அனைவருக்கும் பதிவுகள் தனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது!
இலங்கையின் மூத்த எழுத்தாளரும் இலக்கியவாதியுமான தெளிவத்தை ஜோசப் இருதய நோய் காரணமாக கொழும்பு டேர்டன்ஸ் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 77 வயது நிரம்பிய இவர் மலையகத்தின் இலக்கிய முன்னேற்றத்துக்கு பெரிதும் பங்களித்துள்ளார். இவரது இருதய சத்திர சிகிச்சைக்கு ரூபா ஏழு இலட்சம் இலங்கை நிதி தேவைப்படுவதால் இலக்கியவாதிகளிடமும் பரோபகாரிகளிடமும் புலம்பெயர்ந்து வாழும் நல்லுள்ளங்களிடமும் உதவியை எதிர்பார்த்துள்ளார். எனவே நல்லுள்ளம் படைத்தோர் மூத்த எழுத்தாளரின் உயிரைக் காப்பாற்ற கீழுள்ள வங்கிக் கணக்கில் முடிந்தளவு தொகையைச் செலுத்தலாம்.
குறும்பட விருது
அரிமா சுதாமா கோபாலகிருஷ்ணன் வழங்கும் சிறந்த குறும்படங்களுக்கான ரூபாய் 10,000 பரிசு
கடந்த 2 ஆண்டுகளில் வெளியான குறும்பட ஆவணப்பட, குறுந்தகடுகளை அனுப்பலாம்.
அன்புடையீர் கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஜூன்2,3,4ஆம் திகதிகளில் நடத்தவிருக்கிம் உலகத் தமிழ் இலக்கிய விழாவில் கலந்து கொள்ளுமாறு தங்ளை அன்புடன் அழைக்கிறோம். கலந்துகொள்ளமுடியாத நிலையிருப்பின் மலருக்கு கட்டுரை அனுப்பிவைக்கவும்.…
நிழல் – பதியம் இணைந்து தமிழகத்தின் இருபத்து நான்கு மாவட்டங்களில் குறும்படப் பயிற்சிப் பட்டறையினை நடத்தி வருகிறது. இதன் மூலம் கிராமப்புற இளைஞர்கள் மூவாயிரத்து நானூறு பேர் திரைத்தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொண்டு உள்ளனர். இன்று திரைப்படம், தொலைக்காட்சி, இதழ்களில் பணியாற்றி வருகின்றனர். 25-வது குறும்படப் பயிற்சிப் பட்டறையினை மே மாதம் 2-வது வாரம் (8-14) ஈரோட்டில் நடத்த உள்ளது.
இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத் தொகுதிகளையும் ஆவணப்படுத்திப் பாதுகாத்து அனைவருக்கும் கிடைக்கச் செய்தலை பணி இலக்காகக் கொண்ட நூலக நிறுவனத்தின் கனடியப் பிரிவின் அறிமுக நிகழ்வு.
‘கவிஞன்’ காலாண்டு கவிதை சஞ்சிகை….
– கவிஞர் அஸ்மின் –
மீன்பாடும் தேன் நாடு என்று வர்ணிக்கப்படும் மட்டக்களப்பில் இருந்து வெளிவருகிறது. ‘கவிஞன்’ என்ற காலாண்டு கவிதை சஞ்சிகை. கவிஞர் சதாசிவம் மதன் இதன் ஆசிரியராக இருக்கின்றார்.இதில் கவிதைகளோடு கவிதை பற்றிய கட்டுரைகள் கவிஞர்கள் பற்றிய குறிப்புக்கள் போன்றன இடம்பெற்றுள்ளன.இந்த இதழுக்கு எழுத ஆர்வமுள்ள கவிஞர்கள் எழுதலாம்.
“இளம் பாடகி செல்வி மஞ்சரி கலாமோகன் கலைப்பாரம்பரியம் மிகுந்த குடும்பப் பின்னணியில் இருந்து வருவது சிறப்பு அம்சமாகும். இவரது பாட்டனாரின் தமையனார் குழந்தைவேலு இலங்கை வானொலியில் முதல்தர இசை வித்துவானாக திகழ்ந்தவராவார். ஓவியம், இசை ஆகிய துறைகளில் ஆற்றல் மிக்கவர்களைக் கொண்ட பின்னணியுடன் கர்நாடக இசையில் கால் பதித்திருக்கும் மஞ்சரி கலாமோகன் ஸ்ரீமதி மனோரமா பிரசாத்தின் கீழ் பதினொரு ஆண்டுகள் கர்நாடக இசையைப் பயின்று பயின்று தனது இசைத் திறமையை வளர்த்துக்கொண்டிருக்கிறார். அவரது சமர்ப்பணம் என்ற இந்த இசை நிகழ்வு ஒரு குருவினதும் ஆர்வம் மிகுந்த சிஷையினதும் கடினமான உழைப்பின் அறுவடை என்று கூறலாம்” என்று விமர்சகர் மு.நித்தியானந்தன் சென்ற சனியன்று லண்டனில் விம்பிள்டன் பிள்ளையார் கோயிலில் இடம்பெற்ற விழாவில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
இலங்கை மண்ணுக்கு புகழ் பெற்றுத் தந்த பெண் அறிவிப்பாளர் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களது நினைவாக ,’தடாகம் கலை இலக்கிய வட்டம் ‘(அஞ்சலி கவிதை )நிகழ்வினை கல்முனையில்…
தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு படைப்புகளை மொழிபெயர்ப்பதில் தேர்ச்சியும், அனுபவமும் வாய்ந்த மொழிபெயர்ப்பாளர் தேவை. ஆர்வமுள்ளவர்கள் மாதிரி மொழிபெயர்ப்பு (ஒரு பக்கம்) மற்றும் கட்டண விபரங்களுடன் எம்மை ngiri2704@rogers.com என்னும்…