ஆழ வேரூன்றி, அகலக் கிளைகள் பரப்பி, வானோக்கி உயர்ந்து, விரிந்து விருட்சமாகி, விழுதுகள் பல இறக்கி, எங்குமாய் வியாபித்து நின்று நிழல் கொடுக்கும் இந்த ஆலமரத்தின் அடி முடி தேடுவது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. சிற்றெறும்பாகிய நான் என் சிறு கைகளால் முழம் போடுகின்றேன். குருவி தலையில் பனங்காய் சுமக்க முயல்வதைப் போன்றது எனது முயற்சி. சொல்லோடு பொருளெடுத்து, சுவையோடு தமிழ் எடுத்து, நில்லாது ஓடுகின்ற நினைவுகளை நெஞ்சேற்றி, நற்சுவையும் நற்பொருளும் நயமோடு எடுத்துரைக்கும் நல்ல பல கவிதைகளை நாம் காணமுடிகிறது! இந்த விருட்சத்தை நாம் வியந்து நோக்குமுன்னர்.. இதன் ரிஷி மூலத்தை நாம் கண்டறியவேண்டும்! தமிழும், சைவமும், சமூக சேவையும் நிறைந்தது இவரது குடும்பம். இவரின் தந்தையார் திரு.முருகேசு சுவாமிநாதன் அவர்கள் மலேசியாவிலும் இலங்கையிலும் பல கல்லூரிகளை நிறுவியும், கடமையாற்றியும் வந்துள்ளார். இவை எல்லாம் இன்று பிரசித்தி பெற்ற கல்லூரிகளாக யாழில் திகழ்கின்றன. இத்தகைய பின்னணிகளோடு களத்தில் நிற்கும் வேதா இலங்காதிலகம் அவர்கள் அரிய பல படைப்புக்களை தந்து கொண்டிருக்கின்றார் என்பதில் வியப்பேதுமில்லை!
மிகவும் மகிழ்ச்சியான தருணம். நலவியல்துறை அதிலும் மனநலம் பற்றிய நூல் பற்றி குறிப்பு எழுதுவது. அதுவும் கடமையுணர்வும், நற்பண்புகளும், சமூக அக்கறையும் கொண்ட மருத்துவரான டொக்டர்.எஸ்.சிவதாஸ் அவர்களது நூல். நான்கு பதிப்புகள் கண்டு 5000 பிரதிகளுக்கு மேல் இந்த நூல் விற்பனையாகியிருப்பது மிகவும் பெருமைப்படக் கூடிய விடயமாகும். 500 பிரதிகள் அடித்தும் விற்க முடியாமல் பலரது நூல்கள் வீட்டு அலுமாரிகளை நிரப்பி கரையான அரித்து அழிந்து கொண்டிருக்கும் சூழலில் இது பெரிய சாதனை எனலாம். இந்த மனநல நூலுக்கான தேவை எவ்வளவு அவசியமாக எமது சமூகச் சூழலில் இருக்கிறது என்பதையும் நாம் உணர முடிகிறது. நானும் ஒரு மருத்துவராக இருப்பதுடன், நலவியல் எழுத்துத்துறையில் கடந்த 3 தசாப்தங்களாக இயங்கிக் கொண்டிருப்பவன் என்ற முறையில் இந்த நூலின் வரவு எனது மகிழ்ச்சியை பன்மடங்காக அதிகரிக்கிறது. இதற்குக் காரணம் இங்கு நலவியல் துறையில் எழுதுபவர்கள் குறைவு. அதுவும் அதற்கான தகுதி கொண்ட மருத்துவர்கள் எழுதுவது குறைவு. மருத்துவத்துடன் தொடர்பேயற்ற யார்யாரோ மருத்துவக் கட்டுரைகளை எழுதி பக்கங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு பத்திரிகை ஆசிரியர்களை குறை கூறமுடியாது. மருத்துவர்கள் எழுதவதற்கு முன்வருவதில்லை. வேலைப்பளு என்பார்கள்.
