நாள்: 18.12.2011 ஞாயிற்றுக்கிழமைநேரம்: காலை மணி 9:30 – மாலை மணி 6:30இடம்: ‘சிந்தா சாயாங் ரிசோர்ட்’ (Cinta Sayang Resort) மேலதிக விபரங்கள் … உள்ளே
குறும்பட வட்டம் – பகுதி இரண்டு.
நாள்: 10-12-2011, சனிக்கிழமை
நேரம்: மாலை 5.30 மணி.
இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப் உள்ளே)
முனுசாமி சாலை, கே.கே.நகர், (புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
கொழும்பு; 18.12.2011: பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் “சாஹித்திய இரத்தினம்” விருது பெற்றமைக்காக ‘ஞானம்’ கலை இலக்கியப் பண்ணை நடாத்தும் பாராட்டு விழா! தகவல்: தி. ஞானசேகரன் editor@gnanam.info மேலதிக விபரங்கள் ……
பங்கேற்பு: எழுத்தாளர் சிவகாமி IAS
அறிமுகப்படுத்தப்படும் நூல்: Our Lady of Alice Bhatti ( Mohammed Hanif )
நாள்: டிசம்பர் 4, ஞாயிற்றுக் கிழமை
நேரம்: மாலை 4:30 மணிக்கு.
இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப்), டிஸ்கவரி புக் பேலஸ் மாடியில், புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில், கே.கே. நகர்.
தொடர்புக்கு: 9840698236
“பெயரிடாத நட்சத்திரங்கள் (26 பெண் போராளிகளின் கவிதைகள்)”, “Mit dem Wind fliehen (ஒரு போராளியின் அவல வாழ்வும், அகதி வாழ்வும்)” ஆகிய இரு நூல்களினது அறிமுகமும் -தமிழ் சிங்கள மொழியில்- கலந்துரையாடலும் சுவிஸ் சூரிச் இல் இடம்பெற இருக்கிறது.
பாரிஸ் மாநகரில் வி. ரி. இளங்கோவனின் ‘மண் மறவா மனிதர்கள்” நூல் வெளியீட்டு விழா..! ஐரோப்பாவில் வாழும் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான வி. ரி. இளங்கோவனின் ‘மண் மறவா மனிதர்கள்” கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மார்கழி மாதம் 11 – ம் திகதி (11 – 12 – 2011) ஞாயிறு பிற்பகல் 3மணியளவில் பாரிஸ் மாநகரில் ((50, Place de Torcy, 75018 Paris – Métro: Marx Dormoy) நடைபெறவுள்ளது. அரசியல், இலக்கியம், சமூகம், சமயம், தமிழியல், இதழியல், மருத்துவம் ஆதியாம் பல்வேறு துறைகளில் ஒப்பரிய பணிகளைச் செய்தவர்களின் சிறப்பை ‘மண் மறவா மனிதர்கள்” நூல் அழகுற எடுத்தியம்புகின்றதெனவும், வருங்காலச் சந்ததியினர் நம்மவரின் பணிகளை நன்கு அறிந்துகொள்ள இந்நூல் நல்லதோர் ஆவணமாக அழைந்துள்ளதெனவும் பேராசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.
கனடிய ஒன்ராறியோ அரசைச் சார்ந்த கல்விச்சபைகளில் தமிழ்மொழி கற்றுவரும் மாணவர்களின் நலனை நோக்காகக் கொண்டு இச்சங்கம் உருவாக்கப்பட்டது. பல்பண்பாட்டுச் சூழலில் தாய்மொழிக்கல்விக்கு அரசு சார்ந்த கல்விச்சபைகள் முதன்மை கொடுத்து வருகின்றன. அந்த வாய்ப்பினை மாணவர் முழுமையாகப் பயன்படுத்தவும் தாய்மொழி கலை பண்பாடு போன்றவற்றில் மாணவர் தமது ஆற்றலை வெளிப்படுத்தவும் இச்சங்கம் உதவி வருகின்றது. அத்துடன் ஆண்டுதோறும் இச் சங்கம் மாணவர்களுக்கிடையேயான மொழித்திறன் போட்டிகளையும் ஆசிரியர் கருத்தரங்குகளையும் நடத்திவருகின்றது.
அருமை நண்பர்களே! ‘உயிர்மை’ இதழ் தனது நீண்ட பயணத்தின் இன்னொரு கட்டத்தை எட்டுகிறது. வரும் டிசம்பர் 1 ஆம்தேதி ‘உயிர்மை’யின் 100ஆவது இதழ் வெளிவருகிறது. டிசம்பர் 1 வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் (மாவட்ட மைய நூலகம், (LLA BUILDING),735, அண்ணா சாலை, சென்னை-2) நடைபெறும் இந்த வெளியீட்டு நிகழ்ச்சியில் சிறப்பிதழின் முதல் பிரதியை இந்திரா பார்த்தசாரதி வெளியிட, எஸ். ராமகிருஷ்ணன் பெற்றுக் கொள்கிறார். எங்களது இந்தப் பயணத்தை வலிமையும் அர்த்தமும் உள்ளதாக்கிய ‘உயிர்மை’- ‘உயிரோசை’ வாசகர்கள் இந்த நிகழ்வில் நேரடியாகவோ மானசீகமாகவோ பங்கேற்க வேண்டுமென விரும்புகிறேன். நீங்களின்றி இந்தப் பயணத்தின் ஓரடியும் சாத்தியப்பட்டிருக்காது.
நாள்: 26-11-2011, சனிக்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல் (10 AM)
இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப் உள்ளே)
முனுசாமி சாலை, கே.கே.நகர், (புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
பயிற்சிக் கொடுப்பவர்: ஆர்.ஆர். சீனிவாசன்
நன்கொடை: ரூபாய் – 250/-
வணக்கம் நண்பர்களே!, தமிழ் ஸ்டுடியோ தொடங்கி இன்றோடு (23-11-2011) மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2008 ஆம் வருடம் தொடங்கப்பட்ட தமிழ் ஸ்டுடியோ தமிழில் மாற்று ஊடகத்திற்கான களமாக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு வருகிறது. தமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்ட காலத்தில் இருந்ததை விட இப்போது மாற்று ஊடகங்களாக குறும்படங்கள் முன்னெடுத்து செல்லப்படுகிறது. அனைத்து தொலைக்காட்சிகளும் குறும்படங்களை தொடர்ந்து ஒளிப்பரப்புகிறது. உலகம் முழுவதும் குறும்படங்களுக்கான களம் விரிவடைந்துள்ளது. ஆனால் தமிழில் இன்னும் கவனிக்கத்தக்க அளவில், அதிக அளவில் குறும்படங்கள் வெளிவரவில்லை. எல்லாரும் தங்களின் இருத்தலுக்கான நியாயம் தேடவே குறும்படம் நோக்கி ஓடி வருகின்றனர். அல்லது திரைப்படத் துறையில் நுழைவதற்கான நுழைவு சீட்டாகவே குறும்படங்களை கருதுகின்றனர். இதில் எது சரி? எது தவறு என்கிற விவாதம் தேவையற்றது. பொதுவாக இவ்வுலகில் எல்லாவற்றிற்கும், எப்போதும் இரண்டு பக்கங்கள் இருந்தே தீரும். இதில் சரி தவறுகளை ஆராய்ந்து தீர்ப்பு சொல்லும் நாட்டாண்மை வேலையை செய்வதற்கு யாருக்கும் இங்கே அருகதை இல்லை.