மேற்படி நூலினை அவர் சமர்ப்பித்துள்ள பாங்கு நினைவிலெப்போதும் நிற்க வைத்துவிடும் தன்மை மிக்கது. நூலுக்கான சமர்ப்பணத்தில் அவர் “அதிருஷ்ட்டங்கள் வந்து நான் அறியாமைக்குள் அமிழ்ந்து போகாது என்னைத்தடுத்தாட்கொண்ட துரதிருஷ்ட்டங்களுக்கு’ என்று நூலினைத்தனக்கேற்பட்ட துரதிருஷ்ட்டங்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார். நான் அறிந்த வரையில் இவ்விதம் துரதிருஷ்ட்டங்களு நூலொன்றைச் சமர்ப்பணம் செய்த எழுத்தாளரென்றால் அவர் இவராக மட்டுமேயிருப்பாரென்று எண்ணுகின்றேன்.
இக்கவிதைத்தொகுதியிலுள்ள் இவரது கவிதைகள் பல புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வு பற்றிப்பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக ‘பொறியியலாளன்’, ‘அகதி’, ‘ஒரு சுயதரிசனம்’, மற்றும் ‘ஒரு Academic இன் ஆதங்கம்'(நூலில் acadamic என்று அச்சுப்பிழையேற்பட்டுள்ளது) ஆகிய கவிதைகளைச்சுட்டிக்காட்டலாம். கவிஞர் கனடாவுக்கு வந்த புதிதில் எழுதப்பட்ட கவிதைகள் என்பதால் அக்காலகட்டத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆவணங்களாகவுமிவற்றைக்கொள்ளலாம்.
ஐயாவின் மரணத்துக்குப் பிறகு எனக்கு மிச்சமாகிப் போனவை அவரது நினைவும்,அவர் பாவித்த ஒரு பழைய சைக்கிளும்தான். முன்பே சைக்கிள் எடுத்து ஓடித்திரிய வீட்டிலே எனக்குக் கட்டுப்பாடிருந்தது. இப்போது அம்மா பெரும்பாலும் தன் சோகத்துள் இருந்த நிலையில் நான் கட்டறுத்தவனாய் திசையெங்கும் அலைந்து திரிந்தேன். இப்பவோ அப்பவோ ஒருபொழுதில் என் குடும்பத்தாருடன் காரிலும்,பஸ்ஸிலுமாய் நான் கலகலத்துச் சென்ற பாதைகளின் காடும்,வயலும்,வெளியும் பேசிய மௌனத்தின் சுவை என் அலைவின் தனிமையில் எனக்குச் சுகிப்பாயிற்று. மாலையின் மஞ்சள் வெளிச்சங்களில் மட்டுமில்லை,நிலாவின் மென்னொளி இரவுகளும்கூட என் அலைதல் காலமாயிற்று. கதைகளிலும்,கட்டுரைகளிலும் வாசித்து ரசித்த நிலக் காட்சிகளின் நிதர்சனம் மேலும்மேலுமாக இயற்கையின்மீதான என் ருசியினை ஏற்றிற்று. பள்ளிப் பாடங்கள் தவிர்ந்த புத்தக வாசிப்பும்,பள்ளிக்குச் செல்லாமலே மேற்கொண்ட ஊர் அலைவும் எனக்குள் ஒரு புதிய உலகத்தைத் திறந்தபோதும்,அதை சரியாகப் புரிந்துகொள்ள முடியாதவனாகத்தான் நான் இருந்தேனென்று நினைக்கிறேன். ஒரு இலக்கு நோக்கியல்லாமல் வெறும் அலைதலாக அது இருந்தது. அப்படியேதாவது பலன் அதிலிருக்குமாயிருந்தாலும் அதன் பேறு உடனடியாக அறுவடைக்குச் சாத்தியமாவதுமல்ல. பன்னிரண்டு வயதில் ஒரு செல்நெறியை நான் உணர்ந்து உள்வாங்கிவிட முடியாது. அதற்கான காலம் வரவேண்டியிருந்தது.
