பல படைப்பாளிகள் தமது இலக்கியப்பிரதிகளை எழுதும்பொழுது இயற்பெயரை விடுத்து புனைபெயர்களில் அறிமுகமாவார்கள். பலர் தமது பிறந்த ஊருக்குப்பெருமை சேர்க்கும் வகையில் தமக்குத்தாமே ஊருடன் இணைந்த புனைபெயர்களை சூட்டிக்கொள்வார்கள். பின்னாளில் அவர்களின் இயற்பெயரை பிறப்புச்சான்றிதழ் -பதிவுத்திருமண சான்றிதழ் – மரணச்சான்றிதழ்களில்தான் காணமுடியும். இலக்கிய வட்டத்திலும் குடும்ப மட்டத்திலும் புனைபெயரே நிலைத்துவிடும். கிழக்கு மாகாணத்தில் இஸ்மாயில் என்ற பெயரில் ஒரு எழுத்தாளர் இருந்தார் எனச்சொன்னால் எவருக்கும் தெரியாது. மருதூர்க்கொத்தனையா சொல்கிறீர்கள் என்று அவருக்கு மிகவும் நெருக்கமான சிலரே குறிப்பிடுவார்கள். கிழக்கு மாகாணத்தில் கல்முனைக்கு அருகாமையில் பெரிய நகரமும் அல்லாமல் சிறிய கிராமமாகவும் காட்சியளிக்காத கடலோர சிற்றூர் மருதமுனை. இந்த ஊரில் மருதூர் ஏ. மஜீத் – மருதூர்க்கனி – மருதூர் வாணன் என்ற பெயர்களில் எழுதியவர்களின் வரிசையில் முன்னோடியாக இருந்தவர் மருதூர்க்கொத்தன். 1935 ஜூன் மாதம் 6 ஆம் திகதி அநுராதபுரத்தில் பிறந்த இஸ்மாயில் என்ற மருதூர்க்கொத்தன் (இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால் 79 ஆவது வயதை குடும்பத்தினருடனும் இலக்கிய நண்பர்களுடனும் கொண்டாடியிருப்பார்.) 2004 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 19 ஆம் திகதி மறைந்தார்.
“watch our girls march fearless of the fight
Torch of learning burning ever bright” – இளவாலை கன்னியர் மடத்தின் பாடசாலைக் கீதம்.
இளவாலைக் கன்னியர் மடத்தில் குளிர் நிழல் பரப்பும் மகோக்கனி மரத்தில் சிறகடித்துத் திரிந்த வானம்பாடி ஊசிப்பனித் தேசத்தில் தரித்து நின்று தன் வாழ்வின் சோபனங்களைத் தொலைத்துவிட்ட துயரங்களின் துளிகளில் இந்தக் கவிதைத் தாள்கள் நனைந்திருக்கின்றன.
‘நடு இரவில்
எனக்கு மட்டும் சூரியன் உதிக்கிறான்
சூரியன் உதிக்கும் பொழுது
இருள் தோன்றுகின்றது’
என்ற நவஜோதியின் வரிகள் ஒரு பெண் கவியின் சூக்கும உலகின் சிக்கலான பரிமாணங்களைக் கோடிட்டுக் காட்டுகின்றன.
– அவ்வப்போது முகநூல் பக்கங்களில் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட பல்வேறு விடயங்கள் பற்றிய குறிப்புகளில் சிலவற்றை இம்முறை பதிவுகள் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமெனக் கருதுகின்றேன். –
நல்ல எழுத்தும், வாசிப்பும்!
