வணக்கம், இயற்றமிழ்ப்போதகாசிரியர் என்று அறியப்பட்ட வல்வை ச.வைத்தியலிங்கம்பிள்ளை ( 1843 – 1900 ) அவர்களால் இயற்றப்பட்ட சிந்தாமணி நிகண்டினை(1876) மின்–அகராதியாக மாற்றியுள்ளோம். நிகண்டில் உள்ள சொற்கள்…
இது எமது தபால்பெட்டிக்கு வந்திருந்த நாலாவது அநாமதேயக் கடிதம். கடந்த இரண்டு வாரங்களில் இதேமாதிரியான மூன்று கடிதங்கள் வந்திருந்தன. “I buy houses, gas or no gas, call Tim.” – கடிதத்தில் இருந்தது இவ்வளவுந்தான். இதுபோன்ற கடிதங்கள் இனிமேலும் வரலாம். யார் இந்த ரிம்? இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அந்தக்கடிதங்களை எடுத்துக் கொண்டு ரவுனிற்குப் போனேன். ரவுன் எனது வீட்டிலிருந்து பத்துநிமிடங்கள் கார் ஓடும் தூரத்தில் உள்ளது. றியல் எஸ்டேட் (Real Estate) திறந்திருக்கக்கூடும். நகரம் கேளிக்கையில் நிரம்பி வழிகின்றது. மேர்க்கியூரி ஹோட்டலின் கோலாகலமான வெளிச்சத்தில் மனிதர்களின் நடமாட்டம் தெரிகிறது. சாப்பாட்டுக் கடைகளிற்குள் மக்கள் நிதானமாகவிருந்து சாப்பிட்டுக் கொண்டும் மது அருந்திக் கொண்டும் இருக்கின்றார்கள். கிளப்பிலிருந்து ஜாஸ் மிதந்து வருகிறது. மூடப்பட்டிருந்த றியல் எஸ்டேட் கடையின் கண்ணாடிக்குள்ளால் தெரியும் விளம்பரங்களைப் பார்த்து சத்தமிட்டுக் கதைத்தபடி சிலர் நிற்கின்றார்கள். அவர்கள் சண்டையை ஆரம்பிப்பதற்கு முன்னதாக நான் திரும்பிக் கொண்டேன். இந்த விஷயத்தை அப்பா ஒருமாதத்திற்கு முன்பாகவே அறிந்து கொண்டார் என்றுதான் நினைக்கின்றேன். அன்று…
[எழுத்தாளர் தேவகாந்தனின் ‘கனவுச்சிறை’ நாவல் ஜனவரி 3 , 2015 அன்று தமிழகத்தில் காலச்சுவடு பதிப்ப வெளியீடாக வெளிவரவிருக்கின்றது. நீண்ட நாள்களாக அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நாவலான ‘க்னவுச்சிறை’ நூலுருப்பெற்று வெளிவருவது மகிழ்ச்சியளிப்பது. வாழ்த்துகிறோம். அதனையொட்டி ‘கனவுச்சிறை’ நாவல் பற்றி வெளியான எழுத்தாளர்கள், திறனாய்வாளர்கள் சிலரின் கருத்துகள் சில இங்கு பதிவாகின்றன. – பதிவுகள்-]
முனைவர் நா.சுப்பிரமணியன்:
நாவலிலக்கியம் என்பது ஒரு சமூகத்தின் இயங்குநிறையின் வரலாற்று வடிவம் ஆகும். அதில் கதை இருக்கும். ஆனால் கதை கூறுவது தான் அதன் பிரதான நோக்கம் அல்ல. சமூகத்தின் அசைவியக்கத்தின் பன்முகப் பரிமாணங்களையும் இனங்காட்டும் வகையில் குறிப்பிட்ட ஒரு காலகட்ட வரலாற்றுக் காட்சியைத் துல்லியமாக எழுத்தில் வடிப்பதே நாவலாசிரியனொருவனின் முதன்மை நோக்கம் ஆகும். இந்த நோக்கினூடன செயற்பாங்கின் ஊடாக ஒரு கதை முளை கொண்டு வளர்ந்து செல்லும். இக்கதை குறித்த ஒரு சில மாந்தரை மையப் படுத்தியதாகவும் அமையலாம் அல்லது சமூகத்தின் பன்முக உணர்வுத்தளங்களையும் இனங்காட்டும் வகையில் பல்வேறு மாந்தர்களின் அநுபவ நிலைகளையும் பதிவு செய்யும் வகையில் விரிந்து பல்வேறு கிளைப்பட்டு வளர்ந்தும் செல்லலாம். இவ்வாறு விரிந்தும் வளர்ந்தும் செல்லும் கதையம்சங்களினூடாக ஈழத்துத் தமிழர் சமூகத்தின் ஒரு காலகட்ட – கடந்த ஏறத்தாழ கால் நூற்றாண்டுக் காலகட்ட – வரலாற்றுக் காட்சியை நமது தரிசனத்துக்கு இட்டு வரும் செயற்பாங்காக அமைந்த முக்கிய படைபாக்கம் தேவகாந்தன் அவர்களின் கனவுச்சிறை என்ற இந்த மகாநாவல்.
ஆனந்தவிகடன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் வியெஸ்வி அவர்களிடம் இருந்து அன்று எனக்கொரு கடிதம் வந்திருந்தது. நான் சற்றும் அந்தக் கடிதத்தை எதிர்பார்க்கவில்லை. கடிதத்தைப் பார்த்தபோதுதான் விகடனுக்கு நான் அனுப்பிய முதற்கதையின் ஞாபகம் வந்தது. அந்தக் கதை அனுப்பியதைகூட நான் மறந்து போயிருந்தேன். காரணம் அது தற்செயலாக ஏற்பட்ட ஒரு சம்பவமாக இருந்தது. மகாஜனக் கல்லூர் முன்னாள் அதிபர் கனகசபாபதி அவர்கள் தான் எனது ஒரு கதையை வாசித்துவிட்டு இந்தக்கதை விகடனுக்குத்தான் ஏற்றது, அனுப்பிப்பாரும் என்று வாழ்த்தி விகடன் முகவரியையும் தந்திருந்தார். அதற்கும் ஒரு காரணம் இருந்தது, அதாவது அப்பொழுதுதான் கனடா உதயன் பத்திரிகையின் சிறுகதைப் போட்டியில் எனது சிறுகதைக்காக எனக்குத் தங்கப் பதக்கம் பரிசாகக் கிடைத்திருந்தது. அவர் நீண்டகாலமாக விகடன் வாசகராக இருந்ததால் எனக்கும் சின்ன வயதில் இருந்தே விகடன் கதைகளை வாசிக்க நிறையவே சந்தர்ப்பம் கிடைத்தது. எனவே எனது முதற்கதையை கனடாவில் இருந்து அனுப்பிவிட்டு நான் அதில் அதிக அக்கறை செலுத்தவில்லை. விகடனில் இருந்து வந்த, என்னை ஆச்சரியத்திற்குள் ஆளாக்கிய வியெஸ்வியின் முதற் கடிதம் அதுதான்.