இணையத்தின் மூலம் இலக்கணம் கற்றல்

அண்மையில் பாரதிதாசன்பல்கலைக்கழக உறுப்பு கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் (தமிழ்நாடு) நடைபெற்ற “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” பன்னாட்டுக்கருத்தரங்கிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்படும். இவற்றைத் தொடர்ச்சியாகப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பி வைப்பதாக முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். முதல் கட்டுரையாக திரு.சிவாப்பிள்ளை (கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழகம் லண்டன்) அவர்களின் கட்டுரை வெளியாகின்றது. - ஆசிரியர், பதிவுகள் -– அண்மையில் பாரதிதாசன்பல்கலைக்கழக உறுப்பு கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் (தமிழ்நாடு) நடைபெற்ற “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” பன்னாட்டுக்கருத்தரங்கிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்படும். இவற்றைத் தொடர்ச்சியாகப் ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அனுப்பி வைப்பதாக முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.  – ஆசிரியர், பதிவுகள் –

முன்னுரை :
  தற்போது கணினி அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. கல்விச் செயல்முறையிலும் கணினி அதிகம் அளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ”கற்றது கைமண் அளவு கல்லாதது உலக அளவு” என்பதற்கு ஏற்ப கணினியின் மூலம் இலக்கணம் எப்படி பயனுள்ள வகையில் கற்கமுடியும் என்பதையும் விபரங்களை பாதுகாக்கவும் பகுத்தாய்வு செய்யவும் பயன்படுத்தப்படுகின்றது என்பதை இக்கட்டுகரையில் காண்போம்.

 

குறிக்கோள் :
இப்பாடத்தை கற்ற பின்பு உங்களால்
1.   சுயமாகக் கற்பிக்கும் முறை பற்றி நினைவு கூற முடியும்.
2. திட்டமிட்டுக் கற்றல் பற்றி நினைவு கூற முடியும்.
3. நேர்வழித் திட்டம் கிளைவழித் திட்டம் இவற்றை விளக்க முடியும்.
4. திட்டமிட்டுக் கற்றல் பாடப்பொருளை தயாரிப்பதில் உள்ள படிநிலைகளை     நினைவுகூற முடியும்.
5. ஒரு குறிப்பிட்ட பாடத் தலைப்பிற்கு நேர்வழித் திட்ட முறையில் கற்பித்தல் சட்டங்களை எழுத முடியும்.

தாமாகவே கற்கும் முறைகளும் பாடநூல்களும்

  கற்றலில் தனியார் வேற்றுமைகள் காணப்படும். கற்பவர் பொருத்தமாகவும், தேவைக்கு ஏற்றவகையிலும் அமைய வேண்டும்.

1. சுயமாகக் கற்பிக்கும் முறை
2. திட்டமிட்டுக்கற்றல்
3. கணினி உதவி கொண்டு கற்றல்
4. இணைய வழிக்கற்ற அணுகு முறைகள் ஆகும்.

செயல் திட்டத்தின் முக்கிய இயல்புகள் :
1. முழு திறனடைவு
2. சுயவேகம்
3. கூடுதல் கற்றல் வளங்கள்
4. அச்சிட்ட வழிகாட்டிகள்
5. உடனடி மதிப்பீடு மற்றும் செயல்விளைவு கூறல்.

திட்டபாட்டுக்கற்றல்
எளியப்படிகள் :
  இம்முறையில் பாடப்பொருள் பகுப்பாய்வு செய்யப்பாட்டு எளிய, சிறு சிறு, படிகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு படிக்கும் சிறு பகுதியும் ஒரு சட்டத்தில் கொடுக்கப்படும்.

மாணவர் பங்கேற்பு :
  ஒவ்வொரு சட்டத்திலும் உள்ள சிறு அளவிலான பாடச் செய்தியைப் படித்துவிட்டு, அதில் கேட்கப்பட்டுள்ள வினாவிற்கு கற்பவர் சரியான விடையை எழுத வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு சட்டத்திலும் மாணவர் பங்கேற்க வேண்டும்.

