வயிற்றுப்பிழைப்புக்கென இழவு வீடுகளில்
ஒப்பாரி வைப்பவள் ‘ருடாலி’
அப்படியும்
வாய்விட்டுக் கதறிமுடித்துக்
கூலியை வாங்கிமுடிந்துகொண்டு
வழியேகும்போதெல்லாம்
ஒவ்வொரு வீட்டின் ஆற்றொணாத் துயரமும்
அவள் மீதும் தவறாது ஒட்டிக் கொள்ளும்.
இரவு கயிற்றுக்கட்டிலில் படுத்தபடி
ஒரு கையறுநிலை மனதை சுருக்கிட்டு இறுக்க
அண்ணாந்து வானத்தை வெறிக்கும் அவள் கண்களில்
மாட்டிக்கொண்டு பதறும் காலம் உருண்டிறங்கும்
நீர்த்துளிகளாய்.
இழவுவீட்டில் அலறியழும்போதெல்லாம்
இறந்துவிட்ட கணவன்,
இரண்டு பிள்ளைகள்,
இளமை, யதன் இனிய மாலைகள்
வெள்ளம் அடித்துக்கொண்டுபோய்விட்ட தன் ஊர்மக்கள்
பள்ளத்தில் விழுந்து காலொடிந்து மடிந்த ஆட்டுக்குட்டி
மெள்ள மெள்ள அடங்கிப்போன பொன்னியின் உயிர்
எல்லாமும் உள்ளே தளும்பித் தளும்பி மேலெழும்பி
சொல்லுக்கப்பாலான பிளிறலாய் வெளிப்படும்
அவளைப் பிளந்து.
1. இருப்பில் இல்லாத கடன்.
இரண்டு வீடு
மூன்று கார்கள்
இலட்சம் இலட்சமாக பணம்
வங்கி வைப்புகளில் இருந்தும்
நேரத்தை கடன் வேண்டியே
செலவு செய்யும்
மேலத்தேய பிச்சைக்காரர்கள் நாம்.
நேற்றய தினமும்
நேற்றய முன் தினமும்
இன்றய தினத்திலிருந்து
நேரத்தை திருடி தின்று
ஏப்பம் விட்டு விடுகின்றன..
நாளைய தினத்திலோ
நாளைய மறு தினத்திலோ இருந்து
நேரத்தை கடன் வேண்டியே
செலவு செய்ய வேண்டிய நிலை இன்று.
நாளாந்த கடனாளி மீண்டுவிடுவான்.
நாமோ ஆயுள் கடனாளியாக
சபிக்கப்பட்டவர்கள்.
நேரம் பொன்னானது தான்,
இந்த பொன்னை மட்டும் தான்
யாராலும் திருட முடிவதில்லை.
நான் மட்டுமே திருட முடிகிற
பாதுகாப்பான வங்கிக்கணக்கு.
1. கண்ணீரும் கலக்கட்டும்விடு
விடு விடு
நீரை திறந்துவிடு – அது
உங்கள் காவேரியே ஆனாலும்
அணைகளில் இருந்து திறந்துவிடு
மகிழ்ச்சியில் கரை
புரண்டோடவிடு
எங்கள் மண்ணை
தழுவவிடு
ஆனந்த கண்ணீரை
சிந்தவிடு
எங்கள் பயிரும்
செழிக்கட்டும்விடு
எங்கள் உள்ளமும்
குளிரட்டும்விடு
தைபிறந்தால் வழிபிறக்கும்
தானென்று நாம்நினைப்போம்
தைமகளும் சேர்ந்துநின்று
சித்திரையை வரவேற்பாள்
பொங்கலொடு கிளம்பிவரும்
புதுவாழ்வு தொடங்குதற்கு
மங்கலமாய் சித்திரையும்
வந்துநிற்கும் வாசலிலே !
சித்திரை என்றவுடன்
அத்தனைபேர் மனங்களிலும்
புத்துணர்வு பொங்கிவரும்
புதுத்தெம்பு கூடவரும்
எத்தனையோ மங்கலங்கள்
எங்கள்வீட்டில் நிகழுமென
மொத்தமாய் அனைவருமே
முழுமனதாய் எண்ணிடுவார் !
– சிங்கள மொழியில் தான் எழுதிய இக்கவிதையினை ஆங்கில வடிவில் அனுப்பியிருந்தார் கத்யானா அமரசிங்க. அதனைத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளேன். அண்மையில் அவரது வடக்குக்கான பயணத்தில் பருத்தித்துறைக்கடற்கரையில் அவரடைந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை. தமிழ் மக்களின் உணர்வுகளை, பிரச்சினைகளை நன்கு உணர்ந்துகொண்ட சிங்கள எழுத்தாளர்களிலொருவர் கத்யானா அமரசிங்க. சிங்கள எழுத்தாளரும், ஊடகவியலாளரும், கொழும்புப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடப் பட்டதாரியுமான கத்யானா அமரசிங்ஹ (Kathyana Amarasinghe) தற்போது லக்பிம பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். – பதிவுகள் –
நான் அங்கிருந்தேன் கண்ணீர்த்துளியின் மறு முனையில்
துயரக் காற்றினால் தாக்கப்பட்ட மறுமுனை
ஆழமான நீலக் கடலும் கூட
நெஞ்சை வலிக்கும் கதையினை அமைதியாகக்
கூறும்.
