கவிதை: மீன் மழை

- - எம். ரிஷான் ஷெரீப், இலங்கை -மூங்கில் கூடைகளின் மீன்கள்
கூவி விற்கும் சிறுவனின் குரலில்
இறந்தகாலத்தைப் பாடித் திமிறும்

மீனவத் தெருவின் வாடையை
விருப்பத்தோடு நுகரும் காற்று
பனங்குருத்து வலைத் தொப்பிகளைக் காவும் காலை நேரம்
சூளைத் தொழிலாளியின் செங்கற்களைச் சுமந்த
கைவண்டியில் அவ்வப்போது
அம் மீன்கள் பயணிக்கும்

தொலைவுக்குச் செல்லும் பாதையில் நகர்ந்த
அந்தி மழைக்குத்தான் எவ்வளவு தயாளம்
தகித்த கோடைக்குப் பின்னரான
இக் குளிரும் ஈரமும்
மழை தந்தது

நேற்றைய வானவில்
குளிக்க இறங்கிய நதியல்ல இது
எங்கும் பாய்கிறது நுரை வெள்ளம்
சூரியன் மறையவிழைந்த
ஆகாயமஞ்சளைத் தேய்த்துக் குளித்தபடி

Continue Reading →

நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக கேப்பாபிலவு மக்களுக்கான ஆதரவு ஒன்றுகூடல்!

சிறிலங்கா விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள, தங்களின் 524 ஏக்கர் சொந்தநிலத்தை தங்களிடம் கையளிக்க கோரியும் 84 குடும்பங்களை சேர்ந்த கேப்பாபிலவுமக்கள்,  தமது சொந்த காணிகளில் மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தியும் …

Continue Reading →

‘ரொறன்ரோ’ தமிழ்ச்சங்கம் தற்காலிகமாக புதிய இடத்தில்

நண்பர்களுக்கு வணக்கம், ரொறன்ரோ தமிழ்ச்சங்கத்தின் இந்த மாத(மாசி), பங்குனி, சித்திரை மாத நிகழ்வுகள் தற்காலிகமாக புதிய இடத்தில் நடக்க இருக்கிறது என்பதை தங்களுக்கு அறியத்தருகிறோம். புதிய இடத்தின்…

Continue Reading →

படித்தோம் சொல்கின்றோம்: இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களின் வாழ்வையும் பணிகளையும் ஆவணப்படுத்திய நூல். தமிழ் சமூகம் அறியத்தவறிய படைப்பாளுமைகளின் சரிதையை பதிவுசெய்திருக்கும் தொகுப்பு

முருகபூபதி -

ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் பங்காற்றிய நாற்பது முற்போக்கு ஆளுமைகளின் வாழ்வையும் பணிகளையும் பதிவுசெய்யும் 327 பக்கங்கள் கொண்ட ஒரு நூலை இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் கடந்த (2016) ஆண்டு இறுதியில் கொழும்பில் வெளியிட்டிருக்கிறது. இந்தத் தொகுப்பு நூலிற்கான செயற்திட்டங்கள் சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பில்தான் மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டதை மின்னஞ்சல் வாயிலாக அறிந்தேன். நீர்வைபொன்னையன், தேவகௌரி, குமரன் பதிப்பகம் குமரன் ஆகியோர் அவ்வப்போது தொடர்புகொண்டு சில முற்போக்கு எழுத்தாளர்களின் விபரங்கள், படங்களும் கேட்டிருந்தனர். கேட்டவற்றை அனுப்பிக்கொண்டிருந்தேன். ஆயினும் நூல் வெளிவருவதில் தொடர்ந்தும் தாமதம் நீடித்துக்கொண்டிருந்தது. இதற்கிடையில் நீர்வைபொன்னையனும் அவுஸ்திரேலியா சிட்னிக்கு வந்து திரும்பியிருந்தார்.இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து இயங்கிய சில எழுத்தாளர்கள் இத்தொகுப்பில் இடம்பெறமாட்டார்கள் என்பதை தெரிந்துகொண்ட கவிஞர் மேமன்கவியும் பகிரங்க கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அவர் தமது கடிதத்தில் இத்தொகுப்பில் புறக்கணிக்கப்பட்ட சில எழுத்தாளர்களின் பெயர்களையும் சுட்டிக்காண்பித்திருந்தார். முகநூல்களிலும் மின்னஞ்சல்களிலும் சில வாரங்கள் ஈழத்து  இலக்கியவாதிகளிடத்திலும் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களிடமும் மேமன்கவியின் கடிதம் பேசுபொருளாக இருந்தது. இந்த சர்ச்சைகளும் நூல் வெளியீட்டில் தாமதம் தருகின்றதோ என அந்நியதேசத்திலிருந்து நான் யோசித்தேன். திடீரென்று ஒரு மின்னஞ்சல்,  தொகுப்பில் இடம்பெறவிருக்கும் முற்போக்கு எழுத்தாளர்களின் மனைவிமார், பிள்ளைகள் பெயர் விபரங்களும் கேட்டிருந்தது. அதற்கான பதிலை மின்னஞ்சலில் தெரிவிக்காமல், தொலைபேசி ஊடாகவே சொல்ல நேர்ந்தமைக்கு, குறிப்பிட்ட தகவல்கள் விவகாரங்களிற்கு அழைத்துச்சென்றுவிடும் என்பதும் ஒரு காரணம். 2014 ஆம் ஆண்டு முதல் தாமதமாகவிருந்து ஒருவாறு இலங்கை முற்போக்கு எழுத்தாளர்கள் நூல் கடந்த ஆண்டு இறுதியில் கொழும்பில் வெளியிடப்படுவதாக பத்திரிகைச்செய்தியில் பார்த்தேன்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 222 : சண்முகம் முத்துலிங்கம் மறைவு (Sanmugam Muttulingam)

