குறும்பட வட்டம் – தொடக்கமும் முடிவும்

வணக்கம் நண்பர்களே, குறும்பட வட்டம் தொடர்ந்து 34 மாதங்களாக நடைபெற்று வருகிறது. ஒரே மாதிரி இல்லாமல் ஒவ்வொரு மாதமும் ஒரு புதுப் பகுதி, புதிய எண்ணம், புதிய முயற்சி என போய்க் கொண்டிருந்தது. ஆனால் தொடர்ந்து மூன்று வருடங்கள் ஒரே இடம், அதே நாள், அதே நேரம் என கொஞ்சம் சலிப்பு தட்டத்தான் செய்கிறது. தவிர்த்து தமிழ் ஸ்டுடியோவில் இருந்து ஒரு மாதத்திற்கு நான்கைந்து நிகழ்ச்சிகள் நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. குறும்பட வட்டம், பௌர்ணமி இரவு, குறுந்திரைப் பயணம், ஆவணப் படங்கள் திரையிடல், இலக்கிய நிகழ்வுகள் என விரிந்துக் கொண்டே செல்கிறது.

Continue Reading →

நியுயோர்க்: நாடுகடந்த தமிழீழ அரசால் ஓர் ஆர்ப்பாட்டப் பேரணி!

Sept 8, 2011 – அன்புடையீர்! மகிந்தா இராஜபக்சேயின் நியூயோக் வருகையை முன்னிட்டு அரசியல் அடிப்படையிலும், சட்டரீதியிலுமான எதிர்ப்பு நடவடிக்கை! ஐக்கிய நாடுகள் சபையில் சொற்பொளிவாற்ற வரும் மகிந்தா இராஜபக்சேயின் நியூயோக் வருகையை முன்னிட்டு அரசியல் அடிப்படையிலும், சட்டரீதியிலுமான எதிர்ப்பைக் காட்டும் முகமாக நாடுகடந்த தமிழீழ அரசால் ஓர் ஆர்ப்பாட்டப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.வட அமெரிக்காவிலுள்ள அத்தனை அமைப்புக்களையும், சங்கங்களையும், விளையாட்டுக் கழகங்களையும், மற்றும் பொது அமைப்புக்களையும் எம்முடன் இணைந்து இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை வெற்றிகரமாகச் செய்ய உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

Continue Reading →

கனடா – ‘ரொரன்ரோ’வில் 28.08.2011 இடம்பெற்ற உலகத் தமிழ் பேரவையின் பொதுக்கூட்டம்!

தாயகத்தில் தமிழரின் உரிமைகளை மீட்டெடுக்கவும் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்கு எதிராகப் பக்கசார்பற்ற அனைத்துலக விசாரணைகளின் அவசியத்தை அனைத்துலக மட்டத்தில் வலியுறுத்தவும் முனைப்பாகச் செயற்பட்டு வருகின்ற, உலகெங்கும் பரந்து வாழும் தமிழரின் அமைப்பான உலகத் தமிழர் பேரவையின் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமைää கனடா ஐயப்பன் ஆலய மண்டபத்தில் ஆவணி 28ஆம் நாள் மாலை ஏழு  மணியளவில் ஆரம்பமானது. உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்கலாநிதி எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளாரும், உலகத் தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அவர்களும் சிறப்பு  பேச்சாளர்களாக கலந்து கொண்டனர். தாயகத்தில் தமிழரின் உரிமைகளை மீட்டெடுக்கவும் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்கு எதிராகப் பக்கசார்பற்ற அனைத்துலக விசாரணைகளின் அவசியத்தை அனைத்துலக மட்டத்தில் வலியுறுத்தவும் முனைப்பாகச் செயற்பட்டு வருகின்ற, உலகெங்கும் பரந்து வாழும் தமிழரின் அமைப்பான உலகத் தமிழர் பேரவையின் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமைää கனடா ஐயப்பன் ஆலய மண்டபத்தில் ஆவணி 28ஆம் நாள் மாலை ஏழு  மணியளவில் ஆரம்பமானது. உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்கலாநிதி எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளாரும், உலகத் தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அவர்களும் சிறப்பு  பேச்சாளர்களாக கலந்து கொண்டனர். ஆகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட பொதுக்சுட்டத்தில் முதலில் உரை நிகழ்த்திய அருட்கலாநிதி இம்மானுவேல் அடிகள் உலகெங்கிலும் வாழும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களை ஒன்றிணைப்பதன் மூலம் இப்பேரவையானது 2009 ஆம் ஆண்டு ஆவணி (ஆகஸ்ட்) மாதம் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் 14 நாடுகளிலுள்ள அமைப்புகளுடன் பிரதிநிதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டு, உலகத்தழிழ் பேரவைக்கான அரசியல் யாப்பும் உருவாக்கப்பட்டது. உலகத் தமிழ் பேரவையை சம்பிரதாயபூர்வதாக 2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிரித்தானிய நாடாள மன்றத்தில் பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சர், மற்றும் பிரித்தானிய எதிர்க்கட்சிகளின் வெளிநாட்டுக்கொள்கைக்கு பொறுப்பான நாடாளூமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் சர்வதேசமயமான சுயாதீனமான,  ஜனநாயகப்பண்புகளோடு அகிம்சாவழியில் இப்பேரவையின் கருத்துருவாக்கம் அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உலகத் தமிழர் பேரவை ஆரம்பிக்கப்பட்டதின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

