நூல் அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலை’ நொயல் நடேசனின் புதிய நாவல் பற்றிய ஒரு பார்வை

நூல் அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலை‘அசோகனின்வைத்தியசாலை’என்ற நாவல், அவுஸ்திரேலியாவில், மிருக வைத்தியராகவிருக்கும், இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து அங்குவாழும் நொயல் நடேசனின் மூன்றாவது நாவலாகும். இந்த நாவலுக்கு, இதுவரை ஒரு சிலர் முகவுரை, கருத்துரை, விமர்சனம் என்ற பல மட்டங்களில் தங்கள் கருத்துக்களைப் படைத்திருக்கிறார்கள். இந்த நாவலுக்கு, இன்னுமொரு புலம் பெயர்ந்த எழுத்தாளர் என்ற விதத்தில், இவரின் நாவல் பற்றிய சில கருததுக்களையும, இவருடைய நாவலில் படைக்கப் பட்டிருக்கும் பெண் பாத்திரங்கள் பற்றி, எனது சில கருத்துக்களையும் சொல்ல வேண்டுமென்று பட்டதால், இந்தச் சிறு விமர்சனத்தை வைக்கிறேன்.  அவுஸ்திரேலியா, அமெரிக்கா,நியுசீலாந்து, கனடா போன்ற ஒரு புதிய உலகம். அவுஸ்திரேலியா கிட்டத்தட்ட இருநூறு வருடங்களுக்குக் கொஞ்சம் கூடுதலான சரித்திரத்தைக் கொண்டது. உலகின் பல தரப்பட்ட மக்களும் குடியேறிய நாடு. பல நாடுகளிலுமிருந்து போன மக்கள் தங்களுடன் தரப்பட்ட கலை,கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்டு சென்றவர்கள். தாங்கள் கொண்ட சென்ற புகைப்படத்திலுள்ள தங்களின் இளமைக் கால நினைவுகளுடன், தங்கள் பழைய சரித்திரத்தைப் பிணைத்துக் கொண்டவர்கள்.

Continue Reading →

நூல் அறிமுகம்: “உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு – தேவபாகமும் மானுடபாகமும்”

1_book_sivasampu5.jpg - 20.68 Kbஈழத்து இலக்கியச் சூழலில் மிகப் பெரும்பாலும் தொகை நூல்களின் அல்லது திரட்டு நூல்களின்  வருகை அரிதானதாகும். இதற்கு இரண்டு பிரதான காரணங்களைச் சுட்டிக்காட்டமுடியும்.

1) தொகை நூலின் உருவாக்கத்திற்கான தேடல்
2) தொகை நூலின் உருவாக்கத்திற்கான செலவு

குறித்த திரட்டு நூல் உருவாக்கத்திற்கான தேடல் என்பது அந்நூல் உருவாக்கத்தில் மிகுந்த ஈடுபாடும், அர்ப்பணிப்புணர்வும், முனைப்பும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகக் கூடியதென்று. நூலுருவாக்கத்திற்கான செலவென்பதும் ஒப்பீட்டளவில் மிக அதிகமானதொன்று. எவராவது வெளியீட்டுச் செலவினைப் பொறுப்பேற்றுக் கொள்ள முன்வந்தால் மட்டுமே இவ்வாறான நூல்கள் வெளிவருவது சாத்தியமாகும். இந்தப் பின்புலத்திலேயே அண்மையில் காங்கேயன் நீலகண்டன், செல்லத்துரை சுதர்சன் ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு  வெளிவந்திருக்கும் “உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு – தேவபாகமும் மானுடபாகமும்”  எனும் திரட்டு நூல் முக்கியத்துவம் பெறுகின்றது.

பத்தொன்பதாம் நூற்றாண்;டில் ஈழத்தில் சிறப்புற மிளிர்ந்த தமிழ்ச்சுடர் என வருணிக்கப்படும் சிவசம்புப் புலவர் (1829 -1910) யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பகுதியில் அமைந்திருக்கும் உடுப்பிட்டியில் பெரும்பிரபு அருளம்பலமுதலியாருக்கும் கதிராசிப்பிள்ளைக்கும் மகனாகப் பிறந்தார். இவர் நல்லூர் சரவணமுத்துப் புலவர், சம்பந்தபுலவர் ஆகியோரது மாணாக்கராய்ப் பயின்றவர்.

