திருப்பூர் மத்திய அரிமா சங்கம் ஆண்டுதோறும் அரிமா சுதாமா கோபாலகிருஸ்ணன் வழங்கும் குறும்பட விருதுகள், சக்தி விருதுகளைத் தந்து வருகிறது. இவ்வாண்டு பரிசு பெற்றோர் பட்டியல் கீழே தரப்பட்டிருக்கிறது. பரிசளிப்பு விழா :.18/6/2012 மாலை 6 மணி, மத்திய அரிமா சங்கக் கட்டிடம், ஸ்டேட் பாங்க் காலனி, காந்தி நகர், திருப்பூரில் நடைபெற உள்ளது.
*அரிமா குறும்பட விருது 2012
பெறுவோர்:
1.ச.பாலமுருகன் , கோவை ( ஓயாமாரி)
2.தவமுதல்வன் , கோத்தகிரி ( பச்சை இரத்தம்)
3.புதுகை யுகபாரதி , புதுச்சேரி ( குருவி தலையில் பனங்காய்)
.
ஊக்கப் பரிசு பெறுவோர்:
1. சூர்யபாரதி,திருப்பூர் (அன்பு உள்ள அப்பா)
2.திருநாவுக்கரசு, திருப்பூர் ( புதிய உலகம்)
* சக்தி விருது 2012 பெறுவோர்:
1. சுமதிஸ்ரீ , கோபி (தகப்பன் சாமி- கவிதைத்தொகுதி )
2. மஞ்சுளா. மதுரை ( மொழியின் கதவு-கவிதைத் தொகுதி)
கடந்த இரண்டு ஆண்டுகளில் வந்த சிறந்த குறும்படங்களை எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், கவிஞர் சுபமுகி, வழக்கறிஞர் சி.ரவி கொண்ட குழு தெரிவு செய்தது. சக்தி விருது பெறும் இரண்டு கவிதை நூல்களும் பெண்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டவை. 1.பாலமுருகனின் ஆவணப்படம் ” ஓயாமாரி ” கோபியைச் சார்ந்த விடுதலைப் போராட்ட வீரர் லட்சுமண் அய்யர் பற்றியது. அவர் விடுதலைப் போராட்ட வீரர். நான்கரை ஆண்டுகள் சிறையில் வாடியவர். தாழ்த்தப்பட்ட ஏழை மாணவர்களுக்கு கல்வி என்ற வெளியைக்காட்டப் போராடியவர். தன் சொந்த சாதியால் சாதிப்புறக்கணிப்புக்கு ஆளானவர். இது ஒரு தனி மனிதனின் கதை அல்ல. ஒரு சமூக மனிதனின் கதை. 2. பச்சை ரத்தம்: புலம்பெயர்வுகள், ஏளனப்பட்டங்கள், போற்றப்படாத உழைப்பின் மேன்மை. துரோகத்தலைமைகள்-ஒப்பந்தங்கள். விரிவாகப் பேசாத பொருளாய் நீடிக்கும் அவல் வாழ்வு, என் பல தலைமுறைகளாய் தொடரும், தாயகம் திரும்பிய தேயிலைத்தோட்ட்த் தொழிலாளர்களின் கதையாகும்.இயக்கம் (தவமுதல்வன், கோத்தகிரி ) 3. யுகபாரதியின் படம் குழந்தைகள் மேல் நமது கல்வி முறை செலுத்தும் ஆதிக்கம், வன்முறை பற்றியதாகும்.
– திருப்பூர் மத்திய அரிமா சங்கம் –
தகவல்: சுப்ரபாரதிமணியன் subrabharathi@gmail.com