சுதந்திரன் ஜுலை 8, 1951; கண்ணகி பாத்திரம் பெண்மையின் சிறப்பைக் காட்டுகிறதா? “பெண்ணடிமையின்” சிகரம் என்பதே சாலப்பொருந்தும்! மன்னனின் தவறுக்காக மக்களைத் தீயிலிட்டுக் கொழுத்திய கொடுமை. புதிய கோணத்தில் சிலப்பதிகார ஆராய்ச்சி!

[அறிஞர் அ.ந.கந்தசாமி சுதந்திரன் பத்திரிகையில் பண்டிதர் திருமலைராயர் என்னும் பெயரில் சிலப்பதிகாரத்தை விமர்சிக்கும் இந்தக் கட்டுரையினை ஜுலை 8, 1951 அன்று வெளியான சுந்திரனில் எழுதினார். இந்தக் கட்டுரை மிகுந்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பியது. அவற்றையும் சுதந்திரன் பிரசுரித்திருந்தது. பின்னர் இவற்றுக்கெல்லாம் பண்டிதர் திருமலைராயர் பதிலளித்திருந்தார். ஒரு பதிவுக்காக பண்டிதர் திருமலைராயரின் (அறிஞர் அ.ந.கந்தசாமி) கட்டுரையினை இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம். இக்கட்டுரைகள் தமிழகத்தில் பெரியாரின் ‘குடியரசு’ பத்திரிகையிலும் மீள்பிரசுரம் செய்யப்பட்டதாக அறிகின்றோம். இதுபற்றிய ஆதாரங்களைத் தமிழகத்திலுள்ளவர்கள் யாராவது அறிந்திருந்தால் அறியத்தரவும். எமது மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com – பதிவுகள்-]

Continue Reading →

நயப்புரை: முருகபூபதியின் தேசிய சாகித்திய விருதுபெற்ற பறவைகள் நாவல்

நயப்புரை: முருகபூபதியின் தேசிய சாகித்திய விருதுபெற்ற பறவைகள் நாவல்வாழ்க்கையின் மீதான விமர்சனத்திலிருந்தே ஒரு படைப்பு உருவாகிறது. சுய அனுபவத்தின் மெய்த்தன்மை படைப்பில் தென்படுமானால் அந்தப்படைப்பு வாசகரின் நம்பிக்கையை பெற்றுவிடுகிறது. நம்பிக்கையைப் பெற்று நம்மை பாதிக்கிறது. இந்தப்பாதிப்பே இலக்கியத்துக்கும் சமூகத்துக்குமான உறவின் அடிப்படையாக அமைகிறது. நல்ல எழுத்து – அனுபவம்சார்ந்து வாழ்க்கையின் சிக்கலைப்பற்றி விவாதிக்கும். வாழ்க்கை இப்படி…இப்படி இருக்கிறது என்று கவனப்படுத்துவதன் மூலம், நமக்கும் வாழ்க்கைக்குமான உறவை ஒழுங்கு செய்யமுயலும், வாழ்க்கையை எதிர்கொள்ளுவதற்கான ஒரு சூழலையும் தயாரிப்பையும் உருவாக்கும். மகிழ்ச்சியான தருணங்களும், துயர நிகழ்ச்சிகளும் எல்லோருக்கும் ஒரே மாதிரியானவை அல்ல என்பது உண்மைதான். ஓரே நபருக்குக்கூட இவை எப்போதும் ஒரே மாதிரியானவை அல்ல. மற்றவர் வாழ்க்கை அனுபவங்களும் வேறுவேறானவைதான். ஆனால், எல்லா மனிதர்களுடைய சுக துக்கங்களுக்கும் பொதுவான ஒரு இழை இருக்கிறது. அந்த இழையை உணரச்செய்யும் எழுத்துக்கள் வாசகர் மனதில் பதிந்து வெற்றிபெற்றுவிடுகின்றன. முருகபூபதின் பறவைகள் நாவல், நம்காலச்சூழலின் ஒரு பகுதியைப்பதிவுசெய்துள்ள முறையில் நம்மைப்பாதிக்கிறது. பல எழுத்தாளர்களின் கதைகளைப்படித்த பின் அவர்களது புத்திசாலித்தனமும், கதையை சொல்லியவிதமுமே மனதில் மீந்திருக்கும். கதை முடிந்தபிறகு, அதை எழுதியவரைப்பற்றி நினைக்காமல் எழுத்தில் காட்டப்பட்ட வாழ்க்கையைப்பற்றி மனிதர்களைப்பற்றிக் கொஞ்சநேரமேனும் ஆழ்ந்து யோசிக்கவைக்கும் சக்தி மிகச்சில எழுத்தாளர்களுக்கே வாய்த்திருக்கிறது. அதில் முருகபூபதியையும் ஒருவராய்க்குறித்துக்கொள்ள முடிகிறது.

