விளிம்புநிலை மக்களைப்பற்றியும் குறிப்பாக தலித் மக்களைப்பற்றியும் கடந்த 20 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருப்பவர் அபிமானி. பலசமயங்களில் நம்பிக்கையே அவர்களின் ஊக்க சக்தியாக இருப்பதைச் சுட்டிக்காடுபவர். என்றைக்காவது ஒருநாள் போராட்டங்கள், எதிர்ப்புக்குரல்கள் மூலம் நல்ல வாழ்க்கை அவர்களுக்குச் சாத்தியம் என்பதை சூசகாகமாக வெளிப்படுத்துபவர். கிராமங்களில் நிலம் முழுக்க ஆதிக்க சாதியினரின் கையில் இருக்கிறது.இன்னும் கூட தலித்துகளில் பெரும்பான்மையோர் விவசாயக் கூலிகள். ஆதிக்க ஜாதியினரின் பாலியல் கொடுமைகள் பற்றி நிறைய எழுதி உள்ளார். காவல்துறையினருக்கும் ஆதிக்க சாதியினருக்கும் இடையிலான உறவு குறித்தும் நிறைய எழுதியிருக்கிறார்.ஒவ்வொரு நாளும் இரண்டு தலித்துகள் கொல்லப்படுகிற இந்தியச்சூழல். மனித உருவங்கள் சாதியின் கொடுமையான வன்முறையைப் புரிந்து கொள்ள இயலாத அவலங்கள் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.
– அண்மையில் முகநூலில் எழுத்தாளர் பெருமாள் முருகன் தளபாடங்களுக்குப் பாவிக்கப்படும் – அறைக்கலன், அறைகலன் ஆகிய சொற்களைப் பற்றிய தனது கருத்துகளைப் பகிர்ந்திருந்தார். அதனைத்தொடர்ந்து பலர் அதுபற்றிய தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள். மிகுந்த பயனுள்ள கலந்துரையாடலது. அக்கலந்துரையாடலில் பகிர்ந்துகொள்ளப்பட்ட கருத்துகளில் சிலவற்றை ‘பதிவுகள்’ வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம். – பதிவுகள் –
பெருமாள் முருகன்: இன்றைய ‘தி இந்து’ நாளிதழ் இணைப்பு ‘சொந்த வீடு’ பகுதியில் ‘அறைகலன்கள்’ வாங்கப் போகிறீர்களா?’ என்னும் தலைப்பில் ஆர்.எஸ்.ஒய். என்பவர் எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது. கட்டுரையின் தலைப்பிலும் உள்ளும் ‘அறைகலன்’ என்னும் சொல்லாட்சி பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. Furniture என்னும் ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பு இது. Furnitureஐத் தட்டுமுட்டுச் சாமான் என்று எழுதியதுண்டு. அது சரியல்ல. எனினும் சரியான சொல் அமையவில்லை. தட்டுமுட்டுச் சாமான் என்பது அன்றாடம் வீட்டில் புழங்கும் எல்லாவகைப் பொருள்களையும் குறிக்கும். எப்போதாவது பயன்படுத்துவதற்காகவோ பழுதாகிப் போய்விட்டதாலோ தனியாகப் போட்டு வைத்திருக்கும் பொருள்களையும் இச்சொல் குறிக்கும். மேசை, நாற்காலி, சோபா உள்ளிட்ட உட்காரவும் உட்கார்ந்து செய்யும் வேலைகளுக்காகவும் பயன்படும் பொருள்களுக்கான பொதுச்சொல்லாக ஆங்கிலத்தில் ‘Furniture’ உள்ளது. அப்படி ஒரு பொதுச்சொல் தமிழில் இல்லை. பழைய கால வீடுகளின் அமைப்பில் ‘Furniture’க்கெனத் தனியிடம் நம் சமூகத்தில் இல்லை போலும். ஆனால் இன்றைய வீடுகளில் வரவேற்பறை முக்கிய இடம்பெறுகிறது. அங்கே ‘Furniture’களுக்குத் தான் இடம்.
