வாசிப்பும், யோசிப்பும் 175: ழகரம் 5 இலக்கிய இதழ் (மலர்) பற்றி… (1)

நன்றி: றஷ்மியின் அ.யேசுராசா ஓவியம் (கோமகன் வலைப்பதிவு)ழகரம் 5 இலக்கிய மலரின் வடிவமைப்பைப் பொறுத்த அளவில் ஓரிரு புறக்கணிக்கத்தக்க குறைபாடுகள் இருந்தாலும், மொத்தத்தில் நிறைவான வடிவமைப்பு. இதுவரை கனடாவில் வெளியான இலக்கிய இதழ்களில் தரத்தில் இதனை முதல் நிலையில் வைப்பதில் எனக்கு எந்தவிதத்தயக்கமுமில்லை. சிறிய குறைபாடுகள் என்றால்.. அதற்கு உதாரணமாக இதழில் வெளியான எனது கட்டுரையான அ.ந.க.வின் ‘மனக்கண்’ கட்டுரையைக் குறிப்பிடலாம். இந்தக் கட்டுரைக்கு ஒரு முக்கியத்துவமுண்டு. அது: இதுவரையில் அ.ந.க.வின் ஒரே நாவலான ‘மனக்கண்’ நாவலுக்கு யாருமே விமர்சனம் எழுதவில்லை என்னைத்தவிர. அதற்கு நாவல் தொடராக வெளிவந்தபோதும் இதுவரையில் நூலாக வெளிவராததும் காரணங்களிலொன்றாக இருக்கலாம்.

இதழில் கட்டுரையில் எனக்கு நாவல் பிடித்திருப்பதற்கு நான்கு காரணங்களைக் குறிப்பிட்டிருப்பேன். அதில் முதல் மூன்று காரணங்களையும் உரிய சிறிது பெரிய , தடித்த எழுத்துருக்களைப்பாவித்து வடிவமைத்திருக்கின்றார்கள். நான்காவது காரணமான ‘நாவல் கூறும் பொருள்’ என்பதற்கும் அவ்விதம் பாவிக்க மறந்து விட்டார்கள். மேலும் கட்டுரையில் ‘மனக்கண்’ நாவலிலிருந்து சில பகுதிகளை உதாரணத்துக்காகப் பாவித்திருக்கிறேன். அப்பகுதிகளை ஏனைய பகுதிகளிலிருந்து சிறிது வேறுபடுத்திக்காட்டியிருக்க வேண்டும். அதனைச்செய்யத்தவறி விட்டார்கள். ஆனால் இந்தக் குறைகள் முன்பே கூறியுள்ளதுபோல் புறக்கணிக்கத்தக்கவை.

மலரின் முதலாவது கட்டுரையான ‘தமிழ்நதி’யின் ‘எழுத்தின் பாலினம்’ இதழின் முக்கியமான கட்டுரைகளிலொன்று. மேனாட்டு இலக்கியத்தில் அன்றிலிருந்து இன்றுவரை, எவ்விதம் பெண் எழுத்தாளர்கள் அவர்கள் பெண்களாக இருக்கின்ற காரணத்தினால் ஆண் பெயர்களில் மறைந்திருந்து எழுதினார்கள், எழுதி வருகின்றார்கள் என்பதை வெளிப்படுத்தும் நல்லதொரு கட்டுரை. கட்டுரை புகழ் பெற்ற ஆண் எழுத்தாளர்கள் பலரால் காலத்துக்குக் காலம் பெண் எழுத்தாளர்கள் எவ்வளவுதூரம் அவர்களது பால் (Gender)  காரணமாகக் கீழத்தரமாக எள்ளி நகையாடப்பட்டிருக்கின்றார்கள் என்பதைக் கட்டுரை உதாரணங்களுடன் வெளிப்படுத்துகிறது.

