Two Years After Mullivaikkal – Kiribath Or Paal Soru?

http://www.thesundayleader.lk
Kusal PereraSri Lanka was sent a very confidential message by US Secretary of State Hillary Clinton through Assistant Secretary for Bureau of South and Central Asian Affairs, Robert O’ Blake Jnr. and US Ambassador here in Colombo from 2006 till the war was concluded on the banks of the Nanthikadal lagoon in Mullivaikkal, May 2009. Blake met with the External Affairs Minister one to one in his hotel suite to convey Madam Clinton’s message to President Rajapaksa, say informed sources, after a formal meeting with the Minister and his senior staff. That’s two years after the war when the UN Secretary General’s Advisory Panel Report is held out like a menacing hand. Two years, when most post war issues should have been managed and brought under control. That responsibility ignored with PR manipulations beyond the shores of Sri Lanka, professorial glib talk to satisfy the gullible middle class here, Sinhala heroes’ playing for local media and vernacular rhetoric aired for the poor and the innocent Sinhala majority, the world of the Rajapaksas revolve with increasing war crimes accusations. Taking umbrage against the UN and its SG instead of resolving issues at home, has only allowed piling of carefully sifted and documented evidence against this regime, during the past two years.

Continue Reading →

‘சிறகு முளைத்த தீயாக’ நூல் அறிமுக அரங்கு

பருத்தித்துறை அறிவோர் கூடலின் ஏற்பாட்டில் மட்டுவில் ஞானகுமாரனின் ‘சிறகு முளைத்த தீயாக’ கவிதை நூலின் அறிமுகவிழா 14.05.2011 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு யாழ்ப்பாணம் ப.நோ.கூ. சங்க…

Continue Reading →

குரு அரவிந்தனின் குறுநாவலுக்குக் ‘கலைமகள்’ விருது!

 இவ்வருடம் (2011) சர்வதேச ரீதியாக நடந்த தமிழகத்தில் இருந்து வெளிவரும் கலைமகள் குறுநாவல் போட்டியில் ஈழத்து எழுத்தாளர் குரு அரவிந்தனின் ‘தாயுமானவர்’ என்ற குறுநாவல் இரண்டாவது பரிசைப்…

Continue Reading →

பார்வதி அம்மா: அவமதிக்கப்பட்ட மரணம்

மீள்பிரசுரம்: காலச்சுவடு.காம்
பார்வதி அம்மா நோய்வாய்ப்பட்ட நிலையிலிருந்த, பார்வதி அம்மா என அழைக்கப்பட்ட வல்லிபுரம் பார்வதி, பெப்ரவரி இருபதாம் திகதி யாழ்ப்பாணத்தில் இறந்துபோனார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார். இவருடைய கணவர் இறுதி யுத்தத்துக்குப் பின்னர் கைதுசெய்யப்பட்டு, பனாகொட இராணுவத் தடுப்பு முகாமில் வைத்து மரணித்துப் போயிருந்தார். இந்தப் பெற்றோர் எந்தவொரு அரசியலிலும் ஈடுபட்டவர்களல்ல. இந்துமத சம்பிரதாயப்படி, இறந்தவர்களை எரித்ததன் பிற்பாடு எஞ்சும் அவர்களது அஸ்தியைத் தண்ணீரில் மிதக்கவிட வேண்டும். அதன் பிரகாரம் கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி காலை அன்னாரது உறவினர்கள் அஸ்தியை எடுத்துவர மயானத்துக்குச் சென்றனர். முந்தைய நாள் இரவு பத்து மணிவரை அங்கே கூடியிருந்த அவர்கள், உடலானது சம்பூரணமாக எரிந்து முடிந்ததன் பின்னரே அங்கிருந்தும் சென்றிருந்தார்கள். பெரும்பான்மையான சிங்கள மக்களுக்கு அறியக் கிடைத்திராத, ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவமொன்று அவர்களுக்குக் காணக் கிடைத்தது அப்போதுதான். சுடலையில் அஸ்திக்குப் பதிலாகக் காணக் கிடைத்தது, அந்தத் தாயின் அஸ்தி அழிந்துசெல்லும்வண்ணம் அக்கல்லறையின் மீது போடப்பட்டிருந்த, சுட்டுக்கொல்லப்பட்ட நாய்கள் மூன்றினது சடலங்களே. அத்தோடு அந்த அஸ்தி விசிறப்பட்டுப் பரவிச் செல்லும்வண்ணம் அஸ்தி இருந்த இடத்தின் மீது ஜீப் வண்டி ஏறிச் சென்றது புலப்படும்படியான அடையாளங்களும் எஞ்சியிருந்தன.

Continue Reading →

தொடர் நாவல்: குடிவரவாளன் (AN IMMIGRANT) – வ.ந.கிரிதரன் — (20 – 23)

அத்தியாயம் இருபது: இந்திராவின் சந்தேகம்!

