நாவல்: அமெரிக்கா! (1-8)

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'– மங்கை பதிப்பகம் (கனடா), ஸ்நேகா பதிப்பகம் (தமிழ்நாடு) இணைந்து வெளியிட்ட அமெரிக்கா தொகுதியானது ‘அமெரிக்கா’ என்னும் நாவலையும் (அளவில் சிறியதானாலும் இது நாவல்தான்) , சில சிறுகதைகளையும் உள்ளடக்கிய தொகுதியாகும். இவை அனைத்துமே ‘பொந்துப்பறவைகள்’ மற்றும் ‘மான் ஹோல்’ தவிர , கனடாவிலிருந்து வெளியான ‘தாயகம்’ பத்திரிகை, சஞ்சிகையில் பிரசுரமானவை (தாயகம் ஆரம்பத்தில் பத்திரிகையாகவும் , பின்னர் சஞ்சிகையாகவும் வெளியானது). முதற் பதிப்பின்போது ஒழுங்காக சரி, பிழை பார்க்காமல் போனதால் பல எழுத்துப்பிழைகள் ஏற்பட்டு விட்டன; சில வசனங்கள் விடுபட்டுப்போயின,  மேலும் இந்நாவல் ஈழத்துத்தமிழ் அகதிகள் சிலரின் நியூயார்க்கிலுள்ள சட்ட விரோதக் குடிகளுக்கான தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்குமொரு நாவல். இந்நிலையில் மீண்டும் அத்தொகுப்பில் வெளியான ஆக்கங்களை சரி, பிழை பார்த்துப் ‘பதிவுகள்’ இணைய இதழில் பிரசுரித்தாலென்ன என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவுதான் ‘அமெரிக்கா’ என்னும் இந்நாவலின் மீள்பிரசுரிப்பு. இவ்விதம் பிரசுரிப்பதன் மூலம், அவற்றைச்சரி, பிழை பார்த்து, மீள எழுதுவதன் மூலம் அடுத்த பதிப்புக்குத்தயார் படுத்தலாம் என்றெண்ணுகின்றேன். அத்துடன்  பதிவுகள் வாசகர்களும் அவற்றை இணையத்தின் மூலம் வாசிக்க வழி வகுக்கும் என்றுமெண்ணுகின்றேன்.  இறுதி அத்தியாயம் மீளவும் திருத்தி எழுதப்பட்டுள்ளது- வ.ந.கிரிதரன் –

அத்தியாயம் ஒன்று: இளங்கோவின் பயணம்!
உலகப்புகழ்பெற்ற நியூயார்க் மாநகரின் ஒரு பகுதி புரூக்லீனின் ஓர் ஓரத்தே, கைவிடப்படும் நிலையிலிருந்த , பழைய படையினரால் பாவிக்கப்பட்ட கட்டடத்தின் ஐந்தாம் மாடி. அந்தக்கட்டடத்திற்கு எத்தனை மாடிகள் உள்ளன என்பதே தெரியாது. எனக்குத்தெரிந்ததெல்லாம் நான் இருந்த கட்டடத்தின் பகுதி ஐந்தாவது மாடி என்பது மட்டும்தான். என்னைப்பொறுத்தவரையில் இந்த ஐந்தாவது மாடி அமெரிக்காவைப்பொறுத்தவரையில் இன்னுமோர் உலகம். ‘ஒய்யாரக்கொண்டையாம், தாழம்பூவாம். உள்ளேயிருப்பது ஈரும், பேனும்’ என்பார்கள். எனது அமெரிக்கப்பிரவேசமும் இப்படித்தான் அமைந்து விட்டது. உலகின் செல்வச்செழிப்புள்ள மாபெரும் ஜனநாயக நாடு! பராக்கிரமம் மிக்க வல்லரசு! இந்த நாட்டில் காலடி எடுத்து வைக்கும் மட்டும் எனக்கு அமெரிக்கா ஒரு சொர்க்க பூமிதான். மனித உரிமைகளுக்கு மதிப்புத்தருகின்ற மகத்தான பூமிதான். ஆனால், என் முதல் அனுபவமே என் எண்ணத்தைச்சுட்டுப்பொசுக்கி விட்டது. ஒரு வேளை என் அமெரிக்க அனுபவம் பிழையாகவிருக்குமோ என்று சில வேளை நான் நினைப்பதுண்டு. ஆனால் மிகுந்த வெற்றியுடன் வாழும் என்னினத்தைச்சேர்ந்த ஏனைய அமெரிக்கர்களை எண்ணிப்பார்ப்பதுண்டு. உண்மைதான்! பணம் பண்ணச்சந்தர்ப்பங்கள் , வெற்றியடைய வழிமுறைகள் உள்ள சமூகம்தான் அமெரிக்க சமூகம். ஆனால் அந்தச் சமுதாயத்தில்தான் எனக்கேற்பட்ட அனுபவங்களும் நிகழ்ந்தன என்பதையும் எண்ணித்தான் பார்க்கவேண்டியிருக்கிறது. சுதந்திரதேவி சிலை நீதி, விடுதலை, சம உரிமையை வலுயுறுத்துகிறது. அமெரிக்க அரசியலமைப்பும்  மனிதரின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்துகிறது.  இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை. வெளியிலிருக்கும் மட்டும் அப்படித்தானிருந்தது. எல்லாம் உள்ளே வரும் மட்டும்தான்.