நல்ல எழுத்து என்பது எப்பொழுதும் , வாழ்க்கை முழுவதும் ஒரு நண்பரைப்போல் கூட வருவது. இவ்விதம் வரக்கூடிய எழுத்துகளைத்தான் நான் நல்ல எழுத்து என்பேன். என்னைப் பொறுத்தவரையில் தத்தயேவ்ஸ்கியின் ‘குற்றமும், தண்டனையும்’, ‘அசடன்’, ‘கரமசோவ் சகோதரர்கள்’, டால்ஸ்டாயின் போரும், சமாதானமும், அன்னா கரீனினா, புத்துயிர்ப்பு , வால்ட்டயரின் ‘கேண்டிட்’, டானியல் டிபோவின் ராபின்சன் குரூசோ, ஹெமிங்வேயின் ‘கடலும், கிழவனும்’, ஜான் மாட்டலின் ‘பை’யின் வாழ்வு, எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘காலம்’, எஸ்.கே.பொற்றேகாட்டின் ‘ஒரு கிராமத்தின் கதை’, அதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீல கண்டப் பறவையைத் தேடி’, பாரதியார் கவிதைகள், ‘மோபிடிக்’, ஜானகிராமனின் ‘மோகமுள்’, ‘செம்பருத்தி’, அறிஞர் அ.ந.கந்தசாமியின் எழுத்துகள், ஜெயகாந்தனின் சிறுகதைகள், ‘ஒரு மனிதன், ஒரு வீடு , ஒரு உலகம்’ (நாவல்), ஜேர்சி கொசின்சிகியின் Being There போன்ற புத்தகங்களைக் கூறலாம். இவர்களை ஓர் உதாரணத்துக்குக் கூறினேன்.
ஆறறிவு படைத்த ஆண், பெண் ஆகிய இரு பாலாரும் மற்றைய ஓரறிவிலிருந்து ஐயறிவு வரையான உயிரினங்களைவிட மிகவும் விஞ்சிய நிலையில் இருந்து வாழ்ந்து வருகின்றனர். ஓரறிவிலிருந்து ஐயறிவு வரையான எல்லா உயிரினங்களிலும் ஆண், பெண் ஆகிய இனங்கள் உள்ளதென்பதும் நாம் அறிந்த உண்மையாகும். இவ்வாறான உயிரினங்கள் நிறைந்ததுதான் உலகம் என்றாகின்றது. இந்த ஆண், பெண் உறவுதான் உலகை நிலைக்க வைக்கின்றது. இவ்வுறவுக்கு ஏதுவான ஆண், பெண் இனங்களில் ஓர் இனம்தானும் இல்லையெனில் எல்லா இனங்களும் அழிந்து விடும். உயிரினங்கள் இன்றேல் உலகமும் இல்லையெனலாம்.
களவொழுக்கம்
பண்டைத் தமிழர் தம் வாழ்வியலை அகம், புறம் என இரு கூறாய் வகுத்து அறநெறியோடு, இயற்கை வழி நின்று வாழ்ந்து காட்டியுள்ளனர். புறம்- புறவாழ்வியலோடு இணைந்த ஆண்மை சார்ந்த பல்வேறு பணிகளும், வீரம் செறிந்த போரியல் மரபு பற்றியும் எடுத்துக் கூறும். இவை பற்றிச் சங்க நூலான புறநானூறு திறம்பட எடுத்துக் கூறுகின்றது. இங்கே ஆண்கள் முன்னிலை வகிப்பர். அகம்- அகவாழ்வான இன்ப உணர்வுகளோடு இணைந்த இல்வாழ்வு பற்றிய தகைமையைக் கூறும். இவை பற்றி அகநானூறு என்ற சங்க நூலில் விவரமான செய்திகளைக் காணலாம். இதில் ஆண்களும் பெண்களும் பங்கேற்பர்.
– இன்று – மே 31, 2014 -‘டொராண்டோ’வில் எழுத்தாளர் அகில், மருத்துவர் லம்போதரன் ஆதரவில் நடைபெற்ற மாதாந்த இலக்கிய நிகழ்வில் ஆற்றிய உரையின் முழுமையான வடிவம். நிகழ்வில் நேரப் பற்றாக்குறை காரணமாக கட்டுரை முழுவதையும் வாசிக்க முடியவில்லை. அதற்காக இக்கட்டுரை இங்கு முழுமையாக மீள்பிரசுரமாகின்றது. – வ.ந.கி –
புலம் பெயர் தமிழ் இலக்கியமும், புகலிடத் தமிழ் இலக்கியமும், புகலிட நாவல்களும் பற்றி….
