நிகழ்வை தொடங்கி வைப்பவர்: படத்தொகுப்பாளர் லெனின்
ஆவணப்பட இயக்குனர்: ம. சிவக்குமார்
நாள்: 18-02-2012 & 19-02-2012, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை
நேரம்: காலை பத்து மணி முதல் (இரண்டு நாட்களும்)
இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப் உள்ளே)
முனுசாமி சாலை, கே.கே.நகர், (புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
அம்பாறை மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியம் என்ற நூலும், இறுவட்டும் அண்மையில் வெளிவந்திருக்கிறது. இந்நூலை கலாபூஷணம் கே.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் தனது இரண்டாவது தொகுதியாக வெளியிட்டிருக்கிறார். அவர் ஏற்கனவே கனலாய் எரிகிறது என்ற கவிதைத் தொகுதியை புரவலர் புத்தகப் பூங்கா மூலம் வெளியிட்டுள்ளார். 2010 இல் இலங்கை அரசு இவருக்கு கலைத்துறையில் ஆற்றிய பணிக்காக கலாபூஷண விருது வழங்கி கௌரவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியம் என்ற கவிதைத் தொகுப்பு 27 பக்கங்களில் வெளிவந்திருக்கிது. இத்தொகுதியில் 69 பாடல்வரிகள் அமைந்துள்ளன. 2004 டிசம்பர் 26 ஆம் திகதி நிலத்தைப் பிழந்த சுனாமியில் உயிர்நீத்த உடன்பிறப்புக்கள் ஒவ்வொருவருக்கும்… நெஞ்சத்தைப் பிழந்து என்று நூலாசிரியர் தனது சமர்ப்பணத்தை முன்வைத்துள்ளார்.
இவர் 1977 இல் இலக்கிய உலகில் அடிபதித்தவர். இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் நிகழ்ச்சியில் இவரது 100க்கு மேற்பட்ட இஸ்லாமிய கீதங்கள், ஒரு சங்கீத ஆசானால் பாடப்பட்டுள்ளன. நிந்தவூர் அல்-அஷ்ரக் உயர்தரப் பாடசாலையிலும், சாய்ந்தமருது முன்பள்ளி கல்வி நிலையம் ஒன்றிலும் இவரது காலை வந்தனப் பாடல்கள் இன்றும் இசைக்கப்படுகின்றன. கே.எம்.ஏ அஸீஸ் இவ்வாறு கவிதைத் துறையில் அகலக் கால்பதித்து நிற்கிறார். ஏழாண்டு சுனாமி அனர்த்த ஞாபகார்த்த நினைவஞ்சலி விழாவில் வெளியாகும் இவரது கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியமும், இறுவட்டு;ம் எதிர்கால சந்ததியினரின் ஆன்மீக சிந்தனைக்கு ஏற்ற அருமருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை என்கிறார் இந்நூலுக்கு உரை எழுதியிருக்கும் கலாபூஷணம் யூ.எல் ஆதம்பாவா அவர்கள்.