‘சொப்கா’ மக்கள் ஒன்றியத்தின் கொண்டாட்டம்

சென்ற ஜனவரி 7ம் திகதி 2012 சொப்கா என்று அழைக்கப்படுகின்ற ஸ்கிறீன் ஒவ் பீல் மக்கள் ஒன்றியத்தின் ஆதரவில் தீபாவளி நத்தார், புதுவருட, தைப்பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. வருடாவருடம் நடக்கும் இந்தக் கொண்டாட்டம் இம்முறையும் மிகவும் சிறப்பாக பல்கலாச்சாரத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தது. மிசசாகாவில் உள்ள ஸ்குயவண் முதியோர் அரங்கில் இந்தப் பல்கலாச்சார நிகழ்ச்சி மண்டபம் நிறைந்த நிகழ்வாக இடம் பெற்றது. பிரதம விருந்தினர்களாக வைத்தியகலாநிதி திரு. திருமதி மோகன் இரட்ணசிங்கம் அவர்கள் கலந்து கொண்டனர். விசேட விருந்தினராக குக்ஸ்வில் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் தீப்பிகா தர்மிலா அவர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்.எழுத்தாளர் குரு அரவிந்தன் உரைசென்ற ஜனவரி 7ம் திகதி 2012 சொப்கா என்று அழைக்கப்படுகின்ற ஸ்கிறீன் ஒவ் பீல் மக்கள் ஒன்றியத்தின் ஆதரவில் தீபாவளி நத்தார், புதுவருட, தைப்பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. வருடாவருடம் நடக்கும் இந்தக் கொண்டாட்டம் இம்முறையும் மிகவும் சிறப்பாக பல்கலாச்சாரத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தது. மிசசாகாவில் உள்ள ஸ்குயவண் முதியோர் அரங்கில் இந்தப் பல்கலாச்சார நிகழ்ச்சி மண்டபம் நிறைந்த நிகழ்வாக இடம் பெற்றது. பிரதம விருந்தினர்களாக வைத்தியகலாநிதி திரு. திருமதி மோகன் இரட்ணசிங்கம் அவர்கள் கலந்து கொண்டனர். விசேட விருந்தினராக குக்ஸ்வில் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் தீப்பிகா தர்மிலா அவர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்.சென்ற ஜனவரி 7ம் திகதி 2012 ‘சொப்கா’ என்று அழைக்கப்படுகின்ற ‘ஸ்கிறீன் ஒவ் பீல்’ மக்கள் ஒன்றியத்தின் ஆதரவில் தீபாவளி நத்தார், புதுவருட, தைப்பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. வருடாவருடம் நடக்கும் இந்தக் கொண்டாட்டம் இம்முறையும் மிகவும் சிறப்பாக பல்கலாச்சாரத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தது. மிசசாகாவில் உள்ள ஸ்குயவண் முதியோர் அரங்கில் இந்தப் பல்கலாச்சார நிகழ்ச்சி மண்டபம் நிறைந்த நிகழ்வாக இடம் பெற்றது. பிரதம விருந்தினர்களாக வைத்தியகலாநிதி திரு. திருமதி மோகன் இரட்ணசிங்கம் அவர்கள் கலந்து கொண்டனர். விசேட விருந்தினராக குக்ஸ்வில் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் தீப்பிகா தர்மிலா அவர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்.

Continue Reading →

மீள்பிரசுரம்: சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ – 2

2. வரலாற்றில் வண்ணம் சேர்த்தல்

2011ற்கான இந்திய மத்திய அரசின் ‘சாகித்திய அகாடமி’ விருதினைத் தமிழுக்காகப் பெற்ற நாவல் சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’. இந் நாவல் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய வலைப்பதிவில் எழுதியிருக்கின்றார். அதன் முதற் பகுதி ஏற்கனவே ‘பதிவுகள்’ இணைய இதழில் மீள்பிரசுரமாகியுள்ளது. அதன் இரண்டாம் பகுதி இம்முறை வெளியாகின்றது. – பதிவுகள்

சு.வெங்கடேசனின் 'காவல் கோட்டம்'சு.வெங்கடேசன்வரலாற்று நாவல் என்பது என்ன? முகங்களாக ஆக்கப்பட்ட வரலாறு என்று அதைப்பற்றி கூறலாம். வரலாறு என்ற வரைபடத்தை மரங்களும், மிருகங்களும், மக்களும் வாழ்க்கையும் ததும்பும் நிலமாக மாற்றுவதே வரலாற்று நாவலின் கலை. சி.சு.செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’ ஏன் ஒரு தோல்வி என்றால், அந்நாவல் இந்தச் சவாலில் வெல்ல முடியவில்லை என்பதே. தல்ஸ்தோயின் ‘போரும் அமைதியும்’ ஏன் வெற்றிகரமான நாவல் என்றால் மொத்த வரலாற்றையும் நாமே சென்று வாழ்ந்து விட்டு மீளக்கூடிய ஒரு பரப்பாக, என்றும் உணரும் வாழ்க்கையாக அது மாற்றிவிடுகிறது என்பதே. அதாவது செல்லப்பாவின் நாவலில் நாம் வரலாற்றையே காணமுடியும். அதேசமயம் தல்ஸ்தோயின் நாவலில் நாம் வாழ்க்கையையே வரலாறாகக் காண்கிறோம். இதையே வரலாற்றுக்கு வண்ணம் சேர்க்கும் பணி என்று கூறுகிறேன்.

