உச்சிவெய்யிலில் காய்ந்து மழையில் நனைந்தோம் புகலிடத்துக்கு வந்து கால் நூற்றாண்டுகாலத்தின் பின்னர் எனக்கு ஒரு உண்மை தெரிந்தது. தாயகத்தின் போர் அநர்த்தங்களினால் அதிலிருந்து தப்பிவந்தவர்கள், ஓடி ஓடி உழைத்து…
நாஞ்சில் நாடன் தன் சிறுகதைகளிலும் நாவல்களிலும் அரசியல் வாதிகள், மற்றும் பிரமுகர்களின் வேஷதாரித்தனத்தை தனக்கே உரிய கேலியுடன் சித்தரிக்கிறார். வாக்குப் பொறுக்கிகள் என்னும் அவரது சிறுகதைத் தொகுப்பு ஒரு உதாரணம். தன் மிதவை என்னும் நாவலில் தான் பிறந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு சிற்றூரிலிருந்து வேலை தேடி பம்பாய் வந்த கதையைச் சொல்கிறார். அதில் தான் சந்திக்க நேர்ந்த அரசியல் பிரமுகர்களின் வெளி வேஷங்களையும், சாதி உணர்வுகளையும் பற்றி கொஞ்சம் விரிவாகவே எவ்வித தயக்கமின்றி கேலியுடன் தான் எழுதுகிறார். கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களில் தான் (அதைக் கதை என்பதா, இல்லை சிறுகதை என்பதா, அல்லது குறிப்புகள் என்பதா, எந்த வகைப்படுத்தலுக்கும் இயைவதாக, ஆனால் அதே சமயம் முழுவதும் அந்த வகைப்படுத்தலுக்கு அடங்காததாக இருப்பவை), ஒவ்வாத உணர்வுகள் என்ற தொகுப்பில் அவற்றைப் பார்க்கலாம், அவருடைய நடையும், எழுத்து பெறும் வடிவமும், கிண்டலும், சுய எள்ளலும் தனி ரகமானவை. தன்னைச் சுற்றியிருக்கும் வாழ்வை, நடை முறையை, மதிப்புகளை, சமூகத்தை அவர் செய்யும் கிண்டல், அதில் அவரது சுய எள்ளலும் சேர்ந்தது, எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கும் ரகம். இன்றைய தமிழ் சமூகத்தின் மதிப்புகளின் அது எதையெல்லாம் தன் வெற்றியாகக் கருதி வியக்கிறதோ அந்த அலங்கோலங்கள், கீழ்த்தரங்கள், ஆபாசங்களையெல்லாம் மதிப்புகள், வாழ்க்கைத் தர உயர்வு, வெற்றி என்று சொல்லிப் பெருமைப் பட்டூக் கொள்வது, தமிழ் மொழியையே கொச்சைப்படுத்துவதும் ஆபாசமாக்குவதும் ஆகும். கோபிகிருஷ்ணன் தனக்கென தனி ஒரு நடையையும், எழுத்து வடிவையும், உருவாக்கிக்கொண்டுள்ளார், தன்னையே கிண்டல் செய்து கொள்ளும் பாணியில் சமூகத்தைக் கிண்டல் செய்வதற்கு. அவர் போல ஒரு நடை, எழுத்து பாணி, கிண்டல், அவரதேயான ஒரு பார்வை கொண்ட இன்னொரு எழுத்தாளர் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவரைப் பற்றிய எதுவும் அவரது தனித்துவத்தையே சொல்லும்.
‘ஓர் அகதியின் பறவைகள் பற்றிய சிந்தனைகள்!’ என்னுமிக் கவிதை எனது வலைப்பதிவுக்காக நான் எழுதிய A Refugee’s Thoughts On Birds என்னும் ஆங்கிலக் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு. இக்கவிதை ‘சிறிலங்கா கார்டியன்’ (The Srilanka Guardian) இணைய இதழிலும் பிரசுரமாகியுள்ளது.
சிறியதிலிருந்து பெரியதுவரை,
மெதுவானதிலிருந்து
விரைவானதுவரை,
அவதானிப்புகள் பறவைகள்
பற்றிய,
அவை பறக்கும் வெளி-நேரம் பற்றிய
அதிக விபரங்களைக்
கற்றுத்தந்துள்ளன.
