நயப்புரை: முருகபூபதியின் பாட்டி சொன்ன கதைகள்; உருவகம் சார்ந்த சிறுவர் இலக்கியம்

எழுத்தாளர் முருகபூபதி‘பாட்டி   சொன்ன   கதைகள்’ என்பது இங்கு நாம் நயங்காணவிருக்கின்ற நூலின் பெயர். லெ.முருகபூபதி இதனைப்படைத்திருக்கின்றார்.   இதிலே இருப்பவை உருவகக்கதைகள். பன்னிரண்டு கதைகள் இங்கே இருக்கின்றன. இந்த நூலுக்கு பெயர் வந்த காரணம், இதனை    உருவாக்குவதற்குக் காரணமாக இருந்த உந்துசக்தி என்பனவற்றை நூலாசிரியர் தம்முடைய முன்னுரையிலே விரிவாகச் சொல்லியிருக்கிறார். “இரவிலே உறங்கும் வேளையில் நான் கண்ணயரும் வரையில் என்னருகே படுத்திருந்து  –  எனது தலைமயிரை கோதிவிட்டவாறு    பாட்டி சொன்ன கதைகள் இவை. இக்கதைகள்  பின்பு கனவிலும் வந்திருக்கின்றன. மனதிலும்  பதிந்துகொண்டன. அந்தப்பதிவு இங்கு பகிரப்படுகிறது.” என்கிறார்.

கதைகள்   பிறந்த    கதை
 
ஆசிரியர்    தனது     பாட்டியினது     இடுக்கண்      பொருந்திய    வாழ்க்கையையும்     அவளது      துணிவையும்     பரிவையும்      இங்கே எடுத்துச்சொல்கிறார்.       “ யார்     உதவியையும்     எதிர்பாராமல்    தனது உழைப்பையும்     ஆத்மபலத்தையுமே    நம்பி    வாழ்ந்த     எங்கள்    பாட்டி எமக்கெல்லாம்    முன்னுதாரணம்தான்”   என்கிறார்.  ஆசிரியர்     எழுதியிருக்கும்     இந்த    முகவுரை     இவருக்கும் இந்தப்பாட்டிக்கும்    இடையேயிருந்த    பாசப்பிணைப்பை    நன்கு உணர்த்தி    நிற்கிறது.     இந்தப்பாசத்தின்    வெளிப்பாடு     இந்த    நூலின் பெயரிலும்     கதைகளிலும்    துலங்குவதைக்காணலாம்.

Continue Reading →

இலங்கு நூல் செயல் வலர்: க. பஞ்சாங்கம் -2

திறனாய்வும் திறனாய்வாளரும்!

நாகரத்தினம் கிருஷ்ணாக.பஞ்சாங்கத்தின் திறனாய்வு கட்டுரைகளின் முதற் தொகுப்பு நவீன இலக்கிய கோட்பாடுகள். இதற்கு அணிந்துரை பாரதி புத்திரன் என்பவரால் எழுதப்பட்டுள்ளது. எப்போதுமே  பலநேரங்களில் ‘ஏதோ கேட்டார்கள் எழுதினேன்’ என்பதுபோல சில அணிந்துரைகள் அமைந்துவிடும். இந்நூலுக்கான அணிந்துரை அவ்வாறு எழுதப்பட்டதல்ல. எழுதியிருப்பவர், உள்ளத்தால் க. பஞ்சாங்கத்தோடு அண்மித்தவராக இருக்கவேண்டும், எனினும் மருந்துக்கும் துதிபாடல்களில்லை. நூலாசிரியருக்கும் நூலுக்கும் எது பொருந்திவருமோ அதனைக் கூடுதல் குறைவின்றி சொல்லி யிருக்கிறார்.