உதாரணமாக இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான வி.எஸ்.நைபாலின் பின்வரும் கூற்றுடன் கட்டுரை ஆரம்பமாகின்றது:

Continue Reading →

‘ழகரம் 5’ சிற்றிதழ் சஞ்சிகை வெளியீட்டில் எழுத்தாளர் அ.யேசுராசாவுடன் சில நிமிடங்கள்…

எழுத்தாளர் அ.யேசுராசாவுடன் ...எழுத்தாளர் அ.கந்தசாமி அவர்களின் ‘ழகரம்’ சஞ்சிகை தனது ஐந்தாவது இதழுடன் மீண்டும் தனது பயணத்தைப்பல வருடங்களுக்குப் பின்னர் ஆரம்பித்திருக்கின்றது. அரங்கு நிறைந்து நடைபெற்ற நிகழ்வில் எழுத்தாளர்கள் பலரையும் (அ.யேசுராசா, ரதன், குரு அரவிந்தன், கற்சுறா, ப.ஶ்ரீகாந்தன், தேவகாந்தன், அருண்மொழிவர்மன், எஸ்.கே.விக்கினேஸ்வரன், கவிஞர் அவ்வை, கவிஞர் சேரன், பி.விக்கினேஸ்வரன், பொன்னையா விவேகானந்தன், தமிழ்நதி, ஞானம் இலம்பேட், கடல்புத்திரன் , சிவகுமார் (கட்டடக்கலைஞர்), கலா ஈஸ்வரன் (கட்டடக்கலைஞர்), திலீப்குமார், என்.கே.மகாலிங்கம் என்று பலரையும் காண முடிந்தது.


நிகழ்ச்சியின் ஆரம்பத்திலும், இறுதியிலும் சில நிமிடங்களே எழுத்தாளர் அ.யேசுராசாவுடன் உரையாடுவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. மிகவும் இயல்பாக, நீண்ட நாள் அறிந்தவர் ஒருவருடன் உரையாடியது போன்ற உணர்வினை அந்தச்சில நிமிடங்கள் தந்தன. நிகழ்வின் பிரதம பேச்சாளராக அவர் விளங்கினார். சஞ்சிகையின் அட்டைப்பட நாயகனாகவும் அவரே விளங்கினார்.


நிகழ்வில் பலர் உரையாற்றினார்கள். ஆரம்பத்தில்,  நிகழ்வினைத் தலைமை தாங்கி நடத்திய கவிஞரும் பேராசிரியருமான சேரன் வரச் சிறிது தாமதமாகி விட்டதால் அந்த இடத்தை எழுத்தாளர் கங்காதரன் நிரப்பினார். பின்னர் சேரன் வந்து பொறுப்பேற்றி நிகழ்வினைச் சிறப்பாக வழி நடத்தினார். பொன்னையா விவேகானந்தன், ‘காலம்’ செல்வம், உமை, ஞானம் இலம்பேட், என்று நிகழ்வில் உரையாற்றிய பலரும் சிற்றிதழ்கள் பற்றிய தமது எண்ணங்களைப்பகிர்ந்து கொண்டார்கள்.


நிகழ்வின் பிரதம பேச்சாளரான எழுத்தாளர் அ.யேசுராசா சிற்றிதழ்கள் பற்றிய தனது உரையில் தனது இலக்கியச் செயற்பாடுகள் பற்றி ஆரம்பத்திலிருந்து விரிவாகவே பல ஆரம்பகாலத்துச் சிற்றிதழ்கள் பற்றி எடுத்துரைத்து உரையினை நிகழ்த்தினார். எழுத்தாளர் நா.பார்த்தசாரதி எவ்விதம் ‘தீபம்’ சிற்றிதழினைத் தனித்துத் தொடங்கினார் என்பது பற்றியும், எவ்விதம் இவ்வகையான சிற்றிதழ்கள் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன என்பது பற்றியும், இவற்றை பேரார்வத்துடன் வாசித்த தமது அனுபவங்களையெல்லாம் விபரித்தார்.

Continue Reading →

வ.ந.கிரிதரனின் கவிதைகள் இரண்டு!.

கவிதை: மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ? – வ.ந.கிரிதரன் –

உண்மையென்று ஏதேனுமொன்றுண்டா ?
நான் பார்ப்பது, நீ இருப்பது இதுவெல்லாம்
உண்மையென்று எவ்விதம் நான் நம்புவது ?
நீயே சொல். நீ சொல்கின்றாய் நீ இருக்கிறாயென்று.உண்மையாக
நீ இருக்கின்றாயென்று.
என்னை விட்டுத் தனியாக எப்பொழுதுமே
இருப்பதாக நீ கூறுகின்றாய்.
எவ்விதம் நம்புவது.

