இந்தியச் சஞ்சிகை, மலர்களில் வெளியான எனது ஆக்கங்கள் , ஒரு பதிவுக்காக, இங்கு தரப்படுகின்றன. பதிவு செய்தல் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட உரிமை. பதிவு செய்தலென்பது விமர்சனமல்ல. இணையத்தில் வலைப்பதிவுகளினூடு, மின்சஞ்சிகைகளினூடு எனப் பல்வேறு வழிகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயத்தையும் பதிவு செய்கின்றார்கள். இணையம் தரும் வசதியினைப் பாவித்துப் படைப்புகள் பற்றிய விபரங்களைப் பலருடனும் பகிரிந்துகொள்வதன் மூலம் ஒரு படைப்பாளியின் படைப்புகள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ள முடிகிறது. அது பயனுள்ளது. ஆக்கபூர்வமானது. படைப்புகள் வாசகர்களைச் சென்றடைவதற்கு இவ்விதமான பதிவுகள் முக்கியமானவை. இன்று காலம் மாறி விட்டது. இணையம் படைப்புகளை உடனுக்குடன் உலகின் சகல மூலைகளுக்கும் கொண்டு செல்கின்றது. மிகுந்த வல்லமை மிக்க ஊடகமான இணையத்தைத் திறனாய்வாளர்கள் மிக அதிக அளவில் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று நினைக்கின்றேன்.
தான் இதுவரை எழுதிய குறும்பாக்களில் பெரும்பாலானவற்றை தெரிவுசெய்து நூறு தலைப்புக்களில் நூறு குறும்பாக்களைத் தொகுத்து 84 பக்கங்களில் கலாபூஷணம் பாலமுனை பாறூக் அவர்கள் பர்ஹாத் வெளியீட்டகத்தின் மூலம் தனது நூலை வெளியீடு செய்துள்ளார். இந்த நூல் குறும்பா பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள வழியமைத்துத் தந்திருக்கிறது. இன்று பலராலும் பெரும்பாலும் அறிந்து வைக்கப்படாத ஒரு வடிவமாகவே குறும்பாவைக் கருதலாம். ஆனாலும் அனைவரும் கட்டாயம் இந்த வகையான வடிவத்தையும் தெரிந்துகொள்வது அவசியமாகின்றது. மறைந்த கவிஞர் மஹாகவி என்று அறியப்படுகின்ற து. உருத்திரமூர்த்தி அவர்ளே தமிழில் குறும்பா என்ற இலக்கிய வடிவத்தை அறிமுகப்படுத்தியவராவார். குறும்பாக்கள் குறுமையாக இருப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் குறும்பும் செய்கின்றன. அந்ந வகையில் இந்தத் தொகுதியில் உள்ள அநேகமான குறும்பாக்கள் குறும்பு, அங்கதம், கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி, எள்ளல், துள்ளல் என நகைச்சுவை ததும்புவனவாக அமைந்துள்ளன. எழுத்தினூடாக நகைச் சுவை உணர்வைக் கொண்டு வருவதென்பது காட்சி அமைப்பு, உடல் அசைவு, நடிப்பு, சம்பாஷணை என்பவற்றினூடாக அதனைக் கொண்டு வருவதை விடவும் சிரமமான காரியமாகும் என்பது புலனாகின்றது. ஆனாலும் அதனை முயற்சி செய்து பார்த்திருக்கிறார் பாலமுனை பாறூக் அவர்கள்.