கலாமணி பரணீதரனை ஆசிரியராக, ‘அறிஞர் தம் இதய ஓடை, ஆழ நீர் தன்னை மொண்டு, செறி தரும் மக்கள் எண்ணம் , செழித்திட ஊற்றி ஊற்றி, புதியதோர் உலகம் செய்வோம்’ என்னும் பாரதிதாசனின் பாடல் வரிகளைத் தாரகமந்திரமாக் கொண்டு அல்வாயிலிருந்து வெளிவரும் ஜீவநதி கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 48வது இதழான புரட்டாதி 2012 இதழ் கனடாச் சிறப்பிதழாக வெளிவந்திருக்கின்றது. இது பற்றிய ஆசிரியத் தலையங்கத்தில் ‘ஜீவநதியின் கனடாச் சிறப்பிதழும் முழுமையாகக் கனடா வாழ் எழுத்தாளர்களின் படைப்புகளை மாத்திரமே தாங்கி வருகின்றது என்பது பதிவு செய்யப்பட வேண்டியதொன்றாகும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்மாவட்டத்திலிருந்து ஆஸ்திரேலிய, கனேடியச் சிறப்பிதழ்களை வெளிக்கொண்டுவந்ததன்மூலம் ஜீவநதி மேற்படி நாடுகளிலுள்ள படைப்பாளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதுடன், ஈழ மண்ணில் வாழும் தமிழ் மக்களுக்கு மேற்படி நாடுகளின் கலை, இலக்கிய முயற்சிகளையும் அறிமுகம் செய்கின்றது. இது பாராட்டப்பட வேண்டியதொன்றாகும். மேற்படி ஆசிரியத் தலையங்கத்தில்2011 வருட சிறந்த சஞ்சிகைக்கான கு.சின்னப்பபாரதி விருது கிடைத்த விபரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாராட்டுகள்.
-கோலாலம்பூர் வீதிகளில் தமிழ்ப்பெண்களைக் கூட புடவையில் காண்பது அரிதாகவே இருக்கிறது. தொடை தெரியும் குட்டைப் பாவாடைகள், பெர்முடாஸ், அரை ஜீன்ஸ்கள் என்று தமிழ் பெண்களும் மலேயர்கள், சீனர்கள் மத்தியில் தென்படுகிறார்கள். வெள்ளிக்கிழமைகளிலும், திருமண நிகழ்ச்சிகளிலும், தமிழ்க்கோவில்களிலும் தமிழ்ப்பெண்கள் புடவை அணிகிறார்கள். தமிழ்த்தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், செய்தி வாசிப்பில் பெண்கள் புடவை அணிந்து வருவது கட்டாயமாக இருந்தது. இப்போது அது குறைந்து விட்டது என்று தமிழ் அமைப்பினரும், சனாதானிகளும் கண்டித்திருப்பது சமீபத்திய சலசலப்புச் செய்தியாக இருக்கிறது. நம்மூர் வேடிடி சட்டை போல் மலேயா தேசிய உடையிலும் சிலர் தென்படுகிறார்கள். தலையில் குல்லா. முழுக்கைச் சட்டை. பேண்ட் மேல் சுற்றப்பட்ட கைலி. இதுதான் தேசிய உடை எனலாம். சுதந்திரதினத்தை தேசிய தினமாகக் கொண்டாடும் வைபவத்தில் நாடு முழுவதும் மலேசியா தேசியக் கொடி பட்டொளி வீசிப்பறக்கிறது.1958ல் சுதந்திரம் பெற்றது.அந்நாட்டின் தேசிய மலர் செம்பருத்தி இரும்பால் வார்த்தெடுக்கப்பட்டு வீதிமுழுக்க விளக்குக் கம்பங்களில் மினுங்குகிறது. 100 வருடத்திற்கு முன் தமிழன் கட்டிய ரயில்வே ஸ்டேசன் மின் விளக்கில் பளிச்சிடுகிறது.இந்தியர்களின் பெருமையைச் சொல்லும் லிட்டில் இந்தியாவிற்கு எப்போதும் மவுசுதான்.கோலாலம்பூரின் மத்தியில் தென்படுகிறது ராம்லீ தெரு. ராம்லி நம்மூர் சிவாஜிகணேசன் போல் முக்கிய நடிகர். இவரை இயக்கிய முக்கிய இயக்குனர்களீல் ஒருவரான கிருஸ்ணன் ஒருதமிழர்.மலேசியாவின் முதல் கோடீஸ்வரர் ஆனந்த கிருஸ்ணனுக்குச் சொந்தமானது கோலாலம்பூரின் இரட்டை கோபுரங்களில் ஒன்று. அதை விற்றுவிட்டார். 2ஜி ஊழலில் இவர் பெயரும் அடிபட்டு பல நிறுவனப் பங்குகளை விற்றுவருகிறார். இவரின் ஒரே மகன் புத்தமத சாமியாராகிவிட்டார்.
