ஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றநாவல் “வெட்டுப்புலி” குறித்த கலந்துரையாடல்!

தமிழ்மகனின் 'வெட்டுப் புலி' பற்றிய கலந்துரையாடல்...

ஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றநாவல் “வெட்டுப்புலி” குறித்த கலந்துரையாடல்.
 _________________________________________
   நாள் : 13/08/2011 சனிக்கிழமை
   நேரம் : மாலை 5.30 மணி
   இடம்    : டிஸ்கவரி புக் பேலஸ் பி.லிட்
   6.முனுசாமி சாலை, மேற்கு கே.கே.நகர். செ-78
   ( பாண்டிச்சேரி விருந்தினர்  மாளிகை அருகில்)
___________________________________________________ 

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோ வழங்கும் ‘லெனின் விருது’

வணக்கம் நண்பர்களே!, தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் படத்தொகுப்பாளர் லெனின் அவர்களின் பெயரில் "லெனின் விருதை" வழங்கி வருகிறது. இவ்விருது தமிழ் குறும்பட / ஆவணப்பட துறையில் இவ்வூடகங்கள் மூலம் மக்கள் எழுச்சி மற்றும் மறுமலர்ச்சிக்கான படைப்பை படைக்கும் கலைஞருக்கு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் 2010 ஆண்டிற்கான லெனின் விருது ஆவணப்பட இயக்குனர் திரு. ஆர். ஆர். சீனிவாசன் அவர்களுக்கு வழங்கப்பட விருக்கிறது. காஞ்சனை சீனிவாசன் என்று பரவலாக இத்துறை சார்ந்த மத்தியில் அறியப்படும் திரு. சீனிவாசன் ‘நதியின் மரணம்’ என்ற தன் முதல் ஆவணப்படத்தின் மூலமாக திரை ஊடகத்தை வெறும் பார்வையாளர் தளத்திலிருந்து, சிந்தனை மற்றும் போராட்டம் என்ற தளத்திற்குக் கொண்டு சென்றவர். காட்சி ஊடகத்தை, தன் தொடர்ச் செயல்பாடுகளின் வழியாக, ‘சமூக ஊடகம்‘ என்ற களப்பணிக்கான ஊடகமாக மாற்றியதில் முதன்மையானவர்.வணக்கம் நண்பர்களே!, தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் படத்தொகுப்பாளர் லெனின் அவர்களின் பெயரில் “லெனின் விருதை” வழங்கி வருகிறது. இவ்விருது தமிழ் குறும்பட / ஆவணப்பட துறையில் இவ்வூடகங்கள் மூலம் மக்கள் எழுச்சி மற்றும் மறுமலர்ச்சிக்கான படைப்பை படைக்கும் கலைஞருக்கு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் 2010 ஆண்டிற்கான லெனின் விருது ஆவணப்பட இயக்குனர் திரு. ஆர். ஆர். சீனிவாசன் அவர்களுக்கு வழங்கப்பட விருக்கிறது. காஞ்சனை சீனிவாசன் என்று பரவலாக இத்துறை சார்ந்த மத்தியில் அறியப்படும் திரு. சீனிவாசன் ‘நதியின் மரணம்’ என்ற தன் முதல் ஆவணப்படத்தின் மூலமாக திரை ஊடகத்தை வெறும் பார்வையாளர் தளத்திலிருந்து, சிந்தனை மற்றும் போராட்டம் என்ற தளத்திற்குக் கொண்டு சென்றவர். காட்சி ஊடகத்தை, தன் தொடர்ச் செயல்பாடுகளின் வழியாக, ‘சமூக ஊடகம்‘ என்ற களப்பணிக்கான ஊடகமாக மாற்றியதில் முதன்மையானவர்.

Continue Reading →

வாழும் மனிதம் – 2

எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்காலம்: ஆகஸ்ட் 27, 2011 – சனிக்கிழமை பிற்பகல் 3மணி – 6 மணி வரை. இடம்: ஸ்காபரோ சிவிக்சென்ரர் மண்டபம் (கனடா) (மக்கோவன் – எல்ஸ்மெயர்) . சிறப்புரை: பிரித்தானியாவிலிருந்து வருகை தரும் மூத்த எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் “போருக்குப் பின்னரான சமூக மாற்றமும்  முற்போக்குவாதிகளின் பங்களிப்பும்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றுவார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: தேவன். ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

Continue Reading →

இயல் விருது 2011: வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது!

