அன்புடையீர் அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்! பிரான்சு கம்பன் கழகம் தமிழர் புத்தாண்டுப் பொங்கல் விழாவை 19.02.2012 ஞாயிற்றுக் கிழமைப் பிற்பகல் 14.00 மணிமுதல் 20.00 மணிவரை கொண்டாடுகிறது.
நாள்: 11-02-2012, சனிக்கிழமை
நேரம்: மாலை 5.30 மணி.
இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப் உள்ளே)
முனுசாமி சாலை, கே.கே.நகர், (புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
வணக்கம், எதிர் வரும் 12.02.2012 ஞாயிறு மாலை 6- மணியளவில் ”ஜீராங் ஈஸ்ட்” (Jurong Regional Library – Jurong East MRT) நூலகத்தில் உயிர்மை பதிப்பக வெளியீடான நண்பர் ஷாநவாஸ் எழுதிய “ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும்” புத்தகம் வெளியீடு காணவிருக்கிறது. இந்நிகழ்வில் தமிழகத்திலிருந்து உயிர்மை பதிப்பாளர் எழுத்தாளர் கவிஞர் மதிப்பிற்குரிய மனுஸ்யபுத்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவிருக்கிறார். விழாவிற்கான அழைப்பிதழ் இணைத்திருக்கிறேன், உங்களின் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். புதிய நண்பர்களை அழைத்துவாருங்கள்.
காலம்: மார்ச் 4, 2012 , ஞாயிற்றுக் கிழமை, பிற்பகல் 4.00 மணிக்குஇடம்: கனடா சிறிசெல்வச்சந்நிதி முருகன் ஆலய கலாச்சார மண்டபம், 1 Golden…
புதிய நூலகத்தின் 9 வது மற்றும் 10 வது செய்திமடல்கள் சிறிய இடைவெளிக்குப் பின்னர் வெளிவந்துள்ளன. 9 வது இதழில் ‘சிறப்புச் சேகரங்கள் வலைவாசல்கள்’ என்ற செய்தியுடன்; இராகவன் எழுதிய ‘புதிய தரிசனம் ஒரு நினைவோடை’, தீபச்செல்வன் எழுதிய ‘வன்னியில் அழிந்த நூல்கள்’, நற்கீரன் எழுதிய ‘தமிழில் திறந்த தரவுகள் ஏன் எப்படி’ ஆகிய கட்டுரைகளும்; கொழும்பு சைவமங்கையர் வித்தியாலயம், கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றில் நடைபெற்ற ‘எண்ணிம நூலக அறிமுகம்’ பற்றிய சி.சேரனின் நிகழ்வுக்குறிப்புக்களும், அ.யேசுராசா பற்றிய பதிவும் இடம்பெற்றுள்ளன.
The All Party Parliamentary Group for Tamils (APPGT) in collaboration with the British Tamils Forum (BTF) held an exhibition on 31st January 2012, at the UK Parliament building. The exhibition highlighted the current situation of the Tamils in Sri Lanka; and why, the Lesson Learnt and Reconciliation Commission (LLRC) report recently published by the Sri Lankan Government will not deliver justice to the Tamil civilians for the crimes committed by the Sri Lankan Armed Forces during the final stages of the war in 2009.
The event in portcullis house was well attended by MPs from all the major parties, Members of European parliament, Peers from the House of Lords and diplomats from various foreign missions in London and journalists. Photos, books, publications, documentaries and videos were on display. There were also key eyewitnesses to the bloody war in Sri Lanka present at the event. Over one hundred invited honourable guests attended the event and were given information pack containing reports, documents and photographs. A printed version of Tamil National Alliance (TNA) response to the LLRC was also given to the visitors.
சலங்கை நர்த்தனாலயா நுண்கலைப் பீடத்தின் அதிபர் நாட்டியக் கலாசாரதி ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜாவின் வருடாந்த கலைகளின் சங்கமம் அண்மையில் லண்டன் வின்சன் சேர்ச்சில் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பல்வேறுபட்ட கலை வல்லுநர்களின் கலைத் திறமைகள் வெளிப்பட்டதோடு பிரதம விருந்தினராக சங்கீத வித்துவான் மணிபல்லவம் கே.சாரங்கன் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
சென்ற ஜனவரி 7ம் திகதி 2012 ‘சொப்கா’ என்று அழைக்கப்படுகின்ற ‘ஸ்கிறீன் ஒவ் பீல்’ மக்கள் ஒன்றியத்தின் ஆதரவில் தீபாவளி நத்தார், புதுவருட, தைப்பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. வருடாவருடம் நடக்கும் இந்தக் கொண்டாட்டம் இம்முறையும் மிகவும் சிறப்பாக பல்கலாச்சாரத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தது. மிசசாகாவில் உள்ள ஸ்குயவண் முதியோர் அரங்கில் இந்தப் பல்கலாச்சார நிகழ்ச்சி மண்டபம் நிறைந்த நிகழ்வாக இடம் பெற்றது. பிரதம விருந்தினர்களாக வைத்தியகலாநிதி திரு. திருமதி மோகன் இரட்ணசிங்கம் அவர்கள் கலந்து கொண்டனர். விசேட விருந்தினராக குக்ஸ்வில் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் தீப்பிகா தர்மிலா அவர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்.
வணக்கம்!, மறைந்த மாமேதை பேராசிரியர் கா. சிவதம்பி அவர்களை நினைவுகூரும் இந்த முயற்சிக்குத் தங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறேன். தோழமையுடன்,க. நவம் பேராசிரியர் குறித்த கருத்துரையாடலும், அவரைக்…
அன்புடையீர், எதிர்வரும் பிப்ரவரி மாதம் 5ந்தேதி மாலை ஆறுமணி அளவில் இந்திய பிரெஞ்சு பண்பாட்டு உறவுளை மேம்படுத்தும் வகையில் சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளோம். இத்துடன் அழைப்பிதழை இணைத்திருக்கிறோம். நவீன தமிழிலக்கியத்தைச் சார்ந்த மூத்த பெருமக்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளனர். தாங்களும் விழாவில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம். – நா.கிருஷ்ணா, பிரான்சு.