ப.மதியழகன் கவிதைகள்

  அதீதவேளை வாழ்வுப் புத்தகத்தில் மரணத்தின் வரிகள்சூன்ய வெளியில் அக்னி ஜுவாலைகாற்றின் தேசமெங்கும் காந்தல் வாசம்வீட்டின் விட்டத்தில் விண்மீன்கள்குழந்தையின் கைகளில் தவளும் வெண்ணிலாயானைக் கூட்டத்தில் சிக்கிபயந்தோடும் சிறுத்தைவனத்தில்…

Continue Reading →

டானியல் நினைவலைகள்…! வி. ரி. இளங்கோவன்

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கடந்த 14-ம் திகதி வெள்ளிக்கிழமை (14 – 01 – 2011) மாலை இடம்பெற்ற ‘இலக்கியக் களம்” நிகழ்ச்சியில் ‘டானியல் நினைவலைகள்;” என்ற தலைப்பில்  எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் (பிரான்ஸ்) நிகழ்த்திய உரையின் சுருக்கம். ‘ஞானம்” சஞ்சிகை ஆசிரியர் டாக்டர் தி. ஞானசேகரன் இந்நிகழ்வுக்குத் தலைமை வகித்தார். டானியல் யார்? என்ன அவர் சாதனை? அவரை  இன்றும் நினைத்துக்கொள்ள, அவர் என்ன செய்துவிட்டார்? டானியல் ஓர் அற்புதமான மனிதர் – கலைஞர் – மனிதாபிமானி – எல்லாவற்றுக்கும்மேலாய் தமிழில் ஓர் அருமையான படைப்பாளி – நாவலாசிரியர் – சமூக விடுதலைப் போராளி – தடம்புரளாத அரசியல்வாதி.

Continue Reading →

காதலர் தினச் சிறுகதை: மீளவிழியில் மிதந்த கவிதை

மண்மீது கொண்ட காதலால் மின்னல் அடித்ததுபோல எல்லாமே சட்டென்று நடந்துவிட்டது. அதிர்ச்சியில் இருந்து நான் மட்டுமல்ல, அவளும் மீளவில்லை என்பதை அவளது அந்தப் பிடி உணர்த்தியது. ஏவ்வளவு லாவகமாய் அவள் என்னைக்கடந்து சட்டென்று திரும்பி பின்பக்கமாய் வந்து என்னை இறுக்கி அணைத்தாள் என்பது எனக்கே வியப்பாக இருந்தது. தன்னைப் பாதுகாக்க என்னை முன்னால் தள்ளி நிறுத்தினாளோ, அல்லது எனது ஆண்மையில் அவளுக்கு இருந்த அதீத நம்பிக்கைதான் காரணமோ தெரியவில்லை, எதுவாய் இருந்தால் என்ன, என்னை நம்பிச் சரணடைந்தவளைக் காக்கவேண்டியது எனது பொறுப்பு என்பதை உணர்ந்து அவளுக்கு அடைக்கலம் கொடுத்தேன்.

Continue Reading →

இணையத்தமிழின் பரப்பும், பதிவும், பயன்பாடும்

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து என்பதாம் ஆண்டு முதல் கணினியில் தமிழ் இடம் பெற ஆரம்பித்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு முதல் தமிழ் இணையத்தில் உலாவர ஆரம்பித்தது. இணையத்தில் தமிழ் இடம் பெற்று ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்ட இந்த சூழலில் அதன் வளர்ச்சி குறிக்கத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை கணினி அல்லது இணையம் தமிழை வளர்க்க ஒரு துணை கருவியாகப் பயன்பட்டு வந்தது.

Continue Reading →