– இந்தக் கவிதை எனது வலைப்பதிவுக்காக எழுதிய My humble request to the bellicose rulers of the world என்னும் ஆங்கிலக் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு. இக்கவிதை ‘சிறிலங்கா கார்டியன்’ (The Srilanka Guardian) இணைய இதழிலும் பிரசுரமாகியுள்ளது.
கவிதை: போர்முனைப்புக் கொண்ட இவ்வுலகத்தின் ஆட்சியாளர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள்.
– வ.ந.கிரிதரன் –
போர்முனைப்புக் கொண்ட இவ்வுலகத்தின்
ஆட்சியாளர்களுக்கு எனது
பணிவான வேண்டுகோளிது.
உங்களுக்கு அசோகாவைத் தெரியுமா?
மகா அசோகா,
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்
இந்தியாவை ஆண்ட
உன்னதம்மிக்க
இந்தியச் சக்கரவர்த்தி.
[ தேவன் (யாழ்ப்பாணம்) பற்றிய இக்கட்டுரையை அவரைப் பற்றிய விரிவானதொரு ஆய்வுக்கு அடிகோலுமொரு ஆரம்பக் கட்டுரையாகக் குறிப்பிடமுடியும். இக்கட்டுரை எழுத்தாளர் முல்லை அமுதனால் தொகுக்கப்பட்டு வெளிவரவிருக்கும் ‘இலக்கியப் பூக்கள் -2’ நூலுக்காக எழுதப்பட்ட கட்டுரை. ஏற்கனவே முல்லை அமுதனால் தொகுக்கப்பட்டு வெளியான ‘இலக்கியப் பூக்கள்’ தொகுப்பு நூலின் தொடர்ச்சியாக வெளிவரவுள்ள நூலிது. – வ.ந.கி ] நான் யாழ் இந்துக் கல்லூரியிலும், வவுனியா மகாவித்தியாலயத்திலும் கல்வி பயின்றிருக்கின்றேன். இவற்றில் என் எழுத்தார்வம் தொடங்கியது வவுனியா மகா வித்தியாலய மாணவனாகவிருந்த சமயத்தில்தான். அப்பொழுதுதான் ஈழநாடு, சுதந்திரன் ஆகியவற்றில் என் ஆரம்பகால, சிறுவர் படைப்புகள் வெளிவந்தன. அப்பொழுதுதான் அகில இலங்கைரீதியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதலாவதாக வந்ததும் நிகழ்ந்தது. பின்னர் என் உயர்தரக் கல்வியை யாழ் இந்துக் கல்லூரியில் தொடர்ந்தபொழுது அங்கே இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் கால் பதித்த எழுத்தாளர்கள் சிலர் ஆசிரியர்களாகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார்கள். சொக்கன் என அறியப்பட்ட சொக்கலிங்கம், தேவன் – யாழ்ப்பாணம் என்று அறியப்பட்ட மகாதேவன் ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள். எனக்கு எப்பொழுதுமே ஒரு வருத்தம். என் எழுத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக யாழ் இந்துக் கல்லூரியில் ஆசிரியர்களாகப் பணிபுரிந்த எழுத்தாளர்கள் எவரிடமும் மாணவனாகக் கல்வி கற்கவில்லையே என்பதுதான் அந்த வருத்தம். என எழுத்தார்வதிற்கு முழுக்க முழுக்கக் காரணமாகவிருந்தது என் வீட்டுச் சூழலே. அப்பாவின் வாசிக்கும் பழக்கமும், வீடு முழுக்க அவர் வாங்கிக் குவித்த பத்திரிகைகள், சஞ்சிகைகளும்தாம் என் எழுத்தார்வத்தின் பிரதானமான காரணங்கள். இருந்தாலும் யாழ் இந்துக் கல்லூரியில் ஆசிரியர்களாக அப்பொழுது கடமையாற்றிக் கொண்டிருந்தவர்களில் ஒருவரான தேவன் – யாழ்ப்பாணம் அவர்களை அவ்வப்போது யாழ்நகரில் நடைபெற்ற நிகழ்வுகளின் மூலம், அவரது படைப்புகளின் மூலம் அறிந்து கொண்டிருந்தேன். ஆச்சியின் வீட்டில் கிடந்த பரணைத் தேடியபொழுது பழைய தினத்தந்தி பத்திரிகைப் பிரதிகள், மறைமலையடிகளின் நாகநாட்டரசி குமுதவல்லி, கோகிலாம்பாள் கடிதங்கள், திப்புசுலதான் கோட்டைமற்றும் தேவன் -யாழ்ப்பாணம் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ‘மணிபல்லவம்’ என்னும் பெயரில் வெளியாகியிருந்த ‘ புகழ்பெற்ற ஆங்கில செவ்விலக்கியங்களிலொன்றான Treasure Island நாவல் என பல படைப்புகள் கிடைத்தன. மேற்படி மணிபல்லவம் நாவலை அன்றைய காலகட்டத்தில் விரும்பி வாசித்துள்ளேன்.