ஒரு ஆசுவாசமான காலைப் பொழுதில்தான், கருணாகரனின் கவிதைகள் மீது என் பார்வை பதிந்திருந்தது. ‘ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்’ – தலைப்பைப் போலவே, கவிதைகள் தோறும், போரின் நெடில். கவிதை மற்றும் புனைவுகளை வாசிக்கும் போது, தவிர்க்க முடியாமல் ஒரு சிக்கல் எழுவதுண்டு. பின்-நவீனத்துவவாதிகள் சொல்லுவது போன்று எல்லா சந்தர்ப்பங்களிலும், படைப்பாளி இறந்துவிடுவதில்லை. கருணாகரனின் கவிதைகள் மீது பார்வை படர்ந்த போதும், கவிதையுடன் சேர்த்து கூடவே, கருணாகரன் பற்றியும் சிலதையும், மனது அசைபோட்டுக் கொண்டது. எனக்குத் தெரிந்த கருணாகரன், புலிகளின் வன்னி முற்றங்களுக்குள் விமர்சனங்களை பவுத்திரப்படுத்தியவாறு வாழப் பழிகிக்கொண்ட சிலரில், ஒருவர். கருணாகரனுக்கும் எனக்குமான முதல் சந்திப்பு நிகழ்ந்த அந்த நாட்களை எண்ணிப்பார்ப்பது, இந்தக் கவிதைத் தொகுப்பைப் பொறுத்தவரையில் கனதியானதாகும். அந்த நாட்கள் மிகவும் இனிமையானவை. இடது, வலது என்னும் கருத்து மூட்டைகளை ஒரு பக்கமாக வீசிவிட்டு, வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தமிழ்நாடு என்று, அனைத்துப்பகுதி படைப்பாளுமைகளும் சங்கமித்துக்கிடந்த ஒரு நாளில்தான், நாங்கள் நட்பாகிக் கொண்டோம். அது ‘மானுடத்தின் தமிழ் கூடல்’ என்னும் சுலோகத்தின் கீழ் அரங்கேறியிருந்தது. பின்நாட்களில், கருணாகரனின் கிளிநொச்சி முற்றத்திலிருந்து நாங்கள் பல தடைவைகள் அளவளாவியிருக்கிறோம். முரண்பட்டுமிருக்கிறோம்.
அளவெட்டியில் அந்த இனிய மாலைப்பொழுதில் அவரைப்பார்ப்பதற்காக புறப்பட்டபொழுது மகாகவியின் மூன்றாவது புதல்வர் கவிஞர் சேரன் தம்பி சோழன் – அண்ணா – நீங்கள் கற்பனை செய்துவைத்துள்ள தோற்றத்திலோ நிலைமையிலோ அவர் இருக்கமாட்டார். – என்றார். தம்பி – அவரது எழுத்துக்களைப்படித்திருக்கிறேன். சக இலக்கியவாதிகளிடமிருந்து அவரைப்பற்றி அறிந்திருக்கின்றேன். ஆனால் அவரை இன்று வரையில் நான் நேரில் பார்த்தது கிடையாது.ஒரு மூத்ததலைமுறை இலக்கியவாதியை பார்க்கப்போகிறோம் என்ற உணர்வைத்தவிர வேறு எந்தக்கற்பனையும் என்னிடம் இல்லை. என்றேன். இன்றைய தலைமுறை வாசகர்கள் கேட்கலாம் -அது என்ன சேரன் – சோழன்? என்று. சங்ககாலத்தில் வாழ்ந்த மூவேந்தர்கள் பாண்டியன் – சேரன் – சோழன். ஆனால் நவீன உலகத்தில் ஈழத்தில் அளவெட்டியில் வாழ்ந்த கவிஞர் மகாகவி உருத்திரமூர்த்திக்கு ஐந்து பிள்ளைகள். மூன்று ஆண்கள். அவர்களின் பெயர் சேரன் – சோழன் – பாண்டியன். இரண்டு பெண்பிள்ளைகள். அவர்கள் அவ்வை – இனியாள். சேரனும், பாண்டியனும் , மகள் அவ்வையும் தற்பொழுது கனடாவில். சோழன் அமெரிக்காவில். இனியாள் மருத்துவராக அவுஸ்திரேலியாவில். இதில் மற்றுமொரு தகவலும் இருக்கிறது. தற்காலத்தில் பேசுபொருளாக இருக்கும் சோவியத்தின் உக்ரேயினைச்சேர்ந்த பெண்ணைத்தான் பாண்டியன் மணம் முடித்தார். அவர்களின் மூத்த புதல்வன் பெயர் எல்லாளன். எல்லாளனும் பெற்றோர்களுடன் கனடாவில். மகாகவியை நான் நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிட்டவில்லை. நான் இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில் அவர் மறைந்தார். எனினும் மகாகவியின் பிள்ளைகளுடன் எனக்கு உறவும் உரையாடலும் இருக்கிறது.
