மலேசியா: மிட் லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் 14-ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம்

‘நியாட்’ இயத்தின் தலைவர் பெரும் மதிப்புக்குரிய டத்தோ தஸ்லீம் அவர்கள் இந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றவிருக்கின்றார்

சங்கத்தின் தலைவர் உயர்திரு.வே.ம.அருச்சுணன் அவர்களின் தலைமையில் சங்கத்தின் 14 ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம் 21.4.2013 ஆம் நாள் காலை 9.00 மணியளவில் பள்ளிச் சிற்றுண்டிச்சாலையில் நடைபெறவிருக்கிறது. ‘நியாட்’ இயத்தின் தலைவர் பெரும் மதிப்புக்குரிய டத்தோ தஸ்லீம் அவர்கள் இந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றவிருக்கின்றார்.சங்க உறுப்பினர்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் கூட்டத்தில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கப்படுகின்றனர். புதியதாக  உறுப்பியம் பெறவிரும்பும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்களுடன் விரைந்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தலைவர்: 012 6152537   செயலாளர்: 013 2758142 பொருளார்: 012 3175417

தகவல்: வே.ம.அருச்சுணன் – மலேசியா
arunveloo@yahoo.com