கனடாவில், அறக்கொடை நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் உலகெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இது வருடா வருடம் வாழ்நாள் தமிழ் கல்வி, இலக்கிய சாதனைகளுக்காக உலகத்தின் மேன்மையான சேவையாளர் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு விருது வழங்கும். இந்த விருது பாராட்டுக் கேடயமும், 1500 கனடிய டொலர்கள் பணப் பரிசும் கொண்டது. ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தில், கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தால் நிறுவப்பட்ட நிதியத்தின் ஆதரவில் வருடா வருடம் நடைபெறும் உரைத்தொடருடன் இணைந்து இந்த விருது விழாவும் அரங்கேறும். விருது பெற்றவர் பெயர், வழங்கும் இடம், காலம், நேரம் போன்ற விவரங்கள் பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் அறிவிக்கப்படும். உலகளாவிய அங்கத்தினர்களைக் கொண்ட விருது நடுவர் குழுவின் முடிவு அறுதியானது. விண்ணப்பம் அனுப்புவதற்கான முடிவு தேதி: 31 ஒக்டோபர் 2011.கனடாவில், அறக்கொடை நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் உலகெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இது வருடா வருடம் வாழ்நாள் தமிழ் கல்வி, இலக்கிய சாதனைகளுக்காக உலகத்தின் மேன்மையான சேவையாளர் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு விருது வழங்கும். இந்த விருது பாராட்டுக் கேடயமும், 1500 கனடிய டொலர்கள் பணப் பரிசும் கொண்டது. ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தில், கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தால் நிறுவப்பட்ட நிதியத்தின் ஆதரவில் வருடா வருடம் நடைபெறும் உரைத்தொடருடன் இணைந்து இந்த விருது விழாவும் அரங்கேறும். விருது பெற்றவர் பெயர், வழங்கும் இடம், காலம், நேரம் போன்ற விவரங்கள் பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் அறிவிக்கப்படும். உலகளாவிய அங்கத்தினர்களைக் கொண்ட விருது நடுவர் குழுவின் முடிவு அறுதியானது. விண்ணப்பம் அனுப்புவதற்கான முடிவு தேதி: 31 ஒக்டோபர் 2011.

Continue Reading →

பாரதி இலக்கிய சங்கமும் காளீஸ்வரி கல்லூரியும் இணைந்து நடத்தும் இலக்கிய மாநாடு 11

 
பாரதி  இலக்கிய சங்கமும் காளீஸ்வரி கல்லூரியும் இணைந்து நடத்தும் இலக்கிய மாநாடு  11இடம்   காளீஸ்வரி கல்லூரி, சிவகாசி; 2 நாட்கள்; 4 அரங்குகள்; 20 அமர்வுகள்; 35 படைப்பாளிகள்; 50 ஆய்வுக் கட்டுரைகள்!
 
செப்டம்பர் 9,10, 2011:

பொன்னீலன் அரங்கு                   – படைப்பு வெளி
லட்சுமிஅம்மாள் அரங்கு             – பெண்கள் இலக்கியம்
டொமினிக் ஜீவா அரங்கு            – ஈழ, புலம்பெயர்,புகலிட இலக்கியம்
குற்றாலம் ஆர்ட்டிஸ்ட் அரங்கு – இலக்கியமும் கலையும்

Continue Reading →

அக்டோபர் 16, 2011: அயோத்தி நூலகசேவைகள் அமைப்பின் லண்டன் – ஈழத்துப் புத்தகச் சந்தையும் தமிழ் எழுத்தாளர் – வாசகர் சந்திப்பு நிகழ்வும்