மார்ச் எட்டாம் தேதி சர்வதேச மகளிர் தினம்.
பெண்களே முன்னேறுங்கள்! முன்னேறுங்கள்!! – எங்கள் தங்க வைர நகைகளை வாங்கியணிந்து விடுதலையை உணருங்கள்!!! இப்படி பெண்விடுதலையைப் பட்டவர்த்தனமாக வர்த்தகப் பொருளாக்கும் போக்கு ஒருபுறம். மறுபுறம் சின்னத்திரை, சினிமாத்திரைப் பெண் பிம்பங்கள் கடந்த பல ஆண்டுகாலப் போராட்டங்களுக்குப் பிறகு பெண்களுக்குக் கிடைத்த வளர்ச்சி-மேம்பாடுகளையெல்லாம் நலிவுபடுத்திவரும் போக்கு…. இன்று வாழாவெட்டி, மலடி போன்ற வார்த்தைகள் இல்லாத சின்னத்திரை பெரீ…ய்…ய தொடர்நாடகங்களே கிடையாது எனலாம். இரண்டாவது ‘எபிஸோடி’லேயே இருபது வயது நிறம்பாத இளங்கதாநாயகிப் பெண்பாத்திரத்தின் கல்யாணத்தைப் பற்றி ஒரு நாற்பது பேர் நடுக்கூடத்தில் நீட்டி முழக்க ஆரம்பித்து விடுவார்கள், ’நம்ம சாதி என்ன சொல்லும்’ என்று சோகப்படுவார்கள்; ஆவேசப்படுவார்கள். அதில் ‘சாதிபேதம் தவறு’ என்று வலியுறுத்துவதைக் காட்டிலும் வலியுறுத்துவதை ‘சாதி முக்கியமல்லவா’ என்ற தொனியே தொக்கி நிற்கும். அதாவது நடப்பு வாழ்க்கையை அத்தனை துல்லியமாகப் பிரதிபலிக்கிறார்களாம். சின்னத்திரை ராணி என்று கொண்டாடப்படும் ராதிகாவின் சீரியல்களில் எத்தனை வகை ரவுடிகள் ஊரில் இருக்கலாம் என்று வகுப்பெடுக்காத குறை. நினைத்தமாத்திரத்தில் முதுகுப்புறமிருந்து பட்டாக்கத்தியை உருவியெடுப்பவர்கள் யாருமில்லையே என்று விஜய் தொலைக்காட்சி ‘ஆபீஸ்’ தொடர்நாடகத்தை நினைத்து ஆறுதலடையலாமென்று பார்த்தால், அதில் உதாரணப் புருஷனாக அடையாளங்காட்டப்படும் மேலதிகாரி விசுவநாதன் பாத்திரம் தனக்குக் கீழே வேலை செய்பவர்களையெல்லாம் ஒருமையில் அழைக்கிறார், போய்யா வாய்யா என்கிறார். இது தான் இயல்பு என்று ஏற்றுக்கொள்ளும்படி இளைய தலைமுறையினருக்கு அறிவுறுத்தப்படுகிறதோ, மூளைச்சலவை செய்யப்படுகிறதோ என்று தோன்றுகிறது. இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பு, தொழிற்சங்கம் வலுவாக , நான் முன்பு வேலை பார்த்த அலுவலகத்தில் புதிதாக வந்திருந்த மேலதிகாரியொருவர் என் சக ஊழியை ஒருவரை “பத்மா” என்று அழைக்க, “மரியாதை தாருங்கள் ஸார், மிஸஸ் பத்மா” என்று கூறுங்கள்” என்று அவர் அழுத்தமாய் கூறீயது நினைவுக்கு வருகிறது. பல வருடங்களுக்குப் பிறகு, தெனாலி படம் பார்க்க நேர்ந்த போது அதில் அண்ணா, அண்ணி, அவர்களுடைய குழந்தைகளோடு கதாநாயகி தொடையில் மேல்பாகம் தெரியும்படியான குக்குட்டைக் காற்சட்டையோடு வந்ததைப் பார்த்து அதிர்ச்சியாகவே இருந்தது.
