குமரி எஸ். நீலகண்டனின் ஆகஸ்ட் 15 நாவலுக்குக் கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவை விருது!

நாகர்கோவில் கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவை சார்பில் வழங்கப்படும் இந்த ஆண்டிற்கான சி.பா.ஆதித்தனார் இலக்கிய விருது குமரி எஸ். நீலகண்டன் எழுதிய ஆகஸ்ட் 15 என்ற…

Continue Reading →

நான்கு நூல்கள், மூன்று கூட்டங்கள், இரு நாடுகள்

நான்கு நூல்கள், மூன்று கூட்டங்கள், இரு நாடுகள்  நண்பர்களுடன் அல்லது தோழர்களுடன் சேர்ந்து இலண்டனிலிருந்து  பாரிஸ் செல்வதற்கான மதுரமான வழி பேருந்துப் பயணம்தான். சென்று திரும்பும் பயணநேரம் 17 மணிநேரங்கள் என்றாலும், வழியில் யூரோ டன்னல் அல்லது பெஃரி என மூன்று மணி நேரங்கள் போய்விடும். இங்கிலாந்து மற்றும் பிரெஞ்சு எல்லைகளுக்குள் எனப் போகவர பேருந்து நிற்கும் நான்கு அரை மணிநேரங்கள் சேர்த்தால் மொத்தமாகப் பேருந்திற்கு வெளியில் ஐந்து மணி நேரங்கள் கழிந்து விடும்.  சென்று சேர 6 மணிநேரமும் வந்து சேர 6 மணிநேரமும் என 12 மணிநேரங்களை நீங்கள் நண்பர்களுடன் அந்தரங்கமாகவும் விச்ராந்தியாகவும் பேசியபடி பேருந்தில் இருந்தபடி பயணம் செய்யலாம். தோழர்.பி.ஏ.காதர் அவர்களுடன் பாரிஸ் சென்றுவர இப்படியானதொரு சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. தோழர். காதர் என்னுடைய ஈழம் : எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம், அரபுப் புரட்சி : மக்கள் திரள் அரசியல் மற்றும் எஸ்.என்.நாகராசனின் நேர்காணல் தொகுப்பான ஆயுதப் போராட்டத்தால் இனி உலகைக் காப்பாற்ற முடியாது என மூன்று நூல்களின் இரு வெளியிட்டு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார். இலண்டன் கூட்டம் விம்பம் கலை இலக்கிய திரைப்பட அமைப்பின் அனுசரணையில் சூலை மாதம் 6 ஆம் திகதி சனிக்கிழமையும், பாரிஸ் கூட்டம் அசை கோட்பாட்டிதழ் மற்றும் சர்வதேச சமூகப் பாதுகாப்பு மையம் என இரண்டு அமைப்புகளின் அனுசரணையில் சூலை மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையும் நடைபெற்றது. விம்பம் அமைப்பின் பின் ஓவியர் கிருஷ்ணராஜாவும், பாரிஸ் கூட்டத்தின் பின்  அசை தொகுப்பாளர் அசோக் யோகனும் தோழர். வரதனும் இருந்தார்கள்.

Continue Reading →

இலண்டன் மாநகரில் இலக்கிய மாலை வி. ரி. இளங்கோவனின் 6 நூல்கள் அறிமுக நிகழ்வு!

இலண்டன் மாநகரில், இலக்கிய மாலை நான்காவது நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 10-ம் திகதி (10 – 08 – 2013) சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது.…

Continue Reading →

திராவிடர் பண்பாட்டு மலருக்கு கட்டுரைகளை அனுப்புங்கள்!