Continue Reading →

மல்லாங்கிணறு தந்த தமிழச்சி தங்கபாண்டியனும் கவிதையும்!

தமிழச்சி தங்கபாண்டியனின் - வெங்கட் சாமிநாதன் -தமிழச்சி தங்கபாண்டியனின் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்த போது எனக்கு அவரை அவரை அறிமுகப்படுத்தியது கணையாழியில் அப்போது இருந்த யுகபாரதி. அதற்கு முன்னர் அவரை ஒரு இலக்கிய விழாவில் நிகழ்ச்சிகள் அறிவிப்பாளராகப் பார்த்தது நினைவுக்கு வந்தது. அவ்விழாவில் அவரது பிரசன்னம் அவருக்குத் தரப்பட்ட பொறுப்பிற்குள் அடங்கியதாக இருக்கவில்லை. எந்த கட்டத்துக்குள்ளும் அடங்காத ஆளுமை அவரது. காரணம் அவரது இயல்பான எப்போதும் காணத்தரும் சிரித்த முகம், தடையில்லாது சரளமாகப் பிரவாஹிக்கும்  வாசாலகம், துடி;ப்பான செயல் திறன் எல்லாம் ஒருவரிடத்தில் காணும் முதல் அனுபவம். பேச்சுத் திறன் என்பது,  அனேகமாக மேடை ஏறும் எல்லாத் தமிழரிடமும் காணும் ஒன்றுதான் என்றாலும் இங்கு தமிழச்சியிடம் கொஞ்சம் அதிகமாக, நயத்துடனுன் அழகுடனும்  வாய்த்துள்ளது என்று எண்ணி மறந்து விட்டது இப்போது திரும்ப நினைவில் தலை தூக்கியது. இந்த குணங்களில் பெரும்பாலானவை நகரத்து, அதிலும் சென்னையின் விளைச்சல் அல்லவா? இது எப்படி ஒரு மல்லாங்கிணற்றுப் பயிரில் காண்கிறது என்று ஒரு கேள்வி,  தமிழச்சியின்  எஞ்சோட்டுப் பெண் தொகுப்பின் ஒவ்வொரு கவிதையைப் படிக்கும் போதும் எழுந்து நெற்றி சுருங்கியது. அதே சமயம் அது சந்தோஷமாகவும் வியப்பாகவும் இருந்தது. பட்டம் பெற்ற ;பெண், கல்லூரியில் ஆங்கிலம் போதிக்கும் பெண், உலகம் சுற்றும் பெண் தான் சிறு பிராயத்தில் வாழ்ந்து அனுபவித்த தோழிகளையும், அப்பத்தாவையும்,  வரப்புச் சண்டையில் கால் வெட்டுப்பட்ட சித்தப்பாவையும், மெதுவடையை புடவைத் தலைப்பில் முடிந்து வைத்துக்கொடுத்த முனியனூர்க் கிழவியையும், எள்ளுருண்டை கடித்துப் பகிர்ந்து கொண்ட எஞ்சோட்டுத் தோழியையுமா கவிதை எழுதுவார்கள்? எழுத எத்தனை இல்லை? பெண்ணீயம், முற்போக்கு, கண்ணகி, ஆணாதிக்கம், போஸ்ட் மாடர்னிஸம், ஸ்ட்ரக்சுரலிஸ்ம், தமிழ் எனது மூச்சு, படிமம் கல்தோன்றி…….இத்யாதி எத்தனையொ கொட்டிக்கிடக்கும் போது? கோவில் பட்டிக் காரர்கள் கூட மாந்த்ரீக யதார்த்தம், பேப்பரில் கை வைத்தால் தானே ப்ளாஞ்செட் மாதிரி எழுதிக்கொள்ளுமாமே. ஆனால், எஞ்சோட்டுப் பெண் தொகுப்பில் உள்ள கவிதைகள் அத்தனையும் தமிழச்சியின் இதயத்திலும் நினைவுகளிலும் இன்னமும் நிறைந்திருப்பது மல்லாங்கிணற்று கிராமத்தின் தன் இளம் பிராய அனுபவங்களும், அங்கு தன்னிடம் இயல்பான பாசம் காட்டிய மனிதர்களும் தான். அந்த வாழ்க்கை தான். நகரப் பூச்சு அற்ற சக மனித பாசம்  தான். இளம் பிராய அனுபவங்களும், வாழ்க்கையும் மல்லாங்கிணற்று கோடை வெயிலின் பொசுக்கலையும் மீறி இனிமையானவைதான்

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 48: பறவைகளின் துயரங்களை நாமறிவதில்லை!