Continue Reading →

கவிதை: எழுத்தாளர் கீதம்! – அறிஞர் அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) –

எழுத்தாளர் கீதம்!

– அறிஞர் அ.ந.கந்தசாமி –

அறிஞர் அ.ந.கந்தசாமி

[ ‘புதுமை இலக்கியம் பாரதி நூற்றாண்டு முன்னோடி மலரினை ‘நூலகம்’ தளத்தில் வாசிக்கக் கிடைத்தது. அதில் முதற்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்த அறிஞர் அ.ந.கந்தசாமியின் ‘எழுத்தாளர் கீதம்’ கவிதையினை இங்கு பதிவு செய்கின்றேன். இக்கவிதையானது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1962இல் நடத்திய அகில இலங்கைத் தமிழ் எழுத்தாளர் பொதுமாநாட்டை ஒட்டி அமரர் அ.ந.கந்தசாமி அவர்களால் இயற்றப்பெற்றது. ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் அறிஞர் அ.ந.க.வின் பங்களிப்பு பன்முகப்பட்டது. கவிதை, சிறுகதை, நாடகம், நாவல், மொழிபெயர்ப்பு, விமர்சனம்  பரந்துபட்டது. ‘துறவியும் குஷ்ட்டரோகியும்’, ‘எதிர்காலச்சித்தன் பாடல்’, ‘கடவுள் என் சோரநாயகன்’ போன்ற கவிதைகள் முக்கியமானவை. ]


சங்கு முழங்குது! சங்கு முழங்குது!
சங்கு முழங்குது கேள் – புதுமைச்
சங்கு முழங்குது கேள்.
எழுத்தெனும் சங்கம்
ஒலித்திடுகின்றது.
உழுத்திடும் உலகம் ஒழிந்திடவே –
சங்கு முழங்குது.               – சங்கு முழங்குது

சுரண்டல் மிகுந்தது, சூழ்ச்சி
நிறைந்தது
இருண்ட இச்சமுதாயம்!
வரண்டு கிடந்திடு மக்களின் துன்ப
வதைகள் ஒழித்திடுவோம்!
திரண்டிவண் எழுவீர் பேனா மன்னர்
தீரமுடன் நீரே – கலைச்
சிற்பிகளே! எம் எழுத்தாற் பற்பல
அற்புதம் செய்திடுவோம்! – புது
அமைப்பும் நிறுவிடுவோம்.            – சங்கு முழங்குது

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 174: செங்கை ஆழியானின் ‘நந்திக்கடல்’;

செங்கை ஆழியானின் ‘நந்திக்கடல்’

செங்கை ஆழியானின் 'நந்திக்கடல்'செங்கை ஆழியானின் ‘நந்திக்கடல்’ நாவல் அவரது முதலாவது நாவல். ‘கலைச்செல்வி’ நாவல் போட்டியில் பாராட்டுப்பெற்ற நாவல். பின்னர் யாழ் இலக்கிய வட்ட வெளியீடாக நூலாக வெளிவந்த நூல். என் மாணவப்பருவத்தில் நான் வாங்கி வைத்திருந்த இலங்கையைச்சேர்ந்த வரலாற்று நாவல்களிலொன்று ‘நந்திக்கடல்’ . அதனை செங்கை ஆழியானின் தமையனாரான புதுமைலோலனின் ‘அன்பு புத்தகசாலை’யில் வாங்கியிருந்தேன். அடுத்த வரலாற்று நாவல் வ.அ.இராசரத்தினத்தின் ‘கிரெளஞ்சப்பறவைகள்’. ஒரு ஞாபகத்துக்காக இந்த நந்திக்கடல் நாவலைத் தேடிக்கொண்டிருந்தேன். இந்த நாவல் யாழ்ப்பாண இராச்சியத்தைப் பின்னணியாகக் கொண்டு , சங்கிலிகுமாரனை நாயகனாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்.

