பேசா மொழி தமிழ் ஸ்டுடியோ: சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் செயலாளர் தங்கராஜுடன் கலந்துரையாடல்.

நிகழ்வுகள் , அறிவித்தல்கள்

30-12-2017, சனிக்கிழமை, மாலை 5.30 மணிக்கு. பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.

நண்பர்களே தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ பல்வேறு துறை சார்ந்த கலைஞர்களுடன் கலந்துரையாடலை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் சனிக்கிழமை சென்னை சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் ICAF அமைப்பின் பொது செயலாளர் தங்கராஜ் அவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இந்தியாவிலேயே ஒரு பிலிம் கிளப் நடத்தும் ஒரே சர்வதேச திரைப்பட விழா சென்னை திரைப்பட விழாதான். தொடர்ந்து பதினைந்து ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் இந்த திரைப்பட விழா நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு விமர்சனங்களும் இந்த அமைப்பின் வைக்கபப்டுகிறது. சென்னை சர்வதேச திரைப்பட விழா தமிழ் சினிமாவிற்கு பங்காற்றியமை, சினிமா விழாக்களின் முக்கியத்துவம், விருதுகளின் அரசியல் உள்ளிட்டவை குறித்து தங்கராஜுடன் கலந்துரையாடலும். ஒரு மாபெரும் திரைப்பட விழாவை ஒரு வாரத்திற்கு முன்னர்தான் நடத்தி முடித்திருக்கிறார்கள். திரளாக கலந்துக்கொண்டு அவர்களுக்கு நன்றி சொல்வதோடு, உங்கள் கேள்விகளையும் முன்வைக்கலாம். அவசியம் வாருங்கள்.

Continue Reading →

இயற்கை விவசாய வாரம் 08/01/2018 to 14/01/2018 : இலங்கையின் வடகிழக்கில் ஜனவரி 20188இல் நடைபெறவுள்ள கல்வி, விவசாயம் பற்றிய பட்டறைகள்!

-  முனைவர் ஆர். தாரணி -ஜனவரியில் இலங்கையின் வடகிழக்கில் கல்வி, விவசாயம் சம்பந்தமாக நடைபெறவுள்ள ஆசிரியர்கள் மற்றும் விவசாயிக்களுக்காக நடைபெறவுள்ள பயிற்சிப்பட்டறைகள் போன்றவற்றில் பங்குபற்றவுள்ள தகவலை முனைவர் தாரணி அவர்கள் அறியத்தந்திருந்தார். அவை பற்றிய அவர் அனுப்பிய விபரங்களைக் கீழே அனைவருடனும் பகிர்ந்துகொள்கின்றேன். இவர்களது திட்டம் பூரண வெற்றியடைய வாழ்த்துகள்!

இப்பட்டறைகளில் கல்வி மற்றும் விவசாயம் பற்றிய பட்டறைகளில் பங்குபற்றவுள்ளவர்கள் பற்றிய விபரங்கள் வருமாறு:

Education:
1) Prof.Dr Jayanthasri Balakrishnan
2) Prof.Dr Balakrishnan ADIYODI
3) Dr.R.Dharini, Assistant Professor of English, Government Arts College
4) Dr. E.Bennet, Associate Professor of English, National College, Trichy
5) Mrs.S.Sharon Shakkila Swarnavathy
6) K Venkatesan , Entrepreneur Development  ( 3days)

Agriculture:
7)  Murugaiah Balasubramanian (Pamayan) – Soil and Water
8).  S.Ramasamy sundararaman (S.R. Sundararaman) – Crop Management
9).  Varanavasi gounder Eswaramurthy (Ravi) (vermicompost)
10)  P. Sathurakiri (Integrated farming)
11) (Professor) Nadarajah Sriskandarajah PhD, Professor Emeritus, Swedish University of Agricultural Sciences, Uppsala, Sweden
12) (Dr) Sridevy Sriskandarajah PhD, Research Scientist

Continue Reading →

பிரதிலிபியின் அடுத்த போட்டி – ஊர் சுற்றிப் புராணம்

பிரதிலிபியின் அடுத்த போட்டி - ஊர் சுற்றிப் புராணம்பயணம் ஞானத்தை அடைவதற்கான வழிகளில் முக்கியமானது. அது நம் அறிவை விரிவாக்கவும், மனதின் ஆழத்தை அகலப்படுத்தவும், மனிதர்களின் மேல் அன்பு செலுத்தவும் தவறாமல் கற்றுக்கொடுக்கும்.

நம் வாழ்வியலில் ஏதேனும் ஒரு விதத்தில் பயணம் கலந்தே இருக்கிறது. அது நம் குடும்பத்தோடு கிளம்பி கோவிலுக்குச் செல்வதிலிருந்து, சொந்த பந்தங்களோடு சுற்றுலா செல்வது, பள்ளி – கல்லூரி சுற்றுலாக்கள், நண்பர்களோடான பயணம், நம் முன்னோர்களின் சுவடுகளை தேடிச் செல்லும் வரலாற்றுப் பயணங்கள், சுயத்தை கண்டடையச் செல்லும் தனிப்பயணங்கள், இலக்கற்றுப் கிளம்பிப் பயணிக்கும் பயணங்கள் என நீண்ட பட்டியல் கொண்டது.