எழுத்தாளர் ராஜாஜி ராஜகோபாலனின் ‘ ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம்’ அண்மையில் வாசித்தேன். கவிஞரின் கவிதைகள் ஈழத்தமிழர்களின் போராட்டம் பற்றி, அதன் விளைவுகள் பற்றி, காதலைப்பற்றி, அதன் இழப்பு பற்றி, சூழற் பாதிப்பைப்பற்றி, புலம் பெயர் தமிழர்களின் வாழ்க்கை பற்றி, ஈழத்தமிழர்கள் மத்தியில் நிலவும் உணவு மற்றும் போக்குவரத்து போன்றவை பற்றி, பெண் உரிமை பற்றி, தமிழர்களின் மத்தியில் நிலவும் எதிர்மறையான அமசங்கள் பற்றி, வாழ்வுக்கு உதவிடும் ஆரோக்கியமான சிந்தனைகள், உடற் பயிற்சி பற்றி….. இவ்வாறு பல்வேறு விடயங்களையும் பற்றி எனப்பலவற்றைக் கூறுபொருளாகவெடுத்து விபரிக்கின்றன. கவிஞரின் பலவகைப்பட்ட சிந்தனைகள் வாசிப்புக்கு விருந்தாகின்றன.
தொகுப்பிலுள்ள கவிதைகளில் ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டம் பற்றி, யுத்தத்தின் முடிவின் பின்னரான அவர்களது நிலைமை பற்றிக்கூறும் கவிதைகளாக ‘அம்மா மெத்தப் பசிக்கிறதே’, ‘ஓ தமிழகமே’, ‘தசாவதாரம்’, யாரடியம்மா ராசாவே’, போன்றவற்றைக்குறிப்பிடலாம். .’அரசடி வைரவர்’ தமிழர்கள் மத்தியில் நிலவும் வைரவ வழிபாடு பற்றி அங்கதச்சுவையுடன் விபரிக்கும்.
அத்தியாயம் மூன்று: மோகப் புயல்!
[ ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவரான அறிஞர் அ.ந.கந்தசாமி புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் எமிலி ஸோலாவின் ‘நானா’ நாவலை மொழிபெயர்த்துச் ‘சுதந்திரன்’ பத்திரிகையில் வெளியிட்டார். அ.ந.க. பல மொழிபெயர்ப்புகளைப் பணிநிமித்தமும், எழுத்துக்காகவும் செய்துள்ளாரென்று அறிய முடிகிறது. அவற்றில் பெட்ராண்ட் ரஸலின் ‘யூத அராபிய உறவுகள்’, சீனத்து நாவலான ‘பொம்மை வீடு’, மேலும் பல கவிதைகள், மற்றும் ‘சோலாவின் ‘நானா’ போன்றவற்றைப் பற்றிய தகவல்களே கிடைக்கப்பெறுகின்றன. அ.ந.க.வின் ‘நானா’வின் , எமக்குக் கிடைத்த பகுதிகளை’ ஒரு பதிவுக்காக பதிவுகளில் பதிவு செய்கின்றோம்.]
பாரிஸ் நகரின் ஒரு முக்கிய்மான வீதியில் அமைந்திருந்த ஒரு பெரிய மாடி வீட்டின் இரண்டாவது மாடியில் வசித்து வந்தாள் நானா. நானாவுக்கு இந்த வீட்டை எடுத்துக் கொடுத்து உதவி செய்தவன் மாஸ்கோ நகரில் இருந்து வந்த ஒரு வியாபாரி. வீட்டுக்கு வேண்டிய தட்டுமுட்டுச் சாமான்கள் எல்லாவற்றையும் அவன் வாங்கியிருந்தான். பாரிஸ் நகருக்கு வந்த மாஸ்கோ வியாபாரி வந்த சமயம் மாரிகாலமாக இருந்ததால் கடுமையான மழை பொழிந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில்தான் நானா அவன் வசத்தில் சிக்கினாள். ஒரு சிலரிதைத் தலைகீழாகத் திருப்பி நானாவிடம் மாஸ்கோ வியாபாரி சிக்கினான் என்றும் கூறினார்கள். ஆனால் மாஸ்கோ வியாபாரியிடம் நானாவும், நானாவிடம் மாஸ்கோ வியாபாரியும் சிக்கினார்களென்று வைத்துக் கொள்வதுதான் பொருத்தமாயிருக்கும்.
