப்பங்களிப்பாற்றி வருபவர். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய இவரது ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கான மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்ப்பவை. சின்னுவ அசுபேயின் ‘Things Fall Apart’ ennum புகழ்பெற்ற நாவலைத் தமிழில் ‘சிதைவுகள்’ என்று மொழிபெயர்த்திருக்கின்றார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலது. `ஆடும் குதிரை` (நற்றிணை பதிப்பகம்) `, ‘இரவில் நான் உன் குதிரை’ என்பன இவரது மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் அடங்கிய குறிப்பிடத்தக்க நூல்கள். இவரது சிறுகதைகள் அடங்கிய `தியானம்` தொகுதி `பூரணி` வெளியீடாகவும், `உள்ளொளி` கவிதத்தொகுப்பு `காலம்` சஞ்சிகை வெளியீடாகவும் வெளிவந்துள்ளன. கனடாவிலிருந்து மாதாமாதம் வெளியாகும் டிலீப்குமாரை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் ‘தாய்வீடு’ பத்திரிகையில் தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வருகின்றார்.

இவர் பல இலக்கிய அமர்வுகளை நடாத்தியிருக்கின்றார். இவர் இலக்கிய அமர்வுகளைத் தலைமையேற்று நடாத்துவதற்கு மிகவும் பொருத்தமான படைப்பாளிகளொருவர். கலை, இலக்கியம் பற்றிய இவரது கருத்துகளில் தத்துவார்த்தரீதியில் எனக்கு மாற்றுக் கருத்துகள் இருப்பினும் , அவற்றையும் மீறி இவரது இலக்கியப் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. விதந்தோடப்பட வேண்டியது.

Continue Reading →

ஐரோப்பியப்பயணத்தொடர் (4): “லந்தினியம்” எனும் “லண்டன்”

– முனைவர் ர.தாரணி அவர்கள் அண்மையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்குப் பயணித்துத் திரும்பியிருக்கின்றார். தனது ஐரோப்பியப்பயண அனுபவங்களை இலக்கியச்சுவை ததும்பும் நடையில் தொடராகப் ‘பதிவுகள்’ இணைய இதழில் எழுதுகின்றார். அப்பயணத்தொடரின் நான்காவது  அத்தியாயம் ‘“லந்தினியம்” எனும் “லண்டன்” என்னும் தலைப்பில் இவ்விதழில் வெளியாகியுள்ளது. – பதிவுகள் –


அத்தியாயம் நான்கு:    “லந்தினியம்” எனும் “லண்டன்”

ஒருவன் லண்டன் வாழ்க்கையில் சலிப்புற்றானாகில், அவனது சொந்த வாழ்க்கையிலேயே   சலிப்புற்று விட்டான் என்று பொருள். (When a man is tired of London, he is tired of life  – Samuel Johnson – )

முனைவர் ர. தாரணிஐரோப்பியப்பயணத்தொடர்தமிழ் நாட்டின் அக்கினிமழையில் இருந்து தப்பி தோகா செல்லும் விமானத்தில் ஜில்லெனக் குளிர் சூழ ஆரம்பித்ததும் உறக்கத்தின் கடவுள் நம்மை ஆக்கிரமிக்க ஆரம்பித்தார். சின்ன தலையணை மற்றும் சிறிய சால்வை இருக்கும் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும். அதை வைத்துக்கொண்டு நன்கு தூங்கலாம். இடையிடையே சாப்பிட குளிர்பானங்கள் அல்லது காபி டீ என கொடுப்பார்கள். நம் இருக்கையின் முன் உள்ள சின்ன மானிட்டர் பெட்டியில் சினிமா படங்கள் தமிழ் படம் உட்பட (ஆனால் குறிப்பிட்ட ஒரு சில படங்கள் மட்டும் – அதில் முக்கியமானது கபாலி), பிற மொழிப் படங்கள், கணினி விளையாட்டு என அனைத்தும் இருக்கும். காதில் ஒரு ஹியர் போன் மாட்டிக்கொண்டு அதைப் பார்க்கலாம். அது வேண்டாம் எனில் ஏரோபிளான் மோட் என்று ஒரு பகுதி இருக்கும். அதைத் தேர்ந்தெடுத்தால் விமானம் பயணம் செய்யும் பாதை, எத்தனை அடி உயரத்தில் பறக்கிறது, எந்தக் கடல் மீது மற்றும் ஊரின் அருகே உள்ளது என விமானத்தின் பல கோண படங்களுடன் தகவல்களை நாம் பார்க்கலாம் கடைசி வரை. இடையில் நம்மூரில் விளம்பரங்கள் காட்டுவது போல் தோகாவில் உள்ள  ஹமாத் பன்னாட்டு விமான நிலையத்தின் சிறப்புகள் பற்றி சிறிய ஒரு படம் காண முடிந்தது. அந்த விளம்பரத்திலேயே அந்த விமான நிலையத்தின் பிரமாண்டம் தென்பட்டது. எனக்கு சிறு ஆறுதல். சரி! ஆறு மணி நேரம் நன்கு இந்த விமான நிலையத்தைச் சுற்றி பார்க்கலாம். என முடிவு செய்து கொண்டேன்.