Continue Reading →

(6) – சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!- வெங்கட் சாமிநாதன் -இப்போது இதை எழுதிக்கொண்டிருக்கும் கணத்தில் அந்தக் கட்டத்தை நினைத்துப் பார்த்தால், அப்படியெல்லாம் “ஒருத்தர் இடம் கொடுத்தால் எதையும் எழுதிவிடுவதா?” என்று கேட்டாரே செல்லப்பா, அந்த மனநிலையைக் கொடுத்ததே அவரும் அவரது எழுத்து பத்திரிகையும் தான். அதற்கும் மேல், எங்கள் மனம் நடமாடிய அந்தச் சின்ன இலக்கிய சூழலில் இதைத் தானே நான் கற்றுக்கொண்டேன். எழுத்து, இலக்கிய வட்டம், அதைத்தொடர்ந்து தேவசித்திர பாரதியின் ஞானரதம் எல்லாம் என்னிடம், மனம் விட்டு எந்தத் தடையும் உணராது பேசும் எழுதும் உணர்வு கொண்டவர்களிடம் இதைத் தானே எதிர்பார்த்தது. வேறு கால கட்டங்களில் எழுத்து பத்திரிகையும் தோன்றியிருக்காது. அங்கு ஒரு செல்லப்பாவும் எங்கள் முன் இருந்திருக்க மாட்டார். செல்லப்பா எழுத்துக்கு வகுத்துள்ள எல்லைக்கோட்டுக்குள் நான் எழுத ஆரம்பித்த எந்த கட்டுரையும், எல்லாக் கலைகளையும், இலக்கியத்தை பாதிக்கும் அறிவுத்துறைகளையும் உள்ளடக்கிய ஒரு பார்வை, எதையும் தனித்துப் பார்க்க இயலாது என்ற பார்வை, ஒன்றின் வறட்சியோ, வளமோ தனித்து எந்தத் துறையிலும் வரம்பு கட்டிக்கொண்டு இருப்பது சாத்தியமில்லை என்பது போன்ற அணுகுமுறை எல்லாமே எழுத்து பத்திரிகைக்கு அப்பாற்பட்டது. ஆனால் அதை செல்லப்பா வரவேற்றார்.

Continue Reading →

கடைசி வேரின் ஈரம் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

நூல்: கடைசிவேரின் ஈரம்!கடைசி வேரின் ஈரம் என்ற சிறுகதைத் தொகுதியின் ஆசிரியர் கிண்ணியா எம்.எம். அலி அக்பர் அவர்கள். ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் தனது பெயரை பதித்துக்கொண்டவர். கலாபூஷணம் விருதை பெற்றுள்ள எம்.எம். அலி அக்பர் அவர்கள், ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 112 பக்கங்களுடைய இந்தத்தொகுதியில் 12 சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. அணிந்துரையை வழங்கியருக்கின்றார் கிண்ணியாவின் இன்னொரு கவிஞரும், சிறுகதையாளருமான ஏ.எம்.எம். அலி அவர்கள். இறைவனின் நியதி என்ற கதை மனிதனின் அழுக்குக் குணங்களை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது எனலாம். உசனார் தொரை என்பவரிடம் வேலை செய்யும் ரகீம், தனது மகன் தஸ்லீமின் உயர்கல்விக்காக பணவுதவி கேட்கின்றார். தன்னிடம் தொழில்பார்க்கும் ஒருவனின் மகன், பட்டணத்தில் போய் உயர்படிப்பு படிப்பதா என்ற இளக்காரம் உசனார் தொரைக்கு. எனவே தஸ்லீமையும் வயலில் வேலைக்கமர்த்திக் கொண்டால் நல்லது என மனிதாபிமானம் கொஞ்சமுமின்றி ரகீமிடம் கூறுகின்றார். ரகீமுக்கு அவமானம் ஒரு புறம். ஆற்றாமை மறுபுறம். எனவே பேசாமல் வந்துவிடுகிறார்கள். அதையறிந்த தஸ்லீமின் தாய், தான் இத்தனைக்காலம் சேமித்து வந்த கொஞ்சப் பணத்தைக் கொடுத்தும், இடியப்பம் விற்றும் மகனை பட்டணம் அனுப்புகின்றனர். அங்கு சென்ற தஸ்லீமுக்கு நல்லதொரு நண்பன் கிடைக்கின்றான். நண்பனின் தந்தையின் உதவியுடன்; படித்து தஸ்லீம் வக்கீல் ஆகின்றான்.