ஒருமுறை நூலகம் கோபி நூலகம் பற்றிய பதிவினையிட்டிருந்தபோது அந்நூலைப்பற்றியும் தெரிவித்திருந்தேன். உடனேயே ‘நந்திக்கடல்’ யாரிடமாவது இருந்தால் நூலகத்துக்குத் தந்து உதவவும் என்று அவர் முகநூலில் அறிவித்திருந்தார். அண்மையில் அவரிடமிருந்து வந்த தகவலில் மகிழ்ச்சிக்குரிய விடமொன்றிருந்தது. அது: ‘தற்போது நூலகத்தில் ‘நந்திக்கடல்’ நூல் வாசிக்கக் கிடைக்கிறது என்பதுதான்.

ஈழத்து எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் இன்னும் நூலுருப்பெறாமல் பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் முடங்கிக் கிடக்கின்றன. அவையெல்லாம் படிப்படியாக ‘நூலகம்’ தளத்தில் பதிவேற்றப்பட்டு வருகின்றன ( ‘மறுமலர்ச்சி’, ‘கலைச்செல்வி’ இதழ்கள் உட்பட).

இவ்விதமாக ‘நூலகம்’ தளமானது ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் ஆவணச்சுரங்கமாக உருமாறிக்கொண்டிருக்கின்றது. இலங்கைப்பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையில் கல்வி கற்கும் பட்டப்படிப்பு மாணவர்களை அவர்களை வழி நடாத்தும் பேராசிரியர்கள் ‘நூலகம்’ போன்ற தளங்களைப்பாவித்து, ஈழத்துத்தமிழ்ப்படைப்பாளிகள் பற்றி, ஈழத்தில் வெளியான தமிழ் நூல்கள், சஞ்சிகைகள் பற்றி ஆய்வுகளைச்செய்யத்தூண்ட வேண்டும். அவ்விதம் செய்யப்படும் ஆய்வுகளை நூலாக வெளியிட வேண்டும். அவ்விதம் செய்தால் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு மிகுந்த வளம் சேர்த்ததாக அவ்வாய்வுகள் அமையும்.

Continue Reading →

அவுஸ்திரேலியா – சிட்னியில் முதியோர் இல்லத்தில் நனவிடை தோயும் கல்விமான்! தமிழ் உலகில் கொண்டாடப்படவேண்டிய தகைமைசார் பேராசிரியர் பொன். பூலோகசிங்கம்

அவுஸ்திரேலியா - சிட்னியில் முதியோர் இல்லத்தில் நனவிடை தோயும் கல்விமான்! தமிழ்  உலகில்  கொண்டாடப்படவேண்டிய  தகைமைசார் பேராசிரியர்   பொன். பூலோகசிங்கம்                               எங்கள்  நாவலர்,  ” வசனநடை  கைவந்த  வல்லாளர்  ஆறுமுகநாவலர் ” –  என்று  அறிந்திருக்கின்றோம்.   தமிழ்நாட்டில்  கடலூரில்  ஒரு காலத்தில்   வள்ளலார்  சுவாமிகளுக்கு  எதிராக  நீதிமன்றில்  அவர்  வழக்காடியதையும்  அறிந்திருப்போம். ஆனால்,  அவர்  தமது  இளமைக்காலத்தில்  கோபமும்  மூர்க்க  குணமும் கொண்டவர்   என்பதை  அறிந்திருப்போமா  ?  தமது  உறவினர்  மீது  தமக்கு வந்த  கோபத்தை  வெளிப்படுத்துவதற்கு    ஒரு  கத்தியை  எடுத்துக்கொண்டு அவர்   துரத்திய  கதை  எத்தனைபேருக்குத் தெரியும்  ?  ஆறுமுகநாவலர்  நூற்றாண்டு  இலங்கையில்  நாடுதழுவிய  ரீதியில் கொண்டாடப்பட்டவேளையில்   நடைபெற்ற  விழாக்களில் உரைநிகழ்த்தியவர்தான்  அந்த  சுவாரஸ்யத்தை  வெளிப்படுத்தினார். அவர்தான்   தகைமைசார்  பேராசிரியர்  பொன். பூலோகசிங்கம். இவ்வாறு   கூட்டங்களிலும்  விழாக்கள்  மற்றும்  சந்திப்புகளிலும்  பல சுவாரஸ்யங்களை  அவிழ்த்து  கலகலப்பூட்டும்  பூலோகசிங்கம்  அவர்கள் தற்பொழுது   அவுஸ்திரேலியா,  சிட்னியில்  ஒரு  முதியோர்  பராமரிப்பு நிலையத்தில்  கட்டிலில்   சயனித்தவாறு  கடந்த  காலங்களை  நனவிடை தோய்ந்துகொண்டிருக்கிறார். ஒவ்வொரு   மனிதர்  வாழ்விலும்  முதுமை  வரும்.  அந்த  முதுமை  மேலும் இரண்டு   மைகளையும்  அழைத்துக்கொண்டு  அருகிலிருந்து  உறவாடும். அவைதான்   தனிமை – இயலாமை. அந்தத்தனிமையும்  எழுதமுடியாதிருக்கும்  இயலாமையும்தான்  இன்று அவரை  வாட்டிக்கொண்டிருக்கின்றன.