Continue Reading →

நோர்வேத் தமிழ் நாவல்: நாளை (5 – 13)!

– நோர்வேயில் வசிக்கும் இ. தியாகலிங்கம் புகலிடத் தமிழ் எழுத்தாளர். காரையூரான், காரைநகரான் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறார். நாளை, பரதேசி, திரிபு, எங்கே, ஒரு துளி நிழல், பராரிக்கூத்துக்கள் ஆகிய நாவல்களும், வரம் என்னும் குறுநாவற் தொகுதியும், துருவத் துளிகள் என்னும் கவிதைத் தொகுதியும் இதுவரை நூலுருப்பெற்றுள்ளன.  இவரது ‘நாளை’ நாவல் பதிவுகளில் தொடராகப் பிரசுரமாக அனுமதியளித்துள்ள நூலாசிரியருக்கு நன்றி.. – பதிவுகள் –

5

நோர்வேத் தமிழ் நாவல்: நாளை (5 - 13)!சனிக்கிழமை ஐந்து மணியளவில் தமிழர் கூட்டமைப்பு கூட்டம் துவங்கியது. தேவகுரு பின்னுக்குப் போய் அமர்ந்தார். அதனைப் பார்த்த தலைவர் சற்குணம், அவரை முன்னுக்கு கொண்டு வந்து அமர்த்தினார். இந்தப் பிரச்சனைகளிலே அவர் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளார். தான் இவற்றை வைத்துக் கொண்டு பிரபல்யம் அடைவதாக இளைஞர்கள் சிலர் தவறாக நினைத்துக் கொள்வார்களோ எனவும் பயந்தார். தலைவர் தமது உரையைச் சிறிதாக முடித்துக் கொண்டு, பிரதான உரையைத் தேவகுருவை நிகழ்த்தும்படி கேட்டுக் கொண்டார். ‘நாம் நினைப்பவற்றை, உண்மையிலே உறுதிபூண்டு, அவர்களுக்குச் சொல்லவேண்டியது தமது கட்டாயம்’ என்று நினைத்தார்.

‘கடமையைச் செய்; பயனில் பற்று வைக்காதே. கடமை செய்வதினால் கிடைக்கும் பயனையும் ஈசுராப்பணமாக்குதல் வேண்டும்’ என்று இராமநாதர் கீதையின் சாரம் பற்றிச் சொல்லும்பொழுது கூறியது அவருக்கு அப்பொழுது நினைவில் மிதந்தது.

