நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) – 30

- மார்க் ட்வைன் -

முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’

அத்தியாயம் முப்பது

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 30அவர்கள் தோணியில் ஏறியதும் முதல் வேலையாக ராஜா என்னை நோக்கி வந்தார். எனது மேல் சட்டையின் கழுத்துப் பட்டையைப் பிடித்து உலுக்கியவாறே என்னிடம் கேட்டார்:

“எங்களை விட்டு ஓட முயன்றிருக்கிறாய், இல்லையா, பையா? எங்களின் நட்பு உனக்கு சலிப்புத் தட்டிவிட்டதா? ஹாஹ்?”

நான் கூறினேன் “அப்படி இல்லை அரசே! நாங்கள் அப்படி நினைக்கவில்லை. தயை கூர்ந்து அப்படி நினைக்காதீர்கள், மாட்சிமை பொருந்திய மன்னரே!”

“நல்லது. அப்படியானால், நீ என்ன செய்ய முயற்சித்தாய் என்று கூறி விடு. இல்லாவிட்டால், உன் உடலில் உள்ளிருக்கும் அனைத்தையும் வெளியே உருவி விடுவேன்.”

“சத்தியமாக என்னவெல்லாம் நடந்ததோ அதை அப்படியே கூறிவிடுகிறேன், மேன்மை பொருந்திய ராஜாவே! என் கரத்தைப் பிடித்து அழைத்துச் சென்ற அந்த மனிதன் என்னிடம் மிகவும் அன்பாக இருந்தான். கடந்த வருடம் என் வயதில் ஒரு சிறுவன் இறந்து போனது பற்றி அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தான். அதே போன்றதொரு பயங்கரமான ஆபத்தில் இன்னொரு சிறுவன் இப்போது இருப்பதைப் பார்க்க அவனுக்கு வருத்தமாக உள்ளது என்று கூறினான். தங்க மூட்டையைக் கண்டதும் அனைவரின் கவனமும் சிதறி சவப்பெட்டியை நோக்கி ஓடிய சமயம், அவன் என் கையை விடுத்து, “ஓடிச் செல். இல்லாவிடில், அவர்கள் உன்னைத் தூக்கில் போடுவது நிச்சயம்.” என்று என் காதில் கிசுகிசுத்தான். எனவேதான் நான் அங்கிருந்து ஓட்டம் எடுத்தேன்.”

“அங்கேயே நிற்பது எனக்கு நல்லதல்ல என்று தோன்றியது. என்னால் எதுவும் செய்ய முடியாது. தப்பிக்காமல் அங்கேயே இருந்து தூக்கில் தொங்குவதை நான் விரும்பவில்லை. கண் மண் தெரியாது ஓடி இங்கே வந்து தோணியைக் காணும் வரை நான் ஓட்டத்தை நிறுத்தவில்லை. இங்கே வந்து சேர்ந்ததும் ஜிம்மை அவசரமாகத் தோணியை செலுத்தச்சொன்னேன். இல்லாவிடில், நான் பிடிபட்டு தூக்கில் தொங்க நேரிடும் என்ற பயத்தால்தான். நீங்களும், பிரபுவும் இறந்திருப்பீர்கள் என்று நான் அஞ்சினேன் என்றும் கூறினேன். உங்களின் பரிதாப நிலைக்காக நான் மிகவும் மனம் வருந்தினேன். ஜிம்மும் அப்படியே வருந்தினான். இப்போது நீங்கள் வந்து கொண்டிருப்பதைக் கண்டவுடன் நாங்கள் இருவரும் கட்டுக் கடங்காத மகிழ்ச்சியை அடைந்தோம். இது உண்மையா என்பதை ஜிம்மிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.”

Continue Reading →

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) – 29

- மார்க் ட்வைன் -

முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’

அத்தியாயம் இருபத்தி ஒன்பது

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 29நேர்த்தியான தோற்றம் உடைய ஒரு முதிய கனவானையும், கூடவே காயம்பட்ட வலது கையை தாங்கி நிறுத்தும் ஒரு தூக்கி மாட்டியுள்ள இன்னொரு இளம் வாலிபனையும் அந்தக் கூட்டம் கூட்டி வந்தது. ஓ! என்ன ஒரு காட்சி அது! கூட்டம் கொக்கரித்துக் கொண்டு சிறிது நேரம் சிரித்துத் தீர்த்தது. அங்கே வேடிக்கையாய் சிரிக்க என்ன உள்ளதென்று எனக்குப் புரியவில்லை. ராஜாவும், பிரபுவும் என்னைப் போன்றுதான் யோசித்துக் கொண்டிருப்பார்கள் என்று எண்ணினேன். அவர்கள் முகம் வெளுத்துப் போயிருக்கும் என்று நினைத்து அவர்களை நோக்கினேன். ஆனால் அப்படி எதுவும் இல்லை. அவர்கள் பயத்தில் வெளுத்துப் போகவில்லை. சந்தேகிக்கும் நிலையை பிரபு அங்கே உண்டு பண்ணவேயில்லை. பதிலாக வாயில் வெள்ளை நுரை தள்ளியவாறு கூ கூ என்று இன்னும் அதிகமாக சத்தமிட்டார்.