பூலோகசிங்கமும்  அங்கதச்சுவையுடன்  உரத்துச்சிரித்து  மகிழ்வூட்டுபவர். ஆறுமுகநாவலரைப்பற்றி  நாம்  அறியாத  பல  பக்கங்களை,  அவரது நூற்றாண்டு   காலத்தில்  தான்  பேசிய  மேடைகளில்  சொன்னவர். ஒரு  சமயம்  கடும்கோபத்துடன்  தமது  உறவினர்  ஒருவரை வெட்டுவதற்காக  ஒரு  வெட்டுக்கத்தியுடன்  நாவலர்  ஓடியிருக்கும் செய்தியைச்சொல்லி,   தனது  பேச்சுக்களினால்  எங்களை  சிலிர்க்கச்செய்த சிங்கம்,  தற்போது  நான்கு  சுவர்களுக்குள்  அமர்ந்து,   தான்  கடந்தவந்த  பொற்காலங்களை  நினைத்துக்கொண்டிருக்கிறது.  சிலவருடங்களுக்கு   முன்னர்  சிட்னியில்  ஒரு  நாள்  வெளியே நடந்துசென்றபோது , எதிர்பாராதவிதமாக  தடுக்கியோ  மயங்கியோ விழுந்திருக்கிறார்.   அதனைத் தொடர்ந்து  தீவிர  சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு,  படிப்படியாக  தேறியிருந்தாலும்,  பவளவிழா நெருங்கியிருந்த   காலப்பகுதியில்  விதியானது  தன்னை  இப்படி முடங்கியிருக்கச்செய்துவிட்டதே   என்ற  கவலையையும்  ஐந்து  ஆண்டுகளுக்கு முன்னர்  கடந்துவிட்டார்.

Continue Reading →

நூல் அறிமுகம்: இளந்தளிர் சிறுவர் கதைகள் நூல் பற்றிய பார்வை

நூல் அறிமுகம்: இளந்தளிர் சிறுவர் கதைகள் நூல் பற்றிய பார்வைபாடசாலை காலத்து நினைவலைகள் எம் நெஞ்சுக்குள் அலையாக அடிக்கும் போது ஏற்படும் பரவச நிலை வார்த்தைகளில் சொல்ல முடியாதவொன்று. அக்காலத்தில் நம்முடனிருந்த நண்பர்கள், நம் ஆசிரியர்கள், சக மாணவர்கள் என எல்லோருமே எம் இதயத்தின் மூலையில் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள். நினைத்தாலும் மீண்டும் பாடசாலை வாழ்க்கைக்கு மீண்டுவிட முடியாத யதார்த்தம் நம் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், ஆசிரியர்கள் அந்த அதிர்ஷ்டத்தை அடைந்து விடுகின்றார்கள் என்பதுதான் நிதர்சனம்.

மாணவர்களுடனேயே நேரகாலம் போவதும், அவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு துணை புரிவதும், அவர்களது வளர்ச்சிக்காக உழைப்பதும் ஆசிரியர்களின் தலையாய கடமையாகவே மாறிவிடுகின்றது எனலாம். அவ்வாறு மாணவர்கள் மீது அதிக கரிசனை கொண்ட ஆசிரியர்கள் படைப்பிலக்கியத் துறையில் ஈடுபடும்போது ஒவ்வொரு மாணவரினதும் ஒவ்வொரு போக்குகளையும் கதையின் கருக்களாக மாற்ற முடியும். அவை வாசிக்கின்ற ஏனையவர்களின் மனதில் சிறிய அதிர்வலைகளை ஏற்படுத்த முடியும்.

