அமரர் வெங்கட் சாமிநாதன் இணையம் மூலம் என்னுடன் தொடர்புகொண்டு நெருங்கிப் பழகிய இலக்கிய ஆளுமைகளில் முக்கியமானவர். ‘பதிவுகள்’ இணைய இதழுக்குத் தன் படைப்புகளை மறைவதற்கு ஓஇரு நாள்கள் வரையில் அனுப்பிக்கொண்டிருந்தவர். அவர் ‘பதிவுகள்’ இணைய இதழ்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தவர்களிலொருவ்வர் அவர். திரு.வெ.சா அவர்கள் கனடா வந்திருந்தபொழுது நான் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. அது பற்றி அவர் அடிக்கடி மின்னஞ்சல்களில் குறிப்பிட்டு வருந்தியிருப்பார். அவ்விதமானதொரு மின்னஞ்சலில் அவர் “மறுபடியும் தங்கள் அன்புக்கு நன்றி. கனடா வந்தபோது தங்களுடன் சந்திப்பு நிகழவில்லையே என்ற வருத்தம் இப்போது மேலும் அதிகமாகிறது. இனி அந்த வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை” என்று எழுதியிருந்தார். இப்பொழுது அதனை நினைத்தால் சிறிது வருத்தமாகவுள்ளது. பொதுவாகக் கனடாவுக்கு வரும் பல இலக்கிய ஆளுமைகளை அழைத்திருக்கும் அமைப்புகளுடன் செலவழிப்பதிற்கே அவர்களது நேரம் சரியாகவிருக்கும். இவ்விதமான சூழ்நிலையில் நானும் அவர்களைச் சந்திக்க முயற்சி எடுப்பதில்லை. உண்மையில் நான் கனடா வந்த கலை, இலக்கிய ஆளுமைகளில் ஒரு சிலரைத்தான் தனிப்பட்டரீதியில் சந்தித்து , நீண்ட நேரம் உரையாடியிருக்கின்றேன். எழுத்தாளர் எஸ்.பொ, எழுத்தாளர் சோமகாந்தன், எழுத்தாளர் ‘நந்தலாலா’ ஜோதிக்குமார் (‘தேடல்’ நண்ப்ர் குமரன் ஏற்பாட்டில்) , கலை, இலக்கிய விமர்சகர் யமுனா ராஜேந்திரன் (எழுத்தாளர் தேவகாந்தன் ஏற்பாட்டில், அவரது இல்லத்தில்) மற்றும் ‘உயிர்நிழல்’ கலைச்செல்வன் (அமரர் கவிஞர் திருமாவளவன் இருப்பிடத்தில், அவரது ஏற்பாட்டில்). வேறு பலரை அவர்களுடனான சந்திப்புகளில் கூட்டத்திலொருவனாகக் கலந்து, அவர்தம் உரைகளைச் செவிமடுத்திருக்கின்றேன். ஆனால் தனிப்படச் சந்தித்ததில்லை. எழுத்தாளர் சுந்தர ராமசாமி வந்திருந்தபொழுது அவருடன் நடைபெற்ற கலந்துரையாலின் இடைவேளையொன்றில் அவருடன் சிறிது நேரம் உரையாடியிருக்கின்றேன். அவ்வளவுதான். ஆனால் எழுத்தாளர்கள் பலருடன் நான் நேரில் சந்தித்திருக்காவிட்டாலும் இணையத்தினூடு தொடர்புகளைப்பேணி வருகிறேன்.
மாமேதை மாக்சின் 200ஆம் ஆண்டு துவக்கத்தை முன்வைத்து பாரதி புத்தகாலயம் மார்க்சி்ஸின் தேர்வு நூல்கள் (மொத்தம் 12) 3000த்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் ரூ.3000. முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூ.1500க்கு…