1956 – இது எவ்வளவு முக்கியத்வம் பெறும் என்று அப்போது தெரிந்ததில்லை. திடீரென்று என்னை இன்னொரு செக்ஷனுக்கு மாற்றினார்கள். சொல்லலாம் தான், ஊரை விட்டுப் போய்விட வில்லை. அலுவலகமும் அதேதான். அதே கட்டிடம் தான். இருந்தாலும் அலுவலகத்தில் இருக்கும் நேரம் எல்லாம் உடனிருந்து என்னேரமும் பார்வையின் வட்டத்துக்குள் இருந்து கொண்டிருந்த சோப்ரா, மிருணால், மஞ்சு சென்குப்தா, எல்லோரையும் விட்டு வேறு தளத்துக்கும் வேறு அறைக்கும் செல்வதென்றாலும் எந்த அளவுக்கு இழப்பு இருந்ததோ அது இழப்பு தானே. அந்த வயதில் இந்த இழப்பும் இழப்பாகத் தான் மனத்தை வருத்தியது. மஞ்சு சென்குப்தாவும் மிக அன்புடன், அன்னியோன்யத்துடன் இருந்தாள். காரணம் என் சினேக சுபாவம் மட்டுமல்ல, மிருணால் அவளிடம் என்னைப் பற்றி என்னென்னவோ புகழ்ந்து பேசியிருப்பதும் காரணம் என்பது எனக்குத் தெரியும். அவளிடம் மட்டுமல்ல. தன் எல்லா வங்காள நண்பர்களிடமும் தான். போகும் செக்ஷனில் எல்லோரும் புதியவர் அல்லர் தான். சக்கர் அணைக்கட்டில் வேலை பார்த்துவந்தவர்கள் உத்தம் சந்த்தும், ஹரி சந்த்தும் ஓய்வு பெற்று இப்போது இங்கும் வேலைக்குச் சேர்ந்தார்கள். ஒய்வூதியம் பெறுகிறவர்கள். எனக்கு அப்போது வயது 22-23 என்றால் அவர்கள் அறுபதைத் தாண்டியவர்கள். மிக அனுபவஸ்தர்கள். அவர்கள் இப்போது இந்த புதிய செக்ஷனில் இருந்தார்கள். பழையவர்களோடு மீண்டும் நெருக்கம் ஏற்பட்டது.
ஜெயமோகனின் ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்’ நூலின் அண்மைய பதிப்பினை வாசித்துக்கொண்டிருக்கின்றேன். அதில் மூன்றாவது அத்தியாயமான ‘இலக்கியத்தை எதிர்கொள்ள’லின் இறுதியில் அவர் பின்வருமாறு கூறியிருப்பார்: “இலக்கியம் கருத்தைச் சொல்வது என்று எண்ணும் வாசகர்கள் செய்யும் தவறு என்ன? எளிமையாகக் கூறப்போனால் அவர்கள் இலக்கியத்தை அறிவுத் துறைகளில் ஒன்றாகக் கருதுகின்றார்கள். பல சமயம் தத்துவம், ஒழுக்கவியல், மதம், அரசியல் முதலிய பிற துறைகளைச் சார்ந்து இயங்கக் கூடிய ஓர் உப- அறிவுத்துறையாகக் கருதுகின்றார்கள். இது பெரும் பிழை. இலக்கியம் என்பது ஒரு கலை.” ஜெயமோகனின் இக்கூற்றினை வாசித்தபொழுது என் உள்ளத்தில் பல்வேறு சிந்தனைகள் இலக்கியம் பற்றிச் சிறகடித்துப் பறந்தன. இலக்கியத்தை வெறும் கலையாகக் கருதும் ஜெயமோகன் இலக்கியத்தைத் தனியாகப் பிரித்து வைக்கின்றார். இலக்கியம் ஒரு கலை. ஆனால் அதே சமயம் அந்தக் கலை ஒரு போதுமே தனித்து இயங்க முடியாது. ஏனைய துறைகளெல்லாவற்றையும் உள்ளடக்கியதுதான் இலக்கியம். பொதுவாக இலக்கியமென்றதும் பலர் அதனைக் கதை, கவிதை, நாடகம் போன்ற புனைவுகளை உள்ளடக்கியதாக மட்டுமே கருதிக்கொண்டு விடுகின்றார்கள். அந்தத் தவறினைத்தான் ஜெயமோகனும் செய்திருப்பதாக எனக்குப் படுகின்றது. இதனை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்பதற்கு இலக்கியமென்றால் என்ன என்பது பற்றிச் சிந்தனையினைச் சிறிது திசை திருப்புவது நன்மை பயக்கும்.