புதிதாக வந்த மனிதர்களை ஏதோ நயவஞ்சகர்கள் இந்த உலகத்தில் மோசடி செய்ய வந்தது தனது இதயத்தை வேதனைப் படுத்துவது போல ராஜாவோ மிகவும் சோகமாக அவர்களை நோக்கிக் கொண்டிருந்தார். ஓ! ரசிக்கும்படியான நடிக்கும் தொழிலை அவர் அங்கே செய்தார், தெரிந்து கொள்ளுங்கள்! ஊரில் உள்ள பெரும்பான்மையான மக்கள் தாங்கள் ராஜாவின் பக்கம் என்பதைக் காட்டிக் கொள்வது போல அவர் பக்கம் கூடி நின்றார்கள்.

புதிதாக வந்த முதிய கனவானோ குழப்ப மிகுதியால் மண்டை உடைந்துவிடும் நிலையில் இருந்தார். இறுதியாக அவர் பேசத் தொடங்கியதும், அவரின் பேச்சில் ஆங்கிலேயர்களின் உச்சரிப்பை என்னால் உணர முடிந்தது. ராஜாவும் ஆங்கிலேயர்களின் உச்சரிப்பை அப்படியே பின்பற்றி நடித்து வந்தாலும், இந்த புதிய மனிதனின் உச்சரிப்பு ராஜா பேசுவது போன்று இல்லை. அந்த முதிய கனவான் என்ன வார்த்தைகள் சொன்னார் என்பது என் நினைவில் இல்லை. அவர் போன்று நான் பேசிக் காட்டவும் முடியாது. ஆனால் அவர் கூட்டத்தை நோக்கி பின்வருமாறு கூறினார்:

Continue Reading →

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) – 28

- மார்க் ட்வைன் -

முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’

அத்தியாயம் இருபத்தி எட்டு

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 28வெகு சீக்கிரமே நான் விழித்தெழும் காலைவேளை வந்து விட்டது. ஏணியில் இறங்கி கீழ்தளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். அவ்வாறு செல்லும் போது அந்த பெண்களின் அறைக் கதவு திறந்திருப்பதை எதேச்சையாக நான் காண நேர்ந்தது. அறையினுள் திறந்திருந்த பழைய ட்ரங்க் பெட்டியருகே மேரிஜேன் அமர்ந்திருப்பதைக் கண்டேன். அந்தப் பெட்டியில் தன் பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டு இங்கிலாந்து செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள். அந்த வேலையைப் பாதியில் நிறுத்தி விட்டு, தன் மடியில் ஒரு நீண்ட மேலங்கியை மடித்து வைத்துக் கொண்டு, தனது இரு கரங்களையும் கொண்டு முகத்தை மூடிக்கொண்டு அழுது கொண்டிருந்தாள். அது என் மனதைக் கரைத்தது. யாருக்குமே அதைப் பார்த்தால் மனம் இளகத்தான் செய்யும். எனவே, உள்ளே நான் சென்றேன்.

“மிஸ். மேரிஜேன்! சக மனிதர்களின் துன்பத்தை நீ பொறுத்துக் கொள்ளக் கூடியவள் அல்ல. நானும் அப்படிதான். என்னிடம் உன் துன்பத்தைப் பற்றிக் கூறு.” அன்புடன் நான் வினவினேன்.

எனவே, அவள் கூற ஆரம்பித்தாள். நான் சந்தேகித்தது போலவே அவள் அந்த நீக்ரோக்களைப் பிரிந்த வேதனையிலேயே அழுது கொண்டிருந்திருக்கிறாள். அவள் செல்லவிருக்கும் இனிமையான இங்கிலாந்து பயணத்தையே இந்த வேதனை குலைத்து விடும் என்று அழுது கொண்டே கூறினாள். அந்த நீக்ரோ குழந்தைகளும் அவர்களின் அம்மாவும் இனி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவே முடியாது என்று தெரிந்த கொண்டபின் அவளால் எப்படி அவளது வாழ்வில் சந்தோசத்துடன் இருக்க முடியும் என்று கேட்டாள். பின்னர் முன்பை விட அதிக தீவிரத்துடன் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள்.

“ஓ! அன்புக்குரியவனே! அவர்கள் ஒருபோதும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவே மாட்டார்கள் என்பதை எண்ணும்போது.” கைகளை வேகமாக அசைத்துக்கொண்டே கூறினாள்.

“ஆனால் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்- அதுவும் இன்னும் இரண்டு வாரங்களுக்குளாகவே. எனக்குத் தெரியும்.” நான் கூறினேன்.