From: Kalaiarasy To: ngiri2704@rogers.com Sent: Sunday, September 29, 2013 11:29 AMSubject: தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கட்டுரைகள்! வணக்கம், நீங்கள் உங்கள் தளத்தில் தமிழ்…
(குறிப்பு:- நாங்கள் இலண்டனில் ஒரு மாடி வீட்டில் வசிக்கிறோம். அந்த வீட்டின் கூரை நாலு பக்க மேற்சுவரில் அமைந்து, இரண்டு அடிகள் நீளத்துக்குக் கீழ் இறங்கி உள்ளது. மேற் சுவருக்கும் கூரைக்குமிடையில் உள்ள சிறு இடைவெளியால் பறக்கும் உயிரினங்கள் அறைக்குள் புகாதவாறு அந்த இடைவெளியைச் சுற்றிவரப் பலகையால் பெட்டி வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. பின் சுவர்ப்பக்கத்தில் தோட்டமும், பூந் தோட்டமும் உள்ளன. அன்றொருநாள் தோட்டத்தில் உலா வருகையில் பல தேனீக்கள் பறப்பதைக் கண்டு, மேலே அண்ணாந்து பார்த்த பொழுது கூரைப் பலகையில் இரண்டு துளைகள் இருப்பதையும் அதனூடாகத் தேனீக்கள் உட்புகுவதும், வெளியில் வருவதுமாய் இருப்பதை அவதானித்தேன். இதை வீட்டாரும் வந்து பார்த்தனர். இதை ஒரு கிழமைவரையில் பார்த்து வந்தோம். ஒரு கிழமை சென்றதும் தேனீக்கள் அங்கிருந்து வேறு இடத்துக்குச் சென்றுவிட்டன. தேனீக்கள் எங்களில் ஐயுறவு கொண்டு வேறொரு இடத்துக்குச் சென்று விட்டதை உணர்ந்து வருந்தினோம். இது என்னை மிகவும் தாக்கி விட்டது. அதனால் எழுந்தது இக் கட்டுரையாகும். – நுணாவிலூர் கா. விசயரத்தினம்.)
(தில்லியிலிருந்து அன்று வெளிவந்துகொண்டிருந்த BOOK REVIEW என்ற ஆங்கில இதழ், தமிழ் எழுத்துக்கு என ஒரு தனி இதழ் வெளியிட்டது. அந்த இதழுக்காக தமிழ் இலக்கியத்தின் எண்பதுக்களில் வெளிவந்த தமிழ் எழுத்துக்கள் பற்றி நான் எழுதியது பின் வரும் கட்டுரை. From the Eighties to the Present என்ற தலைப்பில் Book Review-வின் நவம்பர்-டிஸம்பர் 1992 இதழில் வெளியான கட்டுரைதான் இங்கு தமிழில் தரப்பட்டுள்ளது. அந்தச் சிறப்பிதழில் பிரசுரமான இரண்டு மற்ற கட்டுரைகள் ராஜீ நரஸிம்ஹன் A Telescopic Arousal of Time என்ற தலைப்பில் அம்பையின் சிறுகதைத் தொகுப்பு Lakshmi Holmstrom-ன் மொழிபெயர்ப்பில் A Purple Sea என்ற தலைப்பில் வெளி வந்த புத்தகத்தைப் பற்றியது. அடுத்தது வாஸந்தியின் காதல் பொம்மைகள் பற்றி எம். விஜயலக்ஷ்மி எழுதிய Indian Feminism – Vaasanti style என்ற கட்டுரையும் தான் இப்போது என் கட்டுரையின் மற்ற பக்கங்களிலிருந்து நான் இப்போது பெறக்கூடியவை. இந்த இதழுக்கு பின் வரும் கட்டுரை தவிர, அ.க. பெருமாளின் தோல் பாவைக் கூத்து பற்றிய புத்தகம் ஒன்றுக்கும் மதிப்புரை ஒன்றை நான் எழுதித்தந்திருந்தது எனக்கு நினைவுக்கு வருகிறது. ஆனால் அது இப்போது கிடைப்பதாயில்லை. கிடைப்பது பின் வரும் கட்டுரை ஒன்றுதான்.)
[ கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை தமிழ்க் கவிதையுலகில் முக்கியமானதோர் கவிஞர். பக்திப் பாடல்கள், குழந்தைப் பாடல்கள், இயற்கை பற்றிய பாட்டுகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், காவியங்கள், தேசியம் பற்றிய கவிதைகள், சமூக நோக்குடைய கவிதைகள் , வாழ்த்துப் பாக்கள் எனப் பல்வேறு கருத்துடைய கவிதைகளைப் படைத்தவர் கவிமணி. அவரது நினைவு நாளான செப்டம்பர் 26இல் , ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகின் முன்னோடிகளில் முக்கியமானவர்களிலொருவரான அறிஞர் அ.ந.கந்தசாமி கவிமணியின் ‘ஆசிய ஜோதி’ என்னும் காப்பியம் பற்றி எழுதிய ‘புத்தர் வாழ்வை விளக்கும் புதுமைத் தமிழ்க் காப்பியம். ‘ஆசிய ஜோதி’யின் அருங்கனிச் சிறப்பு!’ என்னும் கட்டுரையினைப் பிரசுரிக்கின்றோம். புத்தரின் வரலாற்றை மையமாக வைத்து எட்வின் ஆர்னால்ட் எழுதிய ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பிது. அறிஞர் அ.ந.க.வின் கவிமணியின் மொழிபெயர்ப்புக் காவியமான ‘ஆசிய ஜோதி’ பற்றிய இக்கட்டுரை 18.2.1951, 11.3.1951இல் வெளியான ‘சுதந்திரன்’ பத்திரிகையில் ‘கவீந்திரன்’ என்னும் பெயரில் வெளிவந்த கட்டுரை என்பது குறிப்பிடத்தக்கது. அக்காலகட்டத்தில் ‘பண்டிதர் திருமலைராயர்; என்னும் பெயரிலும் ‘சிலம்பு’ பற்றிய கட்டுரைகளை சுதந்திரன் பத்திரிகையில் அ.ந.க. எழுதியிருக்கின்றார். – பதிவுகள் -]
“எங்களின் சின்ன உலகத்தினுள் வாழாமல் மற்ற எழுத்தாளர்கள் எப்படி எழுதுகிறார்கள் எப்படி சிந்திக்கிறார்கள் எப்படி வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள் என்று நேர்காணல் மூலம் அறிந்து கொள்வதுதான்” என்கிற ஈடுபாட்டில் அ.முத்துலிங்கம் அவர்கள் வெளிநாட்டைச் சார்ந்த இருபது எழுத்தாளர்களை நேர்காணல் செய்து ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். கனடாவில் அலிஸ்மான்றோ, மார்க்ரெட் அட்வுட் போன்று நான்கு எழுத்தாளர்கள், அமெரிக்காவில் சிலர் , இங்கிலாந்தில் ஒருவர் என்று அதன் பட்டியல் நீள்கிறது. அதை ஆறு ஆண்டுகளுக்கு முன் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. தலைப்பு “வியத்தலும் இலமே“ “எழுத்தாளர்களை நான் தேடிப் போனதில் வியக்க வைக்கும் ஏதோ அம்சம் அவர்களிடம் இருந்த்து. சமிக்னை விளக்குச் சந்தியில் நிற்கும் குழந்தை போல் நான் அவர்களால் கவரப்பட்டேன். அவர்களுடனான சந்திப்புகள் வெகு சுவாரஸ்யமாக இருந்தன. அவர்கள் ஆடம்பரம் இல்லாதவர்களாகவும், மனித நேயம் மிக்கவர்களாகவும் நம் மனதைச் சட்டெனத் தொடுபவர்களாகவும் இருந்தார்கள். ஒவ்வொரு சந்திப்பும் என்னை புது மனிதனாக மாற்றியது“ என்கிறார். வெற்றுச் செய்திகளை இறைக்காமல் எழுத்தாளர்களின் அனுபவம் சார்ந்த உலகங்களை