[ ஏற்கனவே பதிவுகள், திண்ணை, தாயகம், கணையாழி, மான்சரோவர.காம், தட்ஸ்தமிழ்.காம், தேடல் போன்றவற்றில் அவ்வப்போது வெளிவந்த எனது சிறுகதைகள் இவை. இவற்றில் சில கனடாவிலிருந்து வெளியான ‘வைகறை’ மற்றும் வெளிவரும் ‘சுதந்திரன்’, ஈழநாடு’ ஆகிய பத்திரிகைகளில் மீள்பிரசுரமானவை. ஒரு பதிவுக்காக ஒருங்குறி எழுத்தில் இங்கு மீள்பிரசுரமாகின்றன. இதில் பல சிறுகதைகள் புலம்பெயர்ந்த சூழலினைச் சித்திரிப்பவை. இன்னும் சில விஞ்ஞானப் புனைவுகள். மேலும் சில இழந்த மண்ணைப் பற்றிப் பேசுபவை. – ஆசிரியர், பதிவுகள்]
மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் (17)
சினிமாவில் பரவலாக அதன் தொடக்கத்திலிருந்தே காணும் பல அவலங்களை, அதன் குணத்தையே தொடர்ந்து நிர்ணயித்து வரும் அவலங்களைக் கண்டாலும் அவை பற்றி நினைத்தாலும் நான் மிகவும் சுருங்கிப் போகிறேன். மனத்தளவிலும் நினைப்பளவிலும். இது எனக்கு நேர்ந்துள்ள எனக்கே நேர்ந்துள்ள மனவியாதி அல்ல. இன்னமும் தமிழ் சினிமாவும் அரசியலும் பாதிக்காது மன ஆரோக்கியமோ உடல் ஆரோக்கியத்தையமோ க்ஷீணித்துப் போகாது பார்த்துக்கொள்ளும் ஜீவன்கள் யாரும் மனம் சுருங்கி உடல் குறுகித் தான் போவார்கள். கூவத்தின் கரையில் வாழ்வதற்கும் உடல், மனப் பயிற்சி வேண்டும் தானே.. அது டிவி செட்டும் வோட்டுப் போட ஆயிரங்கள் சிலவும் கிடைத்துவிட்டால் அது அந்த பயிற்சி பெற்றதற்கான பரிசு என்று தான் சொல்லவேண்டும். தமிழ் சினிமா பற்றியோ, அரசியல் பற்றியோ பேசும்போது இந்த மொழியில், படிமங்களில் தான் நான் பேசத் தள்ளப்படுகிறேன். ஆனால் இந்த சாக்கடையில் உழன்று சுகம் காணும் ஜீவன்கள் அவரவர் ஆளுமைக்கும் பிராபல்யத்துக்கும் ஏற்ப இந்த சமூகத்தையும் ஆபாசப்படுத்தி வருகிறார்கள்.
[ஏற்கனவே பதிவுகளில் வெளியான மகாகவி பாரதியார் பற்றிய கட்டுரைகள் இங்கே ஒருங்குறியில் மீள்பிரசுரம் செய்யப்படுகின்றன. ‘பதிவுகள்’ இதழில் வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது இவ்விதம் மீள்பிரசுரம் செய்யப்படும். அந்த வகையில் இம்முறை இக்கட்டுரைகள் ஒரு பதிவுக்காக பிரசுரமாகின்றன. மகாகவி பாரதி தான் வாழ்ந்த காலகட்டத்தில் நிலவிய சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல்கொடுத்தவன். அதே சமயம் தன் காலகட்டத்தையும் மீறியும் சிந்தித்தவன்; செயற்பட்டவன்; இருப்பு பற்றிச் சிந்தித்தவன்; இவ்வுலகின் பலவேறு நாடுகள் பற்றியும், அந்நாடுகளில் வாழும் மானுடர்கள் பற்றியும், பல்வேறு அரசியல் தத்துவங்கள் பற்றியும், தேசிய மற்றும் சமூக விடுதலை பற்றியும், பெண் விடுதலை பற்றியும் சிந்தித்தவன். அவனது குறுகிய கால கட்டத்து வாழ்வில் அவன் சாதித்தவை அளப்பரியன. பிரமிப்பினை ஊட்டுபவை. அவனது பரந்த வாசிப்பும், அவனது வாழ்வனுபவமும் அதன் விளைவான அவனது தேடலும் அவனைப் புடமிட்டன. அதன் விளைவாக உருவானவைதான் அவனது படைப்புகள். அவை கவிதை, சிறுகதை, குறுநாவல், கட்டுரைகள், மொழிபெயர்ப்பென பரந்துபட்டவை. – பதிவுகள் -]