யூன் மாதம் 20ம் நாள் 1682ஆம் ஆண்டில் ஜெர்மனியில் பிறந்தவர் பத்தலோமயுஸ் சீகன்பால்க் என்னும் புரட்டஸ்தாந்த மத போதகர். துந்தை உணவுத்தானிய வியாபாரியாக விளங்கியவர். சீகன்பால்க் நான்கு மூத்த சகோதரிகளுக்கு இளையவராகப் பிறந்தார். நலிந்த உடலும் பலவீனமானவராகவும் இளமைக்காலத்தில் காணப்பட்டார். இளமையில் தாயையும் பின்னர் தந்தையையும் இழந்தார். புல்ஸனிட்ஸ் என்னும் இடத்தில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த அவர் 12வது வயதில் யோர்லிட்ஸ் என்னும் இடத்திலுள்ள இடைநிலைப் பள்ளியில் சேர்ந்து உயர்கல்வியைப் பெற்றார். பாடசாலைப் பதிவேட்டில் அவரது பெயருக்குக் கீழே உடலிலும், உள்ளத்தாலும் வளர்ச்சியடையாத மாணவன் எனக்குறிப்பிடப்பட்டிருந்தது அவரது இளமைக்காலத்தில் அவர் எத்தககைய நிலையல் இருந்துள்ளார் என்பதனை எடுத்துக்காட்டுகின்றது. வாலிபப்பருவத்தை அடைந்தும் ஜேர்மனியல் பிரபலமாக விளங்கிய ஜேக்கப் பௌஃமி இன் அறிந்துகொள்ளமுடியாத பரவச மனநிலையில் ஆன்மீக வழிபாடு செய்து இறைவனை நேரடியாகத் தொடர்பு கொள்ளும் தத்துவக் கொள்ளையின் பால் ஈர்க்கப்பட்டு அதிலிருந்து விடுபடமுடியாதவராக பெரும் உளப்போராட்டத்திற்கு உள்ளானார். பின்பு அதிலிருந்து விடுபட்டு 1702ல் உயர்கல்விக்காக பெர்லின் நகருக்குச் சென்றார். சுகவீனமுற்றிருந்தமையால் அவரால் கல்வியைத் தொடர்வதில் தடங்கல்கள் காணப்பட்டன. 1703ல் இறையியில் கல்வி கற்பதற்காக ஹலே என்னும் இடத்திற்குச் சென்றார். அங்கும் அவர் அடிக்கடி சுகவீனமுற்றிருந்தார். “நான் எங்குசென்றாலும் சிலுவை என்னைப் பின்தொடரகின்றது” என அவர் தனது துன்பத்தை வெளியிட்டுள்ளார். அங்கு எரேபிய மொழியைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார்.
சஞ்சிகைகளில் ‘கணையாழி’ எனக்கு மிகவும் பிடித்த சஞ்சிகைகளிலொன்று. இம்மாத (மார்ச் 2014) இதழில் வெளிவந்திருந்த கவிதைகளிலொன்று அன்பாதவனின் ‘நட்சத்திரத் துணை’. இந்தக் கவிதை இவ்விதழ்க் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதையென்று கூறுவேன். கவிதை இதுதான்:
நட்சத்திரத் துணை
– அன்பாதவன் –
அகாலத்தில் தொடங்கியதென் பயணம்
பயணப் பைக்குள் ஞாபகச் சுமைகள்
மவுனத்தில் மனைவி உறைய
மகனுக்கோ இறுக்க முகம்…
மகள் விழிகளில் சோகநீரின் பளபளப்பு
வாலாட்டும் வளர்ப்புகளின் கேவல்களை
உதறி
வாகனமேற
இயலுமோ துயில…
துணைக்கு வரும் நட்சத்திரங்களுடனான
உரையாடலோடு
அகாலத்தில் தொடங்கியதென் பயணம்.
பண்டைத் தமிழரின் சிறப்பையும், பெருமையையும் இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டுவனவாகச் சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. சங்க நூல்களுள் ஒன்றான புறநானூறு தமிழக வரலாற்றை அறிவதற்கு மிகப்பெரிய சான்று ஆகும். புறநானூற்றின் மூலம் நாகாpகம், பண்பாடு, வீரம், ஆட்சி, கொடை, வாணிகம் போன்றவற்றையும், படைத்திறம் வாய்ந்த பெருவேந்தரையும் கொடைத்தன்மை வாய்ந்த வள்ளல்களையும் கற்றறிந்த சான்றோர்களையும் பழந்தமிழ்க் குலங்களையும் அறியமுடிகிறது. மேலும் அரசனின் ஆட்சிக்கு அடித்தளமான அரண் குறித்த கருத்துக்களையும் உணரமுடிகின்றது. திருக்குறளிலும் அரண் குறித்த செய்திகளைப் பொருட்பாலில் அரண் என்ற அதிகாரத்தின் மூலம் அறியமுடிகின்றது.
