கம்பன் கழக மகளிர் அணி (பிரான்சு) நடத்தும் திருக்குறள் அரங்கம் -22 எதிர்வரும் 20.10.2012 அன்று பிரான்சில் நடைபெறவுள்ளது. மேலதிக விபரங்கள் கீழே:
காலம் – 20th October 2012 , 3.00 P.Mஇடம் – Walthamstow Quaker Meeting House, 1a Jewel Road, London E17 4QUதலைமை –…
திரையிடப்படும் படம்: நாலு பெண்ணுகள் (அடூர் கோபாலகிருஷ்ணன்), மலையாளம்
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7
நாள்: 20-10-2012, சனிக்கிழமை
நேரம்: மாலை ஐந்து மணிக்கு (5 PM)
சிறப்பு அழைப்பாளர்: எம். சிவக்குமார்
யாவர்க்கும் எனது இனிய வணக்கம். இந்த மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை 4 30 மணியளவில் எனது இரு நூல்களின் அறிமுகம் 92, High Raod,…
அன்பார்ந்த பாரதி அன்பர்களுக்கு, வணக்கம். நமது பாரதி இணையதளத்தில் ‘பாரதியைப் பயில…’http://www.mahakavibharathiyar.info/bharathi_ithazh9.htm வழக்கம்போல நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இத்தகவலை பகிர்ந்துகொள்ளவும். நன்றி.அன்புடன்,வீ.சு.இராமலிங்கம்தஞ்சாவூர்
‘ஆனைக்கோட்டைக்கு புகழ்பூத்த ஒரு இசைமரபும், இசைக்கலைஞர்களும் உள்ளனர். அந்த இசை மரபில் முற்போக்கு எழுத்தாளரும், மிருதங்கக் கலைஞருமான எஸ்.அகஸ்தியருக்கு தனித்த இடம் ஒன்று உண்டு. அந்த இலக்கியப் பெருமகனின் பேரனார் அகஸ்ரி ஜோகரட்னம் ஆனைக்கோட்டை இசைமரபின் இளம் வாரிசாக லண்டனில் மிருதங்க அரங்கேற்றம் நடத்தியிருப்பது குறித்து நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்’ என்று லண்டனில் நடைபெற்ற அகஸ்ரி ஜோகரட்னத்தின் மிருதங்க அரங்கேற்ற நிகழ்வில் பிரதம விருந்தினர் உரையில் பிரபல மிருதங்க வாத்திய விசாரத் பிரம்மஸ்ரீ ஏ.என். சோமஸ்கந்த சர்மா அவர்கள் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் ‘அண்மைக் காலத்தில் நான் கலந்துகொண்ட மிருதங்க இசை நிகழ்ச்சிகளில் அகஸ்ரி ஜோகரட்னம் போல இத்துணை இளவயதில் அபூர்வமான இசை ஞானத்தைக் காட்டிய ஒரு இளவலை நான் கண்டது கிடையாது. அவருக்கு இந்த இசைஞானம் இறைவன் அளித்த கொடையாகும். தாளம் தவறாமல், சுருதி பிசகாமல் சங்கீத வித்துவான் மணிபல்லவம் கே. சாரங்கனின் வாய்ப்பாட்டிற்கு ஈடுகொடுத்து அவர் வாசித்த மிருதங்கம் பரவசமூட்டுவதாகும். இந்த அபூர்வமான மிருதங்க ஞானத்தை வெளிப்படுத்திய இந்த நிகழ்வு உண்மையில் பூரணமான இசைக்கச்சேரி போல அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். செல்வன் அகஸ்ரி தனக்கு வாய்த்திருக்கும் இந்த இசைத் திறமையை தொடர்ந்தும் பேணி இத்துறையில் கீர்த்தி பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன்’ என்றும் குறிப்பிட்டார்.