Continue Reading →

நாவல்: ‘நானா’ (2)

இரண்டாம் அத்தியாயம்: சதையின் கதை!

நாவல்: 'நானா'!எமிலி ஸோலாஅறிஞர் அ.ந.கந்தசாமிஅரங்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது கிரேக்கத் தெய்வத்தினை வைத்துப் பின்னப்பட்ட புராணக் கதை. இருந்த போதிலும் மனித மாமிசத்தின் கதையாகவே அது அமைந்திருந்தது. ஆணின் சதை பெண்ணின் சதையினை அவாவுடன் அழைக்கும்போது ஏற்படும் காதல், காம, சிருங்கார ரசங்கள்தான் அம்மேடையில் ஊற்றெடுத்து சபையோரிடம் பிரவகித்துக் கொண்டிருந்தன. அந்த ரசானுபவங்களை அனுபவிப்பதற்காகத்தான் அவர்களில் அநேகமாக எல்லோருமே அங்கு வந்திருந்தார்கள். இருந்தபோதிலும் அவர்களால் கூட நானாவின் சங்கீதத்தை அனுபவிக்க முடியவில்லை. கீச்சிட்ட குரலில் அவளது மென்மையான செவ்வதரங்களினூடாக வெளிவந்த பாட்டு அபஸ்வரத்தின் உச்சத்தை அடையாவிட்டாலும், அரங்கேற்றம் பெறத்தக்க, ரசிக்கக் கூடிய இசையாக அமையவில்லை.

‘மாலை வேளையில் ரதியும்
மயக்கும் சோலையில்’

என்ற இனிய பாடலை , அதன் இனிமையை தன் கீச்சுக் குரலால் கொலை செய்த வண்ணம் குலுக்கிகக் குலுக்கி நடந்தாள் நானா.

Continue Reading →

(5) – செல்லப்பாவின் தமிழகம் உணராத வாமனாவதாரம்!