அரண்
அரண் – பாதுகாப்பு, கோட்டை. போரில் வெற்றி பெற்ற அரசனும் வீரர்களும் வாகைப் பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவர் என்பதைத் தொல்காப்பியம் முதலான நூல்களில் காணலாம். வாகை என்பது வெற்றியாளரை அடையாளப்படுத்தி வெற்றிக்கு ஆகுபெயராகியது. வாகை என்றால் வெற்றி என்றும், வாகை சூடினான் என்றால் வெற்றி பெற்றான் என்றும் பொருள்படுவது போல பாதுகாப்பு என்று பொருள்படும் அரண், அரசனுக்குப் பாதுகாப்பு அளிக்கும் கோட்டைக்கு ஆகுபெயராகி வருகிறது. அரண் என்றால் ‘கோட்டை’ என்றும் பொருள்படுகிறது.
பரந்து விரிந்த நீண்ட பிரபஞ்சவெளியில் ஒரு சூரிய குடும்பம் பறந்து திரிந்து உலா வந்த வண்ணமுள்ளது. ஆங்கே சூரியன், நிலாக்கள், விண்மீன்கள், ஒன்பது கோள்கள் ஆகிய புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய், வியாழன், சனி, விண்மம் (யுறேனஸ்- Uranus), சேண்மம் (நெப்டியூன் – Neptune), சேணாகம் (புளுடோ – Pluto) ஆகியவை அந்தரத்தில் ஒவ்வொன்றின் ஈர்ப்புச் சக்தியால் மிதந்த வண்ணமும், சுழன்ற வண்ணமும் உள்ளன. சூரியன் நானூற்றி அறுபது கோடி (460,00,00,000) ஆண்டுகளுக்குமுன் தோன்றினான் என்றும், பூமியானது நானூற்றி ஐம்பத்துநாலு கோடி (454,00,00,000) ஆண்டுகளுக்குமுன் தோன்றினாள் என்றும், பூமி நிலாவானது நானூற்றி ஐம்பத்து மூன்று கோடி (453,00,00,000) ஆண்டளவில் தோன்றினாள் என்பதும் அறிவியலாரின் கூற்றாகும். சுமார் முன்னூற்றி எழுபது கோடி (370,00,00,000) ஆண்டளவில் பூமித்தாயில் நுண்ம உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன.
பூமித்தாய்
கதிரவன் மண்டலத்தின் பிறப்புத்தான் பூமிக் கோளாகும். உருண்டை வடிவான பூமி நெருப்புக் கோளமான சூரியனிலிருந்து தெறித்து விழுந்த அனற்பிழம்பாக விண்ணிற் பல காலமாகச் சுழன்று கொண்டிருந்தது. நீண்ட காலத்தின்பின் மேற்பரப்புக் குளிர்ச்சியடைந்தது. ஆனால் பூமியின் மையப் பகுதி இன்றும் அனலாக எரிந்து கொண்டிருக்கிறது. பூமி குளிர, மேகங்களும் குளிர்ந்து, பெருமழை பெய்து, நீர் பெருங் குழிகளிற் தேங்கிக் கடல்கள் தோன்றின.
– தமிழகத்தில் ‘ஸ்நேகா’ பதிப்பகத்தாரால் 1996இல் வெளியிடப்பட்ட எனது சிறுகதைகளும், குறுநாவல் ‘அமெரிக்கா’வும் அடங்கிய தொகுப்பான ‘அமெரிக்கா’ பற்றி எழுத்தாளர் சீர்காழி தாஜ் எனக்குத் தொகுப்பு பற்றிய தனது கருத்துகளைத் தெரிவித்துக் கடிதமொன்றினை அனுப்பியிருந்தார். அதன் பின்னர் அவர் இன்னுமொரு கடிதத்தினை எனது நல்லூர் நகர அமைப்பு ஆய்வு பற்றிய நூலான ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ பற்று எழுதி அனுப்பியிருந்தார். எனக்கு மிகவும் ஆச்சரியத்தை அளித்த கடிதமது. என்னை யாருக்குமே தமிழக்த்தில் தெரிந்திருக்கச் சாத்தியமில்லாத சந்தர்ப்பத்தில், என நூல்களை வாசித்துவிட்டுச் சீர்காழியிலிருந்து எனக்குக் கடிதங்கள் சில அனுப்பியிருந்தார் எழுத்தாளர் சீர்காழி தாஜ். அக்குறிப்புகள் ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றன. அவரது இன்னுமொரு கடிதமான ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ பற்றிய கடிதம் பின்னொரு சமயம் பதிவுகளில் பிரசுரமாகும். மேற்படி கடிதத்தில் ஒரு சில சொற்கள் தெளிவாகத் தெரியாததால், அவை கூறும் கருத்துக்கு இடையூறு செய்யாமலிருப்பதால் தவிர்த்திருக்கின்றேன். – வ.ந.கி –
‘மனித மூலம்’ தத்துவம் பேசினாலும் இனிக்கும் தகவல்கள் ஓர் ஆறுதல். ‘சுண்டெலிகள்’ அப்படியல்ல. மிக உயர்ந்த கதை வடிவம். சரியான குறியீட்டுத்தளத்தில் நேர்த்தியான பின்னல். உயரத்துக்குகாகப் போராடும் கீழ்த்தட்டு நசிந்த உடல்களைப் படம் பிடித்துக் காட்டும் முற்போக்குக் கதைவடிவம். ‘கணவன்’ நெகிழ்ச்சி கூடிய கதை. மானிட வர்க்கத்திற்குச் சந்தேகம் ஒரு பாணி. குடிக்கிறபோதுதான் இந்தத் தடுமாற்றமென்பதில்லை. நல்ல நிலையில் கூட நாலுகால் பாய்ச்சலில் மூளையைப் பற்றும். கதை தெரிவு தேடிகொண்டிருக்கிற வாதம் பெண்ணியத்தை மதிப்பதாக இருந்தது. ‘இல்லாள் வருவதற்கு ‘ என்றொரு சொற்சிலம்பு இந்தக் கதையில் ருசிக்க வைத்த நடை. ‘ஒரு முடிவும் விடிவும்’ யமுனா தி.ஜானகிராமனின் மோகமுள் ஜமுனாவை ஞாபகமூட்டியது. மறு பிறவி போலும். பெண்கள் எப்பவும் பாவங்கள்தாம்.
மதுரை, மார்ச் 26- முற்போக்கு இலக்கிய முன்னோடியாக விளங்கிய திகசி என மூன்றெழுத்துக்களால் தமிழ் படைப்…புலகில் முத்திரைபதித்த தி. க. சிவசங்கரன் மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் சு. வெங்கடேசன்ஆகியோர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
பள்ளிப்பருவத்திலேயே பாரதியாரின் தேசபக்திப் பாடல்களால் ஈர்க்கப்பட்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் பங்கேற்ற திருநெல்வெலி கணபதி சிவசங்கரன் கவிதைகள் எழுதுவதிலேயே முதலில் கவனம் செலுத்தினார். எழுத்து எமக்குத் தொழில் என்று இலக்கியத்துக்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்ட வல்லிக்கண்ணன் அவர்களை ஆசானாக வரித்துக் கொண்டவர் திகசி. அவரது வழிகாட்டுதலாலும் அரவணைப்பாலும் வளர்ந்த திகசி தமிழ் இலக்கியப் பரப்பில் தனக்கென தனித்தடத்தை அமைத்துக் கொண்டவர்.
