திருப்பூர் தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கி வருகிறது. இவ்வாண்டு பரிசு பெற்ற நூலில் ஒன்று அ. முத்துலிங்கம் அவர்களின் ‘அமெரிக்க உளவாளி’. தமிழில் சுயசரிதைத்…
ஜனவரி 28, 2012 பிற்பகல் 3.00 – 7.00 ; இடம்: நயினை கலாச்சார மண்டபம், 1537 வார்டன் அவென்யு , ஸ்கார்பரோ, ஒன்டாரியோ, கனடா
தொடர்புகளுக்கு: 416.723.0344
1.கனேடிய சமூக வாழ்வியல் – முதற்பிரஜைகள், மாற்றுப் பாலியல் கண்டோட்ட சமூகங்கள், முதியோர்கள், இலக்கிய மரபுகள்
2.ஆக்க இலக்கியங்கள் – மாற்று அழகியல்மரபுகள், தமிழர் இலக்கிய வடிவங்கள், மேடை ஆற்றுகைகள், திரைப்படங்கள்
3.போருக்கு முன்-பின் ஈழத்து நிலை
4.புலப்பெயர்வு வாழ்வியல் – குடிபெயர்வு செயன்முறைகள், புலம்பெயர்வு வரலாற்றுப்பதிவுகளும் இனக்குழுத் தொடர்ச்சிகளும், புலம் பெயர் இலக்கியங்கள் மரபுகள்; மீள்வரையறைகளும் புத்துயிர்ப்புக்களும் 80க்குப்பின்
5.பெண்ணியமும் பெண்கள் விடயங்களும்- கலாசாரங்கள், சம்பிரதாயங்களின் மீள்எழுகை, காலப்பதிவுகள் 80க்குப்பின் புனைவு இலக்கியங்களில் பெண்கள் பங்களிப்பு
6.சமகால உலக ஒழுங்குகள்: அனைத்துலக முற்றுகைப்போராட்டங்கள், அரபுலக போராட்டங்கள்
திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் வழங்கும் இசை விழா & இலக்கிய விழா!இசை விழா நாள்: 24.01.2012 செவ்வாய்க்கிழமை; இலக்கிய விழா நாள்: 23.01.2012 செவ்வாய்க்கிழமை நேரம்: மாலை…
நாள்: 24.01.2012 செவ்வாய்க்கிழமைநேரம்: மாலை 6 மணிஇடம்: ஸ்ரீ் காமாட்சியம்மன் கல்யாண மண்டபம், பழைய பேருந்து நிலையம் பின்புறம், திருப்பூர் – 4; மேலதிக விபரங்கள் ……
அனைத்துலக நாடுகளிலிருந்து படைக்கப்படும் நூல்களில் தமிழ்மொழிக்கும் இனத்துக்கும் மிகு பயன் விளைவிக்கும் சிறந்த நூலை ஈராண்டுகளுக்கு ஒருமுறை தெரிவு செய்து பரிசளித்தல் [- தகவல் : ‘விருபா’…
2011ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் மொழியின் மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை ஆகியவர்களைத் தொடர்ந்து இம்முறை இந்த விருதுக்கு உரியவராக கடந்த 25 வருடங்களாக தமிழுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தேர்வாகியிருக்கிறார்.
அ.ந.க.வின் படைப்புகள் அனைத்தையும் சேகரிப்பதற்குப் பற்பல வழிகளில் ‘பதிவுகள்’ முயன்று வருகின்றது. தினகரனில் வெளிவந்த ‘மனக்கண்’ நாவலின் முழு அத்தியாயங்களும் திருமதி கமலினி செல்வராசனிடம் இருந்ததாக அறிந்து தொடர்பு கொண்டோம். ஆனால் அதனைப் பெற முடியாமல் போயிற்று. அதன்பின்னர் இலங்கைச் சுவடிகள் திணைக்களத்துடன் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டபோது அவர்கள் நியாயமான கட்டணத்தில் A 4 அளவுத் தாளில் பிரதிகளெடுத்து அனுப்பியிருந்தார்கள். அதற்காக சுவடிகள் திணைக்களத்திற்கு நன்றி கூறவேண்டும். ஆனால் அவர்கள் அனுப்பிய பிரதிகளில் எழுத்துகள் மிகச் சிறியனவாக இருந்த காரணத்தினால் தமிழகத்திற்கு அனுப்பி , நண்பர் ‘ஸ்நேகா’ பாலாஜி மூலம் நியாயமான கட்டணத்தில் தட்டச்சு செய்து எடுப்பித்தோம்.
2011 ஆம் ஆண்டு தனது நாவலுக்காக இலங்கையின் உயர் இலக்கிய விருதான ‘சுவர்ண புஸ்தக’ விருதையும், ஐந்து இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பணப்பரிசையும் தனதாக்கிக் கொண்ட பெண் எழுத்தாளர் சுநேத்ரா ராஜகருணாநாயக சிங்கள மொழியில் எழுதி, இலங்கை எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீபினால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ‘அம்மாவின் ரகசியம்’ மொழிபெயர்ப்பு நாவல் வெளியீடு எதிர்வரும் ஜனவரி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, இந்தியா, சென்னை, அண்ணாசாலை, ஸ்பென்ஸர் ப்ளாஸா எதிரேயுள்ள புக் பாய்ண்ட் அரங்கில் நடைபெற உள்ளது.
பங்கேற்பு: கவிஞர் சுகிர்தராணி
அறிமுகம் செய்யும் நூல்: “எங்கே அந்த பாடல்கள்” (ஆப்ரிக்க பெண் கவிஞர்களின் கவிதைகள்)
நாள்: ஜனவரி 8, ஞாயிற்றுக் கிழமை
நேரம்: மாலை 6 மணிக்கு.
இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப்), டிஸ்கவரி புக் பேலஸ் மாடியில், புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில், கே.கே. நகர்.