‘மாஸ்’ திரைப்படக் கல்லூரியின் குறுந்திரைப்பட விழா

“மாஸ்’ திரைப்படக் கல்லூரியின் குறுந்திரைப்பட விழா எதிர்வரும் சனிக்கிழமை 23-04-2011 அன்று மாலை 4.01 மணிக்கு , தேசிய சினிமாக் கூட்டுத்தாபன அரங்கில் நடைபெறவுள்ளது.  கொழும்பு –…

Continue Reading →

உயிர்ப்பு – 2011 அற்புதமான ஒரு கலை நிகழ்ச்சி

சென்ற ஞாயிற்றுக் கிழமை 10-04-2011 உயிர்ப்பு நாடகப் பட்டறையின் 3வது கலை நிகழ்ச்சிக்குச் செல்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. ரொறன்ரோ, 1785 பின்ச் அவன்யூவில் உள்ள யோர்க்வூட் நூல்நிலைய அரங்கில் இந்த நிகழ்வு இடம் பெற்றது. மாலை 4:00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வைப் பற்றிய விவரங்களை சுல்பிகா அவர்கள் தொகுத்து வழங்கினார். சனிக்கிழமையும் இதுபோன்ற நிகழ்வு நடந்ததாகப் பார்வையாளர் சிலர் குறிப்பிட்டனர்சென்ற ஞாயிற்றுக் கிழமை 10-04-2011 உயிர்ப்பு நாடகப் பட்டறையின் 3வது கலை நிகழ்ச்சிக்குச் செல்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. ரொறன்ரோ, 1785 பின்ச் அவன்யூவில் உள்ள யோர்க்வூட் நூல்நிலைய அரங்கில் இந்த நிகழ்வு இடம் பெற்றது. மாலை 4:00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வைப் பற்றிய விவரங்களை சுல்பிகா அவர்கள் தொகுத்து வழங்கினார். சனிக்கிழமையும் இதுபோன்ற நிகழ்வு நடந்ததாகப் பார்வையாளர் சிலர் குறிப்பிட்டனர். ஈழத்திலே புகழ் பெற்ற கலைஞர்கள் பலர், பிறந்த நாட்டில் ஏற்பட்ட போர் சூழல் காரணமாகப் புலம் பெயர்ந்து கனடாவைப் புகுந்த நாடாக ஏற்றுக் கொண்டிருப்பதும், அவ்வப்போது தமது ஆத்ம திருப்திக்காகக் கலை நிகழ்ச்சிகளை மேடை ஏற்றிக் கொண்டிருப்பதும் பலரும் அறிந்ததே. அப்படியான ஆர்வமுள்ள கலைஞர்களில் சிலரின் முயற்சியால் உருவாக்கப்பட்ட நாடகப் பட்டறைகளில் ஒன்றுதான் ‘உயிர்ப்பு’ நாடகப் பட்டறை.

Continue Reading →

கருத்தாடல் களம்: “இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களின் எதிர்காலமும், அதற்கான தீர்வுகளும்”

கருத்தாடல் களம்: “இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களின் எதிர்காலமும், அதற்கான தீர்வுகளும்"இடம்: Scarborough Civic Centre, Scarborough, Canada.; காலம்: 23.04.2011, சனிக்கிழமை முற்பகல் 9.00மணி  தொடக்கம் பிற்பகல் 5.00மணி வரை.

“இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களின் எதிர்காலமும், அதற்கான தீர்வுகளும்” என்ற தலைப்பில் கருத்தாடல் களம்  ஒன்றினைக் கூட்டி அதில் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை சார்ந்து செயற்படக் கூடிய அனைத்துத் தரப்பாரும் பங்கெடுத்துக் கருத்துச் சொல்லும் வகையிலான நிகழ்வொன்றினை ரொறொன்ரோ தமிழ் சிந்தனை வட்டம் ஏற்பாடு செய்கின்றது.

Continue Reading →

2011 Spring JOBFAIR – 3 JOBFAIRS – HAMILTON, TORONTO, MISSISSAUGA – Google Napp Canada

JOB FAIR By GOOGLE Napp Canada

JOBFAIR 2011 – (1)   THURSDAY APRIL 28 – HAMILTON Convention Centre, 1 Summers Lane, Hamilton ON – Please send this info to friends
                         (2)   Thursday May 5 – TORONTO Centennial College Conf. Centre,
                         (3)   Thursday May 19 – Mississauga International Centre 

TIME:     10:00AM – 3:00PM

Jobseeker FREE REGISTRATIONhttp://www.nappcanada.com/attendeeregistration.php

ADMISSION:    FREE
PARKING:       FREE (Toronto and Mississauga)

Continue Reading →

மக்கள் கலாச்சார நிகழ்வு: வாழும் மனிதம்!