” மனித நேயம் மிக்கதோர் இலக்கிய திறனாய்வாளனின் சமூகத் தொண்டாக, வாழ்வின் உண்மை நோக்கிய தேடுதலாக அவர் தம் பணிகளை –  படைப்புகளை உணர முடியும்”  என ஓரிடத்தில் பாரதிபுத்திரன் குறிப்பிடுகிறார்.  இலக்கிய நண்பர்களால் ‘பஞ்சு’ என அழைக்கப்படும் க. பஞ்சாங்கத்தின் உழைப்பை இதனினும் பார்க்க வேறு சொற்களால் செரிவுடனும், பெருவெடிப்பு பிரகாசத்துடனும் சொல்ல இயலாது. இவாக்கியத்தை வாசித்தபோது பஞ்சாங்கம் குறித்த எனது முடிவில் தவறில்லை என்பதை உணர்ந்தேன். இத்தொடரை எழுத உந்து கோலாக இருந்த சக்திமிக்க சொற்கள் அவை.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் – 35: வீரகேசரியில் வேலை தேடிய அனுபவம்!

வாசிப்பும், யோசிப்பும் - 35: வீரகேசரியில் வேலை தேடிய அனுபவம்!மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலைப் படிப்பினை முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்த சமயம். அக்காலகட்டத்தில் இலங்கையிலிருந்து வெளியாகும் பத்திரிகைகளெல்லாம் புதுக்கவிதைகக்கென்று ஒரு பகுதியினை ஒதுக்கி நிறைய கவிதைகளை வெளியிட்டு வந்தன. வீரகேசரியும் தனது வாரவெளியீட்டில் ‘உரை வீச்சு’ என்னும் தலைப்பிட்டு கவிதைகளை வெளியிட்டு வந்தது. அக்காலகட்டத்தில் வீரகேசரியின் ‘உரை வீச்சில்’ எனது ஆரம்பகாலக் கவிதைகள் பல வெளிவந்திருந்தன. அதுபோல் தினகரன், சிந்தாமணி, ஈழமணி போன்ற பத்திரிகைகளிலும் எனது ஆரம்பகாலக் கவிதைகள் பல வெளியாகியிருந்தன.
 
அச்சமயத்தில் வீரகேசரியில் ஓர் அறிவித்தல் வெளிவந்திருந்தது. வீரகேசரிக்கு ‘உதவி ஆசிரியர்’ வேலைக்கு ஆட்களைச் சேர்ப்பதுபற்றிய அறிவித்தல். எனக்கு அக்காலகட்டத்தில் பத்திரிகையொன்றில் வேலை பார்ப்பது பற்றிய கனவொன்றுமிருந்தது. அச்சமயத்தில் வீரகேசரியின் ஆசிரியராகவிருந்தவர் சிவப்பிரகாசம் அவர்கள். வீரகேசரிக்கு உதவி ஆசிரியர் தேவை என்ற அறிவித்தலைப் பார்த்ததும் எனக்கோர் ஆசை. உடனடியாக வீரகேசரியின் அலுவலகத்துக்குச் சென்றேன். அப்பொழுது ஆசிரியர் அங்கில்லை. அங்கிருந்த ஏனையவர்களிடம் உதவி ஆசிரியர் வேலை பற்றி விசாரித்தேன். என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன். அவர்களும் என் எழுத்தனுபவம் போதும். ஆசிரியருடன் வந்து கதையுங்கள் என்றார்கள். ஆசிரியர் விடுமுறையிலிருப்பதாகவும் மீண்டும் வேலைக்கு வரும்போது  வந்து கதைக்கும்படியும் கூறினார்கள்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் – 34: பால்ய காலத்து வாசிப்பனுபவம் – பிள்ளைப் பிராயத்திலே……

– என் பால்ய காலத்து வாசிப்பனுபவத்தை விபரிக்குமிக்கட்டுரை ஏற்கனவே ‘பதிவுகள்’ , ‘திண்ணை’ ஆகிய இணைய இதழ்களில் வெளியான கட்டுரைகளிலொன்று. தற்போது மேலும் சில திருத்தங்களுடன் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது. –