“நல்ல காலம் வருகுது;நல்ல காலம் வருகுது
சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது
சொல்லடி, சொல்லடி. சக்தி மாகாளி!” – பாரதி.-
கவிதை… கவிதை என்ற சொல்லைக் கேட்டது எப்போது? கவிதை என்ற சொல்லைப் பார்த்தது எப்போது? துல்லியமாகச் சொல்லிவிடமுடியுமா? துல்லியமாகச்சொல்லிவிட முயற்சி செய்கிறேன். நடக்கும்போதும் யோசிக்கிறேன். படுத்துக்கொண்டும் யோசிக்கிறேன். அந்தத்துல்லியம் சற்று தூரத்தில் இருக்கிறது என்பதுதான் உண்மை. அம்மா பேசிய சொலவடைக்கிடையே மறைந்திருந்ததை கவனிக்கத்தவறிவிட்டேன். இன்று என் மனைவி பேசுவதுபோல் அன்று பேசிய பலரின் சொற்சித்திரங்களைக் கையகப்படுத்த தவறிவிட்டேன். காரணம்…கவிதையை இனம்காணும் பருவத்தில் நான் இல்லை` அது, கவிதை உணர்வு என்னிடம் தோன்றாமலிருந்த காலம். கவிதை உணர்வு எனக்குள் தோன்றி என்னைத்தூங்கவிடாமல் உசுப்பத்தொடங்கியபொழுதிலிருந்துதான் கவிதையை இனம்காணும் தூண்டுதல் நிகழ்ந்தது.` அந்தத்தூண்டுதலுக்குப்பின்பே கவிதைபற்றிய உணர்வு, கவிதைபற்றிய எண்ணம், கவிதையோடு தொடர்பு வளர்ந்தது .தொடக்கப்பள்ளியில் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்,மூதுரை, நல்வழிப் பாடல்கள்தாம் முதலில் அறிமுகம். அவற்றை ஒரு கடமையாகப் படித்தோம்; பாடினோம். அவற்றிலிருந்து நாம் பெற்றது சில அசைக்கமுடியாத உண்மைகள்; தெளிவுகள்;வழிகாட்டுதல்கள்; நீதிகள். செய்யுளாகப்படித்தோம். நீதிகளைத்தெரிந்துகொள்ள படித்தோம்.