உங்கள் பயண அனுபவங்களை, அதில் சந்தித்த மனிதர்கள், பார்த்த இடங்கள் என பயணமும் பயணம் சார்ந்த குறிப்புகளை – அனுபவங்களை எழுத வைப்பதே இந்தப் போட்டியின் நோக்கம்.

போட்டிக்கு கட்டுரைகள் மட்டுமே அனுப்பலாம்.

ஒருவர் அதிகபட்சம் 3 கட்டுரைகள் வரை அனுப்ப முடியும்.

மொத்தம் நான்கு படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். இரண்டு, வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்படுவது (முதல் பரிசு – 1000, இரண்டாவது பரிசு – 500). மற்ற இரண்டு எங்களது நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவது (முதல் பரிசு – 1000, இரண்டாவது பரிசு – 500)

படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி – tamil@pratilipi.com

மின்னஞ்சலின் தலைப்பு (Subject) – “ஊர் சுற்றிப் புராணம்” என்றிருக்க வேண்டும். படைப்புடன், அதற்குப் பொருத்தமான ஒரு படமும் அனுப்பிவைக்க வேண்டும்.

படைப்புகளை பிழைகள் இல்லாமல் எழுதி அனுப்பவும். அதிகப் பிழைகள் இருந்தால் படைப்புகள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

படைப்புகளுடன் உங்களது தொலைபேசி எண்ணும், உங்களது மின்னஞ்சல் முகவரியும் அனுப்பிவைக்கவும். எங்களது அனைத்துத் தகவல் பரிமாற்றங்களும் மின்னஞ்சல் மூலமே இருக்கும்.

Continue Reading →

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுடன் வெளிவரவுள்ள ‘ஓவியம் 1000’ ஓவியப் பெருநூல்.

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுடன் வெளிவரவுள்ள 'ஓவியம் 1000' ஓவியப் பெருநூல்.

உலகெலாம் வாழும் ஈழத்தமிழர்களின் ஓவியம் வரையும் ஆற்றலை ஒருமித்த தளத்தில் சேர்க்கவும், அவர்களின் ஆயிரம் ஓவியங்களை ஒரே நூலில் இடம்பெறச்செய்து உலகெலாம் பரம்பலடையச் செய்யும் நோக்குடனும்  தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் இணைந்ததாக ‘ஓவியம் 1000’ எனும் ஓவியப் பெருநூல்  வெளிவர ஏற்பாடாகியுள்ளது. ஏற்கனவே 32 நடுகளின் 1098 கவிஞர்களை உள்ளடக்கிய ‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ பெருநூலின் வெளியீட்டினைத் தொடர்ந்தே இப்பணியும் முன்னெடுக்கப்படுகின்றது.  ஈழத்தினை மையமாகக் கொண்டு செயலாற்றும் இக்குழுமத்திற்கு உறுதுணையாக அனைத்து நாடுகளிலும் பணி மேம்படுத்துநர்களும், ஓவியச் சேகரிப்பாளர்களும் இயங்குவர். ஓவியப் பெருநூலின்   வெளியீட்டு விழாவானது பணி முன்னெடுப்புக் குழுமத்தினரால்   தீர்மானிக்கப்படும் இடத்தில் ஒழுங்கு செய்யப்படும்.

‘ஓவியம் 1000’ ஓவியப் பெருநூலிற்கான ஓவியங்கள் கீழ்வரும் முறைமைகளுக்கு ஒப்ப சேகரிக்கப்படும்.

Continue Reading →

இலண்டனில் ‘இமைப்பொழுது’

இலண்டனில் 'இமைப்பொழுது'

எத்தகைய குளிர் என்பதைக் கூடச் சிந்திக்காமல் நவம்பர் 11 ஆம் திகதி சனிக்கிழமையன்று கூடிய கூட்டம்  லண்டன் ஈலிங் அம்மன் கோவில் அவையை நிறைத்திருந்தது. காரணம் திருமதி மாதவி சிவலீலன்  அவர்களின் `இமைப்பொழுது` கவிதைநூல் வெளியீடாகும். யாழ் பல்கலைக்கழக முதுமானிப் பட்டதாரியான திருமதி மாதவி சிவலீலன், தற்போது லண்டன் தமிழ் நிலைய பாடசாலையின் உப அதிபராகவும்  வெம்பிளி தொழில்நுட்பப் பாடசாலையின் போதனாசிரியாராகவும் இலக்கிய விமர்சகராகவும் லண்டன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் துணைத்தலைவராகவும் திகழ்ந்து வருகிறார். இது இவரது இரண்டாவது நூலாகும்.