இது நினைவுகளின் சுவட்டில் இரண்டாம் பாகம். ஹிராகுட் அணைக்கட்டில் கழிந்த ஆறுவருட வாழ்க்கை. 1950 மார்ச்சிலிருந்து 1956 டிஸம்பர் வரை. எப்படியோ இது எழுதப்பட்டுக்கொண்டு வருகிறது. இரண்டு அன்பர்களின் தூண்டுதல் என் சிந்தையில் விதைத்தது. எழுதி வருகிறேன். இருப்பினும், என் வாழ்க்கை அப்படி ஒன்றும் வீர தீரச் செயல்கள் நிறைந்ததல்ல. பின் நிறைந்தது தான் என்ன? ஒன்றுமில்லை தான். எந்த பெரிய வரலாற்றினதும் ஒரு சின்ன அங்கமாகக் கூட இருக்கும் தகுதி பெற்றதல்ல இந்த என் வாழ்க்கை எவரது சுய சரிதமும் பதிவு பெறும் தகுதி தான் என்ன? அவரவரே தீர்மானித்துக் கொள்ள வேண்டியதுதான். உதாரணமாகச் சொல்லப் போனால், ராஜாஜி இந்த தேசத்தின் வரலாற்றில் கணிசமான பங்காற்றியவர். அவர் அது பற்றி எழுதியவரில்லை. தமிழ் சமூகத்தின் வரலாற்றையே கிளறி வைத்துவிட்டவர்கள் பெரியாரும் அண்ணாவும். இவர்களும் கூட தம் சுயசரிதத்தை எழுதியவர்கள் இல்லை. காந்தியும் நேருவும் எழுதத் தொடங்கி பாதியில் நிறுத்தி தேசத்தின் வரலாறு ஆகி மறைந்துவிட்டார்கள். இப்படி இருக்க, தமிழ் எழுத்துலகில் கூட ஒரு பொருட்டாக இல்லாத நான் என் வாழ்க்கையை எழுதப் புகுந்தது ஏதோ சுயபிரமையில் ஆழ்ந்து செறுக்கு மிகுந்த காரியமாகப் படும். அது ஒரு பார்வை. அத்தகைய செறுக்கு மிகுந்த எழுத்துக்கள்தாம் பெரும்பாலும் இங்கு தமிழ் சமூகத்தில் உண்டு. அவர்கள் தமக்கு உகந்த ஒரு சித்திரத்தை தாமே உருவாக்கித் தமிழ் சமூகத்துக்குத் தந்து செல்கிறார்கள். எது தன்னைப் பற்றி அறியப்பட வேண்டும் என்று தானே எழுதிக் குவித்துவிடும் காரியங்கள் நடக்கின்றன. பெரிய பெரிய காரியங்கள் படைத்தவர்கள், தேசத்தின் போக்கையே நிர்ணயித்தவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அது பற்றி எழுதாவிட்டாலும் எழுதுபவர்கள் ஒரு மாதிரியான பக்தி நிறைந்தவர்கள். அவர்கள் எழுத்தில் வெட்டலும் கூட்டலும் நிறைந்திருக்கும். அவர்கள் வரம் வேண்டி நிற்பவர்கள். அல்லது வரங்கள் பல பெற்றதன் நன்றிக்கடன் செலுத்துபவர்கள். இன்றைய மாறிய சமூக அரசியல் சூழலில் இம்மாதிரி நிறைய நடந்தேறி வருகின்றன. பக்தியின் பிறழ்ச்சி.
கருநாக்கு என்ற சொற்றொடர் தமிழில் வழக்கத்தில் உள்ளது. அதாவது இயல்பாகவே சிறு கரும்புள்ளிகளை உடைய நாக்கு என்று பொருள்படும் இச்சொற்றொடரை கிராமிய வழக்கில் ‘கருநாவு’ என்று அழைப்பர். இதனால் அவர்கள் சொல்வது பலித்துவிடும் என்ற ‘நம்பிக்கை’ பொதுவாக இருக்கிறது. இதையே ஆழியாளின் கவிதைத் தொகுப்பு தலைப்பாகக் கொண்டுள்ளது. ஒரு பெண் கருநாக்கு உள்ளவளாக இருப்பாளாயின் மற்றவர் பார்வையில் அவள் வசைக்கு உரியவளாகவும் இருந்துவிடுவாள். ஆழியாளின் ஏற்கெனவே வந்த ‘உரத்துப்பேச’, ‘துவிதம்’ ஆகிய கவிதைத் தலைப்புகளும் இதுபோல்தான் அர்த்தம் பொதிந்தவையாக அமைந்துள்ளன. இத்தொகுதியில் 7 மொழிபெயர்ப்புக்கவிதைகளுடன் மொத்தம் 32 கவிதைகள் உள்ளன. ஆழியாளின் ஏற்கெனவே வந்த தொகுப்புகளில் இருந்து சில வித்தியாசங்களையும் கவிதைகளின் இன்னொருகட்டப் பாய்ச்சலையும் இக்கவிதைகள் காட்டுகின்றன. இதற்குக் காரணம் இத்தொகுப்பில் துருத்திக் கொண்டு நிற்கும் மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தேர்வும் அவற்றின் உள்ளடக்கமும். மற்றையது ஒட்டுமொத்தமாக இக்கவிதைகள் கலைத்துவ நேர்த்தியுடன் அமைந்திருப்பது.