இன்று உலகெங்கும் தமிழர்கள் புலம் பெயர்ந்து பரந்து வாழ்கின்றார்கள். சங்க காலத்திலிருந்து காலத்துக்குக் காலம் தமிழர்கள் புலம் பெயர்வது தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. ‘திரை கடலோடித் திரவியம் தேடினார்கள் அற்றைத் தமிழர்கள். பொருளியல் காரணங்களுகாக அன்று தமிழ் மன்னர்கள் அயல் நாடுகளின் மீது படையெடுத்து தமது ஆட்சியினை விஸ்தரித்தார்கள். அதன் காரணமாகத் தமிழர்கள் புலம் பெயர்ந்தார்கள். அந்நியர் படையெடுப்புகளால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு , நகரங்களுக்குப் புலம் பெயர்ந்தார்கள். பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது தமிழகத்திலிருந்து தமிழர்கள் பலர் இலங்கை, மலேசியா என்று பல்வேறு நாடுகளுக்குத் தோட்டத் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். இவ்விதமாகத் தொடர்ந்த தமிழ் மக்களின் புலம்பெயர்தலில் முக்கியமானதொரு நிகழ்வு கடந்த நூற்றாண்டின் இறுதியிலிருந்து ஆரமபித்த ஈழத்தமிழரின் பல்வேறு திக்குகளையும் நோக்கிய புலம் பெயர்தல்.
– யாழ். பொது நூலகம் இனவாதிகளினால் 1981 மே (31-05-1981) மாதம் எரிக்கப்பட்டு முப்பத்திமூன்று வருடங்களாகின்றன. அதன் நினைவாக இந்தப்பதிவு. –
எனக்கு அப்போது பதினைந்து வயதிருக்கும். நீர்கொழும்பில் எங்கள் வீட்டிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் புத்தளவெட்டு வாய்க்காலும் (டச்சுக்கார்கள் தமது கோட்டைக்குச் செல்வதற்காக தமது ஆட்சிக்காலத்தில் உருவாக்கியது) இந்து சமுத்திரமும் சங்கமிக்கும் முன்னக்கரை என்ற இடத்திற்குச்சமீபமாக வாழ்ந்த டேவிட் மாஸ்டர் என்பவரிடம் கணிதம் படிப்பதற்காக (ரியூசன் வகுப்பு) சென்றுவருவேன். நீர்கொழும்பு பழைய பஸ்நிலையத்தை கடந்துதான் முன்னக்கரைக்குச்செல்லவேண்டும். அந்தப்பாதையில் நீர்கொழும்பு மாநகர சபையின் பொது நூலகம் அமைந்திருந்தது. ரியூசன் முடிந்து வரும் மாலைநேரங்களில் என்னை அறியாமலேயே எனது கால்கள் அந்த நூலகத்தின் வாசலை நோக்கி நகர்ந்துவிடும். அங்கே குமுதம் – கல்கண்டு – கல்கி – ஆனந்தவிகடன் உட்பட இலங்கைப்பத்திரிகைகளையும் படித்துவிடுவேன். மு.வரதராசனின் பெரும்பாலான நாவல்களையும் அங்குதான் படித்தேன்.