திராவிடர் உணவுமுறை, திராவிடர்  உடைமுறை, திராவிடர் குடியிருப்பு, திராவிடர் தொடக்கக்கல்வி, திராவிடர் உயர்கல்வி, திராவிடர் தொழில்கள், திராவிடர் விவசாயமுறை, திராவிடர் மருத்துவம், திராவிடர் திருமணமுறை, திராவிடர் இல்ல…

Continue Reading →

நோபல் பரிசு பெற்ற காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் எழுதிய * “தனிமையின் நூறு ஆண்டுகள்

நூல் அறிமுகம் : நோபல் பரிசு பெற்ற காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் எழுதிய * “தனிமையின் நூறு ஆண்டுகள்“

நூல் அறிமுகம் : நோபல் பரிசு பெற்ற காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் எழுதிய * “தனிமையின் நூறு ஆண்டுகள்“

Continue Reading →

கனடா: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பும் இரவு உணவும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா)Thamil National Alliance (Canada)56 Littles Road, Scarborough ON M1B  5C5Phone: 416-281-1165, Email: tnacanada@gmail.com தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான  சந்திப்பும்…

Continue Reading →

நமது மலையகம். கொம் அறிமுக நிகழ்வு

நமது மலையகம். கொம் அறிமுக நிகழ்வுஎதிர்வரும் 28 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு தமிழ் சங்கத்தில் (வினோதன் மண்டபம்) நமது மலையகம். கொம இணையதள அறிமுக நிகழ்வு நடைப்பெறவுள்ளது. திரு. தெளிவத்தை ஜோசப் தலைமையில் நடைப்பெறும் இந்நிகழ்வில் தொடக்கவுரையை லெனின் மதிவானம் ஆற்றுவார். தொடர்ந்து ‘‘மலையகம் தகவல் தள இணைய வலைப்பின்னலுக்குள் உள்வாங்குவதன் அவசியம்‘ என்ற தலைப்பில் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்களும், ‘ மலையகத்தின் அரசியல் இருப்பில் இணையத்தளம்’’ என்ற தலைப்பில் சரிநிகர் என். சரவணன் அவர்களும் உரையாற்றுவார்கள். நன்றியுரையை எம். ஜெயகுமார் வழங்க தொகுப்புரையை மல்லியப்பு சந்தி திலகர் நிகழ்த்துவார்.

Continue Reading →

இலண்டன் 30ம் ஆண்டு கருப்பு ஜூலை நினைவுதினத்தில் நிலஅபகரிப்பு எதிர்ப்பு போராட்டம் ஆரம்பம்

லண்டன் 30ம்  ஆண்டு கருப்பு ஜூலை நினைவுதினத்தில் நிலஅபகரிப்பு எதிர்ப்பு போராட்டம் ஆரம்பம்லண்டன் 30ம்  ஆண்டு கருப்பு ஜூலை நினைவுதினத்தில் நிலஅபகரிப்பு எதிர்ப்பு போராட்டம் ஆரம்பம்1983ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி இலங்கையின் சிங்கள பேரினவாத அரசினால்  தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியத் தமிழர் பேரவையினால்  ஏற்பாடு செய்யப்பட்ட  நினைவேந்தல் மற்றும் ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் ஜூலை மாதம் 23ம் திகதி  செவ்வாய்க்கிழமை  பிற்பகல் 4 மணியளவில் பிரித்தானிய பிரதம மந்திரியின் உத்தியோகபூர்வ வதிவிடமான 10 Downing  Street முன்பாக ஆரம்பமாகி  இரவு 7 மணி வரை மிக எழுச்சியோடு நடை பெற்றது. இலங்கையில்  நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டை  பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மற்றும் இளவரசர் சாள்ஸ் ஆகியோர் புறக்கணிக்க வேண்டுமென்றும், தமிழர் தாயக பகுதிகளில் நடைபெறும் திட்டமிட்ட இனவழிப்பு, இராணுவமயப்படுத்தல், பௌத்தமயப்படுத்தல்  மற்றும் காணி அபகரிப்பு  போன்றவற்றை நிறுத்த அழுத்தம் கொடுக்கக் கோரியுமான பதாதைகளை ஏந்திய வண்ணம் இவ் ஆர்பாட்டத்தில் பல நூற்றுக் கணக்கான பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் பங்கேற்றனர்.

Continue Reading →