வாசிப்பும், யோசிப்பும் 48: பறவைகளின் துயரங்கள் நாமறிவதில்லை!

‘மேலும் அறியாத ஒன்று’ இத்தலைப்பிலுள்ள கவிதை கருணாகரனின் ‘ஒரு பயணியின் போர்க்காலக்குறிப்புகள்’ தொகுப்பிலுள்ள கவிதைகளிலொன்று. இக்கவிதையினை வாசிக்கும்போது ஏற்பட்ட என் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதுதான் இப்பதிவின் நோக்கம். அதற்கு முன:

பால்யகாலத்தில் என் வாழ்வு வவுனியா நகரிலுள்ள குருமண்காடு என்னும் காடு மண்டிக்கிடந்ததொரு சூழலில் கழிந்தது. பல்லினப் பறவைகளும், மிருகங்களும் மலிந்த கானகச்சூழல். எங்கள் வீட்டிலிருந்த கொவ்வை மரத்தில் எப்பொழுதும் கிளிகள் படையெடுத்த  வண்ணமிருக்கும். மாம்பழத்திகளும், மைனாக்களும், குக்குறுபான்களுமெனப் பறவைகளின் இராச்சியத்தில் மூழ்கியிருந்த கானகச்சூழல். ஆனால் அக்காலகட்டத்தில் நான் இயற்கையை இரசித்த அளவுக்கு, அங்கு வாழ்ந்த புள்ளினங்களின், மிருகங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியெல்லாம் சிந்தித்ததில்லை. ஆனால் இன்று நான் உலகின் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற மாநகரொன்றில் வசிக்கின்றேன். ஆரம்பத்தில் இயற்கையுடன் வாழ்ந்த சூழலைத் தவற விட்டு விட்டேனோ என்று மனம் சஞ்சலப்பட்டதுண்டு. ஆனால் மாநகரினைக் கூர்ந்து அவதானிக்கத் தொடங்கியதும் எனக்குப் பிரமிப்பே ஏற்பட்டது. குழி முயல்கள், சிறு நரிகள், கயோட்டி என்னும் ஒருவகை நாயின மிருகங்கள், கடற் பறவைகள், புறாக்கள், பல்வேறு வகையான வாத்தினங்கள், பல்வேறு வகையான சிட்டுக்குருவிகள், ‘ரொபின்’ பறவைகள், பருந்தினங்கள், அணில்கள், ரக்கூன்கள், மான்கள்..இவ்விதம் பல்வேறு வகையான பறவைகளை, மிருகங்களை அவதானிக்க முடிந்தது.

Continue Reading →

மல்லிகை ஜீவாவுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி 88 வயது பிறக்கிறது!

மல்லிகை ஜீவாவுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி 88 வயது பிறக்கிறது!முருகபூபதிஇலங்கையின் மூத்த எழுத்தாளரும் 45 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து மல்லிகை கலை, இலக்கிய மாத இதழை வெளியிட்ட அதன் ஆசிரியருமான டொமினிக்ஜீவாவுக்கு எதிர்வரும் ஜூன் 27 ஆம் திகதி 88 வயது பிறக்கிறது. 1927 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்த டொமினிக்ஜீவா முதலில் சிறுகதை எழுத்தாளராகவே இலக்கியத்துறையில் பிரவேசித்தவர். இலங்கை கம்யூனீஸ்ட் கட்சி மற்றும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தமக்கு நாளாந்தம் வருவாய்தரும் தொழிலையும் கைவிட்டு முழுநேர எழுத்தாளராக பல தசாப்தகாலமாக அயராமல் உழைத்தார். இலங்கையில் கலாசார அமைச்சின் சாகித்திய மண்டலம் உருவானதும் தனது தண்ணீரும் கண்ணீரும் முதலாவது சிறுகதைத்தொகுதிக்காக சாகித்திய விருதும் பெற்றார். இலங்கையில் தமிழ் இலக்கியத்தில் சிறுகதைக்காக முதல் முதலில் சாகித்திய விருதுபெற்றவரும் டொமினிக் ஜீவா என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தில் முதலில் கஸ்தூரியார் வீதியிலிருந்தும் பின்னர் காங்கேசன்துறை வீதியில் ஒரு ஒழுங்கைக்குள்ளும் இருந்து பல வருடங்களாக வெளியான மல்லிகை மாத இதழ் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கியிருக்கிறது. இலங்கையில் நாடுபூராகவும் தெருத்தெருவாக அலைந்து மல்லிகையை விநியோகித்து தமிழ் இலக்கியத்தை வளர்த்தவர் அதன் ஊடாக ஏராளமான புதிய படைப்பாளிகளை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையும் ஜீவாவையே சாரும். அதனால் மல்லிகைஜீவா என்றே அழைக்கப்பட்டார். வடக்கில் போர்மூண்டிருந்த காலப்பகுதியிலும் அச்சுக்காகிதாதிகளுக்கு பலத்த தட்டுப்பாடு நிலவிய காலத்திலும் பாடசாலை அப்பியாசக் கொப்பித்தாள்களில் மல்லிகையை அச்சிட்டு வெளியிட்ட சாதனையாளர் மல்லிகை ஜீவா பல   நெருக்கடிகளுக்கு மத்தியில் கொழும்புக்கு இடம்பெயர்ந்து புறக்கோட்டை ஸ்ரீகதிரேசன் வீதியில் தொடர்ந்தும் பல வருடகாலமாக மல்லிகை இதழை வெளியிட்டுவந்தார்.

