காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு கால இழுத்தடிப்புகள் இன்றி ‘நீதி மற்றும் இழப்பீடுகள்’ வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, மூதூர் பிரதேச செயலகம் முன்பாக நாளை (11.04.2016) காலை 10.00 மணிக்கு கவனவீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.
மூதூர் பிரதேச பிரஜைகள் குழுவின் தலைவரும், மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கத்தலைவருமாகிய சிவஸ்ரீ இ.பாஸ்கரன் குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ள குறித்த கவனவீர்ப்புப் போராட்டத்தில், திருகோணமலை மாவட்டத்திலுள்ள ‘ஆட்கடத்தல் மற்றும் தடுத்துவைத்தல்’ சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் அவர்களது உறவினர்களும், சிவில் சமுக மனித உரிமை செயல்பாட்டாளர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கங்களின் (Forum for Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives – (FSHKFDR – Tamil Homeland) தலைவி திருமதி ஜெ.நாகேந்திரன் (ஆஷா) தெரிவித்தார்.