இவ்வாறாகப் பாதி  உறங்கியும் பாதி தூங்கிய பிரமையிலும் பிரயாணம் செய்து காலை குறித்த நேரத்தில் தோகா வந்தடைந்தோம். விமானப்பயணம் சுகமான ஜில் தட்பவெப்பத்தில் இருந்ததால் ஒரு குறையும் தெரியவில்லை. விமானம் விட்டு வெளியேறி, விமானநிலையம் உள்ளே செல்ல மின்சார ஏறுபடிகளில் மற்ற பிரயாணிகளுடன் ஏறிக்கொண்டிருந்த எங்களுக்க்கோர் அதிர்ச்சி காத்திருந்தது. படிகளுக்கு மேலே ஒரு கத்தார் விமான சேவையைச் சேர்ந்த பெண் ஊழியர் கையில்  அட்டையொன்றில் “லண்டன்” எழுதி அனைத்து பயணிகளுக்கும் கண்ணில் படும் விதமாக வைத்துக்கொண்டு இருந்தார். கூடவே “லண்டன் செல்லும் பயணிகள் யாராவது இருக்கிறீர்களா?” என்று ஆங்கிலத்தில் கேட்டுக்கொண்டிருந்தார்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 238 : சுரதாவும், ஆசிரியப்பாவும்..; கவிதை: ஒரு சிற்றுலகப்பறவையின் பேருலகம்; கூத்தாடி அரசியல்; மனிதாபிமான நோக்கில் அணுகுவோம்!!

கவிஞர் சுரதாஅண்மையில் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் முன்பொருமுறை அமரர்களான சோவுக்கும், கவிஞர் சுரதாவுக்குமிடையில் கவிதை பற்றி நடைபெற்ற வாதப்பிரதிவாதங்களைக் குறிப்பிட்டு, கவிஞர் சுரதா சோவின் கவிதை பற்றிய கூற்றுக்கெதிராக எழுதிய கவிதையினையும் தனது முகநூல் பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தார். ‘பழுதென்ன கண்டீர் என் பாட்டில்?’ சுரதா எழுதிய கவிதையின் இடையில்

“ஆனந்த விகடனில்யான் எழுது கின்ற
ஆசிரியப் பாக்களிலே, எதுகை மோனை
ஊனமுண்டா? ஓட்டையுண்டா? “

என்று குறிப்பிட்டிருப்பார்.

அது பற்றிய என் கருத்தினைப் பின்வருமாறு முன் வைத்திருந்தேன்.அதற்கு கவிக்கோ ஞானச்செல்வன் பதிலளித்திருந்தார். ஒரு பதிவுக்காக அவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

கிரிதரன் நவரத்தினம்: “ஆசிரியப்பாவில் எதுகை, மோனை அவசியமில்லை. இயல்பாக இருந்தால் நல்லது, ஆனால் அவசியமில்லை. ஆசிரியப்பாவில் முக்கியமானது பாவிக்கப்படும் சீர்களும் (பெரும்பாலும் தேமா, புளிமா போன்ற ஈரசைச்சீர்களாக இருக்க வேண்டும்) . தளைகளும் (பெரும்பான்மையாக நேரொன்றிய ஆசிரியத் தளையும் நிரையொன்றிய ஆசிரியத் தளையும் வரவேண்டும் ஆனால் வஞ்சிச்சீர்கள் வரவே கூடாது). எதற்காகக் கவிஞர் சுரதா ‘ஆசிரியப் பாக்களிலே, எதுகை மோனை ஊனமுண்டா? என்று கேட்கின்றார் இங்கே?”