Continue Reading →

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) – 27

- மார்க் ட்வைன் -

முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’

அத்தியாயம் இருபத்தி ஏழு

அவர்களின் அறைக்கு நகர்ந்து சென்று நோட்டமிட்டபோது அவர்களின் குறட்டைச் சத்தம் கேட்டது. எனவே மெல்ல அடிமேல் அடி வைத்து பத்திரமாகப் படிக்கட்டில் இறங்கினேன். மொத்த வீடும் நிசப்தமாக இருந்தது. ஒரு சிறு சத்தம் கூட கேட்கவில்லை. உணவருந்தும் அறையின் சின்ன சந்து வழியாக நுழைந்து பார்த்தபோது சடலம் வைத்திருக்கும் அறையில் பாதுகாவலாக இருந்த மனிதர்கள் அனைவரும் அவரவர் இருக்கைகளிலேயே தூக்கத்தால் ஊசலாடிக் கொண்டிருந்தார்கள். சவம் வைக்கப்பட்டுள்ள முன்னறையிலிருந்து வெளியே வராந்தாவுக்குச் செல்லும் கதவு திறந்திருந்தது. ஒவ்வொரு அறையிலும் ஒரு மெழுகுவர்த்தி வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கதவின் வழியே புகுந்து வராந்தாவுக்குள் நுழைத்தேன். அங்கேயும் யாருமில்லை. பீட்டரின் மிச்சம் மட்டுமே இருந்தது. அதையும் தாண்டி வாசலுக்குச் செல்லும் முன்புறக் கதவு பூட்டியிருந்தது. அதனின் சாவியும் அங்கே இல்லை.

அந்த சமயத்தில் யாரோ என் பின்புறமுள்ள படிக்கட்டுகளில் இறங்கிவரும் சத்தம் கேட்டது. அங்குமிங்குமாக ஓடி நான் ஒளிந்து கொள்ள இடம் தேடியபோது முன்னறையில் சவப்பெட்டி அருகே மட்டுமே கொஞ்சம் இடம் இருந்தது. அந்தப் பெட்டியின் மேல்மூடி ஒருக்களித்துத் திறந்தவாறு இருந்ததால், ஈரத்துணியால் மூடி வைத்திருக்கும் இறந்த மனிதனின் முகத்தையும், அவன் மேல் மூடப்பட்டிருந்த சவச்சீலையையும் என்னால் நன்கு காண முடிந்தது. காசு மூட்டையை சவத்தின் கைகள் குறுக்காக வைக்கப்பட்டுள்ள பகுதியின் மேல் மூடியினுள் செருகி வைத்தேன். அந்தக் கரங்கள் மிகவும் குளிர்ந்தாக இருந்து என்னையும் உறைய வைத்தது. பின்னர் அறையின் குறுக்காக ஓடிச்சென்று கதவின் பின் மறைந்து கொண்டேன்.

படிக்கட்டுகளில் மேரிஜேன் இறங்கி வந்துகொண்டிருந்தாள். சவப்பெட்டி அருகே மெதுவாகச் சென்று, மண்டியிட்டு, உள்ளே பார்த்தாள். பின்னர் தனது கைக்குட்டையை எடுத்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவள் கண்ணீர்
சிந்திக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. அவளின் பின்புறமாக நான் நின்றிருந்ததால், அவளின் அழுகைச் சத்தம் எனக்கு கேட்கவில்லை. எனது மறைவிடத்திலிருந்து நான் வெளியே வந்தேன். உணவருந்தும் அறையைத் தாண்டிச் செல்கையில் சவப்பெட்டி அருகே இருந்த இரண்டு ஆண்களும் என்னை பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டேன். அந்தச் சந்து வழியாக அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று நோக்கினேன். யாரும் அசையக் கூட இல்லை.

Continue Reading →

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) – 26

- மார்க் ட்வைன் -

முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’

அத்தியாயம் இருபத்தி ஆறு

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 23 கூட்டம் கலைந்து போனதும், அந்த வீட்டில் படுக்கை அறைகள் மிகைப்படியாக உள்ளதா என்று ராஜா மேரி ஜேனை வினவினார். அதிகப்படியாக உள்ள ஒரு அறையில் சித்தப்பா வில்லியம் உறங்கலாம் எனக் கூறினாள். அவளது பெரிய படுக்கை அறையை ஹார்வி சித்தப்பாவுக்குக் கொடுத்து விட்டு அவளும், அவளது சகோதரிகளும் சிறிய அறையில் உள்ள கட்டிலில் படுத்துக் கொள்ளப் போவதாக மேரி ஜேன் கூறினாள். பரணில் உள்ள சிறு மூலையில் ஒரு வைக்கோல் படுக்கையில் ராஜாவின் வேலைக்காரனான நான் படுத்துக் கொள்ள வசதியாக இருக்கும் என்று ராஜா கூறினார்.