கடந்த ஜனவரி 2014ல் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் காவ்யா பதிப்பகம் வெளியிட்ட ‘ஒப்பனைகள் கலைவதற்கே’ என்ற நாவலை கையிலெடுத்தபோது என்ன பெரியதாக / புதியதாக இருந்துவிடப் போகிறது மற்ற நாவல்களைப்போல காதல், திகில் கதையாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணி வாசிப்பதற்கு சற்று அலட்சியம் கொண்டேன். ஆனால், ‘ஒப்பனைகள் கலைவதற்கே’ வாசித்த பிறகு தான் தாமதம் கொண்டதற்கு வருந்தினேன். தினம் தினம் எத்தனையோ காதல்கள் நம்மைச் சுற்றிப் பார்க்கிறோம். பெரும்பாலும் அதற்கெல்லாம் ‘அட!!’ என்போம். வியப்போம். எக்ஸைட் ஆவோம். ஆனால் இத்தகைய காதல்களுக்குப் பின்னால் இப்படி ஒரு கோணம் இருக்குமென்று நினைத்ததே இல்லை. பெண்கள் தங்களைப் பற்றியே அறியாத பல விஷயங்களை அறிந்து அதை சமூக நலத்தின் கோணத்தில் ஆராய்ந்து,சமூக நலனுக்கு பொருந்தாதவைகளை இனம் கண்டு நாவலில் சுட்டிக்காட்டியிருக்கிறார் எழுத்தாளர். இந்த நாவலில் வரும் ஆண் – பெண் குறித்த வரிகளில் பலவற்றை வேறெந்த நாவலிலும் படித்ததில்லை. சமையலில் கூட, அதிகமாக பயன்படுத்தினால், உப்பு கரிக்கும். குறைவாகப் பயன்படுத்தினால் ருசி இருக்காது. ஆக எந்த ஒரு பொருளின் பயன்பாட்டிற்கும் மிக நுண்ணியமாக ஒரு அளவீடு இருக்கிறது. இருபது வருடங்கள் முன்பு வரை உரிமைகளும், சுதந்திரமும் மறுக்கப்பட்ட பெண் இனம், கடந்த பதினைந்து ஆண்டுகளில் பெற்றிருக்கும் சுதந்திரத்தின் உண்மையான அளவீடு என்ன என்பதை குறிப்பாக மஞ்சு என்கிற கதாபாத்திரம், ரவி என்கிற கதாபாத்திரத்திடமிருந்து விலகிச் செல்லும் இடத்தின் மூலம் புரியவைக்கிறார் எழுத்தாளர்.
மேற்கத்திய சமூகத்தின் இயந்திர கதியிலான வாழ்வைப் பின்புலமாகக் கொண்டு இளைஞர்களிடத்திலும் யுவதிகளிடத்திலும் தோன்றியிருக்கும் வன்முறையைக் கொண்டாடும் அன்றாடக் கொலை உணர்வை தனது படங்களில் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார் ஆஸ்திரியத் திரைப்படக் கலைஞனான மைக்கேல் ஹெனக்கே. வியட்நாமிலிருந்து அமெரிக்கா வெளியேறியதன் பின், அமெரிக்கப் படைப்பணியினைக்; கடந்தகாலமாகக் கொண்ட ஒரு தலைமுறையின் உளச்சிதைவையும் குற்ற உணர்வையும் தற்கொலை மனப்பான்மைiயுயும் அவர்தம் அன்றாட வாழ்வில் இடம்பெறும் வன்முறையையும் தனது படங்களின் பேசுபொருளாகக் கொண்டு கணிசமான படங்களை உருவாக்கினார் அமெரிக்க இயக்குனரான ஆலிவர் ஸ்டோன்.
கடந்த முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தினிடையில் வாழ்ந்து, இழந்து, முள்ளிவாய்க்கால் பேரழிவில் ஆயிரக் கணக்கான உறவுகளையும் பறிகொடுத்த ஈழ சமூகம், வரலாற்றின் கைதிகளாக, சாட்சிகளாக வாழ்ந்த அந்த மனிதர்களின்பாலான பரிவுடன், அவர்களது சிதைவுகளை, சித்திரவதைகளை, நம்பிக்கைகளை நம்பிக்கைவீழ்ச்சிகளை அதனது தொடர்ச்சியைப் படைப்புக்களாக உருவாக்கியிருக்கிறதா எனும் கேள்வி எவருக்கும் மிகமிக முன்கூட்டிய ஒரு கேள்வியாகத் தோன்றலாம். கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ நாவலை நினவுகூர இக்கேள்வி என்னளவில் இன்று பொருத்தமானது என்றே தோன்றுகிறது.