அயோத்தி நூலக சேவைகள் அமைப்பின் பின்புலம்: ஈழத்துத் தமிழ்ப் பிரதேசங்களில் நூலகங்களும் நூலகர்களும் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு அறிவியல், தொழில்நுட்ப ரீதியில் உதவிகளை வழங்குவதற்கு உருவாக்கப்பட்ட நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்பே அயோத்தி நூலக சேவை அமைப்பாகும். (யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஆனைக்கோட்டையில்,இவ்வமைப்பு கருவுற்று வளர்ச்சிகண்ட இல்லத்தின் பெயரான அயோத்தியே அவ்வமைப்பின்அயோத்தி நூலக சேவைகள் அமைப்பின் பின்புலம்: ஈழத்துத் தமிழ்ப் பிரதேசங்களில் நூலகங்களும் நூலகர்களும் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு அறிவியல், தொழில்நுட்ப ரீதியில் உதவிகளை வழங்குவதற்கு உருவாக்கப்பட்ட நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்பே அயோத்தி நூலக சேவை அமைப்பாகும். (யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஆனைக்கோட்டையில்,இவ்வமைப்பு கருவுற்று வளர்ச்சிகண்ட இல்லத்தின் பெயரான அயோத்தியே அவ்வமைப்பின்
பெயராகவும் வைக்கப்பட்டது). ஈழத்தின் தமிழ் நூலகவியல்துறையில் முன்னோடிகளாகவிருந்த அமரர் கலாநிதி.வே.இ.பாக்கியநாதன், அமரர் எஸ்.எம்.கமால்தீன், திரு.இ.முருகவேள் போன்றோருடைய ஆலோசனை, வழிகாட்டலுடன் 1985இல் அயோத்தி நூலகசேவைகள் அமைப்பு, யாழ்ப்பாணம் ஈவ்லின் இரத்தினம் பல்லினப்பண்பாட்டு நிறுவன நூலகராகவிருந்த என்.செல்வராஜா அவர்களால் நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம் நூலகவியல் கல்வியை தமிழில் பரவலாக்குவதும், நூலியல் அறிவை தமிழரிடையே விஞ்ஞானபூர்வமாகவும், நடைமுறைச் சாத்தியமான வழிகளிலும் எடுத்துச்செல்வதுமாகும்.

Continue Reading →

‘ஞானம்’ ஆகஸ்ட் 2011 வெளிவந்து விட்டது!

அன்புடையீர், வணக்கம்! ‘ஞானம்’ இதழ் பற்றிய கருத்துகளை அறியத்தாருங்கள். அன்புடன், தி. ஞானசேகரன், ஆசிரியர் ‘ஞானம்’“பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞானம்”editor@gnanam.info

Continue Reading →

கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதுகள் 2011!

கு.சின்ன்னப்ப்பபாரதி அறக்கட்டளை விருதுகள் 2011. - நோயல் நடேசன் - கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை சார்பாக 2011 ஆம் ஆண்டு இலக்கியப்பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள நூல்கள் முதன்மைப் பரிசு ரூபாய் ஐம்ப்பதாயிரமும் – விருது தமிழ் மொழி (பெறுபவர்): 1. வவுனியூர் .இரா.உதயணன் – லண்டன் நூல் – பனிநிலவு; பிறமொழி பின்னர் அறிவிக்கப்படும்.

Continue Reading →

‘நாம்’ வெளிக்கொணரும் ‘தனி’!

”தனி” – இதழ் இருமாதங்களுக்கு ஒரு முறை கொண்டுவரவேண்டும் என்று நினைத்திருக்கிறோம். இதழ் சிறப்பான முறையில் நண்பர்களுக்கு வணக்கம்!  ”தனி” மௌனத்தில் உறைந்துகிடக்கும் தனிமையான தீராத பொழுதுகளை பெரிதுபடுத்தாமல் புறக்கணிப்புக்கு இலக்காகும் பரப்பில் தனியாக (SOLIDARITY) குரல் எழுப்பக்கூடிய வடிவமாக உருவெடுக்க “நாம்” நண்பர்கள் குழுவினரின் புதிய முயற்சியாக தொடர்கிறது. “தனி” இதழ் ஆகஸ்ட் மத்தியில் நண்பர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வாக  அறிமுகப்படுத்த நினைத்திருக்கிறோம். திட்டமிடப்படாத நாள் ஒன்றில் உங்களுக்கு அழைப்பு வரும் கலந்துகொள்ளுங்கள்.  ”தனி” – அடுத்த இதழுக்கான படைப்புகள் தொகுத்துக்கொண்டிருக்கிறோம். ஆகஸ்ட் 15ற்குள் உங்களின் படைப்புக்களை எனக்கு அனுப்பிவையுங்கள்.

Continue Reading →

கவிஞர் தீபச்செல்வனுக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் இரு விருதுகள்!

கவிஞர் தீபச்செல்வனுக்கு இரு விருதுகள்!கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம், பத்தி, ஊடக எழுத்து, ஒளிப்படம், என பல்வேறு துறைகளிலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் கவிஞர் தீபச்செல்வனுக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் சிறந்த புகைப்பட ஊடகவியலாளன் விருது, மற்றும் நெருக்கடி சூழலில் செய்தி தேடலுக்கான விருது ஆகிய இரண்டு விருதுகளை வழங்கிக் கெளரவித்துள்ளது. நெருக்கடிக் காலத்தில் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பான அவரது கட்டுரைகள் முக்கியமானவை. ஈழத்து ஊடகங்களிலும், தமிழக சஞ்சிகைகளிலும், அவரது பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

Continue Reading →