எனவே ராஜாவையும், பிரபுவையும் மேல் மாடிக்கு அழைத்துச் சென்று எளியதாகவும் ஆனாலும் நன்றாகவும் இருந்த அவர்கள் அறைகளைக் காட்டினாள் மேரி ஜேன். சித்தப்பா ஹார்வியின் வழியில் இருந்த தன்னுடைய நீண்ட அங்கி போன்ற ஆடைகளையும் மற்ற அலங்காரப் பொருட்களையும் அங்கிருந்து வெளியே எடுத்துச் சென்றுவிடுவதாக மேரி ஜேன் கூறியபோது வேண்டியதில்லை என்று ஹார்வி கூறிவிட்டார். நீண்டு தரையைத்தொடும் காலிகோ வகைத் துணியாலான திரைச்சீலையின் பின்புறம் உள்ள சுவற்றில் அவளின் நீண்ட அங்கிகள் மாட்டிவைக்கப் பட்டிருந்தன. ஒரு பழைய ட்ரங்க் பெட்டி ஒரு மூலையிலும், கிடார் இசைக் கருவி இன்னொரு மூலையிலுமாக வைக்கப்பட்டிருந்தன. பெண்கள் உபயோகப் படுத்தும் அலங்காரப் பொருட்கள், மேலும் அது போன்ற சில பொருட்கள் அறை முழுதும் இறைந்து கிடந்தன. இவ்வாறு அறை இருப்பது அவருக்கு சொந்த வீட்டிலுள்ளது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்பதால் அங்கிருக்கும் பொருட்களை வேறு எங்கும் எடுத்துப் போகவேண்டாம் என்று ராஜா (ஹார்வி) கேட்டுக் கொண்டார். பிரபுவின் அறை கொஞ்சம் சிறியதுதான் என்றாலும் மிகவும் வசதியாகவே இருந்தது. அது போன்றே பரணிலிருந்த என்னுடைய சிறு மூலை அறையும்தான்.

Continue Reading →

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) – 25

- மார்க் ட்வைன் -

முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’

அத்தியாயம் இருபத்தி ஐந்து

கூட்டம் கூடியிருந்த இடத்தைச் சுற்றியுள்ள வீடுகளின் கதவுகளும், ஜன்னல்களும் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களின் கும்பலால் நிரம்பி வழிந்தது. ஒவ்வொரு நிமிடமும் ஒருவர் மதில் மேல் எட்டிப் பார்த்து விட்டு இவ்வாறு கூறுவார் "இது அவர்கள்தானா?" என்று அங்கே கும்பலாக மற்றவர்களுடன் ஓடிக் கொண்டிருக்கும் யாரோ ஒருவர் பதில் கூறுவார் "அடித்துச் சொல்கிறேன். அவர்கள்தான் அது."அந்தச்செய்தி ஊர் முழுதும் இரண்டு நிமிடங்களில் காட்டுத்தீ போலப் பரவியது. நாலாத்திசைகளிலிருந்தும் மக்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி வந்த காட்சியைத்தான் நீங்கள் காணவும் வேண்டுமே. சிலர் அவ்வாறு ஓடி வரும் போதே தங்களின் மேல் கோட்டை அணிந்தவாறே வேகமாக ஓடி வந்தனர். தட் தட் என்ற அவர்களின் காலடிச் சத்தம் ஏதோ வீரர்கள் போருக்கு அணிவகுத்து செல்லும்போது கேட்பது போலக் கேட்டது. விரைவிலேயே அங்கு கூடியிருந்த கூட்டத்திற்கு எங்களை அழைத்துப் போனார்கள். கூட்டம் கூடியிருந்த இடத்தைச் சுற்றியுள்ள வீடுகளின் கதவுகளும், ஜன்னல்களும் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களின் கும்பலால் நிரம்பி வழிந்தது. ஒவ்வொரு நிமிடமும் ஒருவர் மதில் மேல் எட்டிப் பார்த்து விட்டு இவ்வாறு கூறுவார் “இது அவர்கள்தானா?” என்று அங்கே கும்பலாக மற்றவர்களுடன் ஓடிக் கொண்டிருக்கும் யாரோ ஒருவர் பதில் கூறுவார் “அடித்துச் சொல்கிறேன். அவர்கள்தான் அது.”

நாங்கள் அந்த வீடு இருந்த தெருவை அடைந்து வீட்டை நெருங்கும்போது, அந்த வீட்டின் முன் கூட்டம் அடைந்து கிடந்தது. மூன்று பெண்களும் கதவினருகே நின்று கொண்டிருந்தனர். மேரி ஜேன் சிவப்பு நிற முடியுடன் இருந்தாலும், அது பெரிய வித்தியாசத்தை காட்டாது மிகவும் அழகாகவே காணப்பட்டாள். அவள் முகத்திலும் கண்களிலும் தெய்வீக ஒளி குடிகொண்டிருந்தது. அவளுடைய உறவினர்கள் வந்துவிட்ட சந்தோசம் அவல் முகத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது. ராஜா தன் கைகளை அவளுக்காக விரித்தார். அவளும் அதில் ஓடி வந்து ஐக்கியமானாள். பிளவுபட்ட உதடுடைய பெண் பிரபுவை நோக்கி ஓடி அவரை அன்போடு தழுவிக் கொண்டாள். அப்படிப்பட்ட ஒரு சமயத்தில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடியதைப் பார்த்த அங்கிருந்த அனைவரும், அதிலும் குறிப்பாகப் பெண்கள் ஆனந்தக்கண்ணீர் வடித்தார்கள்.