Continue Reading →

கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய ‘ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி….

கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய ;ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....   - வ.ந.கிரிதரன் -dr_n_subramaniyan.jpg - 12.37 Kbகலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய ‘ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்’ என்னும் நூலை அண்மையில் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததது. குமரன் புத்தக இல்லம்’ பதிப்பகத்தினரால் தமிழகத்தில்; 2009இல் வெளியான நூலது. இதுவரையில் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றிப் பலர் எழுதியிருக்கின்றார்கள். இரசிகமணி கனக செந்திநாதன், சில்லையூர் செல்வராசன் என்று பலர், அவர்களது நூல்கள் பெரும்பாலும் ஈழத்துத் தமிழ் நாவல்கள் பற்றிய பொதுவான அறிமுக நூல்களாகத்தான் அமைந்துள்ளன. அவற்றின் முக்கியம் ஈழத்துத் தமிழ் நாவல்கள் பற்றீய தகவல்களை வழங்குகின்றன என்பதில்தான் தங்கியுள்ளது. ஆனால் கலாநிதி நா.சுப்பிரமணியனின் மேற்படி நூல் அவற்றிலிருந்தும் பெரிதும் வேறுபடுவது நூலாசிரியரின் ஈழத்து நாவல்கள் பற்றிய திறனாய்வில்தான். ஈழத்துத் தமிழ் நாவல்களைப் பற்றிய தகவல்களை வழங்கி நல்லதோர் ஆவணமாக விளங்கும் அதே சமயம் ஈழத்துத் தமிழ் நாவல்களைப் பற்றிய நல்லதொரு திறனாய்வு நூலாகவும் இந்நூல் விளங்குகின்றது. அந்த வகையில் இந்த நூலின் முக்கியத்துவம் அதிகரிக்கின்றது. இதற்கு மிகவும் முக்கியமான காரணங்களிலொன்று: நூலாசிரியரின் இந்த நூலானாது அவர் தனது முதுகலைமானிப் பட்டப்படிப்புக்காக, இலங்கைப் பல்கலைக்கழகப் பேராதனை வளாகத்தில் , ஈராண்டுகள் (1970- 1972) நடாத்திய ஆய்வின் விளைவாகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையாகும். வெறும் ஆய்வுக்கட்டுரையாக இல்லாமல் அவரது கடும் உழைப்பினால் நல்லதொரு திறனாய்வு நூலாகவும் மேற்படி கட்டுரை வளர்ச்சியுற்றிருக்கின்றது.