Continue Reading →

ஐரோப்பியப்பயணத்தொடர் (3) : பிரயாண முஸ்தீபுகள்

– முனைவர் ர.தாரணி அவர்கள் அண்மையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்குப் பயணித்துத் திரும்பியிருக்கின்றார். தனது ஐரோப்பியப்பயண அனுபவங்களை இலக்கியச்சுவை ததும்பும் நடையில் தொடராகப் ‘பதிவுகள்’ இணைய இதழில் எழுதுகின்றார். அப்பயணத்தொடரின் மூன்றாவது  அத்தியாயம் ‘பிரயாண முஸ்தீபுகள் ‘ என்னும் தலைப்பில் இவ்விதழில் வெளியாகியுள்ளது. – பதிவுகள் –


“முன்கூட்டியே மனக்கலக்கம் அடைவதே முன்கூட்டியே யோசிப்பதும் திட்டம் வகுப்பதுமாக மாறும்” –  வின்ஸ்டன் சர்ச்சில் [ ” Let our advance worrying become advance thinking and planning. ”  –  Winston Churchill ]

முனைவர் ர. தாரணிஐரோப்பியப்பயணத்தொடர்என் வாழ்வின் மிகப்பெரிய வரப்பிரசாதங்கள் என்றால் என்றும்  நான் முன்வைப்பது என் குடும்பம் மற்றும் என் தொழில். அதிலும் என் பெற்றோர்கள் எனக்குக் கொடுத்த சுதந்திரம் என் தோழிகள் மற்றும் என் காலகட்டத்தில் என்னுடன் இருந்த எத்தனையோ பெண்களுக்கு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. என்னுடைய சிறகுகளை விரித்து சுதந்திரமாக வானவீதியில் பயமின்றிப் பறக்க வழிவகை செய்தவர்கள் அவர்களே. என் அப்பாவின் பயண ஆசையின் வெளிப்பாட்டின் விளைவுதான் நாங்கள் ஒவ்வொரு வருடமும் ஏதாவது புது நாடு செல்லும் பயணங்களின் மூலகாரணம். ஆனால் என் அம்மாவிற்கும் எனது கணவருக்கும் பிரயாணம் செய்வது என்பது விருப்பம் அதிகம் இல்லாத நிகழ்வு. தேவைப்பட்டால் மட்டுமே பயணம் செய்வார்கள். சுற்றுப்பிரயாணம் செய்வதில் அதிக நாட்டம் இல்லாதவர்கள். இந்தக் குணாதிசயத்தில் என் அப்பாவுக்கும் எனக்கும் அவர்கள் வேறுபடுவார்கள். அப்படியே பிரயாணம் மேற்கொண்டாலும் வீட்டுக்கு எப்போது திரும்புவோம் என்ற நினைப்புதான் அதிகம் இருக்கும். ஆனால்  என் அப்பாவின் ‘பாஸ்போர்ட்’ மூன்று புத்தகங்கள் பல நாடுகள் சென்று வந்த காரணத்தால்  பக்கங்கள் முழுதும் ‘ஸ்டாம்ப்’களால் நிரம்பி வழியும். இப்போதும் பயணம் செய்வதில் அவரது ஆர்வம் எள்ளளவும் குறையவில்லை. ஜனவரி மாத வாக்கில் என்னிடம் இந்தக் கோடை விடுமுறைக்கு ஏதாவது நாடு பக்கத்தில் சென்று வரலாம் என்று ஆலோசனை கேட்டார். அதே சமயம்தான் என் ஆராய்ச்சி கட்டுரைக்காக நான் செல்ல திட்டம் வகுத்ததும் சேர்ந்தது. ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பிக்க முடிவு செய்த காரியம் என் கனவு தேசங்களுக்கு செல்ல வழிவகுத்தது என்பதும் விதியின் ஒரு வினை என்றால் மிகையாகாது.

Club7 holidays அனுப்பிய மின்னஞ்சல் இணைப்பில் பல்வேறு விதப் பயணத்திட்டங்கள் அடங்கிய குறிப்புகளும் அந்த பயணங்களுக்காகச் செலுத்த வேண்டிய தொகையும் கொடுக்கப்பட்டு இருந்தன. அதில் முதல் பயணத்திட்டமாக பதினைந்து நாட்கள்  ஒன்பது நாடுகளுக்குப் பயணம் செய்யும் குறிப்பு எனக்கு மிகுந்த ஆசையை உருவாக்கியது. லண்டனில் ஆரம்பித்து பாரிஸ் நகரம் சென்று, பின் பெல்ஜியம், நெதர்லாண்ட்ஸ், ஜெர்மனி வழியாக ஸ்விட்ஸ்ர்லாண்ட் சென்று மூன்று நாட்கள் அங்கே கழித்து, அதன் பின் ஆஸ்ட்ரியா நாட்டுக்குள் கால் பதித்து பின் இத்தாலி,  வாடிகன் சிட்டி மற்றும் ரோம் நகரத்தில் முற்றுப்பெறும் இந்த பிரயாணக் குறிப்பு மிகவும் கவர்ந்தது. இதற்கான தொகை ஒருவருக்க்ச் சுமார் 2  லட்சத்து 40 ஆயிரம் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. என் அப்பாவிடம் இந்தத் திட்டம் பற்றி கூறியபோது இதற்காகத் தொகை அதிகம் செலவு செய்ய வேண்டுமே என்ற தயக்கம் அவருள் இருந்தது. எனக்கும் இது பற்றி ஒரு முடிவு செய்ய அந்தச் சமயம் இயலவில்லை.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 238 : பன்முக ஆற்றல் வாய்ந்த கலைஞர்!

