The International Conference in Australia – Accountability in Sri Lanka: Common Justice in the Commonwealth

Dear All, I am sure you are all aware of the events and news that have been developing and unfolding here in Australia over the last few days and about the international conference co-hosted by Australian Tamil Congress (ATC) and Global Tamil Forum (GTF) here in Sydney tomorrow (Thursday, 20 Oct 2011), almost a week before CHOGM in Perth, Australia on 28/10/2011. Please take time to watch: ABC 7.30 Report  http://www.abc.net.au/7.30/content/2011/s3342849.htm

Continue Reading →

Sydney Tamil Events: Accountability in Sri Lanka: Seeking Common Justice in the Commonwealth

As Sri Lanka hangs under mounting evidence of war crimes and defies international calls for an independent investigation into war crimes, the leaders of Sri Lanka are soon due to attend CHOGM in Perth to campaign for CHOGM 2013 to be held in their country. Sri Lanka is also competing with Australia to host the 2018 Commonwealth Games. And while thousands continue to flee the island on boats towards Australia seeking asylum, many ask:

Continue Reading →

நூல் அறிமுகம்: கே. எஸ். சிவகுமாரன் ‘ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில’

தமிழ், ஆங்கில இலக்கியவாதிகள் மத்தியில் நன்கறியப்பட்ட திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள், தனது திறனாய்வுகளிலும், விமர்சனங்களிலும் சிலதைத் தொகுப்பாக்கி வாசகர்களின் விருந்துக்காக தந்திருக்கிறார். தான் வாசித்த சிறுகதை, கவிதை, நாவல், ஏனைய படைப்புகள் பற்றியும், சினிமா பற்றியும் தனது ஆழ்ந்த கருத்தை முன்வைத்து வாசகரின் அபிமானத்தைப் பெற்ற இவர் ஓர் ஆங்கில ஆசிரியருமாவார். பத்திரிகையாளனாக மட்டுமல்லாமல் பல்துறை கலைஞராக விளங்கும் இவர் அண்மையில் தமது பவள விழாவினை யாழ் நகரில் கொண்டாடினார். கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் மாலைதீவு, அமெரிக்கா, ஓமான் போன்ற இடங்களில் ஆங்கில இலக்கிய பாடங்களுக்கு உயர்நிலைப் பாடசாலைகளின் விரிவுரையாளராக இருந்துள்ளார். இவரது நூல்கள் வடகிழக்கு மாகாண இலக்கிய விருது, கனடாவின் தமிழர் தகவல் ஏட்டின் விருது என்பவற்றைப் பெற்றுள்ளதுடன் இவர் வடகிழக்கு மாகாண ஆளுனர் விருதையும்; பெற்றிருக்கிறார்.தமிழ், ஆங்கில இலக்கியவாதிகள் மத்தியில் நன்கறியப்பட்ட திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள், தனது திறனாய்வுகளிலும், விமர்சனங்களிலும் சிலதைத் தொகுப்பாக்கி வாசகர்களின் விருந்துக்காக தந்திருக்கிறார். தான் வாசித்த சிறுகதை, கவிதை, நாவல், ஏனைய படைப்புகள் பற்றியும், சினிமா பற்றியும் தனது ஆழ்ந்த கருத்தை முன்வைத்து வாசகரின் அபிமானத்தைப் பெற்ற இவர் ஓர் ஆங்கில ஆசிரியருமாவார். பத்திரிகையாளனாக மட்டுமல்லாமல் பல்துறை கலைஞராக விளங்கும் இவர் அண்மையில் தமது பவள விழாவினை யாழ் நகரில் கொண்டாடினார். கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் மாலைதீவு, அமெரிக்கா, ஓமான் போன்ற இடங்களில் ஆங்கில இலக்கிய பாடங்களுக்கு உயர்நிலைப் பாடசாலைகளின் விரிவுரையாளராக இருந்துள்ளார். இவரது நூல்கள் வடகிழக்கு மாகாண இலக்கிய விருது, கனடாவின் தமிழர் தகவல் ஏட்டின் விருது என்பவற்றைப் பெற்றுள்ளதுடன் இவர் வடகிழக்கு மாகாண ஆளுனர் விருதையும்; பெற்றிருக்கிறார்.