சண்முகம் முத்துலிங்கம்சண்முகம் முத்துலிங்கம்நண்பர் எழுத்தாளர் மைக்கல் தனது முகநூல் பதிவொன்றில் சண்முகம் முத்துலிங்கம் (Sanmugam Muttulingam) அவர்களின் மறைவு பற்றிய செய்தியினைப் பகிர்ந்துகொண்டிருந்தார். அறிந்தபோது உண்மையிலேயே அதிர்ச்சியாகவிருந்தது. இரு நாட்களுக்கு முன்புகூடத் தனது முகநூலில் பதிவுகள் பலவற்றை இட்டிருந்தாரே. மிகவும் துயர் தருவது. அண்மையில்கூட எழுத்தாளரும் இவரது நண்பருமான நந்தினி சேவியர் அவர்களின் இவரது உடல் நலம் பற்றிய குறிப்பொன்றுக்கான தனது பதிலினைத் தனது முகநூலில் பின்வருமாறு பகிர்ந்துகொண்டிருந்தார்.

“//விரைந்து குணமடைக முத்தரே. (நந்தினி)// அப்பனே நந்தினி, 52 வருடத்தோழனே, உன் அன்புக்கு … நன்றி … மூன்றாவது மார்படைப்பிலிருந்து மீண்டுள்ளேன். உடல், மனம், இரண்டுக்கும் போதிய ஓய்வு கொடுக்கிறேன். முகநூல் — எனது மூளைக்குத் தேவையான உயிர்ப்பைத் தருகிறது … எனது உடல் யாழ் மருத்துவ பீடத்துக்குத் தானம் என்றும், மரணச்சடங்கு என எதுவிதமான கேலிக்கூத்தும் இருக்கக்கூடாது எனவும், வீட்டில் உறுதியாகச் சொல்லி வைத்துள்ளேன். உடல் இயங்கும் போதே உனக்கும், என்மீது அன்புள்ள யாவர்க்கும், உங்கள் அன்புக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன் ! இறுதி மூச்சு வரை — “மீண்டும் தொடங்கும் மிடுக்குடன் …” வாழ்வேன் ! 🙂 ‘கிழட்டுக்கிளி’ சண்முகம் முத்துலிங்கம்.”

Continue Reading →

ஆய்வு: இணையமும் நவீன இலக்கியப் போக்குகளும் (மீள்பிரசுரம்: வல்லமை.காம்)

காட்சிகள்

முனைவர் மு. பழனியப்பன்

தமிழ் இணைய உலகு பரந்துபட்டது. அதன் விரிவு என்பது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களை உள்ளடக்கி வளர்ந்துவருகிறது. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற பகுதிகளின் தமிழ்வளர்ச்சியை வெளிப்படுத்தும் ஒன்றிணைக்கும் ஊடகம் இணையம் மட்டும்தான். இவ்வகையில் அயல்நாடுகளின் இணையத் தமிழ் வளர்ச்சி ஒரு புறமும், தாயகமான தமிழ்நாட்டின் இணைய வளர்ச்சி ஒருபுறமும்  வளர்ந்து வந்தாலும் இவையிரண்டும் ஒன்றுக்கொன்று சார்ந்தும், இணைந்தும் இயங்கும் நெருக்கத்தை இணையம்சார் போட்டிகள், இணைய இதழ்கள் அமைத்துத் தந்துவிடுகின்றன. இதன் காரணமாக இணையாத தமிழ்உள்ளங்கள் இணைந்து கரம் கோக்கும் புதுஉலகம் பிறந்துள்ளது.