பில் கேட்ஸை அறிந்த அளவுக்கு ஸ்டீவ் ஜாப்ஸை உலகம் அறிந்ததில்லை. பில் கேட்ஸ் என்றவுடன் மைக்ரோசாப்ட் சாம்ராஜ்யமும், அவரது உலக மகா கோடீஸ்வரர் பட்டமும் நினைவுக்கு வரும். ஆனால், கம்ப்யூட்டர் உலகை பொறுத்தவரை ஜாப்ஸ் கோடீஸ்வர கேட்சை விட செல்வாக்கும் மதிப்பும் மிக்கவர். தொழில்நுட்பத்தில், அதிலும் குறிப்பாக வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவர்களுக்கு அவர் தான் ஆதர்ச நாயகன்! ஆப்பிளின் இணை நிறுவனர் என்று குறிப்பிடப்படும் ஜாப்ஸின் தொழில்நுட்ப புரிதலும் வடிவமைப்பில் அவருக்கு இருந்த ஆற்றலும் அசாத்தியமானவை. மேக்கின்டாஷில் துவங்கி, ஐபாட், ஐபோன், ஐபேட் என அவர் பெயர் சொல்லும் தயாரிப்புகள் அநேகம். ஒவொன்றுமே கம்ப்யூட்டர் உலகில் தொழில்நுட்ப மைல்கல்லாக விளங்குபவை. அந்தத் துறைகளையே மாற்றியமைத்தவை.
திரையிடப்படும் படம்: போரும் அமைதியும் (தமிழ்)
இயக்கம்: ஆனந்த் பட்வர்தன்
நாள்: 14-10-2011, வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6.30
இடம்: பெரியார் திடல், (தினத்தந்தி அருகில்), வேப்பேரி, சென்னை.
நடத்தும் அமைப்புகள்: பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை, பூவுலகின் நண்பர்கள், தமிழ் ஸ்டுடியோ குறும்படத் துறை.
அன்புடையீர், வணக்கம், வரும் சனிக்கிழமை (15.10.2011) காலை ”தமிழகத்தில் மனிதஉரிமைகள்” என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்த திட்டமிட்டுள்ளோம். கருத்தரங்கின் நிகழ்வுகள் குறித்த சிறு குறிப்பை இத்துடன் இணைத்துள்ளோம். இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு இக்கருத்தரங்கை சிறப்பிக்குமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ் கலை இலக்கியப் பரப்பில் ‘பேராசிரியர் க.கைலாசபதி மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. அவர் மறைந்து சுமார் 30 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும் அவரது பெயர் குறிப்பிடப்படாத அரங்கு இல்லை எனச் சொல்லுமளவிற்கு இன்றும் பேசப்படுகிறார். விமர்சனங்கள் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் எழுப்பப்பட்டபோதும் அவரது பெயர் தொடர்ந்தும் உச்சரிக்கப்படுகிறது. அவரது எழுத்துகளிலிருந்து உதாரணங்கள் காட்டப்படுகின்றன. அவரது நூல்கள் பாடப் புத்தகங்களாகவும் பயிலப்படுகின்றன. ஆயினும் அவரை நேரடியாகத் தெரியாத, அல்லது அவரது காலத்தில் வாழ்ந்திராத இளம் எழுத்தளார்களும் ஏனைய மாணவர்களும் இருக்கிறார்கள். இன்றைய தலைமுறையினருக்கு ‘பேராசிரியர் க.கைலாசபதி பற்றிய ஒரு சிறிய ஆனால் காத்திரமான அறிமுகத்தைத் தருவதற்கான ஒரு நூல் தேவை என உணரப்பட்டது. இந்நிலையில் திரு லெனின் மதிவானம் எழுதி குமரன் புத்தக நியைத்தின் வெளியீடாக ஒரு நூல் வெளிவந்துள்ளது. ‘பேராசிரியர் க.கைலாசபதி சமூக மாற்றத்திற்கான இயங்காற்றல்’ என்ற லெனின் மதிவானம் அவர்களின் இந் நூல் ஆய்வு விழா 09.10.2011 ஞாயிறு மாலை நடைபெற்றது.
