1. மனிதர் மனிதராக இல்லை..
மனிதசாதி – மனுக்குலம் இன்று
மனிதம் மறந்து மனிதமிழந்து
மனித மிருகமாகின்றதே.
புனிதரெனப் பகட்டாக இவர்
புனைய ஓர் ஆடையெதற்கு!
மனிதர் மிருகவேட்டை யாடுவார்,
மனிதர் தலைகுனிவா யின்று
மனித வேட்டையாடுகிறாரே ஏன்!
1. மனிதர் மனிதராக இல்லை..
மனிதசாதி – மனுக்குலம் இன்று
மனிதம் மறந்து மனிதமிழந்து
மனித மிருகமாகின்றதே.
புனிதரெனப் பகட்டாக இவர்
புனைய ஓர் ஆடையெதற்கு!
மனிதர் மிருகவேட்டை யாடுவார்,
மனிதர் தலைகுனிவா யின்று
மனித வேட்டையாடுகிறாரே ஏன்!
அவுஸ்திரேலியா – சிட்னியில் அண்மையில் அடுத்தடுத்து மறைந்த ஈழத்தின் மூத்த படைப்பாளிகளான எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) காவலூர் ராஜதுரை ஆகியோரின் படைப்பிலக்கிய மதிப்பீட்டு நினைவரங்கு எதிர்வரும் 20 ஆம் திகதி (20-12-2014) சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மெல்பனில் Preston – Darebin Intercultural Centre இல் நடைபெறும். கலை, இலக்கிய ஆர்வலரும் சட்டத்தரணியுமான செல்வத்துரை ரவீந்திரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ள ஈழத்தின் மூத்த இலக்கியத்திறனாய்வாளரும் இலங்கை வானொலி மற்றும் The Island , வீரகேசரி முதலான நாளிதழ்களின் மூத்த ஊடகவியலாளருமான திரு. கே.எஸ்.சிவகுமாரன், கண்டி அசோக்கா வித்தியாலய ஸ்தாபகர் நடராஜாவின் துணைவியார் இலக்கிய ஆர்வலர் திருமதி லலிதா நடராஜா ஆகியோர் அமரர்கள் எஸ்.பொ. – காவலூர் ராஜதுரையின் உருவப்படங்களுக்கு விளக்கேற்றி நிகழ்ச்சிகளை தொடக்கிவைப்பர். கலாநிதி கௌஸல்யா ஜெயேந்திராவின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும் இந்நிகழ்ச்சியில் சட்டத்தரணி ரவீந்திரன் தலைமையுரை நிகழ்த்துவார்.