பால்ய காலத்து வாசிப்பனுபவம்: பிள்ளைப் பிராயத்திலே.....அப்பொழுது நான் வவுனியாவில் என் பெற்றோருடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். வவுனியா மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று கொண்டிருந்தேன். என் அம்மாவும் அங்குதான் ஆசிரியையாகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்பொழுதுதான் நான் எழுத்துலகில் மெல்ல மெல்ல காலடி வைத்துக் கொண்டிருந்தேன். எனது ‘பொங்கல்’ பற்றிய சிறுவர் கவிதையொன்றினை ‘பொங்கலோ பொங்கல்’ என்னும் தலைப்பில் சுதந்திரன் தனது பொங்கல் மலரில் பிரசுரித்திருந்தது. உயர்வகுப்பு மாணவர்களுக்காக ஈழநாடு வாரமலர் நடாத்திய ‘தீபாவளி இனித்தது’ என்னும் கட்டுரைப் போட்டிக்காக ஆறாம் வகுப்பு மாணவனாக நான் இனிக்க இனிக்க எழுதி அனுப்பிய கட்டுரையினைப் பிரசுரிக்கா விட்டாலும் பாராட்டி என்னைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தது ஈழநாடு. ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், குமுதம், தினமணிக் கதிர், அம்புலிமாமா, பொம்மை, பேசும்படம், தினமணி, ராணி, ராணிமுத்து, மற்றும் ஈழத்துப் பத்திரிகைகளான சுதந்திரன், ஈழநாடு, அந்தனிசிலின் ‘தீப்பொறி’ என்று வீடு முழுவதும் பத்திரிகை, சஞ்சிகைகளால் அப்பா நிறைத்து வைத்திருந்தார். அனைத்துச் சஞ்சிகைகளினதும் தீபாவாளி மலர்களையெல்லாம் அப்பா வாங்கியிருந்தார். அவை தவிர பொன்மலர், பால்கன், வேதாள மயாத்மாவின் இந்திரஜால் காமிக்ஸ் எனப் பல்வேறு ‘காமிக்ஸ்’ வெளியீடுகளையும் அப்பா மறந்திருக்கவில்லை. இவை தவிர ராஜாஜியின் ‘வியாசர் விருந்து’ (மகாபாரதம்), ‘சக்கரவர்த்தித் திருமகன்’ (இராமாயணம்), சேக்கிழாரின் பெரியபுராணம், பாரதியார் கவிதைகள் என மேலும் பல நூல்கள். அப்பாவுக்கு இரு பெரும் இதிகாசங்களான ‘இராமாயணம்’, ‘மகாபாரதம்’ ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு. அதன் காரணமாகவே எங்களுக்குப் பெயர்களை (கிரிதரன், பாலமுரளி, சசிரேகா, மைதிலி, தேவகி) வைத்தபொழுது அவ்விரு இதிகாசங்களிலிருந்தே வைத்ததாக அம்மா கூறியிருந்தார்.  

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் – 33 : புஷ்பராணியின் ‘அகாலம்: ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்’

a_pushparanee.jpg - 4.87 Kbbook_akaalam.jpg - 10.53 Kbஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தபோது அதில் முன்னணியிலிருந்த பெண்களில் மயிலிட்டி  புஷ்பராணி முக்கியமானவர். பின்னர் பல்வேறு அமைப்புகள் உருவாகக் காரணமாகவிருந்த ஆரம்பகாலத் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் அமைப்பான தமிழ் மகளிர் பேரவையிலும், தமிழ் ஈழ விடுதலை அமைப்பிலும் (TLO) தீவிரமாக இயங்கியவர். புலோலி வங்கிக் கொள்ளையில் சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டு காவற்துறையினரின் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானவர். ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்னும் நூலை எழுதிய புஷ்பராஜாவின் சகோதரி. இவரது ‘அகாலம் (ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்)’ என்னும் நூலை அண்மையில் வாசித்தேன். ‘கருப்புப் பிரதிகள்’ வெளியீடாக வெளிவந்த நூல்.  

Continue Reading →

சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்.