வீசிக்கொண்டிருந்த புயல்கள்
இளம் பறவைகளை அவற்றின்
அன்னையரிடமிருந்து பிரித்திருந்த
நேரமொன்றிருந்தது.
அவ்வளவு தூய்மை
வழிகிறது குழந்தைகள் கண்ணில்
தடுமாறுகிறார்கள் தந்தைகள்
எப்படி இந்த மாசுபட்ட உலகை
அவர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பது
அவர்களின் நுரையீரல்
பிரம்ம முகூர்த்தத்து ஓசோனால்
நிரம்பி வழிய வேண்டும்
காற்றின் நறுமணம் கற்பழிக்கப்பட்டதை
அந்தப் பிஞ்சுகளுக்கு எப்படிச் சொல்வது
அவர்களின் கைகளில்
வழிய வழிய பூக்கள் பூக்க வேண்டும்
ரத்தம் வழியும் துப்பாக்கிகள்
எதற்காக என்று அவர்கள் கேட்டால்
என்ன சொல்வது
ஊனநிலை வந்தாலும் ஊக்கமதை இழந்திடாமல்
தானெடுத்த முயற்சிதனில் சாதனையைப் படைத்துநின்ற
இங்கிலாந்தின் விஞ்ஞானி இணையில்லா ஸ்டீபன்தனை
எல்லோரும் வியந்துநின்று இதயத்தால் வாழ்த்துகிறார் !
பேசாத நிலையினிலும் பெருங்கருத்தை வெளியிட்டார்
பேராசிரியாய் இருந்து பெரும்பொறுப்பை நிருவகித்தார்
பெருங்குறைகள் தனக்கிருந்தும் பேதலிக்கா மனமுடனே
பேரண்டம் தனையாய்ந்து பெருமைதனைப் பெற்றுநின்றார் !
1. ஏட்டிக்குப் போட்டி.
பாலைவானத்து குருமணலை
நீர்வற்ற வறுத்து
குளிசைகளாக பிணைந்து
வறண்ட தொண்டைக்கு
தாகசாந்தி செய்யும்
வைத்திய வைரியர் நாம்.
எதிர்த்தவன் வீட்டு
முகடு எரிவதை
ரசித்து குதிக்கிறான்
தன் வீட்டு
அத்திவாரம் தகர்வதை மறந்து.
பற்ற வைத்ததவன்
தொற்றவைத்து பதறவைக்க
தகர்ந்தவன் தடுமாறுகிறான்
தகடு வைத்து தவறிழைக்க.
’வனஜா, கிரிஜா – வளைஞ்சா நெளிஞ்சா….”
என்று அந்தக்கால திரைப்படமொன்றில் நாயகன் வாயசைக்க
படுஜாலியாகப் பாடிய ஆண்குரல்
நட்டநடுவீதியில் அந்தப் பெயருடைய பெண்களை (மட்டுமா)
முண்டக்கட்டையாக்கப்பட்டதாய் கூனிக்குறுகவைத்தது.
”கலா கலா கலக்கலா…” என்று கேட்டுக் கேட்டு
இன்னொரு குரல்
பகலில் வெளியே போகும் பெண்களையும்
இடைமறித்துக் கையைப் பிடித்து இழுத்து
Eve-torturing செய்துகொண்டேயிருந்தது பலகாலம்.
’நான் ரெடி நீங்க ரெடியா?’ என்று
பெண்குரலில் பாடவைக்கப்பட்ட வரி
நடுரோடில்அழைப்புவிடுக்கப்பட்டு
அவமானத்தில் பொங்கியெழுந்த பெண்களைப்
போலிகளாகப் பகடிசெய்து சிரித்தது.
‘ஓடக்கார மாரிமுத்து ஓட்டவாயன் மாரிமுத்து’
என விளித்து
ஊருக்குள்ளே வயசுப்பொண்ணுங்க சௌக்யமா
என்று விசேஷமாக விசாரித்த நாயகன்
ஹாசினிப்பெண்கள் பெருமிதப்பட்டுக்கொள்ளும் படத்தில்
தன் நண்பர்களோடு, ஊர்ப்பெண்களையெல்லாம்,
சாவே வாழ்வான போதினிலும்
குண்டுமழையில் கவசக் குட்டையாகி
மக்களை காத்தவனுக்கு
கைகளையும் கால்களையும்
காணிக்கையாக பெற்றுக் கொண்ட போர்
தண்டனையாக
ஒரு வேளை உணவுக்காக
கை ஏந்தி நிற்கவைக்கிறது.
`பெடியள்´, `போராளி´ என
பல்லாக்கு தூக்கி
போற்றிப் பாடியவன்,
முடம்
பரதேசி
பாரச்சுமை என
ஒதுக்கி ஓடுகிறான்.