Continue Reading →

தொடர் நாவல்: நாளை – 4

– நோர்வேயில் வசிக்கும் இ. தியாகலிங்கம் புகலிடத் தமிழ் எழுத்தாளர். காரையூரான், காரைநகரான் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறார். நாளை, பரதேசி, திரிபு, எங்கே, ஒரு துளி நிழல், பராரிக்கூத்துக்கள் ஆகிய நாவல்களும், வரம் என்னும் குறுநாவற் தொகுதியும், துருவத் துளிகள் என்னும் கவிதைத் தொகுதியும் இதுவரை நூலுருப்பெற்றுள்ளன.  இவரது ‘நாளை’ நாவல் பதிவுகளில் தொடராகப் பிரசுரமாக அனுமதியளித்துள்ள நூலாசிரியருக்கு நன்றி.. – பதிவுகள் –

அத்தியாயம் நான்கு!

- இ. தியாகலிங்கம் -ஈழத்தமிழ் இனத்தின் மீட்பிற்காகவும், இறுதி விடுதலைக்காகவும் பல இயக்கங்கள் இயங்குவதாகத் தேவகுரு கேள்விப்பட்டிருந்தார். எல்லா இயக்கங்களுமே தமிழ் இனத்தின் கௌரவத்திற்காகவே உழைக்கின்றன என்றும், அந்த இயக்கங்களைச் சேர்ந்த போராளிகள் அனைவருக்கும் யாழ் மக்களினால், ‘பெடியன்கள்’ என் வாஞ்சையுடன் அழைக்கப்பட்டனர் என்றும் தேவகுரு அறிந்திருந்தார். காரைநகர் இந்துக் கல்லூரியின் சீனியர் மாணவர்கள் சேர்ந்து கொண்ட இயக்கம் பற்றி அறிந்து, அவர்களுடன் தொடர்பு கொண்டு, அந்த இயக்கத்தில் சேர்ந்து கொண்டார்.

சில மாதங்கள் எந்தப் பயிற்சியும் இன்றி, யாழ்ப்பாணத்தில் உள்ள கோண்டாவில் என்று ஊரிலே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்ள நேர்ந்தது. கோண்டாவில் மக்கள் ஆதரித்த நேர்த்தி இன்றும் நெஞ்சை உருக வைக்கும் என்றாலும், இந்தக் காலம் மிகவும் அலுப்பான காலம். உண்மையான ராணுவப் பயிற்சி பெற்று, களத்திலே குதித்து செயற்கரியன சாதிக்க வேண்டும் என்று துடித்தார். இந்தியக் கரையை அடைவதற்குப் பயண ஏற்பாடுகளைச் செய்வதிலே சில நடைமுறைச் சிக்கல்கள் உண்டு, என்று விளக்கினார்கள். பல்லைக் கடித்துப் பொறுமை காத்தார். பொறுமை வளறத் துவங்கி, பயிற்சி முகாம் செல்ல வேண்டும் என்கிற அவர் துடிப்பு நச்சரிப்பாக மாறிய ஒரு கட்டத்திலே, இந்தியாவிலுள்ள பயிற்சி முகாமுக்குச் செல்வதற்கு அவருக்கு வாய்ப்புக் கிட்டியது.

Continue Reading →

நோர்வேத்தமிழ் நாவல்: நாளை 2 – 3

– நோர்வேயில் வசிக்கும் இ. தியாகலிங்கம் புகலிடத் தமிழ் எழுத்தாளர். காரையூரான், காரைநகரான் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறார். நாளை, பரதேசி, திரிபு, எங்கே, ஒரு துளி நிழல், பராரிக்கூத்துக்கள் ஆகிய நாவல்களும், வரம் என்னும் குறுநாவற் தொகுதியும், துருவத் துளிகள் என்னும் கவிதைத் தொகுதியும் இதுவரை நூலுருப்பெற்றுள்ளன.  இவரது ‘நாளை’ நாவல் பதிவுகளில் தொடராகப் பிரசுரமாக அனுமதியளித்துள்ள நூலாசிரியருக்கு நன்றி.. – பதிவுகள் –

அத்தியாயம் இரண்டு!