தொடர் நாவல்: அமெரிக்கா II - வ.ந.கிரிதரன் -அடுத்த மூன்று வாரங்களும் இளங்கோவுக்கும், அருள்ராசாவுக்கும் ஹரிபாபுவுடன் கழிந்தது. ஹரிபாபு கூறியபடியே அவர்களுக்குமொரு நடைபாதைக் கடையினை கிறிஸ்தோபர் வீதியும், நான்காம் வீதி மேற்கும் சந்திக்குமிடத்தில் போட்டுக் கொடுத்துவிட்டான். ஹரிபாபு, அவன் மனைவி மற்றும் ஹென்றி எல்லோரும் தமது பழைய இடங்களிலேயே தங்கள் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஹரிபாபுவுக்கு நண்பர்களிருவரும் வேடிக்கையாக வைத்த பெயர் ‘நடுத்தெரு நாராயணன்’. நடுத்தெரு நாராயணன் கடையிலிருந்து நடைபாதைக்கு வந்தவன். அவனது கடையிலேயே அவனது விற்பனைப் பொருட்கள் யாவுமிருந்தன. நடுத்தெரு நாராயணன் நடைபாதை வியாபாரத்தின் பல்வேறு விதமான நெளிவு சுளிவுகளையும் கற்றுத்தேர்ந்த கில்லாடி. இந்த விடயத்தில் சில சமயங்களில் நியூயார்க் காவற்துறைக்குக் கண்களில் விரல்களை விட்டு ஆட்டிடும் வல்லமை பெற்றிருந்த அவனிடமிருந்து படிக்க வேண்டிய பாடங்கள் பல இருந்தன. அவ்விதம்தான் இளங்கோ அவனைப்பற்றி எண்ணிக் கொண்டான்.

சில சமயங்களில் வார இறுதி நாட்களில் நியூயார்க் நகரின் சில வீதிகளை மூடி விட்டு அங்கு நடைபாதை வியாபாரிகளைப் பொருட்கள் விற்பதற்கு அனுமதி வழங்குவார்கள். அத்தகைய சமயங்களில் அவ்விதம் மூடப்பட்ட வீதிகளில் வைத்து விற்பதற்கு அதிக அளவில் கட்டணத்தைச் மாநகரசபைக்குச் செலுத்த வேண்டும். இத்தகைய சமயங்களில் நடுத்தெரு நாராயணனான ஹரிபாபு வின் செயற்திட்டம் பின்வருமாறிருக்கும்:

Continue Reading →

தொடர் நாவல்: குடிவரவாளன் (AN IMMIGRANT) – வ.ந.கிரிதரன் — (20 – 23)

அத்தியாயம் இருபது: இந்திராவின் சந்தேகம்!

தொடர் நாவல்: அமெரிக்கா II - வ.ந.கிரிதரன் -அடுத்த மூன்று வாரங்களும் இளங்கோவுக்கும், அருள்ராசாவுக்கும் ஹரிபாபுவுடன் கழிந்தது. ஹரிபாபு கூறியபடியே அவர்களுக்குமொரு நடைபாதைக் கடையினை கிறிஸ்தோபர் வீதியும், நான்காம் வீதி மேற்கும் சந்திக்குமிடத்தில் போட்டுக் கொடுத்துவிட்டான். ஹரிபாபு, அவன் மனைவி மற்றும் ஹென்றி எல்லோரும் தமது பழைய இடங்களிலேயே தங்கள் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஹரிபாபுவுக்கு நண்பர்களிருவரும் வேடிக்கையாக வைத்த பெயர் ‘நடுத்தெரு நாராயணன்’. நடுத்தெரு நாராயணன் கடையிலிருந்து நடைபாதைக்கு வந்தவன். அவனது கடையிலேயே அவனது விற்பனைப் பொருட்கள் யாவுமிருந்தன. நடுத்தெரு நாராயணன் நடைபாதை வியாபாரத்தின் பல்வேறு விதமான நெளிவு சுளிவுகளையும் கற்றுத்தேர்ந்த கில்லாடி. இந்த விடயத்தில் சில சமயங்களில் நியூயார்க் காவற்துறைக்குக் கண்களில் விரல்களை விட்டு ஆட்டிடும் வல்லமை பெற்றிருந்த அவனிடமிருந்து படிக்க வேண்டிய பாடங்கள் பல இருந்தன. அவ்விதம்தான் இளங்கோ அவனைப்பற்றி எண்ணிக் கொண்டான்.