உடனுக்குடன் வலுவூட்டியைக் கொடுத்தல் :
  மாணவர்கள் தன் ஆற்றலுக்குக்கேற்ப முன்னேறலாம். மாணவர்கள் ஒவ்வொரு சட்டத்திற்கும் மாணவர்கள் அளித்த விடைகளைப் பகுப்பாய்வு செய்து மாணவர் முன்னேற்றத்தை அறியலாம். மேலும், திட்டத்தை மேம்படுத்த தகுந்த மாற்றங்களைச் செய்யலாம். மாணவர்கள் தங்களுக்குத் தாங்களே சோதித்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
இலக்கணக்குறிப்பு கற்பித்தல் கணியின் பயன்பாடு :
  வினைத்தொகை, பண்புத்தொகை, உரிச்சொல் தொடர், ஆகுபெயர், அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி, வினையாலணையும் பெயர், உவமைத்தொகை, உம்மைத்தொகை, உருவகம் போன்ற இலக்கணக் குறிப்புகளுக்குரிய விதிமுறைகளைக் கணினியில் பதிவு செய்து இலக்கணக்குறிப்புச் சொற்களையும் வரிசைப்படுத்தி, செய்யுளில் உள்ள இன்றியமையாதச் சொற்களுக்கான இயலும், இலக்கணக்குறிப்பு விதிமுறைகள் விரிவாகக் கணினியில் பதிவு செய்து கொள்ளல்.

விதிமுறைச் சுருக்கம் (சான்று) :
       
1. வினைத்தொகை – மூன்று காலத்திற்கு உரியது.  எ.கா. ஒளிர் தமிழ், விரிநீர், ஊறுகாய்  
2. பண்புத்தொகை – நிலைமொழியின் ஈற்றில் மை விகுதியேற்று ஆகிய எனும் உருபு மறைந்து வருதல்  எ.கா. பசும்புல், பைந்தமிழ், மூதூர், இன்னுயிர்;  
3. உரிச்சொற்றொடர் – பலசொல் குறித்து ஒரு பொருளாகவும், ஒரு சொல் குறித்த பல பொருளாகவும் வருவது உரிச்சொல் எனப்படும். எ.கா. மாநிதி, கடிநகர், சாலச்சிறந்தது  
4. ஆகுபெயர் – ஒன்றன் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குப் பெயராகித் தொன்றுதொட்டு வழங்கி வருவது ஆகுபெயர் எனப்படும். எ.கா. யாழ் கேட்டு மகிழ்ந்தான் கருவியின் பெயர்(யாழ் எனும் கருவி இசைக்கு ஆகி வருவது)  
5. அடுக்குத்தொடர் – சொற்கள் இரண்டு (அல்லது) அதற்கு மேலும் அடுக்கி வருதல். எ.கா. போலும், போலும் அடுக்கி வருதல் பாம்பு, பாம்பு, அலை, அலை  
6. இரட்டைக்கிளவி – பிரித்தால் பொருள் தராது இரட்டை, இரட்டையாகச் சொற்கள் சோ;ந்து வரும். எ.கா. சலகல, படபட, தடதட, சரசர, சரசர  
7. வினையாலணையும் பெயர் – வினை செய்த கருத்தாவைக் குறிக்கும் வினைமுற்றுச் சொல் பெயர்த்தன்மை அளவில் வருவது. எ.கா. செய்தவன், உயர்ந்தோர்  
8. உவமைத்தொகை – உவமைக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் அடையில் போல, புரைய, நிகர, அன்ன இன்ன, மான போன்ற உவம உருபுகளில் ஒன்று கொக்கி நிற்க வரும். எ.கா. மலா;கை, கயல்விழி  
9. உம்மைத்தொகை – இரு சொற்களுக்கு இடையிலும் ஈற்றிலும் உம் என்னும் சொல் மறைந்து வருவது. எ.கா. பாண்டியர், வந்தனர், செடிகொடி  
10. உருவகம் – உவமானத்தையும், உவமேயத்தையும் வேறுபடுத்தாது இரண்டும் ஒன்றே என எண்ணுமாறு ஒற்றுமைபடக் கூறுவது. எ.கா. முகத்தாமரை, வாய்ப்பவளம், கடிமலர்; 
 
  மேற்கூறிய விதிமுறைகள் அடிப்படையில் கணினியை இயக்கி செய்யுளில் உள்ள இன்றியமையாதச் சொற்களுக்கு, இலக்கணக் குறிப்பை மாணவர்களுக்கு எளிதாகக் கற்பிக்கலாம்.