கல்கி வெள்ளிவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட நாவல் போட்டியில் பரிசுபெற்ற உமாசந்திரனின் முள்ளும் மலரும் (பின்னர் ரஜனிகாந்த் – ஷோபா நடித்து பாலமகேந்திராவின் ஒளிப்பதிவுடனும் மகேந்திரனின் இயக்கத்திலும் வெளியான படம்) ரா.சு.நல்லபெருமாளின் கல்லுக்குள் ஈரம் – பி.வி.ஆரின் மணக்கோலம் ஆகியனவற்றையும் அந்த நூலகத்தில்தான் படித்து முடித்தேன். அக்காலம் முதலே எனக்கும் நூலகம் பற்றிய கனவு தொடங்கிவிட்டது. எங்கள் வீட்டிலேயே Murugan Library என்ற பெயரில் ஒரு நூலகத்தை தொடங்கினேன். மாதம் 25 சதம்தான் கட்டணம். எனது அம்மாதான் முதலாவது உறுப்பினர். அயலில் சிலர் இணைந்தனர். அதற்கென ஒரு Rubber Stamp தயாரித்து சிறிது காலம் அந்த நூலகத்தை நடத்தினேன். ஆனால் – தொடரமுடியவில்லை. புத்தகங்களை எடுத்துச்சென்ற சிலர் திருப்பித்தரவில்லை. மனம் சோர்ந்துவிட்டது.
அண்மைக்காலத்தில் பரவலாக வரவேற்பினையும், விமர்சனங்களையும் பெற்ற சயந்தனின் ‘ஆறா வடு’ புகலிட நாவல்களில் தவிர்க்க முடியாத இன்னுமொரு படைப்பு. இந்த நாவலை முதலில் வாசித்ததும் ஏனோ தெரியவில்லை உடனடியாகவே எனக்கு ‘ஷோபா சக்தி’யின் ‘கொரில்லா’ ஞாபகத்துக்கு வந்தது. அதற்குக் காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
1. இரு நாவல்களுமே முன்னாள் விடுதலைப் புலி ஒருவரின் கடந்த கால, புகலிட அனுபவங்களை மையமாகக் கொண்டவை இரண்டிலுமே அவ்வப்போது பட்டும் படாமலும் இயக்கத்தின் நடவடிக்கைகள் விமர்சிக்கப்படுகின்றன. அதே சமயம் இரண்டிலும் இயக்கத்தின் ஆரோக்கியமான பக்கங்களும் சுட்டிக் காட்டப்படுகின்றன.
2. கொரில்லாவில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப்போராளியால் இந்திய அமைதிப்படையின் மேஜர் கல்யாணசுந்தரம் கொல்லப்படுகின்றார். பிரின்ஸியை விசாரணக்குட்படுத்தும் சமயம், மேஜர் அவளது மார்புகளைக் காமத்துடன் பார்த்து “இங்கே என்ன பாம் வைச்சிருகேயா?” என்று கேட்கும் சமயம், மார்பினில் பொருத்தப்பட்டிருந்த குண்டுகளுடன் அவனைப் பாய்ந்து கட்டிக்கொள்கின்றாள் பிரின்ஸி. குண்டுகள் வெடிக்கின்றன. ‘ஆறா வடு’வில் வரும் நிலாமதி என்னும் பதின்ம வயதுப் பெண் வயதுக்கு மீறிய மார்பகங்களின் வளர்ச்சியைப் பெற்றவள். அதன் காரணமாகவே ‘குண்டுப் பாப்பா’ என்னும் பட்டப்பெயரால் அழைக்கப்படுபவள். அவளது குடும்பம் விடுதலைப் புலிகளுக்கு அவ்வப்போது உதவி செய்யும் தமிழ்க் குடும்பம். வெற்றி என்று அழைக்கப்படும் விடுதலைப் புலி உறுப்பினன் ஆரம்பத்தில் திலீபன் நினைவுதினத்துக்காக அச்சடித்த துண்டுப்பிரசுரங்களை நிலாமதியிடன் பாதுகாப்பாக