ராஜா பிரபுவைத் தனியாக அழைத்துச் சென்றதை நான் கவனித்தேன். சுற்றிலும் அங்கே தேடிய ராஜா மூலையில் சவப்பெட்டி இரண்டு நாற்காலிகள் மீது வைத்திருப்பதை, கடைசியாகக் கண்டுகொண்டார். எனவே அவரும் பிரபுவும் கண்களுக்கு நேராகக் குறுக்கே ஒருவரின் தோள் மீது இன்னொருவர் கரத்தை வைத்து மிகவும் பதவிசாகவும், மெதுவாகவும் நடந்து சென்று சவப்பெட்டி முன் நின்றார்கள். அங்கிருந்த கூட்டம் அவர்கள் நிற்க வழிவிட்டது. அங்கே பேசிக்கொண்டிருந்த அனைவரும் பேச்சை நிறுத்தி அமைதியானார்கள். அங்கு கூடியிருந்தோர் அனைவரும் “உச்” என்று பரிதாப ஒலி எழுப்பினார்கள். அனைத்து ஆண்களும் தங்களின் தலையிலிருந்து தொப்பியைக் கழற்றி தலையை மரியாதையை செலுத்தும் வண்ணமாக குனிந்து நின்றார்கள்.

Continue Reading →

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) – 24

- மார்க் ட்வைன் -

முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’

அத்தியாயம் இருபத்தி நான்கு

பிரபு மிகுந்த அறிவுக் கூர்மை வாய்ந்தவராதலால், விரைவிலேயே அதற்கான ஒரு திட்டம் தயாரித்தார். ஜிம்முக்கு ராஜா லியரின் – King Lear (ஷேக்ஸ்பியர் நாடகத்தின் ஒரு முக்கியக் கதாநாயகன்) ஆடைகளை அணிவித்து விட்டார். நீண்ட திரைச்சீலையால் தைக்கப்பட்ட ஒரு காலிகோ கவுன் ஜிம்முக்கு அணிவித்து, தலைக்கு வெள்ளை நிற குதிரை முடிகளால் ஆன விக் பொருத்தி, வெள்ளை நிற ஓட்டு மீசையும் வைத்து விட்டார்.அடுத்த நாள் இரவு நேரம் நெருங்கி வருகையில், நதியின் மத்தியப் பகுதியில், கரையின் இருபுறங்களிலும் கிராமங்கள் காணப்பட்ட இடத்தில் ஒரு சிறிய மணல்திட்டில் இருந்த அடர்ந்த வில்லோ மரங்களின் கீழ் எங்களின் தோணியை மறைத்து வைத்தோம். அந்த ஊர்களில் உள்ள மக்களை தங்களின் நடிப்பில் நம்ப வைக்க நமது ராஜாவும் பிரபுவும் நல்லதொரு திட்டம் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே சிறிது நேரம் மட்டுமே நிறுத்தி வைக்கப் போவதாக ஜிம் பிரபுவிடம் கூறினான். மறைக்கப் பட்டுள்ள தோணியில் உள்ள கூம்பு வடிவக் குடிலுக்குள் முழு நேரமும் கட்டிவைக்கப்பட்டு மறைந்து கிடப்பது ஜிம்முக்கு மிகவும் அலுப்புத் தட்டியிருக்க வேண்டும். தோணியில் நாங்கள் தனியாக அவனை விட்டுச்செல்லும் வேளையில் கட்டிவைத்துவிட்டுப் போவது வழக்கம். யாரேனும் எதேச்சையாக அவனைக் கண்டுபிடித்தால் கூட, தப்பி ஓடிப்போன நீக்ரோவை நாங்கள் பிடித்துக்கட்டி வைத்திருப்பதாகத் தோன்றும் என்ற காரணத்திற்காக அவ்வாறு செய்வது வழக்கம். அப்படி கைகால்கள் பிணைக்கப்பட்ட நிலையில் முழு நாளும் கிடப்பது மிகவும் கடினமான விஷயம்தான் என்று அந்தப் பிரபு ஒத்துக்கொண்டார். அதற்கும் கூடிய விரைவிலேயே ஒரு வழி கண்டுபிடிக்கப் போவதாகவும் அவர் கூறினார்.