புலம்பெயர்ந்த பல எழுத்தாளர்களின் படைப்புக்களை நாம் பத்திரிகைகள், சஞ்சிகைகள் வழியே படித்து வருகிறோம். அந்நிய நாட்டில் இருந்துகொண்டு தமிழ் மீது கொண்ட பற்றை இன்னும் உணர்ந்து அவர்கள் படைப்புக்களை படைப்பதைப் பார்த்தால் பாராட்டாமல் இருக்க முடியாது. அந்த வகையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர்களில் புலம்பெயர் வாழ்வு பற்றிய சிறுகதைத் தொகுப்பை முகங்கள் என்ற பெயரில் தொகுத்துத் தந்திருக்கிறார் வீ. ஜீவகுமாரன் அவர்கள். விஸ்வசேது இலக்கிய பாலத்தினால் வெளியீடு செய்யப்பட்டிருக்கும் இத்தொகுப்பு நூல் 551 பக்கங்களில் ஐம்பது எழுத்தாளர்களின் சிறந்த கதைகளை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. முகங்கள் என்ற பெயருக்கேற்றாற்போல புத்தகத்தின் அட்டையிலும் பல முகங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. தொகுப்பாசிரியரான திரு. வீ. ஜீவகுமாரன் தனது உரையில் கீழுள்ளவாறு தன் உள்ளத்தை திறந்திருக்கிறார். ‘ஓராண்டுகால பதிப்பகத்துறை அனுபவம், மூன்றாண்டுகால எழுத்துத்துறை அனுபவம், இருபத்து மூன்றாண்டுகால புலம்பெயர்வாழ்வு அனுபவம். இந்த மூன்றும் எனக்குத் தந்த தைரியமும், என் முகம் தெரியாமலேயே என்னை ஆதரித்த என் எழுத்தாள நண்பர்கள் தந்த ஆதரவும் தான் இந்த தொகுப்பு உங்கள் கையில் தவழ காரணமாய் அமைகிறது. இந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் என்ற சொல்லினால் நான் உட்பட அநேக எழுத்தாளர்கள் இலங்கை மக்களிடமிருந்தும், இலங்கை இந்திய எழுத்தாளர்களிடமிருந்தும் அந்நியப்படுவது பற்றி என்றுமே எனக்கு மனவருத்தம் உண்டு. … இலங்கையைப் பொறுத்தவரை கட்டுநாயக்காவில் இருந்து விமானம் ஏறியவுடன் அல்லது ராமேஸ்வரத்தை நோக்கி ஏதாவது ஒரு கடலில் இருந்து வள்ளம் புறப்பட்டதும் அனைவரும் புலம்பெயர்ந்தவர்கள் தான். தத்துக்கொடுக்கப்பட்ட ஒரு பிள்ளை எவ்வாறு பெற்றோருக்கு பிறத்தியாகுமோ அவ்வாறே நாமும் எம் இனத்திற்கு பிறத்தியராய்ப் போவது கசப்புடன் விழுங்க வேண்டிய ஒரு மாத்திரைதான்’ என்கிறார் திரு. வீ. ஜீவகுமாரன் அவர்கள்.
மூத்த படைப்பாளிகள் எமக்கொரு வழிகாட்டி. அவர்களின் படைப்புக்களைப் படித்துத்தான் இளையவர்கள் முன்னேற்றமடைய முடியும். அத்தகைய மூத்த படைப்பாளியும், முஸ்லிம் பெண் எழுத்தாளருமாகிய திருமதி சுலைமா சமி இக்பால் அவர்களின் நாவல் இந்த இரசனைக் குறிப்புக்காக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. நாவல் துறையில் நன்கறியப்பட்ட முஸ்லிம் பெண்களில் இவரும் முக்கியமானவர். நாவல் எழுத விரும்புபவர்கள் இத்தகையவர்களின் படைப்புக்களைப் பார்த்து பயனடைய வேண்டும். இவர் ஏற்கனவே வைகறைப் பூக்கள், மனச் சுமைகள், திசை மாறிய தீர்மானங்கள் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் வெளியிட்டிருக்கின்றார். ஊற்றை மறந்த நதிகள் என்ற நாவல் தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அனுசரணையுடன் எக்மி பதிப்பகத்தின் வெளியீடாக 108 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது. இந்நூல் சர்வதேச ரீதியில் பரிசையும், அரச சாகத்திய விழாவின்போது 2009ல் வெளியான சிறந்த நூலுக்கான சான்றிதழையும்; பெற்றிருப்பதுடன் புதிய சிறகுகள் அமைப்பின் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இதுவரை காலமாக சிறுகதைகளையே எழுதி வந்த கதாசிரியை கலாஜோதி சுலைமா சமி இக்பால் அவர்களின் முதல் முயற்சியே இந்த நாவல். இந்த முதல் முயற்சிக்கே பெரும் வரவேற்பு கிட்டியிருப்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சி.