பேராசிரியர் கைலாசபதி அவர்களின் 29 வது நினைவு தினம் டிசெம்பர் 6.2011. எமது தெற்காசிய சூழலில் செப்டம்பர் 26 என்பது அண்மைக் காலத்தில் வேறொரு வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியாவில் முஸ்லீம் தீவிரவாத தாக்குதலின் நினைவு கூரலுக்குரியது அது. சர்வதேச ரீதியாக செப்டம்பர் 11 என்பது இதுபோல முக்கியத்துவம் பெற்றுள்ளமையை அறிவோம். உலக மேலாதிக்க வாத நாடான அமெரிக்க மீது முஸ்லிம் தீவிர வாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நாள் செப்டம்பர் 11. எமது பிராந்திய மேலாதிக்கவாத நாட்டுக்கும் உலக மேலாதிக்கவாத நாட்டுக்கும் முஸ்லிம் தீவிரவாதம் பிரதான அச்சுறுத்தலாக மாறியுள்ள சூழலில் , இனி உலக செல்நெறி வர்க்க மோதலாக அன்றிப் பண்பாட்டு மோதலாகவே அமையும் , என்ற தர்க்கமும் முன்வைக்கப்பட்டு வருவதை அறிவோம். இலங்கையில் சிங்கள- தமிழ் -முஸ்லிம் -மலையக தேசியவாதப் பிளவில் சமூக வேறுபாடுகள் வலுபெற்றுள்ளது. தமிழியல் இன்று அதிகம் கரிசனைகொல்வதாக வர்க்க அக்கறை இன்றி தலித்தியம் ,பெண்ணியம் ,தேசிய இனப்பிரச்சனை என்பனவே மேலோங்கி உள்ளன.
பேராசிரியர் கைலாசபதி அவர்களின் 29 வது நினைவு தினம் டிசெம்பர் 6.2011. எமது தெற்காசிய சூழலில் செப்டம்பர் 26 என்பது அண்மைக் காலத்தில் வேறொரு வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியாவில் முஸ்லீம் தீவிரவாத தாக்குதலின் நினைவு கூரலுக்குரியது அது. சர்வதேச ரீதியாக செப்டம்பர் 11 என்பது இதுபோல முக்கியத்துவம் பெற்றுள்ளமையை அறிவோம். உலக மேலாதிக்க வாத நாடான அமெரிக்க மீது முஸ்லிம் தீவிர வாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நாள் செப்டம்பர் 11. எமது பிராந்திய மேலாதிக்கவாத நாட்டுக்கும் உலக மேலாதிக்கவாத நாட்டுக்கும் முஸ்லிம் தீவிரவாதம் பிரதான அச்சுறுத்தலாக மாறியுள்ள சூழலில் , இனி உலக செல்நெறி வர்க்க மோதலாக அன்றிப் பண்பாட்டு மோதலாகவே அமையும் , என்ற தர்க்கமும் முன்வைக்கப்பட்டு வருவதை அறிவோம். இலங்கையில் சிங்கள- தமிழ் -முஸ்லிம் -மலையக தேசியவாதப் பிளவில் சமூக வேறுபாடுகள் வலுபெற்றுள்ளது. தமிழியல் இன்று அதிகம் கரிசனைகொல்வதாக வர்க்க அக்கறை இன்றி தலித்தியம் ,பெண்ணியம் ,தேசிய இனப்பிரச்சனை என்பனவே மேலோங்கி உள்ளன.
ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு முக்கியமானதோரிடமுண்டு. இன்று ,85 வயதினைக் கடந்த நிலையிலும், உற்சாகம் குறையாமல் இலக்கியப் பணியாற்றும் அவரது விடா முயற்சியும், சுறுசுறுப்பும் அனைவரையும் வியப்படைய வைப்பன. தீண்டாமைக் கொடுமைக்கெதிராக அடங்கி, ஒடுங்கிச் சோர்ந்து விடாமல், அதன் நச்சுக்கரங்களின் தீண்டுதல்களைக் கண்டு அஞ்சி விடாமல், அத்தீண்டுதல்களையெல்லாம் சவால்களாக ஏற்றுக்கொண்டு, இத்தனை வருடங்களாக ‘மல்லிகை’ என்னும் மாத இதழினைக் கொண்டு வரும் அவரது ஆற்றல் அனைவரையும் பிரமிக்க வைத்துவிடும். ‘மல்லிகை’யையும் ஜீவாவையும் பிரிக்க முடியாது. ‘மல்லிகை ஜீவா’ என்று அழைக்கப்படுவது அவரது இலக்கியப் பங்களிப்பினை நன்கு புலப்படுத்தும். ‘மல்லிகை’ சஞ்சிகை பல இளம் எழுத்தாளர்களுக்குக் கை கொடுத்திருக்கின்றது; இன்றும் அவ்விதமே ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றது. ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த எழுத்தாளர்களை, ஆர்வலர்களை, புரவலர்களை அட்டைப்பட நாயகர்களாக்கிப் பெருமைப்பட்டிருக்கின்றது.