வைத்துத் தரும்படி வேண்டுகின்றான். இவ்விதமாக ஆரம்பிக்கும் தொடர்பு ஆயுதங்களை அவர்களது இடத்தில் மறைத்து வைக்கும் அளவுக்கு வளர்கிறது. ஒரு முறை இந்திய அமைதிப்படை இராணுவத்தின் தேடுதலில் அவளது வீடு அகப்பட்டுக்கொள்கிறது. அதற்குச் சற்று முன்னர்தான் போராளிகள் அங்கிருந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டிருந்தார்கள். ஆனால் கிரேனைட் குண்டொன்று தவறுதலாக விடுபட்டுப் போகிறது. அதே சமயம் இந்தியப் படைச் சிப்பாய்கள் வீட்டினுள் நுழைகின்றார்கள். நிலாமதி கிரேனைட்டினைத் தனது மார்பகங்களுக்குள் மறைத்து நிற்கின்றாள். வந்திருந்த சிப்பாய்களில் ஒருவன் அறையைச் சோதிக்கும் பாவனையில் அறையினுள் அவளைத் தள்ளி அவளைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குகின்றான். அச்சமயம் அவளது பிராவினைப் பற்றி இழுக்கும்போது உள்ளிருந்த கிரேனைட் குண்டு கீழே விழுகிறது. அதிர்ச்சியுற்ற அந்தப் படையினன் கிரேனைட் குண்டினை எடுத்து, கிளிப்பை நீக்கி, நிலாமதி மீது வீச எத்தனிக்கையில், நிலாமதி அவனைப் பாய்ந்து கட்டிக்கொள்கின்றாள். வெடிப்பில் இருவருமே கொல்லப்படுகின்றனர்.
நடேசன் முன்பே ” வண்ணாத்தி குளம் ” நாவல், “ வாழும் சுவடுகள் ” போன்ற நூல்களின் மூலம் அறிமுகமானவர். ” வண்ணாத்தி குளம் ” நாவலில் இலங்கையச் சார்ந்த ஒரு கிராமத்தை முன் வைத்து அவர்கள் எவ்வித இனதுவேசமும் இல்லாமல் வாழ்ந்து வருவதையும், அதிலிருந்து ஒரு பெண் விடுதலை இயக்கத்திற்கானவளாக வெளிக்கிளம்புவதையும் காட்டியது. காதல் பிரச்சினைகள், அரசியல் காரணங்களை முன் வைத்து கிராமநிகழ்வுகளூடே இலங்கை மக்களின் வாழ்வியலை சித்தரித்த்து. 1980-1983 என்ற காலகட்டத்தைக் கொண்டிருந்தது. “ வாழும் சுவடுகள் “ என்ற அவரின் தொகுப்பில் மனிதர்கள், மிருகங்கள் பற்றிய அனுபவ உலகில் விபரங்களும் உறவுகளும் சித்தரிக்கப்பட்டிருந்தது. “ வைத்யசாலை ” என்ற இந்த நாவலை அதன் தொடர்ச்சியாக ஒரு வகையில் காணலாம்.தமிழ்சூழலில் மிருகங்கள் பற்றியப் பதிவுகள் குறைவே. விலங்குகள் மருத்துவம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருந்த ஜெயந்தன் தன் படைப்பில் சிறிய அளவில் தன் மருத்துவமனை அனுபவங்களை பதிவு செய்திருக்கிறார். பெரும்பாலும் வீட்டுக் கால்நடைகளை மருத்துவத்திற்கு கொண்டு வருகிறவர்களின் மன இயல்புகள், சமூகம் சார்ந்த் பிரச்சினைகளீன் அலசலாய் அவை அமைந்திருக்கின்றன. அசோகன் இந்த நாவலில் ஆஸ்திரேலியாவில் பிழைக்கப்போன சூழலில் அங்கு மிருக வைத்திய சாலையில் பணிபுரிந்த அனுபவங்களை சுவாரஸ்யமான நாவலாக்கியிருக்கிறார்.