சவாலே சமாளி
இருப்பினும் இணையத்தின் வளர்ச்சி ஒரு மூடுபொருளாகவே இருக்கிறது. இதற்கான காரணம் யாதென ஆராய வேண்டும். முக்கியமாக இணைய எழுத்தாளர்கள் தங்களை, தங்களின் தகவல்களை வெளியிடாமை அல்லது வெளிப்படுத்தாமை என்பது முக்கியமான காரணமாக அமைகின்றது. தம் எழுத்துகளை இணைய எழுத்தாளர்கள் கொண்டாடாமையும் ஒரு காரணம். நூல் வெளியீடு, பாராட்டுவிழா, விருதளிப்பு எதுவும் இணைய எழுத்திற்கு இல்லை என்பது மிக முக்கியமான காரணம். யாதாவது ஓர் அமைப்பு இணைய எழுத்துகளைப் பரிசளித்துப் பாராட்டி வெளிப்படுத்தும் நிகழ்வுகளை நடத்தினால் இக்குறை நீங்கும். இணைய எழுத்துக்கான தனித்தன்மை எதுவும் இல்லை என்பது இன்னுமொரு குறை. இணையத்தி்ல் எழுதி அச்சாக்குவது அல்லது அச்சாக்கி இணைய எழுத்தாக்குவது என்ற நிலையில் இணைய எழுத்திற்கான தனித்தன்மை இழக்கப்பெறுகிறது. இற்றைப் படுத்தப்படாமை என்பதும் மற்றொரு குறை. வலைப்பூ, முகநூல். இணைய இதழ், என்று பல பரிணாமங்களிலும் இணைய எழுத்தாளர்கள் கால்பதிக்க வேண்டி இருக்கிறது. இதன் காரணமாக ஒன்றை இற்றைப்படுத்துதல் மற்றதை விடுதல் என்ற நிலை ஏற்பட்டுவிடுகிறது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 222 : தமிழக அரசியல் நெருக்கடியும், சசிகலாவும்.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா‘சின்ன அம்மா’ சசிகலாவுக்கு அ.தி.மு.கவினரின் சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் தமிழக ஆளுநர் அவரை அழைத்து அவருக்குப் பெரும்பான்மை உள்ளது என்பதை நிரூபிக்க அழைப்பு விடுக்க வேண்டும். சசிகலாவால் முடியாவிட்டால் தற்காலிக முதல்வர் பன்னீர்செல்வத்தை அவருக்குத்தான் அ.தி.மு.க சட்டசபை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு உள்ளதென்பதை நிரூபிக்க அழைப்பு விடுக்க வேண்டும். இருவருக்கும் தம் கட்சிச் சட்டசபை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு கிடைக்காத பட்சத்தில் தி.மு.க.வினருக்குச் சந்தர்ப்பம் வாய்க்கலாம். ஒருத்தராலும் இப்பரீட்சையில் வெற்றியடைய முடியாவிட்டால், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தப்பட்டு, சட்டசபைத்தேர்தல் நடத்தப்படலாமென்று கருதுகின்றேன். ஆனால் இதுபற்றி இந்தியத் தேர்தல் சட்டதிட்டங்களை அறிந்த வல்லுநர்கள்தாம் சரியான கருத்துகளை முன் வைக்க வேண்டும்.

‘அரசியல் கோமாளி’ என்று சுப்பிரமணிய சுவாமியைக் கூறினாலும், அவர் இந்தியச் சட்டதிட்டங்களை அறிந்த அரசியல்வாதி.  அவர் சசிகலாவை அழைப்பதில் ஆளுநர் ஏன் தாமதம் செய்கின்றார் என்று கருத்துத்தெரிவிக்கின்றார். அதில் நியாயம் இருப்பதாகவே கருதுகின்றேன்.

தமிழக ஆளுநரின் பொறுப்பு தன் கடமையைச் சட்டரீதியாகச்செய்வது. சசிகலா, பன்னீர்ச்செல்வத்தின் மீதான தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் மக்கள் கூறுவதை வைத்து அவர் செயற்பட முடியாது. அவ்விதம் அரசியல்ரீதியாக அவர் செயற்படுவதை அனுமதிக்கவும் கூடாது. அவ்விதம் அனுமதிப்பது பின்னர் பாரதூரமான விளைவுகளைத் தமிழ்நாட்டுக்கு ஏற்படுத்தும்.

