நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய மாத இதழான கூடுவின் மூன்றாவது இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இதழில் கவிஞர், இயக்குனர் லீனா மனிகேமலையின் சிறுகதை, தறியுடன் நாவல்…
‘முதியவர்கள் பலம் குன்றியவர்களாகக் கருதப்படுகின்ற இன்றைய கால கட்டத்தில், லண்டனில் ‘முதியோர் கலைமாலை’ என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்து முதியவர்களை ஒன்றுசேர்த்து, ஊக்கப்படுத்தி கலை நிகழ்ச்சிகளில் அவர்களைப் பங்குபற்றச் செய்த பெருமை சர்வலோகேஸ்வரி அவர்களையே சாரும். நாட்டியத்துறையில் ஆளுமைகொண்ட சர்வலோகேஸ்வரியின் 70ஆவது வயது நீண்டதாக இருக்கலாம். ஆனால், அவரது சமூகசேவைகளும் மிக நீண்டதாக அமைந்துள்ளது. தமிழ் சமுதாயத்திற்கு மட்டுமன்றி பிற சமுதாயத்தினரையும் மனிதப் பண்போடு நேசித்து, தன்னால் முடிந்த உதவிகளை எல்லோருக்கும் செய்து வருவது பாராட்டுக்குரியது. ஆங்கில மொழியைக் கையாள்வதில் அவதியுறும் தமிழ் மக்களுக்கு மொழிபெயாப்பாளராக வைத்தியசாலை, பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று பணிபுரிந்தமையை பாராட்டியதோடு, இவரின் பல்வேறு சேவையைப் பாராட்டி, 2014 ஆம் ஆண்டு கிங்ஸ்ரன் மேயயரால் இவருக்கு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டமையையும் பெருமையுடன் நினைவிருத்த வேண்டும்’ என்று கடந்த சனிக்கிழமை 6ம் திகதி சட்டன் ‘தோமஸ் வோல் சென்ரரில்’ இடம்பெற்ற சர்வலோகேஸ்வரியின் 70ஆவது பிறந்ததின விழாவின்போது திருமதி. மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் தனது வாழ்த்துரையில் தெரிவித்தார்.
‘சட்டன் மூத்தோர் வலுவூட்டல் திட்ட அமைப்பில்’ செயற்படும்போது எந்தவொரு விடயத்தையும் முன்னின்று செயற்படுவதில் காட்டும் ஊக்கமும், துடிப்பான செயற்பாடும், திறம்பட நடத்தக்கூடிய வல்லமையும் சர்வலோகேஸ்வரிக்;;கென்ற ஒரு சிறப்பான அம்சமாகும். சட்டன் தமிழ் நலன்புரிச் சங்கத்தோடு ஆரம்பித்த முதியோருக்கான அவரது சமூக சேவைகள் சட்டன், மேட்டன், நோபிற்றன், கிங்ஸ்ரன், ஈஸ்ற்ஹாம் எனப் பல்வேறு பகுதிகளிலும் விரிந்து கிடப்பது அவரது சமூகசேவைக்குச் சான்றாகும். இன்னும் அவரது சேவைகள் தொடர வேண்டும்!’ என டாக்டர் பகீரதன் அமிர்தலிங்கம் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.
தமிழகத்திலிருந்து ‘ரொறன்ரோ’வுக்கு வருகை தந்திருக்கும் பிரபல ‘எழுத்தாளர்ர் ஜெயமோகன் அவர்களுடனான ஒரு கலந்துரையாடல் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தால் எதிர்வரும் 16-6- 2015 செவ்வாய்க் கிழமையன்று ‘டொன்…
இன்றைய தமிழ் இலக்கியப் போக்குகள் காலம்: 17-06-2015 (புதன் கிழமை) |நேரம்: மாலை 7:00 தொடக்கம் 9:30 வரை இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம் |3A, 5637,…
மதிப்பிற்குரியீர், வணக்கம். யாங்கள் ஆய்வாளர் நலன் கருதி இனம் எனும் இணைய ஆய்விதழைத் தொடங்கியுள்ளோம். தங்களுடைய ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இவ்வாய்விதழை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம். நன்றி! ஆய்விதழை…