குருநாகலை மாவட்டத்தைச் சேர்ந்த சியம்பலகஸ்கொட்டுவையைப் பிறப்பிடமாகவும், இஹல கினியமயைப் வசிப்பிடமாகவும் கொண்ட பஸீலா அமீர் என்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் இளந்தளிர் எனும் பெயரில் சிறுவர் கதை நூலை வெளியிட்டிருக்கின்றார். இவர் ஏற்கனவே அமுது என்ற சிறுவர் உருவகக் கதை நூலொன்றை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஈரமுள்ள நெஞ்சம், மனித நேயம், முயன்றால் முடியும், நழுவிய சந்தர்ப்பம், ஒழிந்தது பிடிவாதம், பெருநாள் வந்தது, பிறந்தநாள் பரிசு, ரவியின் ஆசை, திருந்திய உள்ளம், தோழியர் மூவர் ஆகிய 10 கதைகளை உள்ளடக்கி 44 பக்கங்களில் அமைந்துள்ள இளந்தளிர் எனும் இந்த நூலுக்கு ஆசியுரை வழங்கியிருக்கும் சட்டத்தரணி ஏ.எஸ்.எம். மின்வர் நூலாசிரியர் பற்றி கீழுள்ளவாறு குறிப்பிடுகின்றார்.

தனது சிறுவயது முதற்கொண்டு  கல்வியோடு கலைத் துறையிலும் ஆர்வம் காட்டி வரும் இந்நூலாசிரியை தனது திறமைகளை தன்னில் முடக்கிக்கொள்ளாது வளரும் சிறார்களின் திறன்களை மேலோங்கச் செய்ய வேண்டும் என்ற பரந்த நோக்குடன் செயற்படுபவர். பிறந்து வளர்ந்து, வாழ்ந்து, வெறுமனே மறைந்து போவதை விரும்பாது தன்னால் தன் சமூகம் நலன்பெற வேண்டும் என்ற நன்நோக்கில் இவ்வாசிரியை மேற்கொண்டு வரும் பணிகள், முயற்சிகள் பாராட்டத்தக்கதே.

தனது சூழலில் அன்றாடம் நிகழ்பவற்றையும், சந்திப்பவைகளையும், தன் மனதில் ஆழப் பதிந்து தடம் பதித்த ஞாபகங்களையும் சிறுவர் விரும்பத்தக்க வகையில் இரசனையுடனும் சுவாரஷ்யமாகவும் குட்டிக் கதைகளாக சிறப்பாக வடிவமைத்துள்ளார். தன் வாழ்நாளில் பல வருடங்களைப் பள்ளிச் சிறார்களுக்காக அர்ப்பணித்து அவர்களுக்கு அன்பு காட்டி ஆதரவு வழங்கி அழகிய முறையில் தன்னுள்ளம் திருப்தி காண அறிவமுதமூட்டி நல்லதொரு வழிகாட்டியாகத் திகழ்ந்து ஓய்வு பெற்றவர். என்றாலும் தனது மெய்வருத்தம் பாராது நேரம் பொன்னெனக் கருதி சிறுவர் கதை நூல்களை எழுதி வருவது பாராட்டுக்குரியது.

Continue Reading →

ஆய்வு: தொல்காப்பியர் காட்டும் பிரிவொழுக்க முறைகள்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

ஆண், பெண் ஈர்ப்பு ஒரு மனித வாழ்வியலை உருவாக்கித் தந்துள்ளது. இதன் ஊற்றால் அவர்கள் இன்ப வெள்ளத்தில் மூழ்கிக் குடும்ப வாழ்வைத் தொடங்கி, உற்றார் உறவினர் என்று குடும்பமாகச் சுற்றியிருந்து வாழ்வர். ஒருவரை ஒருவர் நேசித்து, அன்பு சொரிந்து, பாசம் காட்டி, உதவு கரம் கொடுத்து, அறநிலை நின்று வாழ்வதையே விரும்பினர். அவர்கள் எட்டச் சென்று தனித்து வாழார். இவ்வண்ணம் வாழ்ந்து பழகியவர்கள் ஒரு சில நாட்கள்தானும் பிரிந்து சென்று வாழவிரும்பமாட்டார். இனித் தொல்காப்பியu; காட்டும் பிரிவிற்குரிய நிமித்தங்களையும் காண்போம்.