மாலை 5 மணியளவில் ஆரம்பமான நிகழ்வை திருமதி இந்திராவதி சுந்தரம்பிள்ளை மற்றும்  திருமதி பாலாம்பிகை  இராசநாயகம், திருமதி கௌசல்யா சத்தியலிங்கம் ஆகியோர் மங்கல விளக்கு ஏற்றிவைக்க, லண்டன் தமிழ் நிலைய ஆசிரியை திருமதி ஜெயந்தி சுரேஷ் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட, மண்ணுக்காக தம்முயிர் ஈந்த மறவர்களிற்கும் மக்களுக்குமாக மௌன அஞ்சலியுடன் அன்றைய நிகழ்வு ஆரம்பமானது. கவிஞர் சு. திருப்பரங்குன்றன் வரவேற்புரை ஆற்றினார்.  அன்றைய நிகழ்வானது இரண்டு சிறப்பம்சங்களைக் கொண்டது. காலஞ்சென்ற அமரர் கலாநிதி காரை  செ. சுந்தரம்பிள்ளையின் நினைவேந்தலையும் அவரது இளைய மகளான திருமதி மாதவி சிவலீலனின் கவிதை வெளியீட்டையும் கொண்ட அந்நிகழ்வை, முன்னைய யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு மு நித்தியானந்தன் தலைமையேற்று முன்னின்று நடாத்திச் செல்ல இனிதே நகர்ந்தது பொழுது.

Continue Reading →

மகாஜனாவின் முத்தமிழ் விழா

மகாஜனாவின் முத்தமிழ் விழா  அண்மையில் 28-10-2017 அன்று மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா ரொறன்ரோ, 2740 லோறன்ஸ் அவென்யுவில் உள்ள கல்லூரி மண்டபத்தில் அரங்கம் நிறைந்த நிகழ்வாக மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விழா ஒருங்கமைப்பாளர் கந்தப்பு சிவதாசனின் ஆரம்ப உரையைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றி தேசிய கீதம், கல்லூரிக் கீதத்துடன் விழா சரியாக 5:31 க்கு குறித்த நேரத்தில் ஆரம்பமானது. எழில் மதிவண்ணன், கிருஷ்ணகுமார் சியாமளன், சக்திதரன் தர்சனன், தர்சனா சக்திதரன், சோபிகா ஜெயபாலன் ஆகியோர் தேசிய கீதம் இசைத்தனர்.  கல்லூரிக் கீதம் இசைப்பதில் செயற்குழு உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர்.

திரு. ரவி சுப்பிமணியம், திருமதி வனஜா ரவீந்திரன், திரு. க. மணிவண்ணன், திருமதி சுதர்சினி மணிவண்ணன், கவிஞர் சேரன், வைத்திய கலாநிதி சொ. செந்தில்மோகன், வைத்திய கலாநிதி சுபாதினி செந்தில்மோகன், திரு. பாலா முருகேஷ், திருமதி பவானி பாலசுப்பிரமணியம், திரு சிங்கராஜா ஸ்கந்தராஜா, திருமதி கமலா ஸ்கந்தராஜா ஆகியோர் மங்கல விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தனர். வரவேற்புரையை உபதலைவர் க. புவனச்சந்திரன் நிகழ்த்தினார். முன்னாள் அதிபர் அமரர் பொ. கனகசபாபதி அவர்கள் ஆரம்பித்து வைத்த நேரக்கட்டுப்பாட்டை தொடர்ந்தும் கடைப்பிடிப்பதை இவ் விழாவில் அவதானிக்க முடிந்தது.

முதல் நிகழ்ச்சியாக இசைக்கலாபாரதி ஹரணி ஸ்கந்தராஜா வழங்கிய ‘விரலிசை ஜாலம்’ என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பரதக்கலாவித்தகர் சியாமா தயாளனின் மாணவிகள் வழங்கிய ‘ஓம் சிவோகம்’ என்ற நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. ஆடலரசி செந்தில்செல்வி சுரேஸ்வரனின் ‘நர்த்தன சங்கமம்’ நடன நிகழ்வைத் தொடர்ந்து மகாஜனன் நாகமுத்து சாந்திநாதன் நெறியாள்கையில் ‘எழுதாத பக்கங்கள்’ என்ற நாடகம் இடம் பெற்றது. தொடர்ந்து கணிதம், பொதுஅறிவு போட்டிகளில் பங்கு பற்றிப் பரிசு பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து முத்தமிழ் விழாவிற்கும், மகாஜனன் மலருக்கும் ஆதரவு வழங்கியோர் கௌரவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து சங்கத் தலைவர் சிங்கராஜா ஸ்கந்தராஜா அவர்களின் உரையும், பிரதம் விருந்தினர் ரவி சுப்பிரமணியன், சிறப்பு விருந்தினர் கவிஞர் சேரன் ஆகியோரின் உரைகளும் இடம் பெற்றன.

Continue Reading →

இயக்குனர் வஸந்த் எஸ். சாய் அவர்களுடன் கலந்துரையாடல்

03-12-2017, ஞாயிறு, மாலை 5.30 மணிக்கு.,  பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில்,…

Continue Reading →