இலங்கையில் தமிழ் இலக்கியம் கடந்தகாலப் போரினால் ஏற்பட்ட தடைகளையும் மீறி தற்பொழுது துளிர்த்து வருகிறது. பலர் தனிப்பட்ட ரீதியிலும் குழுவாகவும் வெவ்வேறு பிரதேசத்தில் இயங்குகிறார்கள் என்பது, பல இலங்கை நண்பர்களோடு பேசியபோது எனக்குப் புரிந்தது. இந்த இலக்கியச் செடியை உரமீட்டு மேலும் வளம்பெற செய்யவேண்டும் என்ற எனது விருப்பத்தால் பலருடன் கலந்துரையாடியபோது, தொடர்ச்சியான நடவடிக்கைகளால் மட்டுமே அதை ஏற்படுத்தமுடியும் என்பதும் மேலும் இந்த நடவடிக்கைகளுக்கு நிதிவளமும் தேவை என்பதும் புரிந்தது. ஆங்காங்கு நடத்தப்படும் மாநாடுகளையும் இலக்கிய சந்திப்புகளையும் விட்டு விட்டு வெளிச்சத்தை ஏற்படுத்தினாலும் தொடர்ச்சியான செயற்பாடுகளே உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது எனது கணிப்பு. இது போன்ற விடயங்களை அங்கே தனிநபர்களோ அல்லது தற்போதைய அரசாங்கமோ செய்யும் நிலையில்லை. மொழியில் ஏற்படும் முன்னேற்றம் எழுத்தாளர்கள் அல்லது இலக்கியத்தோடு நின்று விடாது. தமிழ் எமது நாட்டில் புவியியல் மதம் என பிரிந்திருக்கும் தமிழர்களை இணைக்கும் பாலமாகும். அதை வலுப்படுத்துவது எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்யவேண்டிய கடமையாகும். இந்த நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களது வளத்தில் சிறிய பகுதியை ஒருங்கிணைத்தால் அதனால் ஏற்படும் மாற்றம் மிகவும் பெரிதாக இருக்கும் என்ற கணிப்பில் சமீபத்தில் கனடாவில் எழுத்தாளர்கள் இலக்கிய ஆர்வலர்கள் சிலருடன் பேசியபோது அவர்களும் இக்கருத்தை வரவேற்றார்கள்.
சி. வைத்தியலிங்கம் அவர்களின் புதல்வியான திருமதி யமுனா சுமங்கலி தர்மேந்திரன் லண்டன் பிரெண்ட் மாநகராட்சி மன்றத்தின் நூலகங்களில் கடந்த முப்பத்தாறு வருடங்களாக பணியாற்றி வருகின்றார். லண்டனில் தமிழ்…
அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் ஓராண்டு நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக சிறுகதைப் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.
போட்டிகள் பற்றிய பொது விதிகள்
1. உலகெங்கும் வாழும் தமிழ் பேசும், எழுதும் எவரும் இப்போட்டியில் பங்கு பற்றலாம்.
2. ஒருவர் ஆகக்கூடியது மூன்று சிறுகதைகளை அனுப்பலாம். அவை போட்டியாளரின் சொந்தப் படைப்புக்களாக இருத்தல் வேண்டும்.
3. சிறுகதைகள் தமிழ் ஒருங்குகுறி(Unicode) அல்லது பாமினி எழுத்துருவில் – மின்னஞ்சல் இணைப்பாக (Microsoft Word) அல்லது பீடிஎவ் (pdf) வடிவத்தில் அனுப்பப்படல் வேண்டும். மின்னஞ்சலின் subject இல் ’எஸ்.பொ நினைவுச் சிறுகதைப் போட்டி- 2015’ எனக் குறிப்பிட்டு, அஞ்சலின் உட்பகுதியில் சிறுகதையின் தலைப்பு, போட்டியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் தரப்படல் வேண்டும்.
4. அனுப்பப்படும் சிறுகதை ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டதாகவோ, பிரசுரிக்கப்பட்டதாகவோ அல்லது வெளியிடப்பட்டதாகவோ இருத்தல் கூடாது.
5. இப்போட்டியில் பங்கேற்க வயதெல்லைகள் இல்லை.
6. போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகளை இணையத்தளங்களில் பிரசுரிக்கவும், நூலாக வெளியிடவும், வானொலியில் ஒலிபரப்பவும் அல்லது காட்சிக்கிடவும் அக்கினிக்குஞ்சு நிர்வாகத்தினருக்கு உரித்துண்டு.
7. அக்கினிக்குஞ்சு நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
8. சிறுகதைகள் 3000 சொற்களுக்கு மேற்படாமலும் 750 சொற்களுக்கு உட்படாமலும் அமைதல் வேண்டும்.
ப்போட்டிகளுக்கான பரிசு விபரங்கள் பின்வருமாறு:\
முதலாம் பரிசு – 300 அவுஸ்திரேலிய வெள்ளிகள்
இரண்டாம் பரிசு- 200 அவுஸ்திரேலிய வெள்ளிகள்
மூன்றாம் பரிசு – 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள்
முடிவுத்திகதி: 30.11.2015. இத்திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக ஆக்கங்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
போட்டி முடிவுகள் 2016 தை மாதம் முதல் வாரம் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
காலம்: 10.10.2015 சனிக்கிழமை காலை 1030 மணி தொடக்கம் மாலை 6.30 மணி வரை. | இடம்: Trinity Centre , East Avenue, east Ham,…
‘குவியம்’ இணையத்தள ஆசிரியரும், எழுத்தாளருமான பொன் குலேந்திரன் அவர்களின் ‘முகங்கள்’ சிறுகதைத்தொகுப்பு தமிழகத்தில், அக்டோபர் 7ந்திகதி , ‘ஓவியா பதிப்பக’ வெளியீடாக வெளிவரவுள்ளது. கனடாவில் ‘பீல் தமிழ்…
கீழ்வரும் திருக்கோவிலூர் சுற்றியுள்ள பகுதிகள் 1. திருவெண்ணைநல்லூர்2. கிராமம்3. திருக்கோவிலூர்4. ஜம்பை – விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்தில் ஜம்பை உள்ளது. இக்கல்வெட்டு உள்ள இடத்திற்குத் தாசிமடம்…
இடம்: Don Montgomery Community Recreation Centre, 2467 Eglinton Ave. E,Scarborough, ON M1K 2R1காலம்: செப்டம்பர் 23, பி.ப 4மணி ஏற்பாடு: தேடகம் (தமிழர்…
அரிமா விருதுகள் 2015 : ரூ 25,000 பரிசு குறும்பட விருது கடந்த 3 ஆண்டுகளில் வெளியான குறும்பட ஆவணப்பட, குறுந்தகடுகளை அனுப்பலாம். சக்தி விருது கடந்த…
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன் எழுத்தாளர் குரு அரவிந்தனின் 25 வருடகால கனடிய இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாக நூல் வெளியீட்டுடன் கூடிய பாராட்டு விழா…