கலைஞர் கருணாநிதிகலைஞர் கருணாநிதியின் தொண்ணூற்று நான்காவது வயதினைக் கொண்டாடுகின்றார்கள். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, அறிஞர் அண்ணா இவர்களைப் போன்றவர்களின் வரலாற்று பன்முகப்பட்டது. அரசியல், கலை, இலக்கியம் எனப்பன்முகமானது. எனவே இவர்களது சமுதாயப்பங்களிப்பு பற்றிய விமர்சனங்களைத் தனியே அரசியலுடன் மட்டும் நிறுத்திவிட முடியாது. அந்த வகையில்தான் நான் கலைஞரின் வரலாற்றை அணுகுகின்றேன்.

அவரது தமிழ்த்திரைப்படத்துறையில் அவரது பங்களிப்பை மறக்க முடியாது. ஒரு காலத்தில் தமிழ்த்திரையுலகைப் பாடல்கள்  ஆட்டிப்படைத்தன. எம்.கே.தியாகராஜா பாகவதர், பி.யு.சின்னப்பா என்று தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் கோலோச்சிய காலகட்டம் அது. பின்னர் தமிழ்த்திரையுலகை வசனங்கள் ஆட்டிப்படைத்தன. இளங்கோவனின் கண்ணகி அதற்கு நல்லதோர் உதாரணம். அதன் பின்னர் தமிழ்த்திரையுலகைக் கலைஞரின் வசனங்கள் ஆட்டிப்படைத்தன. ‘பராசக்தி’ நல்லதோர் உதாரணம். சமுதாயச்சீர்திருத்தக் கருத்துகளைத்தமிழ்த்திரையுலகில் விதைத்தவைத் திமுகவினரின் திரைப்படங்கள். அந்த வகையிலும் சமுதாய அநீதிகளைத் தட்டிகேட்ட ‘பராசக்தி’ போன்ற திரைப்படங்கள் முக்கியமானவை. ‘பூம்புகார்’ திரைப்படமும் அவரது முக்கியமான திரைப்படங்களிலொன்று. தமிழ் நாடகத்துறையிலும் திமுகவினரின் அத்துறைக்கான பங்களிப்பு விரிவாக ஆராயப்பட வேண்டியது. தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியராகவும் கலைஞர் பல முக்கியமான பாடல்களை எழுதியுள்ளார். அவற்றையும் தவிர்ப்பதற்கில்லை.

தமிழ் இலக்கியத்திலும் கலைஞரின் எழுத்து நடை முக்கியமானது. ஒரு காலத்தில் வாசகர்களைக் கட்டிப்போட்ட நடை. அடுக்கு மொழிகள், எதுகை மோனைகளால் நிறைந்த வாசிப்பவர் நெஞ்சினை அள்ளும் நடை அது. கூறும் பொருளைச் சுவையான தமிழில் கூறுவதில் வல்லவர் கலைஞர். தமிழ் இலக்கிய வரலாற்றில் திமுகவினரின் எழுத்துக்கும் ஒரு குறிப்பிட்ட காலப்பங்களிப்பு உண்டு. அவற்றைத்தவிர்க்க முடியாது.

Continue Reading →

அவுஸ்திரேலியா- இலங்கை மாணவர் கல்வி நிதியம்: யாழ்ப்பாணம் – முல்லைத்தீவு – வவுனியா மாவட்ட மாணவர்களுக்கான ஒன்றுகூடலும் நிதிக்கொடுப்பனவும்