அண்மையில் மறைந்த மீசாலை மேற்கைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் எஸ்.எஸ்.வைரமுத்து (சங்கரப்பிள்ள வைரமுத்து) அவர்களின் ஒவ்வோரு நாளும் ஆங்கிலம் பயில் (Practice English Every Day) என்னும் நூலின் இரு தொகுதிகளும் கிடைக்கப்பெற்றோம். இவை சாவகச்சேரியில் 114 ‘டச்சு றோட்’டில் அமைந்துள்ள திருக்கணித பதிப்பகத்தில் அச்சிட்டு 2008ல் வெளியிடப்பட்டுள்ளன. இந்நூலினை நூலாசிரியர் தனது மனைவியான காலஞ்சென்ற ஆசிரியை சேதுநாயகி வைரமுத்து அவர்களது நினைவுக்குச் சமர்ப்பணம் செய்திருக்கின்றார். அச்சமர்ப்பணத்தில் தனது ஆசிரியப் பணிக்கு வாழ்க்கை முழுவதும் ஆதர்சனமாகவும், உறுதுணையாகவும் விளங்கியவர் தனது மனைவியார் என்று குறிப்பிட்டிருக்கின்றார். இந்நூலின் முதற் தொகுதி நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது பகுதி (Translation 1 & 2) மொழிபெயர்ப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பகுதி உரையாடலுக்கும் (Conversation) , மூன்றாவது பகுதி கடிதங்கள் எழுதுவதற்கும் (Written Message) நான்காவது பகுதி இலக்கணத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. நூலின் அநுபந்தம் ஒன்று பொன்மொழிகளுக்காகவும், அநுபந்தம் இரண்டு சிறுவர் பக்கத்துக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொழிபெயர்ப்புப் பிரிவுகளில் ஆங்கில வசனங்களும், அவற்றுக்கான தமிழ் மொழிபெயர்ப்புகளும் தரப்பட்டுள்ளன. உரையாடல் பகுதியில் தொலைபேசி உரையாடல், நேரடி உரையாடல் ஆகியன விபரிக்கப்பட்டுள்ளன. மேற்படி நூலின் இரண்டாவது பகுதி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற் பிரிவு மொழிபெயர்ப்புக்காகவும், இரண்டாவது பிரிவு இலக்கியப் படைப்புக்காகவும், மூன்றாவது பிரிவு சிறுவர் பக்கத்துக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இரண்டாவது நூலின் இலக்கியப் படைப்புப் பகுதியில் English is a master key , Pleasures of Reading, Hobbies, The Education, My Aim in Life , Let Us Learn More English And Good English மற்றும் Good Manners ஆகிய ஒரிரு பக்கக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
– ஜூன் 2003 இதழ் 42 பதிவுகள் இணைய இதழில் வெளியான நிகழ்வுக்குறிப்பு ஒரு பதிவுக்காக. –
தமயந்தியின் நிழற்படக் கண்காட்சி 24/05/03 இலிருந்து 15/06/03 வரை , நோர்வேயில் Sunnmorsposten, Roysegt 10 இல் நடைபெறவுள்ளது. காற்றின் தழுவலில் நித்தம் சிலிர்த்து அவ்வப்போது சூரியக் குளியலிலும் மறு பொழுது பனியின் போர்வையிலுமாய் – பொழுதொரு மேனியாய், பொழுதின் மேனியாய் – துண்டம் துண்டமாய் சிதறிக் கிடக்கும் நோர்வே. பொழுதுகளின் வார்த்தைகளற்ற உலகை எங்களோடு உறவாட விட்டிருக்கிறார் தமயந்தி. புரட்சி, போராட்டம், அரசியல், ஐனநாயகம், உரிமை என ஒரு புறமும், கலை, அழகு, கவிதை, அறிவியல் இலக்கியம் என இன்னொரு புறமுமாய் அல்லலாடி சிதைந்து – இழப்பு, சோகம், நிச்சயமின்மை, கழிவிரக்கம், பச்சாதாபம், பிரிவாற்றாமை எனத் தோய்ந்து சோர்ந்த போதிலெல்லாம் ”உயிரா போய்விட்டது” என மீண்டு, ”காணுமிடமெல்லாம் நம் வசமே” என நம்பிக்கையுடன் செயற்பட்டு வருகிறார். நானும் நான் சார்ந்ததுமே சமூகம், என் படுக்கை விரிப்பில் இருந்து தொடங்கி மீண்டும் கண்ணயர முனையும் வரையான காட்சிகளே எனது சூழல் என – நேற்றையவை எல்லாம் நெஞ்சில் ஏறி பரிகசிக்க, நாளை நடுத்தெருவுக்கான வாழ்வாய் அச்சுறுத்த – கணமும் கணத்தில் விளையும் கணமுமே வாழ்வின் நிஐம் என களிப்புறும் கலைஞன்.