பிரபு மிகுந்த அறிவுக் கூர்மை வாய்ந்தவராதலால், விரைவிலேயே அதற்கான ஒரு திட்டம் தயாரித்தார். ஜிம்முக்கு ராஜா லியரின் – King Lear (ஷேக்ஸ்பியர் நாடகத்தின் ஒரு முக்கியக் கதாநாயகன்) ஆடைகளை அணிவித்து விட்டார். நீண்ட திரைச்சீலையால் தைக்கப்பட்ட ஒரு காலிகோ கவுன் ஜிம்முக்கு அணிவித்து, தலைக்கு வெள்ளை நிற குதிரை முடிகளால் ஆன விக் பொருத்தி, வெள்ளை நிற ஓட்டு மீசையும் வைத்து விட்டார். பின்னர் நாடகத்திற்குப் பயன்படுத்தும் வர்ணக் கலவைகளுள் உள்ள மந்தமான இளம் நீல நிறத்தை எடுத்து ஜிம்மின் முகம், கைகள், காதுகள் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசிவிட்டார். நீரில் மூழ்கியதால் இறந்து ஒன்பது நாட்களுக்கும் மேலாக நீலம் பாரித்துக் கிடக்கும் ஒரு மனிதனின் சடலம் இருப்பதைப்போல் ஜிம் தோற்றமளித்தான். இதுவரை நான் கண்ட விஷயங்களிலேயே மிகவும் கோரமான விஷயம் அவனின் தற்போதைய தோற்றம்தான். பின்னர் ஒரு சிறு விளம்பரப் பலகை மரப்பட்டைகளால் பிரபு தயாரித்தார். அது கூறியதாவது:

Continue Reading →

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) – 23

- மார்க் ட்வைன் -

முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’

அத்தியாயம் இருபத்தி மூன்று

மேடை அமைப்பதிலும், அதில் திரைச்சீலை கட்டிவிடுவதிலும், மேடையில் தோன்றும் நடிகர்களின் பாதங்களை முன்னிலைப்படுத்திக் காட்டும் விதமாக மெழுகுவர்த்திகள் வரிசையாக வைப்பதிலும் ராஜாவும் பிரபுவும் மிகுந்த ஆர்வம் காட்டி உழைத்தார்கள். அன்றிரவு அங்கு கண்மூடித் திறப்பதற்குள் ஆண்கள் கூட்டம் வந்து கூடிவிட்டது. அதற்குமேல் இனியும் அந்த இடம் கூட்டம் கொள்ளாது என்ற நிலைக்கு வந்தபின் பிரபு அனுமதிச் சீட்டு கொடுப்பதை நிறுத்தினார்.. பின்னர் பின்புறமாக வந்து மேடையின் மீது ஏறினார். மூடியிருந்த திரைச்சீலையின் பின் நின்று தங்களின் சோக காவியம் இதுவரை யாருமே கண்டிராத அளவு மிகவும் பரபரப்பாக இருக்கப் போகிறது என்று ஒரு சிறு உரை நிகழ்த்தினார். நாடகம் பற்றியும், அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள முதிய எட்மண்ட் கீன் பற்றியும் புகழ்ந்து அவர் சொல்லிக்கொண்டே போனார். கடைசியாக அனைவரது எதிர்பார்ப்பையும் போதுமான அளவு நன்கு தூண்டியபிறகு, திரைச்சீலையை உருட்டி மேலே உயர்த்தினார்.

அடுத்த நொடி நான்கு திசைகளிலும் திரும்பியவாறு துள்ளுநடை போட்டு ஆடையற்ற நிலையில் ராஜா மேடை மேல் தோன்றினார். அவரின் ஆடையற்ற உடல் முழுதும் வட்டங்கள், கோடுகள் என்ற வடிவங்கள் அனைத்து வண்ணங்களிலும் பூசப்பட்டு ஒரு வானவில்லைப் போன்று ஒளி வீசினார். அப்புறம் உடலின் மற்ற இடங்கள் பற்றி கவனிக்காதீர்கள். பார்க்கக் காட்டுத்தனமாகவும் வேடிக்கையாகவும் இருந்தது. ஆனாலும் அது சிரிப்பு மூட்டும் விதமாக இருந்தது.

பார்வையாளர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ராஜா தனது துள்ளல் நடையில் மேடையை ஒரு முறை சுற்றிவந்தபின், குதித்துக் கொண்டே ஒரு ஆட்டம் போட்டவாறு, அந்த மேடையின் பின்புறம் சென்றார். அவர் திரும்ப வந்த அதே போல் செய்யும் வரை, மக்கள் உரக்கச் சிரித்து. கூச்சல் ஒலியிட்டு, கைகளைத் தட்டி ஆரவாரம் செய்து அதை ரசித்தார்கள். அதே போன்று மீண்டும் செய்து காட்டச் சொல்லி விரும்பிக் கேட்டுப் பார்த்தார்கள். உண்மையாகச் சொல்லவேண்டுமென்றால், அந்த முதிய முட்டாள் செய்து காட்டிய விஷயங்களைப் பார்த்து மக்கள் தரையில் உருண்டு புரண்டு சிரித்தார்கள்.