அவுஸ்திரேலியாவிலிருந்து  இயங்கும்  இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிபெறும் யாழ்ப்பாணம்,  முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவும் தகவல் அமர்வும் மாணவர் ஒன்றுகூடலும் அண்மையில் நடைபெற்றனஅவுஸ்திரேலியாவிலிருந்து  இயங்கும்  இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிபெறும் யாழ்ப்பாணம்,  முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவும் தகவல் அமர்வும் மாணவர் ஒன்றுகூடலும் அண்மையில் நடைபெற்றன. இலங்கையில் நீடித்த போரில் தந்தையை அல்லது தாயை (குடும்பத்தின் மூல உழைப்பாளியை) இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருக்கும் அன்பர்களின் ஆதரவுடன் உதவிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தினால் இந்த ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டுக்குரிய நிதிக்கொடுப்பனவுகள் வழங்கப்படும் நிகழ்ச்சிகள்  அண்மையில் யாழ்ப்பாணம் அரசாங்க செயலகத்திலும் ( யாழ். கச்சேரி) முல்லைத்தீவில்  விசுவமடுவிலும் வவுனியா வேப்பங்குளத்திலும் நடைபெற்றன. இவற்றில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் பரிபாலன சபை உறுப்பினர்கள் திருவாளர்கள் அ. சதானந்தவேல், முருகபூபதி ஆகியோரும் வருகை தந்து உரையாற்றினர். வன்னியில் 2009 இல் நடந்த இறுதிக்கட்டப்போரில் தந்தையை இழந்த பல மாணவர்களுக்கு இலங்கை மாணவர் கல்வி நிதியம் உதவி வருகின்றது. அத்துடன் ஏற்கனவே கடந்த பலவருடங்களாக வவுனியா மற்றும் யாழ்ப்பாணம்  மாவட்டங்களிலும் கிழக்கு மாகாணத்திலும்  பாதிக்கப்பட்ட  மாணவர்களுக்கு இந்நிதியம் உதவிவருகிறது.

நிதியம் ஆரம்பிக்கப்பட்ட 1988 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உதவிபெற்ற  வவுனியா மாவட்ட  மாணவி செல்வி கிருஷ்ணவேணி சுப்பையா தற்பொழுது தமது கல்வியை நிறைவுசெய்து பட்டதாரியாகி,  வவுனியா மாவட்டம் பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில்  அதிபராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவரும் அண்மையில் வவுனியாவில் நடைபெற்ற மாணவர் ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

Continue Reading →

ஐரோப்பியப்பயணத்தொடர் (2) : மனோவிருப்பத்தின் மூலாதாரம்

– முனைவர் ர.தாரணி அவர்கள் அண்மையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்குப் பயணித்துத் திரும்பியிருக்கின்றார். தனது ஐரோப்பியப்பயண அனுபவங்களை இலக்கியச்சுவை ததும்பும் நடையில் தொடராகப் ‘பதிவுகள்’ இணைய இதழில் எழுதுகின்றார். அப்பயணத்தொடரின் இரண்டாவது  அத்தியாயம் மனோவிருப்பத்தின் மூலாதாரம்’ என்னும் தலைப்பில் இவ்விதழில் வெளியாகியுள்ளது. – பதிவுகள் –


I

“இலக்கியமும், பட்டாம்பூச்சிகளும் மனிதன் அறிந்த இரண்டு இனிமையான உவர்ச்சிகள்” – விளாடிமிர் நபோகோவ் { Literature and butterflies are the two sweetest passions known to man.  – Vladimir Nabokov }

முனைவர் ர. தாரணிஐரோப்பியப்பயணத்தொடர்இலக்கியம் மட்டுமே மிகுந்த இணக்கத்துடன் வாழ்வின் துக்கங்களைப் புறந்தள்ள உதவுகிறது.. கனவுப்பிரதேசங்களில் சுதந்திரமாகச் சஞ்சாரம் செய்ய அனுமதிக்கிறது. தேச எல்லைகள் இலக்கியங்களில் கிடையாது. ஆங்கில கவிஞர்களோ, ரஷ்ய எழுத்தாளர்களோ, ஆப்பிரிக்க நூலாசிரியரோ அல்லது உலகின் எந்த பிரதேசத்தின் குடிமகன் ஆனாலும் இலக்கியம் நமக்கு அவர்களை பாஸ்போர்ட் விசா ஏதுமின்றி நமது கரங்களில் சேர்க்கிறது. அவர்களின் உணர்வுகள் நமக்கு புரிகிறது. ஒரு யூலிஸிஸ் – ஹோமரின் கதாநாயகன் ஆனாலும் சரி, உலகையே தன் வசப்படுத்திய ரோமானிய சீசர், ஆன்டனி போன்ற கதாநாயர்கள் ஆனாலும் சரி, உலகின் மிகச் சிறந்த அழகிகள் என வர்ணிக்கப்பட்ட கிளியோபாட்ரா, ஹெலன் போன்ற பெண்களையும் சரி இலக்கியம் அல்லவா நமக்கு அறிமுகம் செய்து வைத்தது. அதுவும் ஆங்கில இலக்கியப்படிப்பு உலக இலக்கியத்தை, இந்த அகிலத்தையே நம் நேத்ரங்கள் முன் பிரதிபலிக்க செய்யும் மாயக்கண்ணாடி என்பதை எந்த இடத்திலும் ஆணித்தரமாக அடித்துக் கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.