Continue Reading →

இருக்கிற கடவுள்களும், இனி வரப் போகும் கடவுள்களும்! கை விட்ட தங்கர்பச்சானின் மனிதர்கள். தங்கர்பச்சான் கதைகள் தொகுப்பு

சுப்ரபாரதிமணியன்தங்கர் பச்சானின் முதல் சிறுகதைத் தொகுப்பு ” வெள்ளை மாடு ”  வெளிவந்த போது முந்திரித் தோட்டத்து மனிதர்களின் வாழ்வியலை  அவ்வளவு நகாசு தன்மையுள்ளதாக இல்லாமல் வெளிப்பட்டிருபதாக ஒரு விமர்சனம வந்தது, பின் நவீனத்துவ எழுத்து  தீவிரமாக இருந்த காலகட்டம் அது. பின்நவீனத்துவக் காலகட்டத்தில் கலை அம்சங்களும் நகாசுத்தன்மையும் கூட அவலட்சணமே.காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் விவரிப்பில் இலக்கண நேர்த்தியோ  நகாசோ எதிர்பார்பது ஒரு நாகரீக சமூகமாகாது. அந்தக் குறறச்சாட்டு போல் அக்கதைகள் இல்லை.பசியின் கோரம் அடுப்புக்குத் தெரியாது  தீவிரப் பிரச்சினைக்கு நகாசு தெரியாது. தங்கர்பச்சானின் கதாபாத்திரங்கள்  பின்நவீனத்துவம் கொண்டாடும் விளிம்பு நிலை மனிதர்களே. விவசாயக்கூலிகள், சம்சாரிகள், கரும்புத்தோட்டத் தொழிலாளர்கள், வேதனையிலேயே உழன்று கொண்டிருக்கும் பெண்கள் எனலாம். கொம்புக்கயிறு  இல்லாத மாடு அவலட்சணமாக இருப்பது போல் அவலட்சனமான விளிம்பு நிலை மக்கள் இவருடையது.

குடிமுந்திரி கதையில் முந்திரி   மரத்தின் மீது ஏறி நின்று நெய்வேலி  சுரங்கக கட்டிடங்களை, புகைபோக்கிகளைப்  பார்க்கும் சிறுவர்கள் போல தங்கர்பச்சான் தோளில் ஏறி நின்று வாசகர்கள்  கடலூர்  மக்களின் வாழ்வியலைப் பார்க்க முடிகிறது.இதில் இவர் கையாளும் மொழி  உணர்ச்சிப்பிழமான கதை சொல்லல் மொழியாகும்.அந்த பாதிப்பே அவரின் திரைப்பட மொழியில் பல சமயஙக்ளில் உணர்ச்சி மயமான காட்சி அமைப்புகளால்பாதிப்பு ஏற்படுத்தி பலவீனமாக்குகிறது.. திரை தொழில் நுட்பம் தீவிர இலக்கியத்திலிருந்து பிறந்தது எனப்தையொட்டிய அவரின் காமிராமொழியும், சொல்லும் தன்மையும் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளன.