- இ. தியாகலிங்கம் -‘சிங்களம் மட்டுமே நாட்டின் ஏகமொழி’ என்று திணித்தார்கள். தமிழருடைய கல்வி முன்னேற்றத்திற்கு தடை விதிக்க, தரப்படுதல் புகுத்தப்பட்டது. வடகீழ் மாநிலங்களிலே பாரம்பரிய தமிழர் மண் சுவீகரிக்கப்பட்டு, சிங்களக் காடையர்களின் குடியேற்றங்கள் கொலுவிருக்கச் செய்தனர். கிழக்கில் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய நிலம் ‘மண் கொள்ளை’ செய்யப்பட்டு, இரண்டு சிங்களத் தொகுதிகள் உருவாக்கப்பட்டன. வடக்கினையும் கிழக்கினையும் ஒரே நிலப்பரப்பாக ஒன்றிணைக்கும் மணல் ஆறு பிரதேசம், வெலிஓயாவாக மறு நாமகரணமிடப்பட்டு, தென்வவுனியாவினை இணைத்து அடங்கா தமிழரின் மண்ணிலே ஒரு தொகுதி உருவாக்கத் திட்டடப்படுகின்றது. இவற்றை எல்லாம் கண்ணுற்றும், தமிழருடைய அரசியல் தலைவர்கள் ‘துப்பாக்கிக் குண்டு விளையாட்டுக் குண்டு’ ‘தூக்குமேடை பஞ்சுமெத்தை’ என்று வீரவசனங்கள் பேசுவதிலே காலவிரையம் செய்தார்கள். அவர்கள் சிங்களத் தலைவர்களுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள், அவற்றின் மை உலர்வதற்கு முன்னமே குப்பைத் தொட்டிகளிலே கடாசப்பட்டன! தமிழருடைய மண்ணைக் காக்கவும், தமிழ் இனத்தின் மானத்தைக் காக்கவும் இளைஞர்கள் ஆயுத பாணிகளாகக் களம் குதித்தல் வேண்டும். அஹ’ம்ஸையின் அர்த்தத்தினை மனிதர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்…ஆனால், சிங்களர்…

Continue Reading →

நோர்வேத் தமிழ் நாவல்: நாளை – 1

– நோர்வேயில் வசிக்கும் இ. தியாகலிங்கம் புகலிடத் தமிழ் எழுத்தாளர். காரையூரான், காரைநகரான் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறார். நாளை, பரதேசி, திரிபு, எங்கே, ஒரு துளி நிழல், பராரிக்கூத்துக்கள் ஆகிய நாவல்களும், வரம் என்னும் குறுநாவற் தொகுதியும், துருவத் துளிகள் என்னும் கவிதைத் தொகுதியும் இதுவரை நூலுருப்பெற்றுள்ளன.  இவரது ‘நாளை’ நாவல் பதிவுகளில் தொடராகப் பிரசுரமாக அனுமதியளித்துள்ள நூலாசிரியருக்கு நன்றி.. – பதிவுகள் –

அத்தியாயம் ஒன்று!