வரலாற்றின் பக்கங்களில் நாம் காண்பது ஒரு செய்தியை. ‘கி.பி.பதிமூன்றாம் நூற்றாண்டில் விஜயநகரத்தை ஆண்ட குமார கம்பணன் என்ற மன்னன் தன் பெரும் படையுடன் இஸ்லாமிய தளகர்த்தர்களால் ஆளப்பட்ட மதுரைமீது படையெடுத்து வந்து அதைக் கைப்பற்றினான்.’ ஆனால் அதை காவல் கோட்டம் ஒரு நிகழ்வாகச் சித்தரிக்கிறது. ‘வைகையின் நீர் மெலிந்து வடகரையோரம் நூலாக ஓடியது’ என்று ஆரம்பிக்கிறது சித்தரிப்பு. கழுத்தளவு நீரில் சிறுவர்கள் நீந்தி தாவி குதூகலிக்கிறார்கள். அவர்கள் அன்னையர் துணி துவைத்துக் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். திடீரென்று ஒரு சிறுவன் “நாயீ நாயீ” என்று கத்தினான். அவன் குரல் கேட்டு தாய் மேற்கே பார்த்தாள்.

Continue Reading →

சிறுவர்களுக்கான அறிவுரைகளைக் கூறி நிற்கும் பலே பலே வைத்தியர்

நாவல், சிறுகதை, பத்தி எழுத்துக்கள், நாடகம், நூலாய்வு போன்ற பல்வேறு துறைகளில் ஆளுமைகளைக் கொண்டவர் கே. விஜயன் அவர்கள். விடிவுகால நட்சத்திரம், மன நதியின் சிறு அலைகள் என்ற நாவல்களையும், அன்னையின் நிழல் என்ற சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டிருக்கும் இவரது அடுத்த நூல் பலே பலே வைத்தியர். சிறுவர்களுக்கான இந்நூல் 98 பக்கங்களில் 20 கதைகளை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. 'இந்தப் புத்தகத்தில் காணப்படும் பெரும்பாலான கதைகள் மலையாள சிறுவர் சஞ்சிகைகளில் வாசித்து இன்புற்ற குட்டிக் கதைகளாகும். உட்கரு கதையோட்டத்தின் நிகழ்வுகளாக, நாடகத் தன்மையுடன் அமைதல் வேண்டும். பாத்திரங்களின் இயல்புத்தன்மை சித்திரங்களாக உருவாக்கப்பட வேண்டும். சிறுவர்களின் பிஞ்சு மனங்கள் அப்போதுதான் வாசிப்பில் ஈர்ப்புடன் ஈடுபடும். எளிமையான மொழிநடை இதற்கு பெரும் துணையாக அமையும்' என்கிறார் நூலாசிரியர் கே. விஜயன் அவர்கள்.நாவல், சிறுகதை, பத்தி எழுத்துக்கள், நாடகம், நூலாய்வு போன்ற பல்வேறு துறைகளில் ஆளுமைகளைக் கொண்டவர் கே. விஜயன் அவர்கள். விடிவுகால நட்சத்திரம், மன நதியின் சிறு அலைகள் என்ற நாவல்களையும், அன்னையின் நிழல் என்ற சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டிருக்கும் இவரது அடுத்த நூல் பலே பலே வைத்தியர். சிறுவர்களுக்கான இந்நூல் 98 பக்கங்களில் 20 கதைகளை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. ‘இந்தப் புத்தகத்தில் காணப்படும் பெரும்பாலான கதைகள் மலையாள சிறுவர் சஞ்சிகைகளில் வாசித்து இன்புற்ற குட்டிக் கதைகளாகும். உட்கரு கதையோட்டத்தின் நிகழ்வுகளாக, நாடகத் தன்மையுடன் அமைதல் வேண்டும். பாத்திரங்களின் இயல்புத்தன்மை சித்திரங்களாக உருவாக்கப்பட வேண்டும். சிறுவர்களின் பிஞ்சு மனங்கள் அப்போதுதான் வாசிப்பில் ஈர்ப்புடன் ஈடுபடும். எளிமையான மொழிநடை இதற்கு பெரும் துணையாக அமையும்’ என்கிறார் நூலாசிரியர் கே. விஜயன் அவர்கள். குட்டிக் கரணமடித்த குண்டு பயில்வான் என்ற கதையில் இரு எலி நண்பர்கள் பற்றியும், அவை குண்டு பயில்வான் ஒருவனுக்கு செய்யும் அட்டகாசங்கள் பற்றியும் குறிப்பிடப்படுகின்றது. பயில்வானின் தோற்றத்தையும், பரபரப்பையும் கண்டு கேலியாக கதைக்கும் எலிகளை கல்லால் அடிக்கிறான் பயில்வான். அவன் கயிற்றில் ஏறி சர்க்கஸ் செய்யும்போது எலி தன் கூரிய பற்களால் கயிற்றை கடித்துவிட கயிறு அறுந்து பயில்வான் விழுகிறான் என்றவாறு இக்கதை அமைந்திருக்கிறது.

Continue Reading →