– ‘சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்’ என்னும் அறிஞர் அ.ந.கந்தசாமி பற்றிய அந்தனி ஜீவாவின் இக்கட்டுரைத் தொடர் ஈழத்தில் தினகரன் வாரமஞ்சரியில் 12-02-1984 அன்றிலிருந்து தொடராக வெளிவந்த கட்டுரைத் தொடராகும். ‘பதிவுகள்’ இணைய இதழிலும் மே 2003இலிருந்து அக்டோபர் 2003 வரை தொடராக மீள்பிரசுரம் செய்யப்பட்டது. தற்போது அ.ந.க.வின் நினைவு தினத்தினை ஒட்டி மீள்பிரசுரமாகின்றது. பெப்ருவரி 14, 1968 அவர் அமரரான நாள். – பதிவுகள் –

அறிஞர் அ.ந.கந்தசாமிஅந்தனி ஜீவா “வாலிபத்தின் வைகறையில் பள்ளி மாணவனாக யாழ்ப்பாணத்து நகரக் கல்லூரிக்கு வந்து விட்டு, மாலையில் கிராமத்தை நோக்கிப் புகைவண்டியில் செல்லுகையில் சில சமயம் தன்னந் தனியே அமர்ந்திருப்பேன். அப்பொழுது என் கண்கள் வயல் வெளிகளையும், தூரத்துத் தொடு வானத்தையும் உற்று நோக்கும்….உள்ளத்திலும் உடம்பிலும் சுறுசுறுப்பும் துடிதுடிப்பும் நிறைந்த காலம். உலகையே என் சிந்தனையால் அளந்து விட வேண்டுமென்று பேராசை கொண்ட காலம்…..”

 

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அமரராகிவிட்ட எழுத்தாளரும், சிந்தனையாளரும், முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியுமான அறிஞர் அ.ந.கந்தசாமி அவர்கள் தன் இளமைக்கால நினைவலைகளை இவ்வாறு எழுதியுள்ளார். எழுத்தாளர்களின் இளமைக்கால நினைவலைகள் இவ்வாறாகத்தானிருக்கும்.  அமரரான அ.ந.க.வின் எழுத்துகளை மீண்டும் படிக்கும் பொழுது அந்தத் துள்ளும் தமிழும், துடிப்புள்ள நடையும் எம்மை மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன.

Continue Reading →

பெண்மனதின் அரூப யுத்தம் ‘அம்மாவின் ரகசியம்’

குறுநாவல் - அம்மாவின் ரகசியம்மனிதர்களின் வாழ்க்கைகளை தடம்புரள செய்வதில் அடக்குமுறை, அதிகாரங்கள் ஆகியன இனபேதங்களைப் பார்ப்பது இல்லை. விதவிதமான புரட்சிகளும் கூட தம் இலட்சியப் பயணங்களின் பாதைகளில் நசுங்கி விழும் சாதாரணர்களின் வாழ்க்கைகளிற்காக தம் நடையை நிறுத்துவதும் இல்லை. இந்த இரு எதிர் இயக்கங்களின் போக்குகளினூடு, மனிதர்கள் தம் வாழ்வின் போக்குகள் மாறிச் சிதையும் வினோதங்களை கண்டபடியே தாம் அடைய முடிந்திடா இலக்குகளை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரமும் சரி, புரட்சியும் சரி வீழ்ச்சியடையும் மனிதர்களின் வாழ்க்கைகளை தம் பிரச்சாரங்களிற்காகவே பயன்படுத்தக் கற்றுக் கொண்டிருக்கின்றன. படைப்பாளிகளே சாதாரணர்களின் வீழ்ச்சிகளை மானுட அக்கறையுடன் பதிந்து செல்பவர்களாக இருக்கிறார்கள்.  ‘அம்மாவின் ரகசியம்’ எனும் இக் குறுநாவல் இலங்கையிலுள்ள ‘உடவளவ’ எனும் கிராமத்தில் வாழ்ந்திருந்த முத்துலதா எனும் பெண்ணின் வாழ்க்கை பெறும் மாற்றங்களை தன் சொற்களில் அரங்கேற்றுகிறது. 1970 களிலும் 1980 களிலும் இலங்கை அரச அதிகாரங்களிற்கு எதிராக புரட்சி செய்த தென்னிலங்கையை சார்ந்த புரட்சி அமைப்பான ‘ஜனதா விமுக்தி பெரமுன’விற்கு எதிராக பொலிஸ் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச வன்முறைகளின் பின்ணனியில் கதையின் ஆரம்பப் பகுதி கூறப்படுகிறது.