Continue Reading →

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) – 22

- மார்க் ட்வைன் -

முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக 
மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன்.
அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம்
ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார்.
அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’

அத்தியாயம் இருபத்தி இரண்டு

அந்தச் சமயத்தில் வீட்டின் முன்வராந்தாவின் கூரையின் கீழ், இரட்டைக் குழல் துப்பாக்கியைக் கையிலேந்தியவாறு ஷேர்பம் வெளியே தோன்றினார். ஒரு வார்த்தை கூட பேசாது மிகவும் அமைதியுடனும், நிதானத்துடனும் அங்கே நின்றார். அடித்துப் பிடித்து அலைகடல் போன்று முன்னேறிக் கொண்டிருந்த கூட்டம் அப்படியே நின்று பின்வாங்க ஆரம்பித்தது.தேனீக்கள் போன்ற மக்கள் கூட்டம் காட்டுமிராண்டிகள் போல் ஊளையிட்டுக் கொண்டும், கோஷமிட்டுக் கொண்டும் ஷேர்பம் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்தக் காட்சி பார்க்கவே மிகவும் பயங்கரமாக இருந்தது. வழியில் இருந்த அனைத்து மக்களும் தங்களின் பொருட்களை எடுத்துக் கொண்டு தங்களை அந்தக் கூட்டம் மிதித்து விடும் என்ற பயத்துடன் வேகமாக நகர்ந்தார்கள். தெருவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் அந்தக் கூட்டத்தை முந்திக் கொண்டு ஓடி வேறு பக்கம் ஒளிந்து கொண்டார்கள். தெருவின் பக்கங்களில் இருந்த வீட்டுச் சன்னல்களின் வழியாக தங்களின் தலையை நீட்டியவாறு பெண்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிறு நீக்ரோ சிறுவர்கள் மரத்தின் மீது ஏறி அமர்ந்திருக்க, இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் வீட்டின் மதில்சுவர் பக்கமிருந்து அதன்மேல் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். கட்டுக்கடங்கா கூட்டம் அவர்களின் பக்கமாக வர, அவர்களின் பிடியில் மாட்டிகொள்ளாதிருக்க பின்தள்ளி நின்று கொண்டார்கள். பெரும்பான்மையான பெண்களும், சிறுமிகளும் பீதியுடன் அழுதுகொண்டிருந்தார்கள்.

ஷேர்பம்மின் வீட்டு மதில் அருகே கூட்டமாய் குவிந்தனர். அதனுள்ளே செல்லும் இருபதடிப் பாதையில் தள்ளமுள்ளு செய்து கொண்டு அனைவரும் நுழைந்தனர். அந்தக் கூட்டம் போட்ட அளவுகடந்த கூச்சலில் நீங்கள் பேசுவது கூட உங்களுக்கே கேட்காது என்பது போல் இருந்தது. “மதிலை அடித்து நொறுக்குங்கள். மதிலை அடித்து நொறுக்குங்கள்” என்று சிலர் கத்தினர். உடனே மதிலில் உள்ள மரப்பட்டைகளை கிழித்து அடித்து துவம்சம் செய்து நொறுக்கும் ஓசை காதில் கேட்டது. இப்போது மதில் காணாமலே போய்விட்டது. மதில் போல் நின்ற மக்கள் கூட்டம் அலையெனத் திரண்டு தள்ளிக் கொண்டு முன்னே வர முயன்றது.

அந்தச் சமயத்தில் வீட்டின் முன்வராந்தாவின் கூரையின் கீழ், இரட்டைக் குழல் துப்பாக்கியைக் கையிலேந்தியவாறு ஷேர்பம் வெளியே தோன்றினார். ஒரு வார்த்தை கூட பேசாது மிகவும் அமைதியுடனும், நிதானத்துடனும் அங்கே நின்றார். அடித்துப் பிடித்து அலைகடல் போன்று முன்னேறிக் கொண்டிருந்த கூட்டம் அப்படியே நின்று பின்வாங்க ஆரம்பித்தது.

ஒரு வார்த்தை கூட ஷேர்பம் பேசவில்லை. அமைதியாய் அங்கே நின்றவாறு கூட்டத்தின் மீது மெதுவாக தன் கண்களை ஓட்டினார். அந்த அமைதி அச்சமூட்டுவதாகவும், தர்மசங்கடத்தை விளைவிப்பதாகவும் இருந்தது. அவரின் தீர்க்கப் பார்வையைச் சந்திக்க மக்கள் முயன்றார்கள். ஆனால் அது மிகவும் கடினமான இருந்தது. எதையோ மறைக்க முயல்பவர்கள் போல அவர்கள் தங்களின் பார்வையை கீழ் பக்கமாகத் தாழ்த்தி நின்றார்கள். அடுத்த கணத்திலேயே, ஷேர்பம் உரத்த குரலில் சிரித்தார். அது சந்தோசமான சிரிப்பாக இல்லாது ரொட்டியை சாப்பிடும்போது அதில் மணல் இருந்தால் எப்படி இருக்குமோ அவ்வாறு மிகவும் கடுமையாக இருந்தது.