தமிழ் இலக்கிய சூழலில் பெண்ணியக்கோட்பாடுகள் என்பதை அடுத்து க.பஞ்சாங்கத்திண் பெண்ணியல் சார்ந்த கட்டுரை வரிசைகளில் முக்கியத்துவம் பெறுவது பெண்-மொழி- புனைவு. இதே பெயரில் கட்டுரை ஆசிரியரின் நூலொன்றும் வந்துள்ளதாக, நவீன இலக்கிய கோட்பாடு நூல் நமக்குத் தெரிவிக்கிறது
பெண்-மொழி-புனைவு
பெண்பற்றிய கற்பிதம் பிற கற்பிதங்களைப்போலவே ‘மொழி-புனைவு’ என்கிற இரு காரணிகளின் சேர்க்கையால் உருவானது என்பது ஆசிரியரின் கருத்து. இதனை முன்வைத்ததில் ஆணுக்குப் பெரும்பங்குண்டு என்பதை உறுதிபடுத்துகிற ஆசிரியர் தமிழ்ப் பண்பாட்டை வடிவமைத்ததும் அதுவேதான் என்கிறார். “ஒரு தந்தை வழி சமூகத்தில், ‘பெண்ணின் அடையாளம்’ என்பது ஆணால் புனையப்பட்ட ஒன்றுதான். ஆண் பெண் உறவு முறையில் ஆணின் அதிகாரம் பெண் உலகத்திற்குள் நுழைவதில் பெரும் பங்கு அளித்திருப்பது மொழிதான் என்பது தெரிகிறது”. “இந்த மொழியின் திருவிளையாடல் தமிழ்ப் பண்பாட்டை வடிவமைப்பதில் ஆழமான செல்வாக்கு செலுத்தியுள்ள தொல்காப்பியத்தில் எவ்வாறு ஆணின் மொழியாக வெளிப்படுகிறது? இவ்வாறு ஆண் கற்பித்துள்ள ‘அர்த்தத்தை மாற்றி பெண் தன் நோக்கில் அர்த்தங்களைக் கற்பிக்க இன்று எவ்வாறு தன் இயக்கத்தை அமைத்துக்கொள்ளவேண்டும்? எனும் இரண்டின் அடிப்படையில் இந்தக் கட்டுரை தயாரிக்கப்பட்டுள்ளது ” என எடுத்த எடுப்பிலேயே தமது கட்டுரையின் நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறார், க. பஞ்சாங்கம்.
புகலிடத் தமிழ் இலக்கியத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டதும், அதிகமானவர்களின் கவனத்தைப் பெற்றதுமாக ஷோபாசக்தியின் ‘கொரில்லா’ நாவலைக் குறிப்பிடலாம். இந்த நாவல் கூறப்பட்ட மொழியினாலும், கூறப்பட்ட விடயங்களினாலும், கூறப்பட்ட முறையினாலும் பலரைக் கவர்ந்திருக்கலாமென நினைக்கின்றேன். கதை சொல்லி பேச்சுத் தமிழைப் பாவித்துக் கொரில்லாவின் கதையினைக் கூறியிருக்கின்றார். இவ்விதமான நடையினை, மொழியினைப் பாவிப்பதிலுள்ள அனுகூலம் இலக்கணம் பற்றியெல்லாம் அதிகம் கவனிக்கத்தேவையில்லை. அவ்விதம் கூறும்போது பாத்திரங்களை அவர் விபரிக்கும் விதம் வாசிப்பவருக்கு ஒருவித இன்பத்தினை எழுப்பும். அதன் காரணமாகவே பலருக்கு இந்த நாவல் பிடித்திருப்பதாக உணர்கின்றேன். பேச்சு வழக்கில் ஒருவருக்கொருவர் உரையாடும்பொழுது ‘மசிரை விட்டான் சிங்கன்’, ‘ஆள் பிலிம் காட்டுறான்’ போன்ற வசனங்களைத் தாராளமாகவே பாவிப்பது வழக்கம். அவ்விதமானதொரு நடையில் கொரில்லாவின் கதை விபரிக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கதையில் ஈழத்து விடுதலைப் போராட்ட நிகழ்வுகள், புகலிட நிகழ்வுகள் ஆகியவை விபரிக்கப்பட்டுள்ளன.