அவ்வப்போது வாசிக்கும் விடயங்களின் யோசிப்பு, மற்றும் யோசிப்பு (நனவிடை தோய்தல்) பற்றிய சிறு குறிப்புகளிவை. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ‘உயிர்மை’ மாத சஞ்சிகையில் ‘பறவைக்கோணம்’ என்றொரு பத்தி எழுதிவருகின்றார். இம்முறை (செப்டம்பர் 2012) உயிர்மை இதழில் வெளியான பத்தி ‘வல்லவன் ஒருவன் – பளிங்கினால் ஒரு மாளிகை’ என்னும் தலைப்பில் வெளிவந்திருந்தது. அதில் ராமகிருஷ்ணன் ‘பளிங்கினால் ஒரு மாளிகை’ பாடலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தது என் கவனத்தைக் கவர்ந்தது.
அதிலவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: ‘பளிங்கினால் ஒரு மாளிகை. பருவத்தால் மணி மண்டபம் என்ற வல்லவன் ஒருவன் படப்பாட்டைப் பல ஆண்டு காலமாகத் திரும்பத்திரும்பக் கேட்டுக்கொண்டேயிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் இப்பாடல் தரும் அனுபவம் புத்துணர்வூட்டுவதாகவே இருக்கிறது.’ ஒரு பாடல் எவ்விதம் கேட்பவரைப் பொறுத்து வித்தியாசமான விளைவுகளை எற்படுத்துகிறதென்பதற்கு ராமகிருஷ்ணனின் மேற்படி பாடலைப் பற்றிய கருத்துகள் எடுத்துக்காட்டு.
[ 15-3-1981 வீரகேசரி வாரவெளியீட்டில் வெளி வந்த கட்டுரை இது. 35 ரூபா அனுப்பியிருந்தார்கள். தற்போது யாராவது இந்தக் கோப்பாய்ப் பழைய கோட்டையின் இன்றைய நிலை பற்றி அறிந்தால் அறியத் தரவும்- வ.ந.கி -]
நல்லூர் நகர் பற்றி ஆராய விளைந்த போது, கட்டடக் கலை மாணவனான நான் உதவி நாடி கலாநிதி கா.இந்திரபாலாவை நாடிய போது தான், அவர் தனது சிரமத்தைப் பொருடபடுத்தாது தனது வேலைகளுக்கு மத்தியில் எனக்கு உதவினார். அபோதுதான் அவர் கோப்பாயில் அமைந்திருந்த தமிழ் மன்னர்களின் கோட்டையைப் பற்றியும் அது பற்றிய சுவாமி ஞானப்பிரகாசரின் கட்டுரை பற்றியும் கூறினார். தமிழரின் பழமை வாய்ந்த சின்னங்களின் பரிதாப நிலை கண்டு மனம் நொந்திருந்த எனக்கு அந்தக் கோட்டை அந்தக் கோட்டையின் இன்றைய நிலையைப் பார்க்க வேண்டும் போலிருக்கவே , கோப்பாய் விரைந்தேன். கோப்பாய் பொலிஸ் ஸ்டேசனுக்கு முன்பாயுள்ள சேர்ச்சைச் சேர்ந்த சற்குணசிங்கம் என்பவர் எனக்கு அப்பகுதியினைக் காட்டி உதவினார்.