Continue Reading →

பவழவிழா நாயகன் கே.எஸ்.சிவகுமாரன்…

கே.எஸ்.சிவகுமாரன்ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு அவருடைய மரணத்தின் போது தான் தீர்மானமாகின்றது. அந்தச் சிறப்பை வாழும்போதே பெற்றுவிட வேண்டும் என்பதற்காக நேர்மையான வழியில் உழைப்பவர்களை விட குறுக்கு வழியில் செயல்படுபவர்களே அதிகம். இவர்களுக்கு மத்தியில் 22 நூல்களை வெளியிட்டுள்ள கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் எவ்வித படோடோபமுமின்றி இயல்பாக வாழ்ந்து வருதலே அவரது சிறப்பாகும். இலங்கையின் குறிப்பிடத்தக்க திறனாய்வாளர்களுள் ஒருவராக இருந்து வரும் சிவகுமாரன் பிரபலமான இலக்கியவாதிகள் மற்றும் புத்திஜீவிகள் பலரின் நூல்களை திறனாய்வு செய்து அவற்றை நூல்களாகவும் தொகுத்துள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதும் ஆற்றல்மிக்க இவர், பத்தி எழுத்து எனும் பதத்திற்கு முதன் முதலில் உயிர்கொடுத்தவர். இத்தகைய சிறப்புமிக்க கே.எஸ்.சிவகுமாரனுக்கு இலக்கிய உலகில் உரிய இடம் கொடுக்கப்படவில்லை என்பது பல இலக்கியவாதிகளின் ஆதங்கமாக இருந்து வருகின்றது.

Continue Reading →

நூல் அறிமுகம்: 37ம் நம்பர் வீடு (நாவல்)

நூல் அறிமுகம்: 37ம் நம்பர் வீடு (நாவல்)இன்றைய இஸ்லாமிய சமூகத்தில் எமது மக்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டவர்கள் தமது ஈமானை இழந்து பலவீனப்பட்டுப் போய் கிடக்கிறார்கள். அல்லாஹ் மீது வைக்க வேண்டிய நம்பிக்கையை உலக வஸ்துக்களின் மீது வைத்து அல்லல் படுவதை அவதானிக்க முடிகிறது. சூனியம் என்ற வார்த்தையில் தமது சொத்து சுகங்களை இழந்து தவிக்கின்றவர்களின் நிலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருப்பது கவலைக்குரிய விடயமாகவே காணப்படுகிறது. இத்தகையவற்றிலிருந்து முஸ்லிம் சமுதாயத்தை மீட்டெடுக்க இன்று பலர் தன்னாலான முயற்சிகளை செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். இஸ்லாமிய ஊடகங்களும் தமது பங்களிப்பை பல்வகைப்பட்ட தன்மைகளில் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இலக்கியத் துறையினூடாகவும் ஓர் இஸ்லாமிய புரட்;சியை நிகழ்த்தி வருகின்றார் எழுத்தாளர் ஏ.சி. ஜரீனா முஸ்தபா அவர்கள். ஒரு அபலையின் டயறி, இது ஒரு ராட்சஷியின் கதை, ரோஜாக்கூட்டம் ஆகிய நூல்களையும் இவர் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறார். சமூகம் சார்ந்த விடயங்களை, இஸ்லாமிய விழுமியங்களை தனது நாவல்களினூடாக வெளிப்டுத்தும் இவர், சிங்கள மொழியில் கல்வி பயின்று தமிழில் புத்தக வெளியீடுகளை மேற்கொள்பர் என்பது வியக்கத்தகது.