ஹிராகுட்டில் எனக்குப் பரிச்சயமான உலகம், அந்த அணைக்கட்டின் தற்காலிக முகாமில் கிடைத்திருக்கக் கூடிய பரிச்சயங்கள் தான் என்று சொல்ல முடியாது. ஆனால் நேரில் எதிர்ப்படும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பு இருந்தால் அந்த முனைப்பு ஏற்படுத்தும் பரிச்சயங்கள் சாதாரணமாக அந்தந்த சூழல்களில் எதிர்ப்படாத பரிச்சயங்களையும் கூட முன் கொண்டுவந்து நிறுத்தும் என்று தான் சொல்ல வேண்டும். ஹிராகுட்டுக்கு வந்த முதல் வருடம் 1950-ல் புத்தகம் வாங்க என்றால் பக்கத்தில் 10 மைல் தூரத்தில் இருக்கும் ஜில்லா தலைநகரமாகிய சம்பல்பூருக்கு சினிமா பார்க்கப் போகும் போது அங்குள்ள கடைத் தெருவுக்கும் போய் அங்குள்ள ஒரே ஒரு சின்ன கடையையும் எட்டிப் பார்த்து வருவேன்.
காலம் மனித நேயம் மிக்க ஒருவரை மீண்டும் நாம் நினைக்க வைத்துள்ளது. வர்க்கம் சார்ந்து, சாதிய முறைமைகளை எதிர்த்தபடி தனது கற்பனைத் திறத்தால் நம்மையெல்லாம் ஆட்கொண்டவர்தான் அகஸ்தியர். 29/08/1926இல் சவரிமுத்து-அன்னம்மா தம்பதியர்க்கு மகனாக ஆனைக்கோட்டையில் பிறந்தவர். அந்தக் காலத்து எஸ்.எஸ்.சி சாதாரண தரம் வரை கல்வி கற்றிருந்தாலும் அவர் வளர்த்துக்கொண்ட தமிழ் அறிவு அவரை நல்லதொரு படைப்பாளியாக நமக்குத் தந்திருக்கிறது.தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் ஆற்றல் வாய்ந்தவராகவே தன்னை வளர்த்துக் கொண்டார். எழுத்தாற்றலால் தன்னை வளர்த்துக்கொண்டாலும் பலராலும் நேசிக்கப்பட்ட அதே வேளை சிலரால் இருட்டடிப்புக்குள்ளாக்கவும் பட்டதனால் இவரின் எழுத்துக்களை கண்டும் காணாது விட்டதும் பலரின் பார்வைக்குத் தெரியாமல் போய்விட்டார்; பலரிடம் இவர் படைப்புகள் சென்று சேர முடியாது போனது. ஆனாலும் பார்வைக்குக் கிடைத்தவைகள் காத்திரமானதான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை.
ஈழத்தின் பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ். அகஸ்தியரின் 16 ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது. (29. 08.1926 – 08.12.1995) பாரீஸ் தமிழர் கல்வி நிலையம் ஆரம்பிக்கப்பட்டு அதன் வளர்ச்சிப் பணியில் நாம் அதிக அக்கறை கொண்டிருந்த காலங்களில், எமது கல்வி நிறுவனத்தோடு அதிக அக்கறை கொண்டவராக அறிமுகமானவரே திரு.எஸ்.அகஸ்தியர் அவர்கள். ஆரம்பகால ஆண்டுவிழா, மலர் வெளியீட்டுகளிலும் ஆலோசனைகளையும், உதவிகளையும் செய்து எமது வளர்ச்சிப் பாதையில் துணை நின்றார். மனித நேயத்தை நேசித்து அதற்காக வாழ்ந்து மறைந்துவிட்ட ஒரு இலக்கியவாதியின் காலத்தில் அவரது புலம்பெயர் வாழ்வில் நாமும் வாழ்ந்திருக்கின்றோம் என்பதை இங்கு பெருமையோடு நினைவுகூர்ந்து மதிப்பளிக்கு முகமாகவே அவரைப்பற்றிய நிகழ்வுகளைத் தருகின்றேன்.