அன்பார்ந்த அண்ணா பற்றாளர்களுக்கு, வணக்கம்! அண்ணா பிறந்தநாளான 15.09.2012 அன்று முதல் அண்ணாவின் படைப்புகள் அனைத்தையும் அண்ணா பற்றாளர்களும் உலகத்தில் உள்ள தமிழ் மக்கள் யாவரும் இலவசமாக…
இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்து இலண்டனை வதிவிடமாக்கிக் கொண்ட டாக்டர் சிவ தியாகராஜா அவர்களின் 2008ஆம் ஆண்டின் 248-பக்க ‘தமிழ் மக்களும் தழுவிய மதங்களும்’ என்னும் ‘ஒரு பேப்பர்’ கட்டுரைத் தொடர் நூலுக்கு 2007க்கும் 2011க்கும் இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் தமிழில் வெளிவந்த சிறந்த இலக்கிய ஆய்வு நூல் என தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கு. சின்னப்ப பாரதி அறக் கட்டளையினர் பரிசளிக்கத் தெரிவு செய்துள்ளனர். இதற்குரிய விருதைச் சென்ற 02-10-2012ஆம் திகதியன்று நாமக்கல்லில் நடை பெற்ற பரிசளிப்பு விழாவில் டாக்டர் சிவ தியாகராஜா அவர்களுக்கு வழங்கிப் பாராட்டப்பட்டுக் கௌரவிக்கப்பட்டுள்ளார். இந் நூல் பேராசிரியர் கோபன் மகாதேவாவின் அணிந்துரையுடன் தமிழக மணிமேகலைப் பிரசுரத்தினால் வெளியிடப்பட்டது. சிவ தியாகராஜா கொழும்பு மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கலாநிதிப் பட்டம் பெற்றவர். இலண்டனில் தமிழ் மக்களின் நோயியல் தொடர்பான மரபியல் ஆய்வுகளுக்கு தத்துவக் கலாநிதிப் பட்டம் பெற்றவர். மருத்துவத்துறையில் 40 ஆண்டுகளாக இலங்கையிலும் பிரித்தானியாவிலும் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை இந்திய பிரித்தானியப் பத்திரிகைகளில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் கதைகளையும் தொடர் நாவல்களையும் எழுதியவர். இதுவரை 10 தமிழ் நூல்களும் நான்கு ஆங்கில நூல்களும் வெளியிட்டவர். லைலா-மஜ்னு, தேன் சிந்தும் மலர், கில்கமேஷ் காவியம், ஈழத் தமிழரின் ஆதிச் சுவடுகள், தமிழ் மக்களும் தழுவிய மதங்களும், மருத்துவக் களஞ்சியம், A Review of Ectopic Pregnancy, The King of Hearts, Peoples and Cultures of Early Sri Lanka, Siva Temples of Early Sri Lanka ஆகியன இவரது முக்கிய படைப்புக்கள். இவர் எமது பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். ஈழவர் இலக்கியச் சங்கமும் அவரைப் பாராட்டுகின்றது.
நுணாவிலூர் கா. விசயரத்தினம், இணைப்பாளர்,
Eelavar Literature Academy of Britain (ELAB)
wijey@talktalk.net
எதிர்வரும் 14.10.2012 (ஞாயிறு) அன்று ஹட்டனில் உள்ள கிறித்தவ தொழிலாளர் பொழில் மண்டபத்தில்(ஹைலன்ஸ் கல்லூரிக்கு அருகாமையில்) காலை 10.00 மணிக்கு “புதிய பண்பாட்டுத் தளம்” (புதிய பண்பாட்டுக்கான வெகுஜன அமைப்பு) பிரகடனப்படுத்தப்படவுள்ளது. திரு. லெனின் மதிவானம் தலைமையில் நடைப்பெறவிருக்கும் இந்நிகழ்வில், அங்குரார்பண உரையை கலாநிதி. ந.இரவீந்திரன் நிகழ்த்த உள்ளார். இவைத் தவிர புதிய பண்பாட்டு அமைப்புக்கான தேவைக் குறித்து திரு. மோகன் சுப்பிரமணியம், கவிஞர்.சு. முரளிதரன், திரு. அ.ந. வரதராஜ், சிறுகதையாசிரியர் கொ. பாபு, கலைஞர் பிரான்ஸிஸ் ஹெலன், திரு. சு உலகேஸ்பரா முதலானோர் உரையாற்ற உள்ளனர். இந்நிகழ்வில் மூத்த இடதுசாரி தோழர்களான கே. சுப்பையா, நீர்வை பொன்னையன் முதலானோரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
இன்றைய உலகமயமாதல் சூழலில் பன்னாட்டுக் கொம்பனிகளின் வேட்டைக்காடாக எமது மண் மாற பண்பாட்டுச் சிதைவுகள் முனைப்பாக்கப்பட்டு வருகிறது. சொந்தப் பண்பாட்டை இழக்கும்போது பிறர்க்குப் பூரண அடிமையாதல் தவிர்க்க முடியாது என்றவகையில் பண்பாட்டுத் தளத்திலான இந்தத் தாக்குதல்கள் என்பதறிவோம். இத்தகைய இருள் சூழ்ந்த நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?
காலம் – 06.10.2012 சனிக்கிழமைஇடம் – திருகோணமலை விவேகானந்தா கல்லூரி “இலங்கைத் தமிழ் செல்நெறியில் சமகாலப் போக்குகள்”(காலை அமர்வு) தலைமை – பேராசிரியர் செ. யோகராசா ஆய்வுரைகள்1.…