Continue Reading →

Australian Tamil Congress 2nd Annual General Meeting!

Australian Tamil Congress invites the members of the Australian Tamil Community to participate in their 2nd AGM. ATC Executives will provide an update on achievements to date and planned activities for the future.  Your participation will give ATC an opportunity to listen to your opinions to enhance the future of ATC.  அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் 2வது வருடாந்த பொதுக் கூட்டத்தில் கடந்த வருட செயற்பாடுகளும், வருங்காலச் செயல் திட்டங்களும் பற்றிய தகவல்கள் கலந்துரையாடப்படும்.இப் பொதுக்கூட்டத்திற்கு அனைவரையும் அவுஸ்திரேலிய தமிழர் பேரவை அழைக்கிறது.

Continue Reading →

கனடா: குமார் மூர்த்தியின் பத்தாவது நினைவு ஆண்டு!

  செப்படம்பர் 4, ஞாயிறு 2.00 பிற்பகல் Scarborough Village Community Centre, 3600 கிங்ஸ்டன், ஸ்காபரோ, ரொறன்டோ (மார்க்கம் – கிங்ஸ்டன்) சிறப்புரை: ‘கல்வியும் சமூக…

Continue Reading →

பதிற்றுப் பத்து – வீதி நாடக அமைப்பு & நல்லதோர் வீணை செய்து – ஆர்வலகளுக்கான அழைப்பு

பதிற்றுப் பத்து – வீதி நாடக அமைப்பு 

நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து குறும்படம் / இலக்கியம் என இயங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இப்போது நாடக உலகில் தனது பங்களிப்பாக பதிற்றுப் பத்து எனும் நாடக அமைப்பை தொடங்க இருக்கிறது. திரைப்படத்தின் குறுகிய வடிவமான குறும்படம் போல நாடகத்தின் மிக குறுகிய வடிவமான குறு நாடகங்கள் தமிழ் ஸ்டுடியோ மூலம் தொடர்ந்து நிகழ்த்தப்படவிருக்கிறது. பதிற்றுப் பத்து எனும் இந்த அமைப்பு வீதி நாடகத்திற்கான களமாகும். இதில் பத்து நாடகக் கலைஞர்கள் பத்து நிமிடத்திற்குள் ஒரு சமூக பிரச்சனையை அல்லது விழிப்புணர்வு சார்ந்த விடயங்களை வீதிகளில் கலைத்தன்மையோடு நடத்திக் காட்டுவர்.இதற்காக பத்து ஆர்வலர்களை தேர்ந்தெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு வீதி நாடகம் தொடர்பாக சில மாதங்கள் பயிற்ச்சியளித்தப் பின் அவர்கள் வீதி நாடகங்களை அரங்கேற்றுவர். இதில் நீங்களும் பங்கேற்கலாம்.

Continue Reading →

நூல் வெளியீடு: சுப்பிரமணியம் விசாகனின் ‘இலங்கையில் மனிதக்குடியமைவு’ (மரபணுவியல் (DNA) அடிப்படையிலான ஆய்வு உருவுரை.)

Book Launch: Peopling of Sri Lanka An Outline based on Genetic (DNA) Studies By S Visahan Time: On 27-08-2011 Saturday…

Continue Reading →

முல்லை அமுதன் தொகுக்கும் ‘எழுத்தாளர் விபரத் திரட்டு’

எழுத்தாளர் முல்லை அமுதனைத் (இ.மகேந்திரன்) தமிழ் இலக்கிய உலகு நன்கறியும். இலண்டனில் வசிக்கும் அவர் வருடா வருடம் தமிழ்ப் புத்தகக் கண்காட்சியினையும் நடாத்தி வருபவர். ‘காற்றுவெளி’ என்னும்…

Continue Reading →

சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்: பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மறைவு குறித்த இரங்கல் கூட்டம்!

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி

சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்: பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மறைவு குறித்த இரங்கல் கூட்டம் …


Continue Reading →