‘திறனாய்வு என்றால் என்ன?’ என்னும் நூலுக்கான அணிந்துரையில் கலாநிதி கா.சிவத்தம்பி அவர்கள் பின்வருமாறு கூறுவார்: ‘… இந்த எழுத்துக்கள் பற்றிய சுய மதிப்பீட்டில் இவர் விமர்சனம் திறனாய்வு (Criticism)) என்ற பதத்தைத்தவிர்த்து மதிப்புரை (Review) என்ற பதத்தினையே பயன்படுத்தி வருகின்றார்…’ இக்கூற்றில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் ‘விமர்சனம்’, ‘திறனாய்வு’ ஆகிய பதங்களை ஒரே அர்த்தம் கொண்டவையாகப் பயன்படுத்துகின்றார்.
கலை, இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் “திறனாய்வு (தமிழ்) விமர்சனம் (வடமொழி) ஆகிய இரண்டு பதங்களும் ஒரே பொருளைத்தான் குறிக்கின்றன. நமது பழைய தமிழ் நூல்களில் ‘விமரிசன்’, ‘விமரிசனம்’ என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ‘ என்பார் [‘திறனாய்வு என்றால் என்ன’; பக்கம் 27].
எழுத்தாளர் சுபைர் இளங்கீரனும் தனது ‘திறனாய்வு’ என்னும் கட்டுரையில் திறனாய்வு , விமர்சனம் என்னும் சொற்பதங்களை ஒரே அர்த்தத்தில் மாறி மாறிப்பயன்படுத்துவதை அவதானிக்கலாம் (‘நூல்: தேசிய இலக்கியமும், மரப்புப்போராட்டமும்’; பக்கம் 88]. இக்கட்டுரையின் மூல வடிவம் ‘புதுமை இலக்கிய மலர் (1962)’ தொகுப்பில் வெளியானதென்பதும் குறிப்பிடத்தக்கது.
வெளிதனில் விரையு மிந்த வுலகுகளிதனில் மூழ்கிடப் பிறந்ததே சித்திரை.மன்மத ஆண்டில் மகிழ்ச்சி நிறைந்துஇத்தரை எங்கும் இன்பம் பூத்துஇனம் மதம் மொழி மற்றும்வர்க்கம், வருணம் என்றே எங்கும்பிரிவுகள் மலிந்த…
கனடாத் தமிழ் இலக்கியம் பற்றி அறிய வேண்டுமானால் இதுவரையில் கனடாவில் வெளிவந்த தமிழ்ப்பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்கள், இணைய இதழ்கள், கையெழுத்துச்சஞ்சிகைகள் போன்றவற்றைப்பற்றிய முழு விபரங்களும் அறியப்பட்டு அவை பற்றி மேலதிக ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். அவ்விதம் செய்யாமல் பொதுவாக அறிந்த விடயங்களை மையமாக வைத்துக் கட்டுரைகள் எழுதுவது உண்மை நிலையினை எடுத்துக்காட்டுவதாக அமையாது. கனடாத் தமிழ் இலக்கியம் பற்றி அறிய விரும்புபவர்களுக்குப் ‘படிப்பகம்’ மற்றும் ‘நூலகம்’ இணையத்தளங்கள் நல்லதோர் ஆரம்பமாக அமையுமென்பதென் எண்ணம். ஏனெனில் மேற்படி இணையத்தளங்களில் புலம் பெயர்ந்த தமிழர்கள் வெளியிட்ட சஞ்சிகைகள், ஈழத்தில் வெளியான சஞ்சிகைகள் போன்ற பலவற்றை ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றார்கள்; வருகின்றார்கள். இவை பற்றிய முழுமையான ஆவணக்காப்பகங்களாக மேற்படி தளங்களைக்கூற முடியாவிட்டாலும், இயலுமானவரையில் கிடைத்தவற்றைப் பதிவு செய்திருக்கின்றார்கள். உதாரணமாகக் கனடாவிலிருந்து வெளியான பின்வரும் ஊடகங்களைப்பற்றிய பதிவுகளை ‘படிப்பகம்’ இணையத்தளத்தில் காணலாம்:
அறுபதுகளின் இறுதியில் என்று நினைக்கின்றேன் அப்பொழுதுதான் நான் முதன் முதலாக எழுத்தாளர் ஜெயகாந்தனை அறிந்துகொண்டது. ஆனந்த விகடனில் முத்திரைக்கதைகளாக வெளிவந்த ஜெயகாந்தனின் ‘கோகிலா என்ன செய்து விட்டாள்?’. ‘ஆடும் நாற்காழிகள் ஆடுகின்றன’ போன்ற குறுநாவல்களைப்பற்றி அப்பாவும், அம்மாவும் உரையாடிக்கொண்டிருந்தபோதுதான் அவரது பெயரினை நான் அவ்விதம் அறிந்துகொண்டேன். ஆனால் நான் முதலில் வாசித்த அவரது முதலாவது படைப்பு ராணி முத்து வெளியீடாக வெளிவந்த ‘காவல் தெய்வம்’ என்ற தொகுப்புத்தான். அந்தத்தொகுப்பில் காவல் தெய்வம் குறுநாவலுடன் அவரது இன்னுமொரு குறுநாவலான ‘கருணையினால் அல்ல’ குறுநாவலையும் இணைத்து ராணிமுத்து பதிப்பகம் வெளியிட்டிருந்தது. கை விலங்கு என்ற பெயரில் வெளியான அவரது குறுநாவல்தான் காவல் தெய்வம் என்ற பெயரில் ராணிமுத்து பிரசுரமாகவும், திரைப்படமாகவும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அவரது இன்னுமோர் ஆரம்பகாலத்து நாவலான ‘வாழ்க்கை அழைக்கிறது’ நாவலும் ராணி முத்து வெளியீடாக வெளியானது.
இவ்விதமாக ஜெயகாந்தனுடன் எனது பயணம் ஆரம்பமாகியது. அதன் பின்னர் தினமணிக்கதிர் ஜெயகாந்தனின் புகழ்பெற்ற சிறுகதைகள் பலவற்றை மீள்பிரசுரம் செய்தபொழுது அவற்றை வாசித்தேன். ‘ஒரு பிடி சோறு’, ‘மவுண்ட்ரோடு மைக்கல்’, ‘டிரெடில்’, ‘பிணக்கு’, ‘ராசா வந்திட்டாரு’ போன்ற சிறுகதைகளைப்படித்தது அப்பொழுதுதான். தினமணிக்கதிரில் தொடராக வெளிவந்து பலத்த வாதப்பிரதிவாதங்களை எழுப்பிய ஜெயகாந்தனின் ‘ரிஷி மூலம்’ குறுநாவலினையும் மறப்பதற்கில்லை. அக்காலகட்டத்தில் ஆனந்த விகடனில் வெளியான அவரது சிறுகதையான ‘ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது’ வாசித்தது நினைவிலுள்ளது.
“அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே கேள்வி ஒன்று கேட்கலாமா உன்னைத்தானே.? ” எனக்கேட்ட கமலினி செல்வராசன் அத்தானிடமே சென்றார். திருமதி கமலினி செல்வராசன் கொழும்பில் மறைந்தார் என்ற செய்தி இயல்பாகவே கவலையைத்தந்தாலும், அவர் கடந்த சில வருடங்களாக மரணத்துள் வாழ்ந்துகொண்டே இருந்தவர், தற்பொழுது அந்த மரணத்தைக்கடந்தும் சென்று மறைந்திருக்கிறார் என்றவகையில் அவரது ஆத்மா சாந்தியடையட்டும் எனப்பிரார்த்திப்போம்.