Continue Reading →

விழிப்புணர்வு கவிதை: இது குழந்தைத் தொழில் இல்லையா?

கவிதை படிப்போமா?பட்டாசுத் தொழிற்சாலையில்…..
குழந்தை வேலை செய்தால்……
சட்ட நடவடிக்கை………!!!

தீப்பெட்டித் தொழிற்சாலையில்…….
குழந்தை வேலை செய்தால்……
சட்ட நடவடிக்கை………!!!

செங்கற் சூளையில்….
குழந்தை வேலை செய்தால்……
சட்ட நடவடிக்கை………!!!

சல்லில் கல் உடைக்க……
குழந்தை வேலை செய்தால்……
சட்ட நடவடிக்கை………!!!

Continue Reading →

ஜல்லிக்கட்டுக் கவிதைகள் இரண்டு!

வேதா இலங்காதிலகம்1. நல்ல முடிவு வருமென …

சல்லிப் பொதி கொம்பிலே கட்டி
மல்லுக்கட்டி எருதை அடக்கி பொதியெடுக்கும்
தொல்லுலகின் ஆதி வீர விளையாட்டு.
நல்லுலகின் கலாச்சார விளையாட்டு ஏறுதழுவுதல்.

தடை உடைக்க தமிழ் உலகம்
படை எடுத்து பகட்டின்றிக் கூடி
பகல் இரவு பயம் தயக்கமின்ற
பக்குவமாய் தம் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்

மதுரை அலங்காநல்லூர் சல்லிக்கட்டிற்கு உலகிலுச்சம்.
யாதவர்களின்(ஆயர்) மரபுவழிக் குல விளையாட்டிது.
காளையின் கொம்பு பிடிப்பவன் வீரன்.
காளையின் வால் பிடிப்பவன் தாழ்ந்தவன்.

Continue Reading →

ஆய்வு: அகநானூற்றுப் பாலைத்திணையில் மலைக்கூறுகள்

சி.யுவராஜ்முன்னுரை
சங்க இலக்கியம் அகம்,புறம் எனும் இருபகுப்புகளையுடையது. அகம் சார்ந்தஎட்டுத்தொகை நூல்களில் அகநானூறு ஒன்று. அகப்பாடலுள் காதல் உணர்வும்,காதல் சார்ந்தபிறநிகழ்;வுகளும் பேசப்படும். அத்தகையஅகப்பாடல் செய்திகளைசங்கப் புலவர்கள் முதல்,கரு,உரிஎன்றஅடிப்படையில் அமைத்துப் பாடியுள்ளனர். இவற்றுள் முதற்பொருள் என்பதுஅகமாந்தர் வாழ்ந்து நிலத்தினையும், நிகழ்ச்சிநிகழும் காலத்தையும் அடிப்படையாகக் கொண்டஅமைகின்றது. இக்கட்டுரைஅகநானூறு பாலைத்திணைப் பாடல்களின் மலைப்பற்றி கூறுகள் அமைந்துள்ளவிதம் குறித்தப் புலவர்கள் தரும் செய்திகள் இக்கட்டுரையின் மையப்பொருளாகஅமைகின்றது.

பாலைநிலக்கூறுகள்
பாலைச்சூழலின் நிலத்தியல் கூறுகள் மலை, வழி, இடைவெளி, மணல்,பாறை, காடு ,பரப்பு, அறை, வயல், கழனி, கடல், வேங்கடல், பொதினி எனப் பலவகையானபெயர்களால் இடம் பெறுகின்றன. பாலைநிலத்தின் கூறுகளுள் ஒன்றாகிய‘மலை’என்பதை அடுக்கம், கவாஅன், குன்றம், சாரல், அறை, சிமை, கோடு, வரை, வெற்பு, விடாகம், பிறங்கல் எனப்பலப் பெயர்களில் சங்கப்புலவர்கள் விவரித்துள்ளனர்.

மலைப்பகுதிகள்

மலை
பாலைச்சூழலில் உயர்ந்தமலைஎன்பதை‘கல் உயர் பிறங்கல்’ (அகம்.313:17),‘உயர்பிறங்கல்;’(அகம்.321:17) எனவும்,‘கொடியமலை’என்பதற்கு‘வெம்மலை’ (அகம்.275:13) எனவும்,‘பெரியமலை’என்பதற்கு‘மைபடுமாமலை’ (அகம்.153;:17;187:2) எனவும் அகநானூற்றுப் புலவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Continue Reading →