அலகிடுதல் கற்பித்தல் கணிணியின் பயன்பாடு :
  உயர்நிலை அளவில் திருக்குறளுக்கு அலகிடுதல் எழுதும் முறை மட்டுமே வினாத்தாளில் கேட்கப்படுகிறது. சீர், அசை, வாய்ப்பாடு என வரிசைப்படுத்திக் கீழ்காணும் முறையில் கணினியில் பதிவு செய்வதன் மூலமாக அலகிடுதலைக் கற்பிக்கலாம்.

அசை
  நேர் அசை        நிரை அசை
 தனிக்குறில் (க)     குறுவினை (சில)
 குறில் ஒற்று (கல்)    குறிணை ஒற்று (சிலர்)
 தனி நெடில் (கா)    குறில்நெடில் (பலர்)
 நெடில் ஒற்று (கால்)    குறில் நெடில் (பிரான்)

6 சீர்களுக்கு உரிய வாய்ப்பாடு
  அசை      வாய்பாடு
  நேர்; நேர்;   –  தேமா
  நிரை நேர்;   –  புளிமா
  நிரை நிரை   –  கருவிளம்
  நேர்; நிரை   –  கூவிளம்
  நேர் நேர் நேர்  –  தேமாங்காய்
  நிரை நேர் நேர்;  –  புளிமாங்காய்
  நிரை நிரை நேர்;  –  கருவிளங்காய்
  நேர்; நிரை நேர்;  –  கூவிளங்காய்

சீர்பிரித்து அலகிடுதல் :
 புறந்தூய்மை நீரானமையும் அகத்தூய்மை
 வாய்மையற்ற காணப் படும்

சீர் அசை வாய்ப்பாடு 
புறந்தூய்மை நிரை + நேர்+ நேர்= புளிமாங்காய் 
நிரா நேர்+நேர் நோ; தேமா 
னமைஃயும் நிரை + நேர்; புளிமா 
அகந்ஃதூய்ஃமை நிரைஃநேர் ஃநேர புளிமாங்காய் 
வாய்ஃமைஃயாத் நேர்+நேர்+நேர்  தேமாங்காய் 
காஃணப் நேர்+நேர் ; தேமா 
படும் நிரை மலர்; 

  மேற்கூறிய முறையில் இலக்கணக்குறிப்பு அலகிடுதலில் அசை, சீர், வாய்ப்பாடு ஆகியவற்றைக் காணும் முறையினைக் கணினியை இயக்கி எளிதாக அறிந்து கொள்ள இயலும்.

நுற்பாவை பதிவு செய்து கற்றல்

வேற்றுமையியல்
 வேற்றுமை வகை ஏழு
  ”வேற்றுமை தாமே ஏழென மொழிப்
  வேற்றுமை ஏழாகும்”

  ”பிறிகொள் வதன்கண்ன விழியோடு எட்டெ”
  விளி வேற்றுமையோடு கூட்ட வேற்றுமை எட்டாகும்.

வேற்றுமை பெயரும் வரிசையும் :

  ”அவைதாம்”
 பெயர் : ஐ, ஓடு, கு

  இன் அது கண்விளி என்னும் ஈற்ற அவை பெயர், ஐ, ஓடு, கு, இன், அது, கண் விளிவேற்றுமை என்பன ஈற்ற வகைமையின.

முதல்வேற்றுமை :அவற்றுள்   ”எழுவாய் வேற்றுமை பெயர் தேவை நிலையே, அவற்றுள் எழுவாய் வேற்றுமை” என்பது பெயர்  மட்டும் வெளிப்பட்டு நிற்கும். வேறு உருபில்லை. இதே போன்று எட்டு வேற்றுமைக்கும் நூற்பா படித்து பயன்பெற கல்லூரி மாணவர்களுக்கு எளிதாகும். ஒரு குறிப்பிட்ட கால நேரங்களில் அதிக நூற்பாக்களை தொகுத்து படிக்க முடியும்.