Continue Reading →

முன்னுரையாகச் சில வார்த்தைகள் மறுபடியும்.

- வெங்கட் சாமிநாதன் -புத்தகத்தைத் திறந்த உடனேயே சில வார்த்தைகள் மறுபடியும் என்று சொன்னால் என்ன அர்த்தம்? இந்த மறுபடியும் என்ற வார்த்தை இப்போது இந்த புத்தகத்தைத் திறந்த உடனேயே என்ற சந்தர்ப்பத்தில் அல்ல. அப்படியும் எடுத்துக்கொள்ளலாம். அது இப்போது படிக்கத் தொடங்கியவர்களுக்கு. இதன் முதல் பக்கத்தின் முதல் கட்டுரையிலேயே நான் எழுதத்தொடங்கிய 1960-ல் சொன்ன சில கருத்துக்களைத் திரும்ப நினவு படுத்தித்தான் தொடங்குகிறேன். வேறு யாருக்கும், இந்தியாவில் உள்ள எந்த மொழி பேசும் மக்களுக்கும், நம் தமிழ் மக்களுக்கு சொல்லவேண்டியிருப்பது போல, ஒரே விஷயத்தைப் பன்னிப் பன்னி சொல்ல வேண்டியிருக்கிறதா என்று தெரியவில்லை. பல விஷயங்களில், பல வாழ்க்கை அம்சங்களில். எனக்கு வயது எண்பது தாண்டியாகிவிட்டது.  என் ஏழு வயதிலிருந்தோ அல்லது இன்னும் தாராளமாக பத்து வயதிலிருந்து என்று வைத்துக்கொள்ளலாம, சரி பத்து வயதிலிருந்து என்னைச் சுற்றியுள்ள உலகை, மக்களை வாழ்க்கையை ஒரு வாறாக விவரம் அறிந்து பார்த்ததை நினைவில் கொண்டிருப்பேன் என்று கொள்ளலாமா? ஒரளவுக்கு நான் அப்போது வாழ்ந்த ஒரு சிறிய ‘டவுன்’ மக்களையும், அவர்கள் வாழ்க்கையையும், ஊரையும் மக்கள் மனப் போக்கையும் பற்றி என் நினைவில் பதிந்தவற்றை இப்போது நினைவுக்குக் கொண்டு வந்தால், இப்போது அது ஒவ்வொன்றும் படிப்படியாகச் சீரழிந்து கொண்டு தான் வந்துள்ளது என்பது எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது.

Continue Reading →

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார்

*நம்மாழ்வார் ஐயா இயற்கை எய்துவதற்கு சில நாட்கள் முன்பு அவரைப் பற்றி முகம் இதழின் பொங்கல் மலரில் – ஜனவரி 2014 – எழுதப்பட்ட கட்டுரை. இக்கட்டுரையினைப் ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். அவருக்கு எமது நன்றி. – பதிவுகள்- 
 