Continue Reading →

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) – 20

அத்தியாயம் இருபது

- மார்க் ட்வைன் -

முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 20மிகவும் தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்டு, அவர்கள் எங்களைப் படுத்தி எடுத்தார்கள். நாங்கள் ஏன் தோணியிலேயே ஒளிந்து கொண்டிருக்கிறோம், ஏன் பகல் முழுதும் பயணம் செல்லாமல் ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கிறோம் என்று தொணப்பினார்கள். இடையில் அவர்களுக்கு ஜிம்மின் மீது சந்தேகம் எழுந்தது. அவன் தப்பித்து ஓடிப்போகும் நீக்ரோவா என்று வினவினார்கள். நான் கூறினேன் “சரியாகப் போச்சு! தப்பித்து ஓடும் நீக்ரோ தெற்குப் பகுதிக்கா ஓடுவான்?” இல்லை. அங்கே அவன் போகமாட்டான் என்றார்கள். எப்படியாவது சில விஷயங்களை அவர்களுக்கு விளங்க வைக்க வேண்டும் என்பதால் நான் இவ்வாறு கூற ஆரம்பித்தேன்.

“என்னைச் சார்ந்தவர்கள் அனைவரும் வசிப்பது நான் பிறந்த மிஸ்ஸோரியில் உள்ள பைக் நாட்டில்தான். ஆனால் என் அப்பா, எனது சகோதரன் ஐக் என்னைத்தவிர மற்ற அனைவரும் இறந்து விட்டார்கள். நியூ ஆர்லியன்ஸ் நகருக்கு நாற்பது மைல் கீழாக நதியின் மேற்புறம் இருக்கும் ஒரு சிறிய குதிரைப் பண்ணை வைத்திருக்கும் எனது சித்தப்பா பென் என்பவருடன் வசிக்கச் செல்லலாம் என்று என் அப்பா முடிவெடுத்தார். வறுமையில் இருந்த என் அப்பாவுக்கு கடன் அதிகம் என்பதால் எங்களிடம் இருந்த அனைத்தையும் விற்று அந்தக் கடனை அடைத்தபின் எங்களிடம் மீதம் பதினாறு டாலர்கள் பணம் எஞ்சியிருந்தது . அத்துடன் எங்களின் நீக்ரோ ஜிம் எங்களுடன் இருந்தான்.”

“ஆயிரத்து நானூறு மைல்கள் கடந்து செல்ல ஒரு படகின் அடிமட்ட இடத்தில் தங்குவதற்கான கட்டணத்தொகை கூட எங்களிடம் இல்லை. இருக்கட்டும். ஒரு நாள் நதி பெருகி வருகையில் அதிர்ஷ்டவசமாக அப்பாவுக்கு இந்தத் தோணி தட்டுப்பட்டது. எனவே நாங்கள அனைவரும் இந்தத் தோணியிலேயே நியூ ஆர்லியன்ஸ் புறப்படுவது என்று முடிவு கட்டினோம். ஆனால் அப்பாவின் அதிர்ஷ்டம் நிலைக்கவில்லை. ஒரு நீராவிப் படகு இந்தத் தோணியின் முன்பகுதி ஓரத்தில் ஏறியதால் நாங்கள் அனைவரும் நீருக்குள் விழுந்தோம். நீராவிப்படகின் துடுப்புச் சக்கரத்தின் கீழ் அனைவரும் விழுந்தோம் என்றாலும் நானும் ஜிம்மும் திரும்ப மேலேறி வந்து விட்டோம். ஆனால் அப்பா நன்கு குடித்திருந்ததாலும், எனது தம்பி ஐக் நான்கு வயதுக் குழந்தை என்பதாலும், அவர்களால் மேலே வர முடியவில்லை. நல்லது. அடுத்த நாள் அதிக அளவில் மக்கள் படகில் வந்து எங்களுக்குத் தொந்திரவு கொடுத்து ஜிம்மை என்னிடமிருந்து பிரித்துக் கூட்டிப் போகப் பார்த்தார்கள். ஜிம்மை தப்பி ஓடிப்போன நீக்ரோ என்று அவர்களும் நினைத்து விட்டார்கள். அதனால்தான் பகல் பொழுதுகளில் நாங்கள் நதியில் மிதந்து செல்வதில்லை. இரவுகளில் எங்களுக்கு எந்தத்தடையும் இருக்காது.”

“என்னைக் கொஞ்சம் தனியாக சிந்திக்க விட்டால், பகல் பொழுதிலும் நமக்குத் தேவையானால் தோணியில் பயணம் செய்ய நல்ல ஒரு வழி கண்டுபிடிப்பேன். திரும்ப ஆழமாக யோசித்து சீக்கிரமே ஒரு நல்ல திட்டம் தயாரிக்கிறேன். இன்று விட்டுவிடலாம். அந்த நகரின் வழியாக பகல் வெளிச்சத்தில் போகாதிருப்பது நல்லதுதான். அது நமக்கு ஆபத்தாகக் கூட விளையும்” பிரபுவானவர் கூறினார்.

Continue Reading →