- இ. தியாகலிங்கம் -அந்த இரைச்சல் தாங்க முடியாததாக இருந்தது. கழுவும் இயந்திரத்தின் இத்தகைய ஒலங்களைச் சகித்தல் அவள் வேலையின் ஒரு அம்சமே. இன்றைக்கு நித்தியாயினிக்குத் தாங்க முடியாததாக இருந்தது. ஒரே தலைவலி. மற்றவர்கள் காதில்லாதவர்கள் போன்ற பாவனையில் வேலையில் ஈடுபட்டிருந்தது அவளுக்கு எரிச்சல் ஓட்டியது.  ‘என்ன மனிதர்கள்? பணத்திற்காக எதுவுமா? வேலை ஸ்தல உரிமைகள் மீறப்படுகின்றன. ஏதாவது முணு முணுப்பு? இலங்கையில் அடங்கிக் கிடந்தார்கள். இங்கு? புதிய பூமியும் புதின வானமும் நாடி வந்த இடத்தில்? சுதந்திரம் என்பது எங்களுக்கு எட்டாத கனவுகளா?’–இவ்வாறெல்லாம் அவளுடைய மனசு தறிகெட்டோடியது.  ‘செவி உடல் உறுப்பு. உடலா நோகடிக்கப்படுகிறது? இல்லை. காதிலும் ஆழமானது. மனசு நோகடிக்கப்படுகின்றது. மனசு சம்பந்தப்பட்ட உணர்வுகள் காயமடைகின்றன. நோகடிப்பதும் காயப்படுத்துவதும் வன்முறை சார்ந்தது என்று இவர் தர்க்கிப்பார். இவர் கற்பனை செய்யும் உலகம் வேறு. யதார்த்த உலகம் வேறு அநுபவங்களைக் கொண்டிருக்கிறது. பணத்தின் விஸ்வ ரூபம்! பணத்தின் முன்னால் மண்டியிடும் மனிதன் இயந்திரமாகி விட்டான். ஆன்மாவின் விலையா பணம்?’ இவருடைய சிந்தனைச் செல்வாக்குகள் தன்னைப் பீடிப்பதை உணருகின்றாள். அவற்றில் இருந்து அந்நியப்படவும் அவளால் முடியவில்லை.

Continue Reading →

குறுநாவல்: தங்ஙள் அமீர்

எழுத்தாளர் சீர்காழி தாஜ்புலம் பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியம் என்றதும் உடனடியாக ஈழத்தமிழர்கள்தாம் நினைவுக்கு வருகின்றார்கள். உண்மையில் தமிழர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றாலும் அவர்கள் புலம் பெயர்ந்த தம் அனுபவங்களை மையமாகக்கொண்டு படைக்கும் இலக்கியம் புலம் பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம்தான். இவ்விதம் புலம் பெயர்தல் சொந்த நாட்டினுள்ளாகவுமிருக்கலாம். அன்னிய மண் நாடியதாகவுமிருக்கலாம். எழுத்தாளர் தாஜின் ‘தங்ஙள் அமீர்’ இரண்டாவது வகையினைச் சேர்ந்தது. இந்தக் குறுநாவல் இரண்டு விடயங்களை மையமாகக் கொண்டது. மத்திய கிழக்கு நாடொன்றில் உணவுபொருட்களை இறக்குமதி செய்து மொத்த வியாபாரம் செய்யும் இந்திய இஸ்லாமிய சமூக வர்த்தகர்களின் செயற்பாடுகளை அதன் நெளிவு சுழிவுகளை மற்றும் மந்திர தந்திரங்கள் போன்ற மூட நம்பிக்கைகளின் தொடரும் ஆதிக்கத்தினை விபரிப்பது ஆகியவையே அவை. ‘தங்ஙள் அமீர்’ என்று குறு நாவலுக்குத் தலைப்பு வைத்திருந்தாலும், வாசித்து முடித்ததும் மனதில் நிற்பவை ரியாத்தில் நடைபெறும் வர்த்தகச் செயற்பாடுகளும், அங்குள்ள வர்த்தகர்  இன்னொருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வரும் தன் முதற் காதலியை மீண்டும் மணக்கத் துடிப்பதும், அதற்காக ‘தங்ஙள் அமீரை’ப் பாவிப்பதும்தாம். இஸ்லாமிய சமுகத்தவர் மத்தியில் நிலவும் தலாக் கூறி விவாகரத்து செய்யும் செயற்பாட்டினை எவ்விதம் ஒருவர் தவறாகப் பாவிக்க முடியும் என்பதையும் அப்துல்லா அல்-ரவ் என்னும் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தும் குறுநாவலிது. உண்மையில் தங்ஙள் அமீர் நல்லதொரு பாத்திரப் படைப்பு. இக்குறுநாவலை இன்னும் விரிவாக்கி, தங்ஙள் அமீர் பாத்திரத்தை இன்னும் உயிரோட்டமுள்ளதாக்கி நல்லதொரு நாவலை இதே பெயரில் படைக்க தாஜுக்கு வாய்ப்பிருக்கிறது. அதனைப் பயன்படுத்துவாரானால் தமிழ் இலக்கிய உலகுக்குப் புலம் பெயர்ந்த தமிழ் இலக்கியத்தின் இன்னுமொரு முகத்தினைக் காட்டும் வாய்ப்பிருக்கிறது. அதே சமயம் குறுநாவலாக இருந்த போதிலும், மத்திய கிழக்கு நாடொன்றின் தமிழர் வர்த்தக வாழ்வை, அங்கும் மக்களின் மூட நம்பிக்கைகளை ஆதாரமாகக்கொண்டு தொடரும் பணம் பெருக்கும் வர்த்தகச் செயற்பாடுகளை  விபரிக்கும் ‘தங்ஙள் அமீர்’ வித்தியாசமான , முக்கியமான படைப்பு. நாஞ்சில் நாடனின் ‘மிதவை’ (உள்ளூர் புலம் பெயர்தலை விபரிக்கும்), காஞ்சனா தாமோதரனின் , ஜெயந்தி சங்கரின் , ப.சிங்காரத்தின் படைப்புகள் வரிசையில் தமிழக எழுத்தாளர் ஒருவரின் புலம் பெயர் அனுபவங்களின் பிரதிபலிப்பு சீர்காழி தாஜின் ”தங்ஙள் அமீர்’. இக்குறுநாவலினைப் ‘பதிவுகள்’ வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள அனுப்பிய எழுத்தாளர் தாஜ் நன்றிக்குரியவர். –வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள்