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!- வெங்கட் சாமிநாதன் -எழுத்து பத்து அல்லது பன்னிரண்டு வருஷங்களோ என்னவோ நடந்தது. எழுத்து மாதப் பத்திரிகையாக, பின்னர் காலாண்டு பத்திரிகையாக, பின்னர் எழுத்தை நிறுத்தி விட்டு பார்வை என்ற பெயரில்… இப்படி செல்லப்பாவின் பிடிவாதமும் மன உறுதியும், எவ்வளவு நஷ்டங்கள் வந்தாலும், உழைப்பு வேண்டினாலும், மனம் தளராது முனைப்புடன் செயலாற்றுவது என்பதை செல்லப்பாவிடம் தான் பார்க்கவேண்டும்.  அவர் எழுத்து நடத்திய காலத்தில், சில வருஷங்கள் கழித்து க.நா.சு. இலக்கிய வட்டம் என்ற மாதமிருமுறை பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார். அதிலோ இல்லை நேர்ப்பேச்சிலோ அவர் சொன்ன ஒரு ஆணித்தரமான கருத்து, இந்த மாதிரியான சிறு பத்திரிகைகள் எல்லாம் அதிகம் போனால் இரண்டு வருஷங்கள் தன் ஆரம்ப உயிர்ப்புடன் இருக்கும். அதன் பிறகு அது ஆரம்ப உற்சாகத்தையும், உத்வேகத்தையும் இழந்துவிடும். பின்  அது ஏதோ பத்திரிகை நடத்துவதாகத் தான் இருக்கும். ஆகையால் இரண்டு வருஷங்கள் நடத்தி எப்போது அதன் புதுமையை இழக்கிறதோ நிறுத்தி விட வேண்டும் என்று சொல்வார். அப்படித்தான் அவர் நடத்திய சூறாவளி போன்றவையும் மணிக்கொடியும் (இரண்டு வருஷங்களுக்கு ஒரு முறை நின்று புது ஆசிரியத்வத்தில் பின் மறு அவதாரம் எடுக்கும்) தேனீ, போன்றவை எல்லாமே. அப்போது க.நா.சு போன்று மலையாளத்தில் இளம் எழுத்தாளருக்கு ஆதர்சமாக இருந்த கோவிந்தன் சமீக்‌ஷா என்ற அவர் ப்ராண்ட் பத்திரிகையை தன் இஷடம் போல், அவ்வப்போது மலையாளத்திலோ, ஆங்கிலத்திலோ பிரசுரித்து வந்தார். அவரும் இதே அபிப்ராயத்தைத் தான் சொல்லி வந்தார். ஒரு சலனத்தை ஏற்படுத்த வேண்டும். புதிய உத்வேகத்தைக் கொடுக்க வேண்டும். அவ்வளவோடு ஒரு சிறு பத்திரிகையின் காரியம் முடிந்து விடுகிறது. பின் அதை நிறுத்தி விட வேண்டும். அதற்கு ஏதும்  வணிக, ஸ்தாபன உத்தேசங்கள் இருக்கக் கூடாது. என்பார். அப்படித் தான் அவர் வெளியிட்ட பத்திரிகைகளும் இயங்கின. அவர் இயக்கம் மலையாள இலக்கிய, கலை உலகில் மையம் கொண்டிருந்தது. அவர் எனக்கு அறிமுகமானதும், என்னையும் சமீக்‌ஷாவுக்கு எழுதச் சொன்னார். மலையாள சமீக்‌ஷாவுக்கு தமிழ் இலக்கியச் சிறு பத்திரிகைகள் பற்றியும், ஆங்கில சமீக்‌ஷாவுக்கும் ஒரு மௌனி கதை மொழிபெயர்ப்பும், மௌனி பற்றியும், பின் மற்றொன்றுக்கும் ஆங்கிலத்தில் கஷ்மீரி இலக்கியம் பற்றிய புத்தகம் ஒன்று பற்றிய மதிப்புரையும் எழுதச் சொன்னார். எழுபதுகளில் தமிழ் இலக்கியச் சிறு பத்திரிகைகளில் தெரிய வந்த புதியவர்கள் பெரும்பாலோரை அவர் அறிவார்.

