நீர்வை பொன்னையன் ஒரு முற்போக்காளர், தளராத கொள்கைப் பிடிப்பாளர். மூத்த எழுத்தாளர். பல தசாப்தங்களாக எழுத்துத் துறையில் தொடர்ந்து ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருப்பவர். இப்பொழுது அவர் தனது வாழ்க்கைப் பயணத்தின் அத்தியாயங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறார். ஆம் ‘நினைவலைகள்’ என்பது அவரது அரசியல், கலை இலக்கிய. சமூகப் பயணத்தின் பதிவாக வெளிவர இருக்கிறது. அப்படியானால் இது அவரது சுயசரிதை எனலாமா? இல்லை என்கிறார்.. ” ‘நினைவலைகள்’ என்ற இந்த நூல் என் சுயசரிதையல்ல. நான் அரசியல்வாதியல்ல. இலக்கியவாதியுமல்ல. அரசியல் இலக்கியச் செயற்பாட்டாளன் நான். சிலர் எழுத்துத்துறையிலிருந்து அரசியலுக்குள் நுழைகிறார்கள். நான் அரசியல் களத்திலிருந்து எழுத்துத்துறைக்குள் பிரவேசித்தவன்……… எனது அரசியல், கலை இலக்கியச் செயற்பாடுகளில் என் நினைவுத்தடத்தில் உள்ளவற்றில் சிலவற்றை இந்த நூலில் தந்துள்ளேன்” என்கிறார். நிச்சயம் படிப்பதற்கு சுவார்ஸத்துடன், நிறையத் தகவல்களையும் உள்ளதாக இருக்கும் என நம்பலாம். ஏனெனில் யாழ்குடாநாட்டின் நீர்வேலியிலுள்ள ஒலிவைக் குறிச்சி எனப்படும், அக்காலத்தில் பின் தங்கியிருந்த பகுதியில் பிறந்தவர். அங்கிருந்து மட்டக்களப்பு, கல்கத்தா, மீண்டும் யாழ்ப்பாணம் கொழும்பு எனப் பல பிரதேசங்களில் வாழ்ந்ததால் கிடைத்த அனுபவங்களால் இந் நூல் சுவாரசியமானதாக இருக்கப் போதில்லை.
ஹூஸ்டன்: ஹூஸ்டன் வாழ் இந்தியத் தமிழர்களின் தலைவர் திரு. சாம் கண்ணப்பன் டெக்சாஸ் நிபுணத்துவ பொறியியலாளர்கள் வாரியத்தில் (Texas Professional Engineering Board) நியமிக்கப்பட்டுள்ளார். டெக்சாஸ் மாநில…
‘ஈழத்து தமிழ் சமூகங்களைப் பற்றிய சமூகவியல், இனவரைவியல் ஆய்வுகள் போதுமான அளவில் உருவாகவில்லை என்பது கவலைக்குரிய ஒன்றாகும். தென்னிலங்கைச் சமூகங்கள் குறித்து ஒப்பீட்டு ரீதியில் முக்கியம் வாய்ந்த சமூகவியல் ஆய்வுகள் காணப்படும் அதேவேளையில், தமிழ் சமூகங்கள் பற்றி குறிப்பிடத்தக்க எந்த ஆய்வும் இதுவரை வெளியாகவில்லை. கல்வித்தரம் கூடிய வடமாகாணத்தில் மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில் காட்டப்;பட்ட ஆர்வம் சமூகவியல் ரீதியில் காட்டப்படாமை முக்கிய குறைபாடு எனலாம். இந்தப் பின்னணியில் மு.புஷ்பராஜன் தனது ‘வலை உணங்கு குருமணல்’ என்ற நூலில் குருநகர் சமூகத்தின் வாழ்வியல் முறைகள் குறித்த மிகச் சிறந்த இனவரைவியல் பதிவினை நமக்குத் தந்திருக்கிறார். தமிழ் சமூகங்களில் இனவரைவியல் ஆய்வில் இது சிறந்த முன்னுதாரணமாக அமையத்தக்கது’ என்று விமர்சகர் மு.நித்தியானந்தன் ‘வூட்கிறீன் ஏசியன் சென்ரர் அரங்கில்’ நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் தலைமையுரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.
Millions of years ago, lands that were once united were torn apart. Dinosaurs were carried in different directions, passengers on…
அன்மையில் வெளிவந்த அகிலின் ‘கூடுகள் சிதைந்தபோது” சிறுகதைத் தொகுப்புக்கு.மணிவாசகர் பதிப்பகத்தின் சிறந்த நூலுக்கான நூலாசிரியர் விருது வழங்கப்படவுள்ளது. இவ்விழா 21.06.2012 அன்று திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் மாலை…
வணக்கம், 42 ஆண்டு கால இலக்கியச் சிந்தனையின் மாதத் தெரிவுகள், ஆண்டுத் தெரிவுகள் என்று மொத்தம் 505 சிறுகதைகளையும், அவற்றை எழுதிய 333 ஆசிரியர்களையும், அச்சிறுகதைகளை வெளியிட்ட…
இன மத பாகு பாடுகள் இன்றி தரமான பெண் கவிஞர்கள் 25 பேர்களின் கவிதைகளை ஒன்று சேர்த்துஒரு கனதியான தொகுப்பாக தடாகம் கலை இலக்கிய வட்டம் (இன்சாஹ்…
நண்பர்களே இன்றைய தமிழ் சினிமாவில் பணிபுரியும் பல உதவி இயக்குனர்கள், மற்ற பல உதவி கலைஞர்களுக்கு ஆங்கிலம் நிச்சயம் ஒரு சவாலான மொழிதான். ஆனால் திரைப்பட துறையில் பணியாற்றும் நண்பர்கள் நிச்சயம் கொஞ்சமாவது ஆங்கில மொழி கற்றிருக்க வேண்டும். பேச, புரிந்துக் கொள்ள வேண்டும். உங்கள் படங்களை விருதுகளுக்கு அனுப்பவும், உலக படங்கள் பற்றி நிறைய பேசவும், புரிந்துக் கொள்ளவும் கொஞ்சமாவது ஆங்கில அறிவு அவசியம். தமிழ் ஸ்டுடியோவில் இதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம். திரைப்பட துறை மற்றும் ஊடகத் துறையில் பணியாற்றும் நண்பர்கள் மட்டுமே இதில் சேரலாம். ஆங்கிலத்தில் பேச, எழுத நீங்களாகவே கற்றுக் கொள்ளும் நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் நண்பர்கள் இனைந்து தங்கள் ஆங்கில மொழி புலமையை விரிவுப் படுத்திக் கொள்ளலாம். ஆங்கில பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகளும் நடக்கும். நண்பர்கள் கூடி தப்பு தப்பான ஆங்கிலத்தில் பேசியும், அதனை ஆங்கிலம் நன்கு தெரிந்த ஒருவர் சரி செய்வதுமே இந்த அமைப்பின் மையம்.
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் இவ்வருடம் தனது நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடுகிறது. அதனையொட்டி சிறுகதைப்போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.இப்போட்டியில் இலங்கையில் வாழும் படைப்பாளிகள் பங்கு கொள்ள முடியும்.…