Continue Reading →

தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை (24 , 25, 26, 27 &28)

அசோகனின் வைத்தியசாலை-24

நோயல் நடேசன்வாழ்க்கை என்பது ஒரே மாதிரி இருக்க வேண்டியது இல்லைத்தானே. ஏற்ற இறக்கங்கள் நன்மை தீமைகள் சுகங்கள் துக்கங்கள் என மாறிமாறி வருவது இயற்கை. அதற்கேற்க ஷரனது வாழ்க்கையில் விரும்பத்தக்க ஒரு மாற்றம் வந்ததது. அவளது குடும்பம் சார்ந்த சகலருக்கும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடியதாக அது இருந்தது. பல காலமாக தாய் வீட்டில் கணவன் கிறிஸ்ரியனை பிரிந்து இருந்த போதும் அவள் தனது விவாகரத்தை கோட்டுக்குப் எடுத்து போகவில்லை. கோட்டுக்குச் சென்று வழக்குப் பேசி தனக்குச் சொந்தமாக வரக்கூடிய பல மில்லியன் டாலர்களை இழப்பதற்கு தயாரில்லை. அவசரத்திலும், ஆத்திரத்திலும் சாதாரண பெண்களைப்போல் உணர்வு வயப்பட்டாலும் சிறிது நேரத்தில் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த அவளது மூளையின் சிந்திக்கும் மூளையின் முன் பகுதிகள் இரத்த ஓட்டத்தை அதிகரித்து அவளை அமைதியாக்கும். ‘கமோன் ஷரன், நீ மற்றவர்கள்போல் அல்ல. இதற்காகவா உனது இளமைக் காலத்தை வயதான ஒருவனோடு வீணடித்தாய். ஆத்திரத்தில் எடுக்கும் முடிவுகள் உன்னை கீழே தள்ளி வீழ்த்திவிடும். கணவனைப் பிரிந்த மற்றய பெண்களைப்போல் அரசாங்கத்தின் பிச்சைப் பணத்திலும் மற்றவர்களின் அனுதாபத்திலும் வாழ்நாளை கடத்துவதற்கு பிறந்தவள் அல்ல. உனது அழகும், அறிவும் உன்னை ஒரு மகாராணி போல் வாழ்வதற்கு வழிகாட்டும்’ எனச் சொல்லி அவளிடம் சிந்தனையை தூண்டிவிடும். தன்னில் உள்ள நம்பிக்கை உசுப்பி விடப்படுவதால் விவாகரத்து என்ற விடயத்தை முற்றாக தள்ளிப் போட்டிருந்தாள்

