ஆய்வு: வரைவுகடாதல்: தொல்காப்பியமும் அகநானூறும்

த. முத்தமிழ், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி-தோழி தலைவியைத் தலைவன் வரைந்துகொள்ளாது காலந்தாழ்த்தும் சூழலில் தலைவனிடம் தலைவியை வரைந்து கொள்ளுமாறு பல்வேறு காரணங்களைக் கூறியும் தலைவிக்கு ஏற்படும் இடையூறுகளைக் (வெறியாட்டுää இற்செறிப்பு, அலர், தலைவனையே எண்ணி தலைவி மெலிதல், வருந்துதல்) கூறியும் வரைவினை வேண்டுவாள். இது ‘வரைவு கடாதல்’ ஆகும். இவ்வரைவுகடாதல் சூழலானது தொல்காப்பியத்திலும் எட்டுத்தொகை அகநூல்களுள் ஒன்றான அகநானூற்றிலும் எவ்வாறு அமைந்துள்ளது என்றும்,  அகநானூற்றில் அமைந்துள்ள வரைவுகடாதல் சூழலானது தொல்காப்பியத்துடன் எவ்வாறு பொருந்தியும் மாறுபட்டும் அமைந்துள்ளது என்றும் இக்கட்டுரை ஆராய முற்படுகிறது. “வரைவு கடாதல் – மணந்து கொள்ளுதலைப் பற்றி உசாவுதல்: கடாவல் -திருமணத்தில் செலுத்தல்”1 என்று கதிரைவேற்பிள்ளையின் தமிழ் மொழியகராதி குறிப்பிடுகிறது. மு. இராகவையங்கார் வரைவுகடாதல் என்பதற்கு, “தலைவன் இருவகைக்; குறிகளிலும் பலகாலும் வந்தொழுகும் இடத்து, இக்களவு வெளிப்படச்; சுற்றத்தார் இற்செறிப்பரோ என்றும், வழியாலும் பொழுதாலும் தலைவற்கு ஏதம் வருங்கொல் என்றும்; தோழி அச்சமுற்று, இவ்வொழுக்கமொழுகல், நுங்குடிப் பிறப்புக்குஞ் சிறப்புக்கும் பொருந்தாமையின், இனி நீவிர் இவளை மணந்து கொள்வதே தகுதியென்று தலைவனை வரைவுகடாவத் தொடங்குவாள் (வரைவு கடாதல் – மணந்து கொள்ளுதலைப் பற்றி உசாவுதல்)”2 என்று விளக்கமளிக்கின்றார்.. … மேலும் வாசிக்க