. ஆங்கில இலக்கியம் விருப்பப்பாடம் படிக்க எடுத்ததே ஒரு எதிர்பாராத நிகழ்வு. நான் கல்லூரி படித்த காலங்களில் ஆங்கில இலக்கியம் படிப்பவர்கள் பணக்காரக் குடும்பத்தை சார்ந்த பெண்களாக இருக்கும் அல்லது ஒரு பந்தாவுக்காக எடுத்து படிப்பதற்காக இருக்கும். அதுவும் நான் படித்த பெண்கள் கல்லூரி உயர் மட்ட குடும்பத்து பெண்கள் மட்டுமே அதிக அளவில் படிக்கும் இடம் ஆகும். ஒரு நடுத்தர வர்க்கத்தில் இருந்த நான், எந்த ஒரு இலக்கையும் தீர்மானிக்க முடியாத அந்த வயதில் வேதியியல் படிப்பு இளங்கலையில் படிக்க என் தகப்பனாரின் விருப்பம். இந்த படிப்புக்கு உடனே வேலை கிடைக்கும் என்பது அந்தக் கால ஐதீகம். இன்று உள்ளது போல் அன்று கணினி அறிவியல் மற்றும் ஐடி படிப்புகள் அப்போது கல்லூரிகளில் இல்லாததால் அறிவியல் பாடங்களுக்கு மிகவும் மதிப்பு அதிகம். ஆர்ட்ஸ் வகுப்புகளான ஆங்கில, தமிழ் இலக்கியம், பொருளாதாரம், வரலாறு போன்றவை வேலைவாய்ப்பு கொடுக்காத கல்விப்பிரிவுகள் என்பதும் அன்றைய காலகட்ட சூழ்நிலை. இன்று நிலைமை தலைகீழ்.

வேதியியலில் எவ்வித பிடிப்பும் இல்லாத நான் வேண்டா வெறுப்பாக அந்த வகுப்பில் அமர்ந்து மேற்கூரையையும்,, கூட அமர்ந்து இருக்கும் மாணவிகளையும்  ‘கமெரா’க் கண்கள் சுழல்வது போல் சுற்றி முற்றி பார்த்துக் கொள்வது மட்டுமே கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் செயல். மாணவிகளில் பலர் நல்ல ‘பவர்’ பொருந்திய கண் கண்ணாடிகளுடன் படிப்பில் ஆர்வமாக இருப்பார்கள். இதில் ஈடுபாடு இருப்பதாக என்னால் நடிக்கக் கூட இயலவில்லை. அந்த ஒரு மாதக் காலப் படிப்பில், பகுதி இரண்டு பொது ஆங்கில வகுப்புக்கு ஆங்கில இலக்கிய மாணவிகள் எங்களுடன் சேர்ந்து படிக்க வருவார்கள். அதில் ஒருத்தி எனக்குப் பள்ளித்தோழி. அவள் அப்பா அவள் ஆங்கில இலக்கியம் படித்து ஒரு ‘டிகிரி’ வாங்கினால் போதும் என்ற நோக்கத்தில் அவளை அந்தப் பிரிவில் சேர்த்திருந்தார்.

Continue Reading →

ஐரோப்பியப்பயணத்தொடர் (1) : எல்லைகளை வெல்லவே…. — -மனமும் மனம் சார்ந்த அயல்திணையும்

– முனைவர் ர.தாரணி அவர்கள் அண்மையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்குப் பயணித்துத் திரும்பியிருக்கின்றார். தனது ஐரோப்பியப்பயண அனுபவங்களை இலக்கியச்சுவை ததும்பும் நடையில் தொடராகப் ‘பதிவுகள்’ இணைய இதழில் எழுதுகின்றார். அப்பயணத்தொடரின் முதலாவது அத்தியாயம் ‘எல்லைகளை வெல்லவே…. — -மனமும் மனம் சார்ந்த அயல்திணையும்’ என்னும் தலைப்பில் இவ்விதழில் வெளியாகியுள்ளது. – பதிவுகள் –


