மணிவிழாக் காணும் எழுத்தாளர் மேமன்கவி!

எழுத்தாளர் மேமன்கவிஎழுத்தாளர் மேமன்கவியையும் இலங்கைத்தமிழ் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க முடியாது. இத்தனைக்கும் இவரது தாய்மொழி தமிழ் அல்ல. தமிழ்மொழி தாய் மொழி இல்லாதபோதும் , தமிழ் மொழிக்குத் தன் எழுத்தால் வளம் சேர்த்தவர், சேர்ப்பவர். எழுத்தாளர் மேமன்கவி. இவரது மணிவிழா எதிர்வரும் மே 6 அன்று கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெறவுள்ளது. அதனையொட்டித் தமிழ் விக்கிபீடியாவில் இவரைப்பற்றிய தகவல்களை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். எழுத்தாளர் மேமன்கவி இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க வரலாற்றை இவரைத்தவிர்த்துக் கூற முடியாது என்னுமளவுக்கு அச்சங்கச்செயற்பாடுகளில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டவர்.  எழுத்தாளர் மேமன்க்வி அவர்களின் மணிவிழா சிறப்புய் அமையவும், தொடர்ந்தும் இவரது இலக்கியச்சேவை சிறக்கவும் வாழ்த்துகிறோம்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.… (https://ta.wikipedia.org/s/1j9)
மேமன்கவி (Memon Kavi, அப்துல் கரீம் அப்துல் ரஸாக், ஏப்ரல் 29, 1957) வட இந்திய குஜராத் மாநிலத்தைச் சார்ந்த மேமன் சமூகத்தில் பிறந்து இலங்கைத் தமிழ்க் கலை இலக்கிய உலகில் தன்னை படைப்பாளியாக அடையாளப்படுத்திக் கொண்டவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

வட இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து இலங்கையில் குடியேறிய மேமன் சமூகத்தின் மத்தியதரக் குடும்பம் ஒன்றில் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு அடுத்து மூத்த ஆண் மகனாகப் பிறந்தவர் அப்துல் ரசாக். மேமன்மொழி எழுத்து வடிவம் இல்லாது பேச்சு மொழியாக மட்டுமே இருந்தமையால், இவரது தந்தை இவரை தமிழ் மொழி மூலத்திலான பாடசாலையில் சேர்த்தார். எட்டாம் வகுப்புடன் இவர் தனது பாடசாலை கல்வியை முடித்துக் கொண்டார். மேமன் சமூகத்தினர் பொதுவாக வணிகத் துறையிலேயே ஆர்வம் காட்டுவர். ஆனாலும் இவரோ அன்றைய காலத் தொடக்கம் எழுத்தாளனாக ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் பல்வகையான நூல்களைப் படித்துக் கொண்டிருந்த காரணத்தால் முறையான கல்வி மீது ஏற்பட்ட சலிப்பில் பாடசாலைக் கல்வியை இடை நடுவில் கைவிட்டார். பாடசாலை வாழ்வின் இறுதிப்பகுதியில் இவரது தமிழாசிரியர் இலங்கை வானொலி நாடக புகழ் எம். அஸ்ரப்கான் இவரது வாசிப்பு பழக்கத்திற்கு ஊக்கப்படுத்தினார். பிற்காலத்தில் திறந்த பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை பாடநெறியை முடித்தார்

Continue Reading →

மேமன்கவியின் கவிதைத் தொகுப்பான ”ஆதிகளின் புதைகுழிகளிலிருந்து” வெளியீட்டு விழாவும், மணிவிழா நிகழ்வும்

மேமன்கவியின் கவிதைத் தொகுப்பான ''ஆதிகளின் புதைகுழிகளிலிருந்து'' வெளியீட்டு விழாவும், மணிவிழா நிகழ்வும், எதிர்வரும்  2017 ஆம் மே 6 ந்திகதி மாலை 4.30 மணிக்கு, கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் தலைமையில் நடைபெறும்.

மேமன்கவியின் கவிதைத் தொகுப்பான ”ஆதிகளின் புதைகுழிகளிலிருந்து” வெளியீட்டு விழாவும், மணிவிழா நிகழ்வும், எதிர்வரும்  2017 ஆம் மே 6 ந்திகதி மாலை 4.30 மணிக்கு, கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் தலைமையில் நடைபெறும்.

Continue Reading →