(84) – நினைவுகளின் சுவட்டில் …

வெ.சா.வுடன் ஒரு நாள் மாலை அளவளாவல்!ஸ்டாலின் சம்பந்தப்பட்ட The Great Purges –  பற்றி எழுதிக்கொண்டு வரும்போது கம்யூனிஸக் கொள்கைகளால் கவரப்பட்டு பின்னர் ஸ்டாலின் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளிலும், ஸ்டாலினின் கோடூர யதேச்சாதிகாரத்திலும் வெறுப்புற்று வெளியேறியவர்கள் எழுதிய The God that Failed  புத்தகத்தைப் பற்றிச் சொல்லி வந்தேன். அதில் சில பெயர்கள் என் மறதியில் விட்டுப் போயின. அதன் பின் எனக்கு ஒரே ஒரு பெயர்தான் நினைவுக்கு வந்தது. ஆர்தர் கெஸ்லர் என்னும் ஹங்கரியர் பெயர்தான் மறந்து போனது. அவர் பின்னர் இந்தியாவுக்கும் வந்திருந்தார். அவரோடு நிகழ்ந்த ஒரு எழுத்தாளர் கூட்டத்தில் நம் க.நா. சுப்ரமணியம் கலந்து கொண்டது பற்றி Quest என்னும் காலாண்டு பத்திரிகையில் படித்திருக்கிறேன். அதற்கும் முன் The God That Failed – ல் தன் அனுபவங்களை எழுதியவர்களில் இன்னொருவரான, Stephen Spender, Iஇவர் ஒரு ஆங்கில கவி, Encounter  என்னும் ஒரு மிகச் சிறந்த மாதப் பத்திரிகையை நடத்தி வந்தார் அது எனக்கு 1950 களில். எனக்கு புர்லாவில் ஒரு ரூபாய்க்குக் கிடைத்தது. அவரும் இந்தியாவுக்கும் சென்னைக்கும் வந்திருந்தார். அவரையும் சந்தித்து அவர் சென்னையில் இருந்தவரை அவரோடு உடன் இருந்தவர் க.நா. சுப்ரமண்யம், அது பற்றி (கொஞ்சம் மூச்சை நிறுத்திக் கேட்டுக் கொள்ளலாம்) ஆனந்த விகடனில், ஆமாம் ஆனந்த விகடனில்தான்,  எழுதியிருந்தார். ஆனந்த விகடனில் க.நா.சு. எப்படி எழுத நேர்ந்தது? அவர் எழுதுவது ஒரு ஆங்கில கவிஞர் பற்றியல்லவா? புதுமைப் பித்தனைப் பற்றி எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தால் இடம் கிடைத்திருக்குமா, சந்தேகம் தான்.

Continue Reading →

புதிய நூலகம் 9,10 செய்தி மடல்கள் வெளிவந்துள்ளன

புதிய நூலகம் 9,10 செய்தி மடல்கள் வெளிவந்துள்ளனபுதிய நூலகத்தின் 9 வது மற்றும் 10 வது செய்திமடல்கள் சிறிய இடைவெளிக்குப் பின்னர் வெளிவந்துள்ளன.  9 வது இதழில்  ‘சிறப்புச் சேகரங்கள் வலைவாசல்கள்’ என்ற செய்தியுடன்; இராகவன் எழுதிய ‘புதிய தரிசனம் ஒரு நினைவோடை’, தீபச்செல்வன் எழுதிய ‘வன்னியில் அழிந்த நூல்கள்’, நற்கீரன் எழுதிய ‘தமிழில் திறந்த தரவுகள் ஏன் எப்படி’ ஆகிய கட்டுரைகளும்; கொழும்பு சைவமங்கையர் வித்தியாலயம், கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றில் நடைபெற்ற ‘எண்ணிம நூலக அறிமுகம்’ பற்றிய சி.சேரனின் நிகழ்வுக்குறிப்புக்களும், அ.யேசுராசா பற்றிய பதிவும் இடம்பெற்றுள்ளன.

Continue Reading →