ஸ்கின்னர் முறை :
  ஒரு தலைப்பு தொடர்பான பாடப்பொருள் எளிய ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய சிறு சிறு படிகளைப் படித்து கட்டங்கள் வடிவில் அமைக்கபட்டு, இக்கட்டங்கள் ஒரு ஒழுங்கான முறையில் எளிய கருத்தைக் கூறி கடிகைக் கருத்தை விளக்குதல் முறையில் அமைக்கப்பட்டிருக்கும்.  ஒவ்வொரு சட்டத்திலும் சிறு அளவில் பாடச் செய்தி அதை ஒட்டிய வினா கற்பவர்  பாடச்செய்தியை கற்றபின் ஓட்டிய வினா கற்பவர் பாடச்செய்தியை கற்றபின் விடையை குறிப்பிட வேண்டும். பின் அடுத்தக் கட்டத்திற்குச் செல்ல வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு சட்டமும் செல்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட செய்தியை அடைய முடியும்.

  மாணவர்கள் கணினியில் விளையாட்டு மோகம் கொண்டுள்ள இக்காலகட்டத்தில் இலக்கணம் கற்றலுக்கு இம்முறை வழிவகுக்கும் இதே போன்று கிளைவழித் திட்டத்தையும் மேற்கொள்ளலாம்.
தமிழ் இணைய தளங்கள் :

  தமிழில் முதல் கணினி 1983-ல் திருவள்ளுவர் என்பதாகும். தணிகாச்சலம் ஆகியோர் 1987-ல் உருவாக்கிய கணினி நிரல் (Programme) முன்னோடி நிரல் எனலாம். (Programme – ஒருங்கிணைந்த எழுத்துரு) இவற்றுள் மதுரை இணையக் கருத்துத் திட்டம் சிறப்பாக பணியாற்றுகிறது. http://tamil.ht/projectmadurai என்ற இணைய தமிழ் நூல்கள் நூல்களை மின்னுருவாக்கம் செய்கின்றது. www.chennailibiary.com என்ற இணையத்தளத்தில் பல தமிழ் நூல்கள் மின்னுருவாக்கம் செய்கின்றன.
கணினியின் மகத்தான உதவி :

  மனிதன் கனவிலும், கருத முடியாத வேகத்திலும் மிகவும் துல்லியமாகவும், செய்து முடிக்கும் ஆற்றல் இன்றைய கணினி செய்து முடிக்கிறது. வியக்கத்தகு நினைவு கொள்கின்றது. தகவல் பாதுகாக்கிறது.

  தாள்களிலும், ஏடுகளிலும் பாதுகாக்கப் பெறும் செய்திக் குவியல்களைக் கணினி சிறிய பிளாப்பாரத் தட்டுகளிலும் வண்படலத்திலும் பதிய வைக்கும் போது வேண்டிய பகுதிகளைத் தருகின்றது. இத்தகவல் பெற தகவல்களைத் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பிப் பயன்பெறலாம், என கல்வியாளர் மு.கோவிந்தராஜன் கல்விப் பணியில் செய்தி பரப்பும் கருவிகள் எனும் தன் ஆய்வுக் கட்டுரையில் கூறியுள்ளார்.  மாணவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் பலன் காட்சி அனுபவம் கிடைக்கின்றது. தேடல் முறையில் கணினியில் நூலகத்தைப் பயன்படுத்தலாம். பல வெளிநாடு பிரபலங்களில் புத்தகத்தை பார்த்து பயன்பெறலாம். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரே இடத்தில் பல நூல்களை பார்த்து பயன்பெற முடியும்.

தீமைகள் :
1. உடல் உபாதைகள் ஏற்படும்
2. தொழில் நுட்பக் கோளாருகள் ஏற்படும்
3. அதிகம் பணம் செலவாகும்.
4. கண் பாதிப்பு ஏற்படும்
5. உயிரோட்டம் இருக்காது.

முடிவுரை :
  கல்வி, பணியில் இலக்கணம் கற்பிக்க உறுதுணையாக இருக்கும். இத்தகைய கணினி செய்தி பறிமாற்றப் பணிக்கு பெரிதும் பயன்படுகின்றன. அனைத்து பள்ளி கல்லூரிக்குப்  பயன்படுத்துவதற்கு முன் கணினி மூலம் அனைத்து ஆசிரியர்களுக்குக் கட்டாயப் பணி இடைப்பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். இதனால் இலக்கணம் கற்கும் திறன் வளர்ந்து மாணவர் தாம் உயரும் மாணவர்கள் தமிழ் மொழியை பிழை இன்றி பேசவும் எழுதவும் உறுதுணையாக அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

அனுப்பியவர்: முனைவர் துரை.மணிகண்டன்
mkduraimani@gmail.com