எனக்கு வேண்டும் வரங்களை   இசைப்பேன் கேளாய் கணபதி
மனதிற் சலன மில்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின்மவுன
நிலை வந்திடநீ செயல்வேண்டும்
கணக்குஞ் செல்வம் நூறுவயது
இவையும் தரநீ கடவாயே- –  மஹா கவி பாரதியார்

ஒரு சிறு முன்குறிப்பு

முனைவர் ர. தாரணிஐரோப்பியப்பயணத்தொடர்பிள்ளைப்பிராயம் தொடங்கி இன்று வரை காலம் தோறும் இடை விடாமல் மனதில் தோன்றும் ஒரு வினா – யார் வகுத்தது இந்தப் பிரபஞ்ச எல்லைகளை? பள்ளிப்பருவத்தில் உலக வரைபடம் காணுகையில் மனம் மனத்திற்கே எழுப்பிய ஒரு சந்தேகம். கடல்களைப் பிரித்தது யார்? சமுத்திரம் எனவும் மகா சமுத்திரம் எனவும் அதற்கு சக்தி வழங்கியது யார்?  அட்லாஸ் உலக வரைபடம் தவிர்த்து மேலே வானவெளியில் பறக்கும்போது இது ஆசியா இது ஐரோப்பா என எழுதி அங்கே ஒட்டி இருக்குமா? என்ன? தெரியாதே அப்போது. வெளியில் கேட்டால் தப்பாக நினைப்பார்களோ என்ற பயம். இன்றும் அதே நிலைதான். ஆனால் மாற்றம் யாதெனில் இதுவரை நாம் படித்துப் பெற்ற பட்டங்கள் விடை அளிக்காவிடினும் அந்த விடயத்தை தத்துவரீதியாக, இலக்கிய ரீதியாக மற்றும் செயல் முறையாகவும் அணுக வழிவகுத்துள்ளது என்பதில் எள்ளளவும் ஐயப்பாடு இல்லை. அதன் ஒரு வெளிப்பாடே இந்த எழுத்துப்பகிர்வு.

பலமுறை இதைப்பற்றி ஆழ்ந்து சிந்திக்க தொடங்கிய பொழுதுதான் ஓர் உண்மை புலப்பட்டது. புவியியல் சம்பந்தமான அறிவு சிறிதும் மூளையில் எந்த மூலையிலும் தென்படவில்லை என்பது. பள்ளி தேர்வுகளில் சமுத்திர குப்தர் சாம்ராஜ்யமும், அக்பர் எல்லைக்கோடுகளும் மனப்பாடம் செய்து வரைந்து மார்க் வாங்கியாயிற்று. இது அட்லாண்டிக் பெருங்கடல் இது வட அமெரிக்கா என உலக வரைபடத்தில் கலர் அடித்தும் நிரூபித்தாயிற்று. சிறிய கலர் பென்சில்களை வைத்து இந்த வரைபடங்களில் வர்ணம் தீட்டும் போது மனம் தன்னை உலகப்புகழ் பெற்ற ஓவியராக கருதும் என்பது அனைவருக்கும் ஏற்பட்டு இருக்கும் ஒரு மிகச் சிறந்த அனுபவம். அதிலும் கடலுக்கு வர்ணம் அடிக்கும் போது, மனம் துள்ளி குதிக்கும். நீல வர்ணம், வரைபடத்தில் நீண்டு விரிந்து இருக்கும் கடற்பரப்பு, சர சர என ஒரு இலாவகத்துடன் தேய்க்கும்போது பரந்து விரிந்த சமுத்திரமே தன கைக்குள் அடங்கியதாய் ஒரு கற்பனை எழும். கலர் பென்சில்கள் அடங்கிய குப்பியில் நீல வர்ணப் பென்சில் மட்டும்  அடிக்கடி சிறியதாகி விடும் என்பது அனைவர் வாழ்விலும் நடந்திருக்கும் ஒரு நிகழ்வுதான்.    சிறிய வயதில் இதுபற்றிச் சிந்திக்கத் தொடங்கியபோது நம் சிந்தனைகளை வலுப்படுத்த நம் காலத்தில் கூகிள் அல்லது வேறு வலைத்தளங்களோ அதை செயலாகும் இணையத்தள வசதியோ கிடையாது. உலகத்தின் எல்லைகளை வகுத்தது யார் என வெளிப்படையாக அன்று கேட்டு இருந்தால் கிடைத்திருக்கும் ஒரே பதில் என்னவாக இருக்கும் என்றால் “எல்லாரையும் படைத்த கடவுள்தான் உலகையும் படைத்தார்” என்றுதான் இருந்திருக்கும். அந்த கடவுளையே காலண்டரில், சினிமாவில், வரைபடங்களில், கற்றூண்களில் படைப்பவர்கள் ஆயிற்றே நாம். நல்ல வேளை. என் மன ஐயப்பாட்டை நான் யாரிடமும் தெளிவு படுத்திக்கொள்ள முற்படவில்லை. அதற்குக் காரணம் இந்த மாதிரி கேள்வி கேட்கும் நபருக்குக் கொடுக்கப்படும் பட்டம் “அதிகப் பிரசங்கி/” மேலும், ‘இப்படி எல்லாம் தேவை இல்லாம பேசறதை விட்டுட்டு அந்த நேரத்தைப் படிப்பில் செலுத்தினால் நல்ல மார்க் வாங்கி ஸ்கூல்ல முதல் மாணவியாய் இருக்கலாமே’ என்ற இலவச அறிவுரை வேறு கிடைக்கும்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 237 : இயற்கையின் அனர்த்தங்கள் , மானுட அழிவுகள் மற்றும் மானுடரின் சமூக வன்முறைகள் பற்றி..