Continue Reading →

தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை- (22 & 23)

அசோகனின் வைத்தியசாலை- 22

நோயல் நடேசன்மெல்பேனில் நகரின் மத்தியில் உள்ள ஒரு பிரபலமான மதுச்சாலைக்கு அன்ரூவின் பிறந்தநாள் அழைப்பை ஏற்று மாலை ஆறரை மணியளவில் வந்து சேர்ந்த சுந்தரம்பிள்ளைக்கு வாசலுக்கு சென்ற பின்பு தனியாக உள்ளே செல்ல தயக்கமாக இருந்தது. பல தடவைகள் நண்பர்களுடன் சேர்ந்து சென்றிருந்தாலும் மதுச்சாலைக்கு தனியாக செல்வது என்பது இன்னமும் பழக்கத்தில் வரவில்லை. ஒரு கலாச்சாரத்தில் வளர்கப்பட்ட பின்பு மற்றய கலாச்சாரத்தில் மாறுவது ஓடும் இரயிலில் இருளில் ஒரு கம்பாட்மென்ரில் இருந்து மற்றதற்கு செல்வது போன்று இருந்தது. இலகுவான காரியமாக இருக்கவில்லை.

சனிக்கிழமையாதலால் மெல்பேனின் சிறந்த மியுசிக் குழு ஒன்றின் சங்கீதம் இருந்தது. நிகழ்ச்சி மாலை ஆறுமணியில் இருந்தே ஆரம்பித்ததால் மதுசாலை சங்கீதத்தால் மட்டுமல்ல, கூட்டத்தாலும் நிரம்பி வாசல்வரை வழிந்தது. கோடைகாலத்தின் நீண்ட பகலாக இருந்தபடியால் எங்கும் மக்களின் கூட்டமாக இருந்தது. அதேபோல் கார்கள் எங்கும் நிறுத்தப்பட்டு எதுவித வெறுமையான இடம் தென்படவில்லை. நல்லவேளையாக கார்கள் நிறுத்த இடம் இருக்காது என்பதால் ரயிலில் வந்தது புத்திசாலித்தனமானது என மனத்துக்குள் தன்னை மெச்சிக் கொண்டான். சாருலதாவுக்கும் சேர்த்து விருந்துக்கு அழைப்பு இருந்தாலும் இப்படியான இடங்கள் அவளுக்கு ஒத்துவராது எனக் கூறி அவள் மறுத்ததும் நல்லதாகிவிட்டது. இருவர் வந்திருந்தால் நிட்சயமாக காரில்த்தான் வந்திருக்க வேண்டும்.

Continue Reading →

நாவல்: காதலன் (12 – 18)

அத்தியாயம் -12

- மார்கெரித் த்யூரா; தமிழில -  நாகரத்தினம் கிருஷ்ணா -நாகரத்தினம் கிருஷ்ணாஹெலென் லாகொனெல் நல்ல வளர்த்தி, ஆனால் அவள் ஓர் அசடு. அவளுடைய சரீரம் ஒரு சில பழங்களின் மேற்தோல்போல அத்தனை மென்மையானது. சட்டென்று அதன் இருப்பை உணரமுடியாது. மிகைப்படுத்தி சொல்வதுபோல இருக்கிறதா? உண்மையும் அதுதான். பொறாமையில் அவளை எவரேனும் கொன்றாலும் ஆச்சரியமில்லை. அவளுடையக் கைகளைக் கொண்டே அவளுடைய கழுத்தை நெறிக்கலாம் என்பதைப்போன்ற வித்தியாசமான கனவுகளில் நம்மை ஆழ்த்தக்கூடியவள். தனது பலத்தை அறிந்திராத, தனது அருமை பெருமைகளை உணர்ந்திடாத- நினைத்துபார்க்காத, பிசையுங்களென்று கைகளையும், உண்ணென்று வாயையும் அழைக்கும், மிக மென்மையான கோதுமை மா அவள். கடவுளைக்குறித்து மிக ஆழமாக அறிந்துணர்வதற்காக ஒவ்வொருநாளும் சீனர்கள் நகரத்திலிருந்த அறையொன்றிர்க்குச் செல்வதும், அங்கே எனது மார்பிரண்டும் ஒருவனால் உண்ணப்பட்டதில்லையா, அதுபோலவே எனக்கும் ஹெலேன் லாகொனெல், மார்பகங்களை உண்ண விருப்பம். சன்னமான கோதுமைமாவினாலான அவளுடைய மார்பகங்கள் உண்ணப்படவேண்டியவை.