ஈழத்தின் மூத்த தமிழ் அறிஞர் தென்புலோலியூர் கணபதிப்பிள்ளையின் புதல்வி கமலினி, இயல்பிலேயே கலை, இலக்கிய, நடன, இசை ஈடுபாடு மிக்கவராகத் திகழ்ந்தமைக்கு அவரது தந்தையும் வயலின் கலைஞரான தாயார் தனபாக்கியமும் மூலகாரணமாக இருந்தனர். எனினும் புலோலியூர் கணபதிப்பிள்ளையின் நெருங்கிய நண்பராகவிருந்த பல்கலை வேந்தன் சில்லையூர் செல்வராசன், அந்த நெருக்கத்தை அவர் புதல்வியின் மீதும் செலுத்தியமையினால், ஏற்கனவே ஜெரல்டின் ஜெஸி என்ற மனைவியும் திலீபன், பாஸ்கரன், முகுந்தன், யாழினி ஆகிய பிள்ளைகள் இருந்தும் கமலினியை கரம் பிடித்தார்.
கலைத்தாகம் மிக்க, கமலினி – களனி பல்கலைக்கழக பட்டதாரியாகி ஆசிரியராகவும் பணியாற்றியவர். தந்தை வழியில் தமிழ்த்தாகத்தை பெற்று வளர்ந்த கமலினி தாய்வழியில் இசை ஞானமும் , கணவர் சில்லையூர் வழியில் கலைத்தாகமும் பெற்று பல்துறை ஆற்றல் மிக்கவராக திகழ்ந்தார்.
இலங்கைத்தமிழ்க்கவிதை வரலாறு, இலங்கைத்தமிழ்க்கவிதை போன்ற தலைப்புகளில் தொகுப்புகளை வெளியிடுவோர் கவனத்துக்கு சில கருத்துக்களைக்கூற விரும்புகின்றேன். இவ்விதமான பொதுவான தலைப்புகளைக்கொடுத்துவிட்டு, இதுவரை கால இலங்கைத்தமிழ்க்கவிதைக்கு வளம் சேர்த்த கவிஞர்களின் கவிதைகள் எதுவுமின்றித்தொகுப்புகளை வெளியிடுவதன் மூலம் நீங்கள் புரியும் முக்கியமான தவறாக நான் கருதுவது எதிர்காலச்சந்ததிக்கு ஈழத்துத்தமிழ்க்கவிதை பற்றிய பிழையான பிம்பத்தினைச்சித்திரிக்கின்றீர்கள் என்பதாகும். அடுத்த தவறாக நான் கருதுவது: எந்தவிதப்பயனையும் எதிர்பாராது தம் வாழ்வினை எழுத்துக்காக அர்ப்பணித்து மறைந்த படைப்பாளிகளின் படைப்புகளை இருட்டடிப்பு செய்வதன் மூலம் அவர்களை அவமதிப்பு செய்கின்றீர்கள் என்பதாகும். முக்கியமான காரணங்களிலொன்று: இவ்விதமான தொகுப்புகளுக்காகப் படைப்புகளைச் சேகரிப்பவர்கள் முறையான ஆய்வுகளைச்செய்வதில் ஆர்வமற்று, நூல்களாகக வெளிவந்த கவிஞர்களின் தொகுப்புகளை மட்டுமே கவனத்திலெடுத்து, தொகுப்புகளை விரைவிலேயே கொண்டுவந்து அத்தொகுப்புகள் மூலம் தம்மை இலக்கியத்தில் நிலைநிறுத்த வேண்டுமென்ற அவாவுடன் செயற்படுவதுதான். ஈழத்துத்தமிழ்க்கவிதை, சிறுகதை, நாடகம், நாவல் , விமர்சனம், மொழிபெயர்ப்பு என்று பல் துறைகளிலும் நூல்களாக வெளிவராத எத்தனையோ படைப்பாளிகளின் படைப்புகள் சஞ்சிகைகள், பத்திரிகைகள், மலர்கள் என்று பல்வேறு வகைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இலங்கை தேசிய சுவடிகள் திணைக்களம் மற்றும் படிப்பகம், நூலகம் போன்ற இணைய நூலகங்கள், வலைப்பூக்கள், இணைய இதழ்கள் என்று பல்வேறு ஊடகங்களில் கூகுள் தேடுபொறி மூலம் சிறிது தேடினாலே உங்களால் பல படைப்புகளை எடுத்துக்கொள்ள முடியும்.