சில சமயங்களில் வார இறுதி நாட்களில் நியூயார்க் நகரின் சில வீதிகளை மூடி விட்டு அங்கு நடைபாதை வியாபாரிகளைப் பொருட்கள் விற்பதற்கு அனுமதி வழங்குவார்கள். அத்தகைய சமயங்களில் அவ்விதம் மூடப்பட்ட வீதிகளில் வைத்து விற்பதற்கு அதிக அளவில் கட்டணத்தைச் மாநகரசபைக்குச் செலுத்த வேண்டும். இத்தகைய சமயங்களில் நடுத்தெரு நாராயணனான ஹரிபாபு வின் செயற்திட்டம் பின்வருமாறிருக்கும்:

Continue Reading →

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்: 15ம் தேதி ஜெயலலிதா பதவி ஏற்கிறார்; சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் விழா

தினமலர் இணையத்தளத்திலிருந்து …

திருவாரூரில் கலைஞர் வெற்றி...சென்னை: தமிழ் நாட்டில் அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கிறது. 15ம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் ஜெயலலிதா 3ம் முறையாக தமிழ்நாடு முதல்வராக பதவி ஏற்கிறார். இதுவரை முன்னணி நி‌லவரம்தான் வந்து கொண்டிருக்கிறது என்றாலும் அ.‌தி.முக., 198 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தி.மு.க., 36 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. மேலும் தி.மு.க., அமைச்சர்களான பொங்கலூர் பழனிச்சாமி, வீரபாண்டி ஆறுமுகம், தமிழரசி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உட்பட பலர் தோல்வியைத் தழுவும் நிலையில் உள்ளனர். எனவே தேர்தல் முடிவு அ.தி.முக.,வுக்கு சாதகமாகவே இருக்கும்.

மேற்குவங்கத்ததில் திரிணாமுல்காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணியினர் 205 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். இடதுசாரி கட்சியினர் 67 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். புதுச்சேரி யூனியனில் இன்று காலை ஓட்டு எண்ணும் பணி துவங்கியது முதல் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி பின்னடைந்துள்ளது. என்.ஆர்., காங்கிரஸ் அ.தி,மு.க., கூட்டணி 7 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

Continue Reading →

‘ஒரு காலம் இருந்தது’ கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

தியத்தலாவா எச்.எப்.ரிஸ்னா‘ஒரு காலம் இருந்தது’ என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் மூதூர் முகைதீன் அவர்கள். சுமார் நாற்பது ஆண்டுகால ஆசிரிய சேவையில் தன்னை அர்ப்பணித்து, அண்மையில் ஓய்வுபெற்றுள்ள அவர், சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இலக்கியத்தில் ஈடுபட்டு தமிழ்த் தொண்டாற்றியவர். தான் கடமையாற்றிய பாடசாலைகளில் சஞ்சிகைகளை, கையெழுத்துப் பிரதிகளை வெளியிட்டு மாணவர்களின் இலக்கிய ஆர்வத்துக்கு வித்திட்டிருப்புதுடன் மூதூர் கலை இலக்கிய ஒன்றியத்தின் தலைவராக இருந்து ஓசை என்ற கவிதைச் சிற்றிதழையும் வெளியிட்டு வருகிறார். இவரது கல்விப் பணிக்காக 2006ம் ஆண்டு தேசிய சமாதானப் பேரவையினால் வித்தியாகீர்த்தி விருதையும்,  இலங்கை அரசின் கலாசார மரபுரிமை அமைச்சால் 2007ம் ஆண்டு கலாபூஷணம் விருதையும், சாமஸ்ரீ, கல்விச்சுடர் போன்ற பட்டங்களையும் பெற்றுக்கொண்ட திரு. மூதூர் முகைதீன் அவர்களின் நான்காவது தொகுப்பே ஒரு காலம் இருந்தது என்ற இந்த கவிதை நூலாகும்.

Continue Reading →

My Reaction to Osama bin Laden’s Death

http://www.guernicamag.com
Noam Chomsky It’s increasingly clear that the operation was a planned assassination, multiply violating elementary norms of international law. There appears to have been no attempt to apprehend the unarmed victim, as presumably could have been done by 80 commandos facing virtually no opposition—except, they claim, from his wife, who lunged towards them. In societies that profess some respect for law, suspects are apprehended and brought to fair trial. I stress “suspects.” In April 2002, the head of the FBI, Robert Mueller, informed the press that after the most intensive investigation in history, the FBI could say no more than that it “believed” that the plot was hatched in Afghanistan, though implemented in the UAE and Germany. What they only believed in April 2002, they obviously didn’t know 8 months earlier, when Washington dismissed tentative offers by the Taliban (how serious, we do not know, because they were instantly dismissed) to extradite bin Laden if they were presented with evidence—which, as we soon learned, Washington didn’t have. Thus Obama was simply lying when he said, in his White House statement, that “we quickly learned that the 9/11 attacks were carried out by al Qaeda.”

Continue Reading →