இலங்கையிலிருந்து மாதந்தோறும் தவறாது வெளிவரும் ‘ஞானம்” இலக்கிய சஞ்சிகைச் சிறப்பிதழின் அறிமுக நிகழ்வு பாரிஸ் மாநகரில் நடைபெறவுள்ளது. ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்” என்ற பெயரில் 976 பக்கங்களில் பெரிய அளவில் வெளியாகியுள்ள இச்சிறப்பிதழின் அறிமுக நிகழ்வுää நவம்பர் 1- ம் திகதி (01 – 11 – 2015) ஞாயிறு மாலை 5. 00 மணிக்கு பாரிஸ் மாநகரில் (T I S C I – 13, RUE DE L’AQUEDUC , 75010 PARIS – M° : Gare du Nord) இடம்பெறவுள்ளது. மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ‘ஞானம்” பிரதம ஆசிரியர் டாக்டர் தி. ஞானசேகரன்ää இணை ஆசிரியர் திருமதி ஞானம் ஞானசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றுவர். படைப்பாளிகள் – இலக்கிய நேசர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெறும். பிரான்சிலுள்ள படைப்பாளிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்வரென எதிர்பார்க்கப்படுகிறது. ஞானம் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழில் புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்துவாழும் எம் படைப்பாளிகள் பலரின் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.ஏற்கனவே ஞானம்ää ‘ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழ்” அதிக பக்கங்களில் பெரிய அளவில் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.