நம்மாழ்வார் இயற்கையை நேசிக்கிற, இயற்கையைப் பாதுகாக்கப் போராடுகிற, இயற்கை விவசாய விஞ்ஞானி. இவரைத் தமிழகம் மட்டுமல்ல, பிற மாநிலங்களும் நன்கறியும். தமிழகத்தில் இயற்கை விவசாய இயக்கத்தைத் தோற்றுவித்தல்; பிற மாநிலங்களுக் கும் சென்று இயற்கை விவசாயிகளுக்கு வழிகாட்டுபவர். இந்தியாவில் உள்ள அனைத்து விவசாய இயக்கங்கள் மட்டுமின்றி பிற நாடுகளிலும் இருக்கின்ற இயற்கை விவசாய அமைப்புகளும் இவரை நன்கறியும். இவர் தனி மனிதரல்லர். இவர் ஓர் இயக்கம். தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் தந்தை பெரியாரின் கால் படாத இடமில்லை. அவ்வாறே கடந்த 30 ஆண்டுகளாக தமிழக கிராமங்களில் இடைவிடாத சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இயற்கை விவசாயம் செய்ய வழிகாட்டுகிறார் நம்மாழ்வார்!பசுமைக்குமார்நம்மாழ்வார் இயற்கையை நேசிக்கிற, இயற்கையைப் பாதுகாக்கப் போராடுகிற, இயற்கை விவசாய விஞ்ஞானி. இவரைத் தமிழகம் மட்டுமல்ல, பிற மாநிலங்களும் நன்கறியும். தமிழகத்தில் இயற்கை விவசாய இயக்கத்தைத் தோற்றுவித்தல்; பிற மாநிலங்களுக் கும் சென்று இயற்கை விவசாயிகளுக்கு வழிகாட்டுபவர். இந்தியாவில் உள்ள அனைத்து விவசாய இயக்கங்கள் மட்டுமின்றி பிற நாடுகளிலும் இருக்கின்ற இயற்கை விவசாய அமைப்புகளும் இவரை நன்கறியும். இவர் தனி மனிதரல்லர். இவர் ஓர் இயக்கம். தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் தந்தை பெரியாரின் கால் படாத இடமில்லை. அவ்வாறே கடந்த 30 ஆண்டுகளாக தமிழக கிராமங்களில் இடைவிடாத சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இயற்கை விவசாயம் செய்ய வழிகாட்டுகிறார் நம்மாழ்வார்!  விவசாயம் என்பது வியாபாரம் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை என்று கிராம மக்களி டம் எடுத்துக்கூறுகிறார். ஆண்டு முழுவதும் விவசாய நிலங்களைப் பார்வையிடுவது, ஆலோசனைகளை வழங்கு வது, விவசாயக் கூட்டங்களில் பங்கு பெறுவது, இயற்கை விவசாயத் தொண்டு நிறுவனங் களுக்கு வழிகாட்டுவது, அவற்றை ஓரணியில் திரட்டுவது, மாநகரங்களிலும் பிற மாநிலங்க ளிலும் வெளிநாடுகளிலும் நடைபெறும் கருத்தரங்குகளில் கலந்துகொள்வது என ஓய்வ றியா உழைப்பு இவருக்குச் சொந்தமானது.

Continue Reading →

ஆய்வு: க. ஆதவனின் ‘மண்மனம்’ நாவல் ஒரு பார்வை

 அறிமுகம்

ஆதவன் கதிரேசபிள்ளை  சு. குணேஸ்வரன் ஆதவன் கதிரேசபிள்ளை இலங்கையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தற்போது புலம்பெயர்ந்து டென்மார்க்கில் வாழ்ந்து வருகிறார்.  மகாஜனாக் கல்லூரியில் கல்வி கற்றவர். 1980 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையில் சிறிது காலம் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். கவிதை, நாடகம், நாவல், குறும்படம் ஆகியவற்றில் ஈடுபாடு மிக்கவர்.  ‘தெருவெளி’ என்ற நாடக ஆற்றுகையை யாழில் அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.     80 களின் பின்னரான ஈழத்து அரசியல் நிலையை எடுத்துக் காட்டும் கவிதைகள் அடங்கிய ‘உள்வெளி’ என்ற கவிதைத்தொகுப்பு 1985 இல் தமிழ் நாட்டில் இருந்து வெளிவந்துள்ளது.  ஆதவன் புலம்பெயர்ந்த பின்னர் அங்கிருந்து வெளிவந்த ஆரம்பகால இதழ்களில்  ஒன்றாகிய ‘சுவடுகள்’ சஞ்சிகையில் ‘மண்மனம்’ என்ற தொடர்கதையை எழுதியுள்ளார். புகலிடத்தில் ‘சிறுவர் அரங்கு’ தொடர்பான செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறார் என்பது அவர் ‘தமிழ்3’ என்ற வானொலிக்கு வழங்கிய செவ்வியினூடாக அறியமுடிகிறது. இவை தவிர இலங்கையில் போராளிகளுக்கும் அரசுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் நிலவிய காலத்தில் இவர் இயக்கிய  ’ஒரு இராஜகுமாரியின் கனவு’ என்ற சிறுவர் தொடர்பான குறும்படமும் வெளிவந்துள்ளது.

Continue Reading →