கொழும்பு; 18.12.2011: பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் “சாஹித்திய இரத்தினம்” விருது பெற்றமைக்காக ‘ஞானம்’ கலை இலக்கியப் பண்ணை நடாத்தும் பாராட்டு விழா! தகவல்: தி. ஞானசேகரன் editor@gnanam.info மேலதிக விபரங்கள் ……
[[எழுத்தாளர் தேவகாந்தனின் ‘கதாகாலம்’ மகாபாரதத்தின் மறுவாசிப்பென்றால் , ‘லங்காபுரம்’ இராமயணத்தினை, குறிப்பாக இராவண கதையினை மறு வாசிப்பு செய்கிறது. இவ்விரு நூல்கள் பற்றிய என்.கே.மகாலிங்கத்தின் கட்டுரையும், கிருத்திகனின் ‘இன்னாத கூறல்’ வலைப்பதிவும் இங்கு ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றன. – பதிவுகள்-] தேவகாந்தனின் கதாகாலம் நூல் அரங்கேற்றம் அல்லது வெளியீடு முதலாவது அமர்வில் நடைபெற்றது. அது சம்பிரதாய பூர்வமாக நடைபெற்ற நிகழ்ச்சி. அதில் நூலைப் பற்றிய குற்றம் குறை காணும் விமர்சனங்களுக்கு இடம் இருக்கக் கூடாது என்று நம்புபவர்கள் இருக்கின்றார்கள். அதனால், இந்த இரண்டாவது அமர்வு. பொதுவாக நடன அரங்கேற்றம் என்று இன்று வழங்கப்படும் சொல்லாடல் அன்று நூல் அரங்கேற்றத்துக்கும் உரித்தானதே.
[வலைப்பதிவுகளிலிருந்து அவ்வப்போது ஆக்கங்கள் ஒரு பதிவுக்காகப் பிரசுரமாகின்றன. அந்த வகையில் எழுத்தாளர் தேவகாந்தனின் இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. – பதிவுகள்] இருபதாம் நூற்றாண்டு ஐரோப்பிய நாவல் இலக்கியத்தின் பின்பாதியினது போக்கினை நிர்ணயித்த முக்கியமான நாவலாகக் கருதப்படும் சிமோன் டி போவுவாவின் ‘அடுத்தவர் குருதி’ (The Blood of others) என்ற தத்துவார்த்த நாவலை அண்மையில்தான் வாசித்தேன். சிமோன் டி போவுவாவின் The Second Sex என்ற இரண்டு தொகுப்பு பெண்ணியச் சிந்தனைபற்றிய முக்கியமான நூலோடு சில காலத்துக்கு முன்னரே தொடர்பு ஏற்பட்டிருந்தபோதும், அவரது படைப்பிலக்கிய நூல்கள்பற்றித் தெரிந்திருந்த நிலையில்கூட, அவரது நாவல்களுள் பிரவேசிப்பதற்கான பெரிய ஆர்வமேதும் என்னிடம் எழுந்திடவில்லை.
[முனைவர் பாரதி ஹரிசங்கர் 2007இல் கனடா வந்திருந்தபொழுது அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது பற்றி ‘பதிவுகள்’ இதழில் வெளியான கட்டுரையும், ‘பதிவுகளி’ல் வெளியான அவரது படைப்புகள் சிலவும் ஒரு பதிவுக்காக இங்கு மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. -பதிவுகள் ]அண்மையில் தமிழகத்திலிருந்து கலாநிதி பாரதி ஹரிசங்கர் கனடாவுக்குக் ‘கனடியக் கற்கைநெறி’க்கான ‘சாஸ்திரி அறக்கட்டளைப்’ புலமைப் பரிசில் பெற்று விஜயம் செய்திருந்ததை ஏற்கனவே பதிவுகள் வாசகர்களுக்கு அறியத் தந்திருந்தோம். அதன் பொருட்டுக் கனடாவின் பல்வேறு நகரங்களுக்கும் சென்றிருந்த பாரதி ஹரிசங்கர் தன் பயணத்தின் இறுதி இலக்காகத் ‘டொராண்டோ’வுக்கும் வந்திருந்தார். ‘டொராண்டோப் பல்கலைக் கழகத்தின் விடுதியில் தங்கியிருந்த அவரை எழுத்தாளர்கள் தேவகாந்தன், டானியல் ஜீவா மற்றும் வ.ந.கிரிதரன் ஆகியோர் சந்தித்தனர். அருகிலிருந்த உணவகமொன்றில் சந்தித்துச் சிறிது நேரம் கலந்துரையாடினர். பாரதி ஹரிசங்கரின் நிகழ்ச்சி நிரல் மற்றும் குறுகிய நேர அறிவிப்பு காரணமாக அவருடனொரு விரிவான கலந்துரையாடலினை ஏற்பாடு செய்ய முடியாது போய்விட்டது. இருந்தாலும் மேற்படி சந்திப்பானது குறுகியதாக அமைந்திருந்தாலும் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.