‘கூலித்தமிழ்’ என்ற நூல் வெறுமனே மலையகத்தவரின் அவல வரலாற்றைச் சொல்லுகின்ற நூல் அன்று. அது, கற்க வழியற்றுக் கிடந்த தோட்டத் தமிழரின் போர்க்குணத்தையும், இலக்கியப்படைப்புக்களையும் புலப்படுத்துகின்ற நூல். தோட்டத் தொழிலாளர்கள் அவலம் பற்றி ஈழத் தமிழர்களும் கேட்டும் கேளாதவர்கள் போலவே இருந்துவிட்டார்கள். அவர்களும் இணைந்து குரல்கொடுத்துச் சகோதரத்தமிழரின் அவலத்தைத் தணித்திருக்கலாம். அன்றைய ஈழத்தமிழரின் செயலுக்காக நான் வெட்கப்பட்டு, வேதனைப்படுகிறேன். ஈழத்தமிழர் அசட்டையாக இருந்தார்கள் என்றால், தமிழ்நாட்டுத் தமிழரும் அப்படித்தான் இருந்திருக்கின்றார்கள். தமிழகத்திலிருந்து புதுவாழ்வு தேடிவந்த சகோதரா;கள் இலங்கை மலைநாட்டில் அடிமைகளாக வாழ்ந்ததை அவர்கள் அறியாமல் இருந்தார்கள் என்று சொல்லமுடியாது. ஆனால், அவர்களும் மவுனிகளாகவே இருந்துவிட்டார்கள். அவர்களையும் மன்னிக்க முடியவில்லை. மலையகத் தமிழரின் பிறந்தகமும் அவர்களைப் புறக்கணித்தது; புகுந்தகமும் அவர்களைப் புறக்கணித்தது என்பது சோகமான உண்மை” என்று தமிழறிஞரும், வழக்கறிஞருமான செ. சிறிக்கந்தராஜா லண்டன் ‘சொறாஸ்ட்ரியன்’ மண்டபத்தில், சென்ற ஏப்ரல் 25ஆம் திகதி மு.நித்தியானந்தனின் நூல்வெளியீட்டில் சிறப்புரை ஆற்றும்போது தெரிவித்திருந்தார்.
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாசார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பினர் ஒவ்வொரு மாதமும் பிரபல பெண் எழுத்தாளர்களை ,கவிஞர்களை ,பன்முக ஆற்றல் கொண்டவர்களை இனம் கண்டு மாதாமாதம் ( கலாசூரி விருது ) கொடுத்து கௌரவித்து வருகின்றார்கள். அதன்மூன்றாவது கலாசூரி விருதினை பிரபல பெண்கவிஞர் பன்முக ஆற்றல் கொண்டவருமான சல்மா மாலிக் அவர்கள் பெறுகின்றார். திருச்சி மாவட்டதில் உள்ள துவரங்குறிஞ்சி என்னும் சிறிய கிராமத்தில் பெண்களை வெளியே அனுமதிக்கப்படாத ஒரு முஸ்லிம் சமூகத்தில் பிறந்தார் இவர். ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது படிப்பைப் பாதியில் நிறுத்த விட்டார்கள். அன்று தான் முதன்முதலாக தனிமைப்படுத்தப்பட்டார். அதனால்அவர் முதல் கவிதை அங்கு இருந்து தான் பிறந்தது.
நவீன தமிழ்க் கவிதை உலகத்தின் முன்னணிப் பெண் படைப்பாளி. நான்குசுவர்களுக்குள் அடைப்பட்டவாழ்க்கையும்,அதனுள்ளிருந்து கசிந்துருகும் தனிமையும்தான் இவரது கவிதைகள். தற்போது சமூக நலத்துறை வாரியத்தின் தலைவியாகப் பணியாற்றிவருகிறார். ஒரு மாலையும் இன்னொரு மாலையும் (கவிதைகள் – 2000), இரண்டாம் ஜாமங்களின் கதை (நாவல் – 2004) வெளிவந்துள்ளன. விமர்சனக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இரண்டாம் ஜாமங்களின் கதை ஆங்கிலம், மலையாளம், ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. ஆசியன் புக்கர் விருதுக்கான தெரிவுப் பட்டியலில் கவிஞர் சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை நாவல் இடம்பெற்றிருந்தது.
நாள்: 30.05.2015 | நேரம்: மாலை 3.00 முதல் 7.00 வரை இடம்: ‘ரொறன்ரோ’ தமிழ்ச்சங்க மண்டபம், 3A , 5637 Fince Avenue East, Scarborough…
இடம்: லூசியம் சிவன் கோயில் 4A, Clarendon Rise, Lewisham – SE13 5ES | காலம்: 31.05.2015 மாலை 4.00 மணி தோழமையுடன், என்னுடைய ‘தவிச்சமுயல்’…
பிருந்தன் விளையாட்டுக் கழகமும் பீனிக்ஸ் 11 கழகமும் 15 ஓவர்கள் கொண்ட மூன்று போட்டிகளில் விளையாட உள்ளன. இடம் ; பிருந்தன் பூங்கா காலம் ; ஏழாம்…