மக்கள் கலாச்சார நிகழ்வு: வாழும் மனிதம்!

காலம்: ஏப்ரல் 16, 2011 சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம்: கனடா ‘ஸ்கார்பரோ சிவிக் சென்ரர்’ மண்டபம் 

Continue Reading →

கூர் – 2011: எங்கும் ஒலிக்கிறது காற்று!

கனடாத் தமிழ்க் கலை இலக்கிய மலர் (இதழ்) வெளியீடு! கனடாத் தமிழ்க் கலை, இலக்கியத்தை வலிதாய் முன்னெடுக்கும் முயற்சியில் மூன்றாவது தோற்றம். சித்திரை – 30- 2011,…

Continue Reading →

இலண்டனில் றீற்றா பற்றிமாகரனின் ‘சங்க காலத் தமிழர் வாழ்வும், கலைகளும்’ நூல் வெளியீடு!

அன்புடையீர்! வணக்கம்! றீற்றா பற்றிமாகரனின் சங்கத் தமிழ் நூல்களைப் படித்துச் சுவைப்பதற்கான உதவிநூல். இந்நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இடம் – இலண்டன் சிவன் கோயில் மண்டபம் 4A,Clarendon…

Continue Reading →

நூல் வெளியீடு: வெங்கட் சாமிநாதன்: வாதங்களும் விவாதங்களும்.! தொகுப்பாசிரியர்கள்: பா.அகிலன், திலீப்குமார், சத்தியமூர்த்தி

கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ்க் கலை இலக்கியச் சூழலில் தனகென்றோர் ஆளுமையினைப் பதித்து , பங்களிப்புச் செய்து வருபவர் வெ.சா. என்று அழைக்கப்படும் திரு. வெங்கட் சாமிநாதன். அவரது கலை, இலக்கியத்துறைப் பங்களிப்பினைச் சிறப்பிக்கும் முகமாக வெளிவரும் நூல் ‘வெங்கட் சாமிநாதன்: வாதங்களும், விவாதங்களும்.’.  பா.அகிலன், திலீப்குமார், சத்தியமூர்த்தி ஆகியோரைத் தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு வெளிவரும் மேற்படி நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் ஏப்ரில் 30, 2011 அன்று சென்னை தேவனேய பாவாணர் நூலகத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

Continue Reading →

விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் முதல் ஒன்பது நூல்களின் அறிமுக விழாவும், வெளியீட்டு விழாவும்.

விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் முதல் ஒன்பது நூல்களின்  அறிமுக விழாவும், வெளியீட்டு விழாவும். விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் முதல் ஒன்பது நூல்களின்  அறிமுக விழாவும், வெளியீட்டு விழாவும் …

Continue Reading →

இணையத்தில் தமிழ் மின் அகராதிகள்

முனைவர் மணிகண்டன்அகராதிகள், கலைச்சொற்கள் ஒரு மொழியின் வளர்ச்சிக்கும் அந்தந்தக் காலக்கட்ட மொழியின் இயல்பிற்கும் ஏற்ற வகையில் வளர்ந்து வரும் துறையாகும். மொழிக்கு இன்றியமையாதது அகராதிகள் என்று கூறினாலும் அதன் காலத்தை உணர்ந்து புதிய புதிய சொல்லாட்சிகளை உருவாக்கித் தொகுத்து நூலாக வெளியிட்டனர். இஃது ஒரு காலக்கட்டத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது. இன்று கணிப்பொறி இணையம் காலத்தில் நாம் இருப்பதால் அதற்குத் தகுந்தாற் போல் வளர்ச்சியை நம் செம்மொழித் தமிழ் பெற வேண்டும் என்ற நல்ல நம்பிக்கையில் இணையத்தில் தமிழ் மின் அகராதி என்ற ஒரு பகுதியைத் தமிழ் ஆர்வலர்கள், நூலக உரிமையாளர்கள் தொடங்கி வைத்துள்ளனர்.  மின் உலகில் தமிழ்மொழி சார்ந்த மின் அகராதிகள் எழுபத்தைந்து (75) உள்ளன. இவைகளின் பணிகள், எந்தெந்த மின் அகராதிகள் தமிழில் உள்ளன என்பதைப் பற்றி பார்ப்போம்.

Continue Reading →