Continue Reading →

அசோகனின் வைத்தியசாலை-20

தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை நோயல் நடேசன்ஒன்று விட்ட ஒரு வெள்ளிக்கிழமைகளில் காலோஸ், சுந்தரம்பிள்ளை இருவரும் அடுத்தடுத்த தியேட்டர்களில் ஆபிரேசன் செய்வார்கள்.  அன்று வெள்ளிக்கிழமை காலோஸ் ஒரு ஆபரேசன் தியேட்டரிலும் மற்றைய தியேட்டரில் சுந்தரம்பிள்ளை சாமுடனும் ஆபரேசன்களை செய்து கொண்டிருந்தார். வெள்ளிக்கிழமைகளில் வேலை செய்யும் நொறல் விடுப்பு எடுத்ததால் மருத்துவ ஆலோசனை அறையில் ரிமதி பாத்ததோலியஸ்ஸோடு வேலை செய்து வந்த ஜெனற், காலோஸ்சுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள். காலோஸ் அவளுடன் வழக்கம் போல் ஆபாச ஜோக்குகளை சொல்லியபடி ஆபரேசனை செய்து கொண்டிருந்தார். சாம் அடிக்கடி காலோஸ்சின்  தியேட்டருக்கு சென்று அந்த ஜோக்குகளைக் காவிக் கொண்டு சுந்தரம்பிள்ளைக்கு சொல்லிக்கொண்டிருந்தான். ஆனால் சுந்தரம்பிள்ளை அவற்றை இரசிக்கக் கூடிய மனநிலையில் இல்லை. இன்னும் இரு கிழமைதான் இந்த வைத்தியசாலையில் வேலை செய்ய முடியும். இந்த வைத்தியசாலை, மற்றும் சக வேலை செய்யபவர்கள் என்று மனத்தில் எல்லாம் பிடித்திருந்தது. பல இடங்களில் வேலை பிடித்திருந்தால், உடன்  வேலை செய்பவர்களைப் பிடிக்காது. இரண்டும் பிடித்தாலும் மேலதிகாரிகளைப் பிடிக்காது. காலோஸ் போன்ற மேலதிகாரி நண்பனாக பழகுவதால் வேலையின் அழுத்தம் தெரியாமல் இருந்தது. வேலையும் கைகளுக்கு படிந்து வருகின்ற  நேரத்தில் இப்படி நிகழ்வு ஏன்  நடந்தது? இந்தோனிசியா அருகே சில கிலோ மீட்டர் கடல் ஆழத்தில் ஏற்பட்ட சுனாமி இலங்கையின் கிழக்குக்கரையில் இருந்த கட்டிடங்களை அடித்து நொருக்குவது போல் காலோஸ் மீது தொடங்கிய பிரச்சனை தன்னில் முடிந்திருப்பது கவலையுடன் விசித்திரமாக இருந்தது. சங்கித் தொடர்ச்சியாக சம்பவங்கள் நடந்துள்ளது. இதன் விளைவாக வேலை இழக்க நேர்ந்த விதத்தை மனத்தில் அசைபோடும் போது விடைகள் அற்ற விடுகதையாக இருந்தது.

Continue Reading →