Continue Reading →

தமிழ்மகனுக்கு இன்னுமொரு விருது

தமிழ் மகனின் 'வனசாட்சி'தமிழ்மகன்நீலகிரி மலையைச்  சார்ந்த ” மலைச்சொல்” என்ற இலக்கிய  அமைப்பு  இவ்வாண்டின் சிறந்த நாவலுக்கான “ மலைச் சொல்” இலக்கிய விருதை தமிழ்மகனின் சமீபத்திய  நாவலான “ வனசாட்சி” க்கு கோவையில் நடைபெற்ற விழாவில் வழங்கியது.  எஸ்.வி.ராஜதுரை, கோவை ஞானி, சுப்ரபாரதிமணியன், நிர்மால்யா, திலகபாமா, விஜயா பதிப்பகம் வேலாயுதம், பால நந்தகுமார், மு.சி. கந்தைய்யா ஆகியோர் நாவல் பற்றி பேசினர்.  ரூ 10,000 ரொக்கப்பரிசு கொண்டது இப்பரிசு.” மலைச் சொல் “ அமைப்பு வழக்கறிஞர் நந்தகுமார் அவர்கள் தலைமையில் இயங்குவதாகும். தமிழ்மகன் தனது இந்த அய்ந்தாவது நாவலின் பின்னணியை  முந்திய நாவல்களின் களமான திராவிட அரசியல், திராவிட  ஆளுமைகள், திரைப்படம், அவற்றின் உளவியல் பாதிப்புகள் ஆகியவற்றிலிருந்து  வேரோடு பிய்த்துக் கொண்டு  இலங்கைப் பின்னணிக்கு நகர்த்தியிருக்கிறார்  என்பது ஆரோக்யமான விசயம். படைப்பாளி புதிய களங்களில் இயங்குவது உற்சாகமாக இருக்கும்.வழமையான அனுபவங்களிலிருந்து புது அனுபவ வார்ப்புகள் கிடைக்கும். இன்னொருவரின் ஆவியாக இருந்து கொண்டு செயல்படுவதில் நிறைய சவுகரியங்கள் உண்டு.இந்த சவுகரியத்தை உற்சாகமாக இந்த நாவலில் பயன்படுத்தியிருக்கிறார்.அவரின் ஆர்வமான படைப்பு வீச்சிற்கு சவாலாகி சமாளித்திருக்கிறார்.

Continue Reading →

தொடர் நாவல்: மனக்கண் (28)

 28-ம் அத்தியாயம்:  மனக்கண்!

தொடர்நாவல்: மனக்கண் - அ.ந.கந்தசாமி -டாக்டர் நெல்சன் ஸ்ரீதரின் கண்களை விட்டு சிவநேசரிடம் “இரண்டு கண்களும் மிகவும் பழுதடைந்துவிட்டன. அதிலும் ஒரு கண் முற்றாகவே சின்னாபின்னப்பட்டுவிட்டது. மற்றக் கண்ணை வேண்டுமானால் சந்திர சிகிச்சைகளினால் மீண்டும் குணப்படுத்திப் பார்வையைப் பெற முடியும். ஆனால் ஸ்ரீதர் தான் கண் பார்வையை விரும்பவில்லையே. அதனால் தானே தன் கண்களைத் தானே குத்திக் கொண்டான் அவன்” என்றார். அதற்குச் சிவநேசர் “இப்பொழுது ஸ்ரீதருக்கு வேண்டியது கண் பார்வையல்ல. அவன் கண்ணில் ஏற்பட்டுள்ள புண்ணை முதலில் ஆற்றுங்கள்.” என்றார். சிவநேசரது வேண்டுகோளின் படி டாக்டர் நெல்சன் ஸ்ரீதரின் கண்ணிலே பட்ட புண்ணுக்கே வைத்தியம் செய்தார். ஒரு சில தினங்களில் புண்ணாறிப் போய்விட்டது. இதன் பயனாக ஸ்ரீதர் மீண்டும் பழையபடி ஆனான். அதாவது மீண்டும் பழைய குருடனாகி விட்டான் ஸ்ரீதர். இருண்ட வாழ்க்கை – ஆனால் அமைதி நிறைந்த இருண்ட வாழ்க்கை மீண்டும் ஆரம்பித்தது. ஆனால் ஒன்று. அந்த அமைதி பூரண அமைதி என்று சொல்ல முடியாது.

Continue Reading →

கவிஞன் என்றும் கவிஞன்தான்! கவிஞன் கவிதைச் சிற்றிதழ் மீது ஒரு பார்வை!!