Continue Reading →

கனடாவின் முதலாவது தமிழ் நாவல்” மண்ணின் குரல் பற்றிச் சில வார்த்தைகள்…

கனடாவின் முதலாவது தமிழ் நாவல்" மண்ணின் குரல் பற்றிச் சில வார்த்தைகள். - வ.ந.கிரிதரன் -கனடாவிலிருந்து வெளிவந்த முதலாவது தமிழ் நாவல் நானறிந்தவரையில் நான் எழுதிய சிறு நாவலான ‘மண்ணின் குரல்’ நாவலே. இதனைப் பற்றி ஒரு பதிவுக்காகக் குறிப்பிட விரும்புகின்றேன். இந்த நாவல் பத்து அத்தியாயங்களை உள்ளடக்கிய சிறு நாவல். நாற்பது பக்கங்களைக் கொண்டது. இந்நாவலின் முதல் ஆறோ அல்லது  ஏழோ அத்தியாயங்கள் மான்ரியாலிலிருந்து 1984, 1985 காலப்பகுதியில் வெளியான ‘புரட்சிப்பாதை’ என்னும் கையெழுத்துச்சஞ்சிகையில் வெளியாகின. ‘புரட்சிப்பாதை’ என்னும் கையெழுத்துப் பத்திரிகை அக்காலத்தில் மான்ரியாலில் இயங்கிய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கனடாக் கிளையினரின் கையெழுத்துச் சஞ்சிகையாக வெளியானது, அக்காலகட்டத்தில் கனடாவில் பல்வேறு ஈழ விடுதலைச் சார்ப்பு அமைப்புகளும் இயங்கி வந்தன. இந்தச் சஞ்சிகையை அக்காலகட்டத்தில் ஜெயந்தி, ரஞ்சன், சுந்தரி ஆகிய இளைஞர்களுடன் சேர்ந்து மேலும் சில இளைஞர்கள் நடாத்தி வந்தனர். இந்தக் கையெழுத்துப் பிரதியில் கவிதைகள் சில, கட்டுரைகள் சில மற்றும் ‘மண்ணின் குரல்’ என்னுமிந்தச் சிறு நாவல் ஆகியவற்றையும் எழுதியிருந்தேன். அக்காலகட்டத்தில் வெளியான எனது படைப்புகள் அனைத்தும் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினை வலியுறுத்துபவையாகவே அமைந்திருந்தன. அதற்காகவே எழுதப்பட்டவை அவை. ‘மண்ணின் குரல்’ சிறுநாவல் முடிக்கப்பட்டு , ‘புரட்சிப்பாதை’ கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான கவிதைகள், கட்டுரைகள் சிலவற்றை உள்ளடக்கி ‘மண்ணின் குரல்’ தொகுப்பு கனடாவில் 4.1.1987 அன்று வெளியானது. கனடாவில் றிப்ளக்ஸ் அச்சகத்தினரால் அச்சடிக்கப்பட்டு, மங்கை பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டது.  எனது நாவல்களான ‘மண்ணின் குரல்’, ‘வன்னி மண்’, ‘அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்’ , மற்றும் ‘கணங்களும் குணங்களும்’ ஆகியவை ஒரு தொகுப்பாக ‘மண்ணின் குரல்’ என்னும் பெயரில் தமிழகத்தில் 1998இல் ‘குமரன் பப்ளீஷர்ஸ்’ நிறுவனத்தால் வெளியிப்பட்டது.  இரண்டு ‘மண்ணின் குரல்’ என்னும் தொகுப்புகள் என் படைப்புகளைத் தாங்கி வெளிவந்துள்ளன. இரண்டு தொகுப்பிலும் உள்ள பொதுவான ஒரே படைப்பு ‘மண்ணின் குரல்’ நாவல்தான்.

Continue Reading →

தந்தையர் தினத்தினிலே….

நான் கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவனாகவிருந்தபோது என் தந்தையாரை (நடராஜா நவரத்தினம்) இழந்து விட்டேன்.. அவர் ஒரு நில அளவையாளராகவிருந்தார்.  அவர் மிகவும் உயரமானவர் (சுமார் ஆறடி உயரமெனலாம்; நான் அவரைவிட ஒர் அங்குலம் உயரத்தில் சிறியவன்.) எனக்கு எழுதுவதிலும் , வாசிப்பதிலும் இவ்வளவு தூரம் ஈடுபாடு தோன்றியதற்குக் காரணமே அப்பாதான். சிறுவயதிலிருந்தே வீடு நிறைய புத்தகங்களும் , சஞ்சிகைகளும்தாம். பொன்மலர், பால்கன் காமிக்ஸ் , அம்புலிமாமா தொடக்கம், விகடன், கல்கி, கதிர், கலைமகள், ராணி, ராணிமுத்து, மஞ்சரி, கலைக்கதிர், ஈழநாடு, சுதந்திரன், தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் என்று வீடே நிறைந்து கிடக்கும்.  எனது ஐந்து வயதிலேயே நாங்கள் வவுனியாவுக்கு இடம் மாறிச் சென்று விட்டோம், அம்மா ஆசிரியையாக வவுனியா மகா வித்தியாலயத்தில் பணிபுரிந்த காரணத்தால். வவுனியாவில் நாங்கள் குருமண்காடு என்னும் பகுதியில் அப்பொழுது வசித்து வந்தோம். ஒற்றையடிப் பாதையாகவிருந்த வீதியினைக் கொண்டிருந்தது குருமண்காடு அக்காலகட்டத்தில். சுற்றிவர விரிந்திருந்த கானகச் சூழல். பல்வேறு விதமான பறவையினங்கள் (நீர்க்காககங்கள், ஆலா, பருந்து, மாம்பழத்தி, நீண்ட வாற் கொண்டைக்குருவிகள், வவ்வால்கள், குக்குறுபான்கள், மரங்கொத்திகள், மீன் கொத்திகள், பலவேறு வகையான பாம்பினங்கள், குரங்கினங்கள் என விளங்கிய கானகச் சூழலில்
எம் வாழ்வு கழிந்தது.

Continue Reading →