தொல்காப்பியம்.
இடைச் சங்ககாலத்தில் எழுந்த நூலான தொல்காப்பியம் என்ற நூலைத் தொல்காப்பியர் (கி.மு.711) எனும் புகழ் பூத்த புலவர் யாத்துத் தந்தனர். அதில் அவர் பிரிவொழுக்க முறைகளையும்,  பிரிவுக்குரிய நிமித்தங்களையும் காட்டியுள்ளார். கல்வி கற்பதற்காகப் பிரிதல், பகை காரணமாகப் பிரிதல், தூது போவதற்காகப் பிரிதல் ஆகிய மூவகைப் பிரிதல்களுக்கும் தொல்காப்பியச் சூத்திரம் அமைத்துதுத் தந்துள்ளார்.

‘ஓதல் பகையே தூதுஇவை பிரிவே.’ – (பொருள். 27)

மேற் காட்டிய மூவகைப் பிரிதலில், கல்வி கற்பதற்காகப் பிரிதலும், தூது செல்வதற்காகப் பிரிதலும் ஆகிய இரு பிரிதல்களும் உயர்ந்தோராகிய மக்களுக்கே உரியனவாமென்றும் கூறியுள்ளார். குணம், ஒழுக்கம், செல்வம், கல்வி, ஞானம் முதலியன நிறைந்த மக்களே உயர்ந்தவர்களாகக் கணிக்கப்பட்டனர்.

‘ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன.’ – (பொருள். 28)

Continue Reading →

தமிழர் வாழ்வில் சினிமா திரையரங்குகளின் மகாத்மியம்! சிவாஜியின் கனவு தொலைந்தது!. வாரிசுகளின் கனவு விதையாகிறது!

சாந்தி தியேட்டர்முருகபூபதி“பழையன  கழிதலும்  புதியன  புகுதலும்  வழுவல  கால வகையினானே ”   என்பது  நன்னூல்  வாக்கு.  இதனை பனையோலையில்   எழுத்தாணியால்  பதிவுசெய்தவர்  பவனந்தி முனிவர்   என்று   சொல்லப்படுகிறது. வள்ளுவரும்   கம்பரும்  இளங்கோவும்  அவ்வையாரும் ஏட்டுச்சுவடிகளையும்   எழுத்தாணியையும்  ஏந்திக்கொண்டுதான் அமரத்துவமான   எழுத்துக்களைப்படைத்தனர்  என்பதற்காக  இந்த நூற்றாண்டின்  பிள்ளைகள்  பனைமரம்  தேடி அலையவேண்டியதில்லை. அவர்கள்   கணினியிலும்  கைத்தொலைபேசியலும் தட்டிக்கொண்டிருக்கின்றனர். கைத்தொலைபேசியிலேயே  சினிமாப்படங்களையும்  சின்னத்திரை மெகா தொடர்களையும்  விளையாட்டுக்களையும்,  தாம்  விரும்பும் இசை, நடன  நிகழ்ச்சிகள்  உட்பட  அனைத்தை  பொல்லாப்புகளையும் முகநூல்   வம்பு  தும்புகளையும்  பார்த்துக்கொள்ளமுடியும். இனி  கையில்  எடுத்து  வாசிக்க  புத்தகம்  எதற்கு ?  படம்பார்க்க தியேட்டர்தான்   தேவையா? சில  படங்களை  அகலத்திரையில்  பார்த்தால்தான்  திருப்தி எனச்செல்பவர்கள்  விதிவிலக்கு. தொலைக்காட்சியின்   வருகை,  திருட்டு விசிடியின்  தீவிர  ஆக்கிரமிப்பு   முதலான  காரணிகளினால்,  திரையரங்குகள் படிப்படியாக   மூடப்பட்டுவருகின்றன.

