சங்கத்தலைவர் திரு.வே.ம.அருச்சுணன் தலைமையில் எதிர்வரும், 24.2.2013 ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 வரையில் ஷா ஆலாம்,செக்ஷன்7, மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மைதானத்திலும்,…
வந்தவாசி, .பிப்.04. – தமிழக முதல்வரின் 65-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிலம்பாட்டக் கழகத்தின் சார்பாக திருநெல்வேலியில் பிப்ரவரி 2,3 ஆகிய இரு நாட்கள் மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி மு.வெ.அன்புபாரதி சப்-ஜூனியர் பிரிவில் மாநில அளவில் மூன்றாம் பரிசினை பெற்றிருக்கிறார். இவர் அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த யுரேகா கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.முருகேஷ், வந்தவாசி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் அ.வெண்ணிலா ஆகியோரின் இளைய மகளாவார்.செய்யாறு விவேகா இண்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் இவர், சென்ற வருடம் நாமக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டவர். பள்ளி அளவிலும், மண்டல அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் பலமுறை பரிசுகளைப் பெற்றுள்ளார். நேற்று நெல்லையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், நெல்லை மாநகராட்சி மேயர் விஜிலா சத்யானந்த் பாராட்டுச் சான்றிதழையும், நினைவுப் பரிசினையும் அன்புபாரதியிடம் வழங்கினார்.விழாவில், அகில இந்திய சிலம்பாட்டக் கழகத் தலைவர் டாக்டர் மு.ராஜேந்திரன், மாநிலச் சிலம்பாட்டக் கழகப் பொதுச் செயலாளர் ஆற்காடு கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்புடையீர் வணக்கம், மலேசியாவின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கடார மண்ணில் மலேசியத் தமிழிலக்கியத்தில் பெண்ணிலக்கியவாதிகள் எனும் நூல் மலேசிய இலக்கிய வெளியில் முதன் முதலாக அரங்கேற்றம் காண்கின்றது.…
ராஜீவ் படுகொலை- தூக்குக் கயிற்றில் நிஜம் என்னும் தலைப்பில் திருச்சி வேலுசாமி எழுதியுள்ள நூல் எதிர்வரும் பெப்ருவரி 16, 2013 அன்று மாலை 2.30 மணிக்கு ‘ஸ்காப்ரபரோ சிவிக் சென்டர்’இல் நடைபெறவுள்ளது. தமிழ்ப் படைப்பாளிகள் கழக ஆதரவில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு பற்றிய மேலதிக விபரங்கள் கீழே:
இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள் பற்றிய தகவல்களை ஒருங்கிணைத்து முனைவர் துரை.மணிகண்டன் இந்நூலை தொகுத்திருக்கிறார். தரவுத்தளங்களைப் பலரும் புரியும் வண்ணம், தரவுத்தளங்கள் என்றால் என்ன எனப் பட்டியலிட்டு இந்நூல் ஆக்கி வெளியிடுவதற்கு எனது பாரட்டுக்கள். தமிழில் தரவுத்தளங்கள் பற்றிய விளக்கங்கள் தந்திருப்பின் இடைக்கிடை தலைப்புகளுக்கு ஆங்கில தலைப்பும் கொடுத்திருப்பது விளங்கிக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கிறது. தமிழ் மொழி மிகத் தொன்மை வாய்ந்தது என்பது மிகத் தெளிவாக ஆதாரங்களுடன் இந்நூலில் கொடுத்துள்ளார். மேலும் அதற்கான இணைய தளங்களையும் அவ்வப்போது வரிசைப்படுத்தி வெளியிட்டிருப்பது பாராட்டுதற்குரியது. தமிழ்மொழி பிறமொழித் தாக்கமின்றி ஆரம்ப காலத்தில் இருந்தே இருந்ததையும், பிறமொழிக் கலப்பின்றி புதுச் சொல்லை உருவாக்க முடியும் என்பதையும் தெளிவாக நூலாசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார்.