இதழின் முன்னட்டை பிரபல கவிஞரும் தென்றலின் வேகம் என்ற கவிதை நூலின் ஆசிரியரும், பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமாகிய வெலிகம ரிம்ஸா முஹம்மத், 2007ம் ஆண்டு இலங்கை நல்லுறவு ஒன்றியம் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தபோது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படத்தைத் தாங்கி வந்திருக்கிறது. சாதனை யுவதி வெலிகம ரிம்ஸா முஹம்தைப் பற்றி கூறுவதாயின் இவர் இலக்கிய ஈடுபாடு கொண்டு தன்னை இலக்கியத்துடனேயே ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஓர் இளம் படைப்பாளி என்று சுருக்கமாக கூறிவிடலாம் என்றாலும், அவர் அதீத இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வருவதால் அவரைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.சதாசிவம் மதன் என்பவரை பிரதம ஆசிரியராகக் கொண்டு மீன்பாடும் தேனாட்டில் இருந்து வெளிவரும் காலாண்டு சஞ்சிகையான கவிஞன் என்ற சிற்றிதழின் 21 ஆவது இதழ் கிடைக்கப் பெற்Nறுன். முழுக்க முழுக்க கவிதைகளையே உள்ளடக்கி வரும் இவ்விதழ், சகல கவிஞர்களுக்கும் களம் அமைத்துக் கொடுப்பதோடு கவிதை எழுதத் துடிக்கும் புதுக் கவிஞர்களுக்கும் சிறந்ததொரு ஊடகமாகவும் அமைந்துள்ளது. உருவத்திலும், உள்ளடக்கத்திலும் அழகாக காட்சி தரும் இவ்விதழ் இந்தியச் சிற்றிதழ்களுக்கு ஈடாக காணப்படுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இதழின் முன்னட்டை பிரபல கவிஞரும் தென்றலின் வேகம் என்ற கவிதை நூலின் ஆசிரியரும், பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமாகிய வெலிகம ரிம்ஸா முஹம்மத், 2007ம் ஆண்டு இலங்கை நல்லுறவு ஒன்றியம் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தபோது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படத்தைத் தாங்கி வந்திருக்கிறது. சாதனை யுவதி வெலிகம ரிம்ஸா முஹம்தைப் பற்றி கூறுவதாயின் இவர் இலக்கிய ஈடுபாடு கொண்டு தன்னை இலக்கியத்துடனேயே ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஓர் இளம் படைப்பாளி என்று சுருக்கமாக கூறிவிடலாம் என்றாலும், அவர் அதீத இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வருவதால் அவரைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

Continue Reading →

மண்ணில் வேரோடிய மனசோடு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

மண்ணில் வேரோடிய மனசோடு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்புபல சந்தர்ப்பங்களில் வானொலி, தொலைக்காட்சிகளின் கவிதை நிகழ்ச்சிகளை அலங்கரித்து வருகின்றவரும், ஆசிரியராக கடமையாற்றி வருகின்றவருமான கலாபூஷணம் யாழ் அஸீம் அவர்களின் மண்ணில் வேரோடிய மனசோடு என்ற தொகுதி 125 பக்கங்களி;ல் ஸூபைதா பதிப்பகத்தினால் வெளிவந்திருக்கிறது. தேசிய நூலபிவிருத்தி ஆவணவாக்கல் சபையின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலில் 23 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. கவிஞரின் கன்னித்தொகுதியான இதில் காத்திரமான கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. `கவிஞர்கள் சிலர் பிறக்கிறார்கள். சிலர் உருவாகிறார்கள். யாழ் அஸீம் அவர்களால் மரபுக் கவிதையும் எழுத முடிகிறது. புதுக் கவிதையும் எழுத முடிகிறது…’ என தாஜூல் உலூம் கலைவாதி கலீல் அவர்களின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளவாறு அஸீம் அவர்களின் கவிதைகளை வாசித்த மாத்திரத்தில் அவற்றின் தன்மைகளையும், சிறப்புக்களையும் புரிந்துகொள்ளலாம். இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில், சிறந்த சொல்லாட்சியுடன் எளிமையாக கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. வட புல முஸ்லிம்கள் மொத்தமாக துடைத்தெறியப்பட்ட வேதனைகளின் விசும்பல்கள் கவிதைத்தொகுதி முழுவதிலும் முகாரியாக ஒலிக்கிறது. `வேரோடு பிடுங்கி வீசப்பட்டு வலிகளுக்குள் வாழும் வடபுல முஸ்லிம்கள் யாவருக்கும்’ இத்தொகுதி சமர்ப்பிக்கபட்டிருக்கின்றது. சொந்த மண்ணைவிட்டு இடம்பெயர்ந்து வாழும் ஒட்டுமொத்த இதயங்களின் ஓலமாக மிளிர்ந்திருக்கிறது மண்ணில் வேரோடிய மனசோடு என்ற இந்தக் கவிதைத்தொகுதி.

Continue Reading →