முன்னுரை
”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பொன்மொழிக்கு நிகராக இன்று உலகில் இருக்கும் அனைவரும் உறவினர்களாக உருவாக்கம் பெற்று வருகின்றனர். காரணம் இணையம். இணையம் இன்று பல்துறைப்பணிகளையும் செய்யும் அன்புக் கடவுள். இணையம் முதலில் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் பிறகு அது பல்வேறு பணிகளையும் ஒரே நேரத்தில் செய்யும் ஆற்றலுடன் வலம் வந்தது. இணையத்தில் நாம் ஒரு செய்தியைத் தேடி எடுக்க வேண்டுமென்றால் அதற்குப் பல இணைய முகவரிகளோயோ, வலைப்பதிவு முகவரிகளையோ, பொது தளங்களையோ சென்று நாம் காண வேண்டிய சூழலில் உள்ளோம். இதனால் அதிகமான நேரத்தையும், பொருள் செலவையும் இழக்க நேரிடுகிறது. ஆனால் செல்பேசி மற்றும் கையடக்கக் கணினிகளில் என்ன செயலுக்கு எந்த வலைமுகவரியோ அதைவிட அதிகமான, மிகத் துல்லியமானச் செய்திகளை நமக்குத்தரும் தமிழ்க் குறுஞ்செயலிகள் இன்று ஆயிரத்திற்கும் மேல் உள்ளன.