நாள்: 8, 9, 10, 11, 12 பிப்ரவரி – 2013
இடம்: மணியம்மை அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி.
நேரம்: காலை 10 மணி முதல்.
9 பெப்ருவரி 2013: ‘காலம்’ சஞ்சிகை (கனடா) 40வது இதழ் அறிமுகமும், கலந்துரையாடலும்!
இடம்: Trinity Centre, East Avenue, Eastham, London
2010/2011ஆம் ஆண்டுகளுக்கான சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் ”கரிகாலன் விருது” சிங்கை எழுத்தாளர்கள் திருமதி கமலோதேவி அரவிந்தனுக்கும், திரு. மா. இளங்கண்ணனுக்கும் கிடைத்துள்ளது. சிங்கப்பூரின் முஸ்தபா…
எமது இனத்தையும், எமது பாரம்பரிய பிரதேசத்தையும் அழிக்கின்ற சிறீலங்கா அரசினால் நிறைவேற்றப்பட்டுவரும் நிகழ்ச்சி நிரலை தடுத்து நிறுத்தும் முகமாகவும், தமிழ் மக்களுடைய அபிலாசையை அடிப்படையாகக் கொண்ட அரசியல்த் தீர்வினை ஒருங்கிணைந்து அடையும் நோக்குடனும் ஆக்கபூர்வமான தொடர்ச்சியாக நடைபெறுகின்ற கலந்துரையாடல் ஜேர்மனியின் தலைநகரமான பேர்லின் மாநகரில் கடந்த 26, 27 திகதிகளில் நடைபெற்றது. தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இக் கலந்துரையாடல் நவம்பர் 2012 இல் ஆரம்பமானது. இக் கலந்துரையாடல்களில், தாயகத்திலிருக்கும் அரசியல் அமைப்புக்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புää தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் மக்கள் அமைப்பான தமிழ் சிவில் சமூகம், மற்றும் புலம்பெயர் வாழ் தமிழர்களது அமைப்புக்களான அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலகத் தமிழர் பேரவை ஆகிய அமைப்புக்கள் கலந்து கொண்டிருந்தன.
”மூன்றாம் மரபு” இலக்கிய மாநாடு 13: பாரதி இலக்கிய சங்கமும் காளீஸ்வரி கல்லூரியும் இணைந்து நடத்தும் ”மூன்றாம் மரபு” இலக்கிய மாநாடு 13; இடம் காளீஸ்வரி கல்லூரி, சிவகாசி; நாள்: பிரவரி 4, 5 திங்கள் செவ்வாய்; 2 நாட்கள், 4 அரங்குகள், 20 அமர்வுகள் 40 படைப்பாளிகள், 50 ஆய்வுக் கட்டுரைகள்’ தமிழ் மட்டுமல்லாது தென்னிந்தியக் கவிஞர்கள். மூன்றாம் மரபு- படைப்பு வெளி; மூன்றாம் மரபு- ஊடகத் தடங்கள்; மூன்றாம் மரபு- விவாதக் களம்; மூன்றாம் மரபு- கவிதைச் சிந்தனைகள்; கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிறுகதை ஆசிரியர்கள், பேராசிரியர்கள், நாவலாசிரியர்கள், விமரிசகர்கள் நாடக இயக்குநர்கள், ஓவியர்கள், ஆய்வாளர்கள்,வாசக அன்பர்கள்; நேற்றைய தடங்கள், இன்றைய கேள்விகள், நாளைய எதிர்பார்ப்புகள், வரை படங்கள் அழித்த இலக்கியங்கள், பெண்ணின் பெருவெளிகள், நூல் அறிமுகங்கள், கலந்துரையாடல்கள், கலைகளின் வாசிப்பில் வாழ்வு, தெலுங்கு மலையாளம், கன்னடக் கவிதைகளின் போக்கும் கவிஞர்களின் தடங்களும், கேள்வியும் விவாதமுமாக மாணவர்கள்…..இன்னும் இன்னமுமாக…