இலங்கை,   இந்தியா  உட்பட  வெளிநாடுகளில் வணிகவளாகங்களுக்குள்  சிறிய  திரையரங்குகள்  தோன்றிவிட்டன. ஒரு  வணிக வளாகத்திற்குள்  பிரவேசித்தால்  சின்னச்சின்ன திரையரங்குகளையும்   தரிசிக்கமுடியும். மனைவியுடன்   ஷொப்பிங்  செல்லும்  கணவன்,  மனைவியால் பொறுமை  இழக்கும்  தருணங்களில்  அந்த  அரங்கினுள்  நுழைந்து ஏதாவது  ஒரு  படத்தை  கண்டுகளித்துவிட்டு,  மனைவி  ஷொப்பிங் முடிந்ததும்,  பொருட்களை  காவி வருவதற்கு  செல்லமுடியும். இதுதான்  இன்று  பல  குடும்பங்களில்  நடக்கிறது. வெளிப்புற   படப்பிடிப்புகளினாலும்  காதல்  காட்சிகளுக்காக தயாரிப்பாளர்கள்   வெளிநாடுகளில்  லொகேஷன்  தேடுவதனாலும் இந்தியாவில்  பல  சினிமா  ஸ்ரூடியோக்கள்  மூடுவிழாக்களை சந்தித்தன. தமிழ்நாட்டில்  பிரபல்யமான  எஸ். எஸ். வாசனின்   ஜெமினி,  சேலம் மொடர்ன்   தியேட்டர்ஸ்  சுந்தரத்தின்  பல  ஏக்கர்  நிலப்பரப்புள்ள  ஸ்ரூடியோ,   சென்னை  நெப்டியூன்,  ஏ.எல். ஸ்ரீநிவாசனின்  சாரதா, கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின்  கற்பகம்,  பானுமதியின் பரணி, நாகிரெட்டியின்   விஜயா, வாஹினி,  எம்.ஜி.ஆரின்  சத்தியா   உட்பட சில  சிறிய   ஸ்ரூடியோக்களும்   மூடப்பட்டுவிட்டன. சென்னைக்குச்சென்றால்,  பஸ்பயணிகள்  நடத்துனரிடம்  ஜெமினிக்கு ஒரு  டிக்கட்  என்று  கேட்டு  ஏறி  இறங்கும்  காட்சியை  காணலாம். ஜெமினிக்கு  இன்று  அதுதான்  வாழும்  அடையாளம்.   அந்த புகழ்பெற்ற  ஸ்ரூடியோவிலிருந்துதான்  மகத்தான  வெற்றிப்படங்கள்  ஒளவையார்,  சந்திரலோகா,   வஞ்சிக்கோட்டை  வாலிபன், ஒளிவிளக்கு  என்பன   வெளியாகின.

Continue Reading →

‘குடிவரவாளன்’ பற்றி குப்பிழான் சண்முகம்!; கனடாவில் ‘தாய்வீடு’!

'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவருகிறது வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

எழுத்தாளர் குப்பிழான் சண்முகம் அவர்கள் அண்மையில் தனது முகநூல் பதிவொன்றில் எனது ‘குடிவரவாளன்’ நாவல் பற்றிய தனது கருத்துகளைப்பகிர்ந்திருந்தார். அப்பதிவினை இங்கு நான் ‘பதிவுகள்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

எழுத்தாளர் குப்பிழான் சண்முகத்தின் குறிப்பு!

மே மாதம் 24, இன்று வ.ந. கிரிதரனின் ‘குடிவரவாளன்’ நாவலை வாசித்து முடித்தேன். சட்ட பூர்வமாகக் கனடாவுக்கு புலம் பெயரும் வழியில், எதிர் பாராத விதமாக அமெரிக்காவில் அகதித் தஞ்சம் கோர நேரிடுகிறது. ஒரு வருடம் அமெரிக்காவில் சட்ட பூர்வமற்ற அகதியாக வாழ்ந்த அனுபவங்களை நாவல் பேசுகிறது. புலம்பெயர் அகதி வாழ்வின் வித்தியாசமான அனுபவங்கள், வித்தியாசமான மனிதர்கள்.

எதனாலும் சலிக்காத கதாநாயகனின் உறுதி. இயற்கைக் காட்சிகளின் இரசிப்பு. தமிழ் கவிதைகளினதும்- குறிப்பாக பாரதி- இசை, இயற்கை மீதான ஈடுபாடு.. என விரியும் கதை. ‘ மீண்டும் தொடங்கும் ‘மிடுக்காய்’ தொடரும் வாழ்வு.

Continue Reading →