Continue Reading →

நூல் அறிமுகம்: அறிவுரைகளைக் கொஞ்சம் அழுத்தமாகவே விசிறும் தூவானம்

நூல் அறிமுகம்: அறிவுரைகளைக் கொஞ்சம் அழுத்தமாகவே விசிறும் தூவானம் இஸ்லாமிக் புக் ஹவுஸின் நேர்த்தியான புத்தக அடுக்குகளுக்குள்ளிருந்த இந்நூலினைக் கையிலெடுத்ததுமே , வானவில் சுமந்த அட்டையில் தூவானம் எனும் பெயரினைக் கண்டதும் இதுவொரு கவிதைத் தொகுதியாக இருக்குமோ என்று எண்ணித்தான் நூலைப் புரட்டினேன். ஆனாலும்அதன் முதல் பக்கத்தைப் புரட்டியதுமே இது சகோதரி ஷாறாவின் சிந்தனைக் கட்டுரைத்தொகுதி என்பதை அறிந்து கொண்டதும், இந்நூல் தொடர்பான ஆர்வம் பன்மடங்கு அதிகமானதை இங்கு கூறித்தானாக வேண்டும். கலைப்பட்டதாரியும் ஆசிரியப்பணியில் அனுபவமுள்ளவருமான சகோதரி ஷாறா    அவர்களின் எழுத்தை எனக்குப் பரிச்சயமாக்கியது அல்ஹசனாத், எங்கள்தேசம் ஆகியவைகள்தான். கவிதை, கட்டுரை, சிறுகதைகளென இடைவெளியின்றி எழுதிவரும் இவரின் முதல்நாவலான பீனிக்ஸ் பறவைகள் பலரின் பாராட்டையும் பெற்றுக் கொண்டதோடு மூன்று பதிப்புகளையும் [3000 பிரதிகள்] கண்டது குறிப்பிடத் தக்கது. ஈமானிய உறுதியுள்ள பெண்ணின் தளராத முயற்சியால் சமூக அமைப்பையே மாற்றியமைக்கலாம் என்பதைத் தெளிவாக உணர்த்தி நிற்கிறது பீனிக்ஸ் பறவைகள் நாவல்.   

Continue Reading →

நூல் அறிமுகம்: கவிதாவின் ‘என் ஏதேன் தோட்டம்’

நூல் அறிமுகம்: 'என் ஏதேன் தோட்டம்'பிச்சினிக்காடு இளங்கோஎல்லா நூல்களையும் படிப்பதுபோல் கவிதைநூலை எடுப்பதுமில்லை; படிப்பதுமில்லை. ஒரு புதினத்தை , வாழ்க்கை வரலாற்றை, சிறுகதைத்தொகுப்பை, கட்டுரை நூலைப் படிக்கும் வேகம், கவிதை நூலைப் படிக்கும்போது இருக்காது. ஓராண்டில் படித்த நூல்களைப் பட்டியலிட்டால் கவிதைநூல்கள் குறைவாக இருக்கும். நூல்களின் எண்ணிக்கையைக் கூட்ட நினைத்தால் கவிதை நூல்களை அதிகம் எடுத்துப் படிக்கலாம்.காரணம் பக்கங்கள் குறைவாக இருக்கும். என்னைப்பொறுத்தவரை கவிதைநூல்களைப்படிக்கும்போது 5 பக்கங்களுக்குமேல் விரைவாக படிக்கமுடியாது. காரணம் அது கவிதை. கவிதைச்சொற்கள் அனைத்தும் வரமாக வந்தவை. ஓர் ஆழ்நிலைப்பயணத்தில் விளைந்தவை. ஓர் அகத்தேடலில் கிடைத்தவை. அவை ஒவ்வொன்றும் மின்கடத்திகள்; மின்னல் உற்பத்திமையங்கள். அதனால்தான் ஒரு நத்தைநகர்தலைப்போல் என் பார்வை நகரும் சிந்தை சிறகுகள் கட்டிக்கொள்ளும். திடீர் மவுனம் சிறைபிடிக்கும் ஒரு வேள்வியாகவே வாசிப்பு அனுபவம் நிகழும். அதை மிக நேர்த்தியாய் என்னுள் நிகழ்த்தியநூல் ’என் ஏதேன் தோட்டம்’