வாசிப்பும், யோசிப்பும் 237 : இயற்கையின் அனர்த்தங்கள் , மானுட அழிவுகள் மற்றும் மானுடரின் சமூக வன்முறை பற்றி..அண்மையில் தென்னிலங்கையில் நிலச்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களினால் நூற்றுக்கணக்கில் பலர் கொல்லப்பட்டுள்ளார்கள். மானுட அழிவுகள் பற்றி முகநூலில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகள் பல இனரீதியில், இனவாதம் மிக்கவையாக இருப்பது மிகவும் துரதிருஷ்ட்டமானது. மானுட அழிவுகளை மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் அணுகும் பண்பினை நாம் இன்னும் வளர்த்துக்கொள்ளவில்லையென்பதையே இவ்வகையான கருத்துகள் எடுத்துக்காட்டுகின்றன.  மானுடர்கள் தமக்குள் நிலவும் பல்வேறு வகையான பிரிவினைகள் காரணமாக ஏற்படுத்தும் அழிவுகள் காரணமாக நாடோறும் பல்லாயிரக்கணக்கில் மானுடர்கள் பலியாகிக்கொண்டிருக்கின்றார்கள். அவற்றுக்கெதிராக, அனைத்து மானுடர்களின் உரிமைகளுக்காகவும் நீதி கேட்டுப் போராடும் நாம், இயற்கை அழிவுகளினால் பலியாகும் மானுடர்களின் அழிவுகளை இனியாவது மனிதாபிமானத்துடன் அணுகுவோம். மரண வீட்டில் ஏற்பட்ட இழப்புகளை, அவற்றால் துயருறும் உறவுகளை நினைவு கூர்வோம். இயலக்கூடிய உதவிகளைச் செய்வோம்.

இது போல் இன்னுமொரு நிகழ்வு பற்றியும் பலர் தெரிவித்திருந்த கருத்துகள் எவ்வளவுதூரம் நாம் இன்னும் மத, இன ரீதியாகப் பிளவு பட்டிருக்கின்றோம் என்பதை எடுத்துக்காட்டின. திருமலையில் தமிழ்ச்சிறுமிகள் பாலியல் வன்முறைக்குள்ளாகியுள்ளதாகவும், அதனைப்புரிந்தவர்கள் முஸ்லீம் இளைஞர்கள் இருவர் என்றும் வெளியான செய்திகளுக்குக் கருத்துகளைத்தெரிவித்திருந்த பலர் அனைத்து முஸ்லீம் இன மக்களையும், அவர்களது மதத்தினையம் புண்படுத்தும் வகையில் தமது கருத்துகளைத் தெரிவித்திருந்தார்கள். இரு மனிதர்கள் புரிந்த சமூக விரோதச் செயலுக்கு எதிராகக் கருத்துக்கூறுவதற்குப் பதில் தமிழ், முஸ்லீம் மக்களை இன, மதரீதியாகப் பிளவுபடுத்தும் இவ்விதமான கருத்துகளை வெளியிடுவதை அனைவரும் கண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தமிழ்ச் சிறுமிகளுக்கு உரிய நீதி கிடைக்கவேண்டும், அச்சிறுமிகள் மீது வன்முறையினைப்புரிந்தவர்கள் கைது செய்யப்பட்டு, நீதியின் முன் நிறுத்தபட்டுத் தண்டனை வாங்கிக் கொடுக்கப்பட வேண்டும் . இதுவே அனைவரினதும் நோக்கமுமாகவும் இருக்க வேண்டும்.

Continue Reading →