Continue Reading →

அகில விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன்ஜெயபாரதன்[இக்கட்டுரை ஏற்கனவே பதிவுகள் இதழில் பிரசுரமானது. தற்போது ஒருங்குறியில் பதிவுசெய்வதன் அவசியம் கருதி மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது. இது போல் ஜெயபாரதன் அவர்களின் ஏனைய கட்டுரைகளும் மீள்பிரசுரம் செய்யப்படும். இது போல் ஏனையவர்களின் ஆக்கங்களும் படிப்படியாகப் பதிவுகளில் மீள்பிரசுரமாகும் — பதிவுகள்]   விஞ்ஞானத் தத்துவங்கள் புதிதாய் எழுந்தன!இருபதாம் நூற்றாண்டின் நுழைவாயிலில் பூர்வீகப் பௌதிக விஞ்ஞானக் கருத்துக் கள் பல கீழே தள்ளப் பட்டுப், புரட்சிகரமான புது விஞ்ஞானக் கோட்பாடுகள் தோன்றின.  அணுவின் அமைப்பு, அண்ட வெளி   காலக் கோட்பாடு, பொருள் சக்தி உடன்பாடு போன்ற பழைய தத்துவங்கள் பல தகர்க்கப் பட்டு, அவை புதுப்பிக்கப் பட்டன. 19 ஆம் நூற்றாண்டு விஞ்ஞான நிபுணர்கள் மைக்கேல் ·பாரடே, ஜேம்ஸ் மாக்ஸ்வெல் ஆகியோர் படைத்த பூர்வீக நியதி, மின்காந்தவியல் [Electromagnetism] ஒன்றைத் தவிர மற்றவை யாவும் மாற்றப் பட்டன.  அப்போது உதித்ததுதான் ஐன்ஸ்டைன் படைத்த “ஒப்பியல் நியதி” [Theory of Relativity].  அகில வெளி, காலம், பிண்டம், சக்தி [Space, Time, Matter, Energy] பற்றிய எளிய மெய்ப்பாடுகளை அடிப்படையாக் கொண்டு எழுதப் பட்டது, ஒப்பியல் நியதி!  புது பௌதிகத் தத்துவமான அவரது நியதியைப் பலர் முதலில் ஒப்புக் கொள்ள வில்லை!  பலருக்குப் புரிய வில்லை!  பலர் எதிர்த்து வாதாடினர்! மானிட சிந்தனை யூகித்த மாபெரும் எழிற் படைப்பு, இவ்வரிய “ஒப்பியல் நியதி”.  பல நூற்றாண்டுகளாய் பரந்த விஞ்ஞான மாளிகை எழுப்பிய, உலகின் உன்னத மேதைகளான, ஆர்க்கிமெடிஸ் [Archimedes], காபர்னிகஸ் [Copernicus], காலிலியோ [Galileo], கெப்ளர் [Kepler], நியூட்டன் [Newton], ·பாரடே [Faraday], மாக்ஸ்வெல் [Maxwell] ஆகியோரின் தோள்கள் மீது நின்று கொண்டுதான், ஐன்ஸ்டைன் தனது ஒப்பற்ற அகில வேதத்தை ஆக்கம் செய்தார். 

Continue Reading →

வ.ந.கிரிதரனின் 25 சிறுகதைகள் (பகுதி 1)!

- வ.ந.கிரிதரன் சிறுகதைகள் -[ ஏற்கனவே பதிவுகள், திண்ணை, தாயகம், கணையாழி, மான்சரோவர.காம், தட்ஸ்தமிழ்.காம், தேடல் போன்றவற்றில் அவ்வப்போது வெளிவந்த எனது  சிறுகதைகள் இவை. இவற்றில் சில கனடாவிலிருந்து வெளியான ‘வைகறை’ மற்றும் வெளிவரும் ‘சுதந்திரன்’, ஈழநாடு’ ஆகிய பத்திரிகைகளில் மீள்பிரசுரமானவை. ஒரு பதிவுக்காக ஒருங்குறி எழுத்தில் இங்கு மீள்பிரசுரமாகின்றன. இதில் பல சிறுகதைகள் புலம்பெயர்ந்த சூழலினைச் சித்திரிப்பவை. இன்னும் சில விஞ்ஞானப் புனைவுகள். மேலும் சில இழந்த மண்ணைப் பற்றிப் பேசுபவை. – ஆசிரியர், பதிவுகள்]

Continue Reading →