[ ஏற்கனவே பதிவுகள், திண்ணை, தாயகம், கணையாழி, மான்சரோவர.காம், தட்ஸ்தமிழ்.காம், தேடல் போன்றவற்றில் அவ்வப்போது வெளிவந்த எனது சிறுகதைகள் இவை. இவற்றில் சில கனடாவிலிருந்து வெளியான ‘வைகறை’ மற்றும் வெளிவரும் ‘சுதந்திரன்’, ஈழநாடு’ ஆகிய பத்திரிகைகளில் மீள்பிரசுரமானவை. ஒரு பதிவுக்காக ஒருங்குறி எழுத்தில் இங்கு மீள்பிரசுரமாகின்றன. இதில் பல சிறுகதைகள் புலம்பெயர்ந்த சூழலினைச் சித்திரிப்பவை. இன்னும் சில விஞ்ஞானப் புனைவுகள். மேலும் சில இழந்த மண்ணைப் பற்றிப் பேசுபவை. – ஆசிரியர், பதிவுகள்]
மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் (17)
சினிமாவில் பரவலாக அதன் தொடக்கத்திலிருந்தே காணும் பல அவலங்களை, அதன் குணத்தையே தொடர்ந்து நிர்ணயித்து வரும் அவலங்களைக் கண்டாலும் அவை பற்றி நினைத்தாலும் நான் மிகவும் சுருங்கிப் போகிறேன். மனத்தளவிலும் நினைப்பளவிலும். இது எனக்கு நேர்ந்துள்ள எனக்கே நேர்ந்துள்ள மனவியாதி அல்ல. இன்னமும் தமிழ் சினிமாவும் அரசியலும் பாதிக்காது மன ஆரோக்கியமோ உடல் ஆரோக்கியத்தையமோ க்ஷீணித்துப் போகாது பார்த்துக்கொள்ளும் ஜீவன்கள் யாரும் மனம் சுருங்கி உடல் குறுகித் தான் போவார்கள். கூவத்தின் கரையில் வாழ்வதற்கும் உடல், மனப் பயிற்சி வேண்டும் தானே.. அது டிவி செட்டும் வோட்டுப் போட ஆயிரங்கள் சிலவும் கிடைத்துவிட்டால் அது அந்த பயிற்சி பெற்றதற்கான பரிசு என்று தான் சொல்லவேண்டும். தமிழ் சினிமா பற்றியோ, அரசியல் பற்றியோ பேசும்போது இந்த மொழியில், படிமங்களில் தான் நான் பேசத் தள்ளப்படுகிறேன். ஆனால் இந்த சாக்கடையில் உழன்று சுகம் காணும் ஜீவன்கள் அவரவர் ஆளுமைக்கும் பிராபல்யத்துக்கும் ஏற்ப இந்த சமூகத்தையும் ஆபாசப்படுத்தி வருகிறார்கள்.
[ஏற்கனவே பதிவுகளில் வெளியான மகாகவி பாரதியார் பற்றிய கட்டுரைகள் இங்கே ஒருங்குறியில் மீள்பிரசுரம் செய்யப்படுகின்றன. ‘பதிவுகள்’ இதழில் வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது இவ்விதம் மீள்பிரசுரம் செய்யப்படும். அந்த வகையில் இம்முறை இக்கட்டுரைகள் ஒரு பதிவுக்காக பிரசுரமாகின்றன. மகாகவி பாரதி தான் வாழ்ந்த காலகட்டத்தில் நிலவிய சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல்கொடுத்தவன். அதே சமயம் தன் காலகட்டத்தையும் மீறியும் சிந்தித்தவன்; செயற்பட்டவன்; இருப்பு பற்றிச் சிந்தித்தவன்; இவ்வுலகின் பலவேறு நாடுகள் பற்றியும், அந்நாடுகளில் வாழும் மானுடர்கள் பற்றியும், பல்வேறு அரசியல் தத்துவங்கள் பற்றியும், தேசிய மற்றும் சமூக விடுதலை பற்றியும், பெண் விடுதலை பற்றியும் சிந்தித்தவன். அவனது குறுகிய கால கட்டத்து வாழ்வில் அவன் சாதித்தவை அளப்பரியன. பிரமிப்பினை ஊட்டுபவை. அவனது பரந்த வாசிப்பும், அவனது வாழ்வனுபவமும் அதன் விளைவான அவனது தேடலும் அவனைப் புடமிட்டன. அதன் விளைவாக உருவானவைதான் அவனது படைப்புகள். அவை கவிதை, சிறுகதை, குறுநாவல், கட்டுரைகள், மொழிபெயர்ப்பென பரந்துபட்டவை. – பதிவுகள் -]
நினைவுகளின் சுவட்டில் .. 76
மிருணால்தான் எனக்கு ஆத்மார்த்தமாக மிகவும் நெருங்கிய நண்பன். இப்படியெல்லாம் இப்போது சுமார் 60 வருடங்களுக்குப் பிறகு சொல்கிறேனே, ஆனால் அவனோடு பழகிய காலத்தில், ஒரு சமயம், நானும் அவனும் மிகுந்த பாசத்தோடு குலாவுவதும், பின் எதிர்பாராது அடுத்த எந்த நிமடத்திலும் ஏதோ ஒரு உப்புப் பெறாத விஷயத்துக்கு கோபங்கொண்டு ஒருத்தரை ஒருத்தர் வருத்துவதுமாகவே பழகினோம். பின் எந்த நிமிடமும் அடுத்த நாள் எதுவுமே நடக்காதது போல குலாவிக்கொள்வோம். இந்த ஊடலும் கூடலும் பக்கத்திலிருக்கும் எவருக்கும் தெரிய வராது. இப்போது அதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் சிறுபிள்ளைத் தனம் என்று தான் சொல்லவேண்டும். அனேகமாக இந்த மாதிரி அடிக்கடி நிகழும் ஊடலுக்குக் காரணம் நானாகத் தான் இருந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் எந்த ஒரு கோபத்துக்கும் காரணமாக அவன் என்ன செய்தான் என்று யோசித்துப் பார்த்தால் ஒன்றும் நினைவுக்கு வருவதில்லை. ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. நாங்கள் இருவரும் ஏதோ காரணத்துக்காக பிரிந்து விட்டோம். பின் பார்த்தால் அவன் என் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கிறான். வீட்டுக்குள் கூடியிருந்த என் நண்பர்களில் யாரோ எனக்கு, சக்கரவர்த்தி வெளியே நின்றுகொண்டிருக்கிறான் என்று சொல்ல, எனக்கு எப்படி இதை எதிர்கொள்வது என்று தெரியாது, வெளியே வந்து “ என்ன விஷயம்? என்ன வேண்டும்?” என்று ஏதோ அன்னியனை விசாரித்தது போல் அவனைக் கேட்டது மனத்திரையில் ஓடுகிறது. நானாக இருந்தால், முதலில் அப்படி கோவித்துக்கொண்டவன் வீட்டுக்குப் போய் நின்றிருக்க மாட்டேன். மற்றதெல்லாம் பின் வருவது தானே. பின் எப்படி சமாதானம் ஆகி நாங்கள் பேச ஆர்ம்பித்தோம் என்பது நினவில் இல்லை. எந்தனையோ நூறு பிரிதல்களில் பின் ஒன்று சேர்தலில் இது ஒன்று. பத்து வயதுப் பையன்களிடம் இருக்கும் உணர்ச்சி வேகம், அசாதாரண பாசம் கோபம் எல்லாம் எங்களுக்கு என் இருபது வயதிலும் நீடித்திருந்தது தான் கோளாறாகிப் போனது.
[ சுற்றுச் சூழல் துறைக்கு ஆற்றிய சேவைக்காக நோபல் பரிசினைப் பெற்ற ‘வங்கரி மாதாய்’ அண்மையில் மறைந்தார். அவரது ஞாபகமாக , அவர் நோபல் பரிசினைப் பெற்றபோது பதிவுகளில் வெளியான குறிப்பினை மீள்பிரசுரம் செய்கின்றோம். – பதிவுகள்] இம்முறை சமாதானத்துக்கான நோபல் பரிசு ஆபிரிக்காவின் பெண்ணொருத்திக்குக் கிடைத்துள்ளது. நோபல் விருதினைப் பெறும் முதலாவது ஆபிரிக்க தேசத்துப் பெண் என்ற பெருமையினைப் பெற்றிருக்கின்றார் கென்யாவைச் சேர்ந்த வங்கரி மாதாய் (Wangary Maathaai). சூழற் பாதுகாப்புடன் கூடிய அபிவிருத்தி, ஜனநாயகம் மற்றும் அமைதி போன்றவற்றுக்கு இவர் ஆற்றிய, ஆற்றிவரும் சேவைக்காக இவர் இம்முறை இவ்விருதினைப் பெறுகின்றார். 1940இல் பிறந்த கிழக்காபிரிக்காவின் முதலாவது பெண் கலாநிதி, கென்யாவின் பல்கலைக் கழகமொன்றின் இலாகாவொன்றின் முதலாவது பெண் தலைவர் என்ற பெருமைகளையும் ஏற்கனவே பெற்றுள்ள இவர் கென்யா நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராகவும், சூழல் மற்றும் இயற்கை/வன வளத்துறைக்குரிய இணை அமைச்சராகவும் விளங்கி வருகின்றார். இவர் உயிரியற் துறையில் பட்டப்படிப்பினை கன்சாஸிலுள்ள மவுண்ட். செயின்ற் ஸ்கொஸ்டிகா காலேஜிலும், பிட்ஸ்பார்க் பல்கலைக் கழகத்தில் முதுமானிப் (Masters) பட்டத்தினையும் பெற்றவர். அதன் பின்னர் கென்யா திரும்பிய இவர் நைரோபிய பல்கலைக் கழகத்தில் மிருக வைத்தியத் துறையில் ஆய்விலீடுபட்டுக் கலாநிதி பட்டம் பெற்றவர். சக ஆண்களின் அவநம்பிக்கையினையும், எதிர்ப்பினையும் சமாளித்து இவர் இப்பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் அப்பல்கலைக் கழகத்தில் தொடர்ந்து பணியாற்றி மிருக வைத்தியத் துறைக்கான தலைவராக பதவி உயர்வு பெற்ருச் சாதனை புரிந்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன் ஸிந்துஜாவின் சிறுகதைகள் 18 கொண்ட முதல் தொகுப்பு கைக்கு வந்தது. வெளியிட்டிருப்பது நன்னூல் அகம், மந்தைவெளி, சென்னை. நன்னூல் அகம் என்று சொன்னால் புரியாது. இது பாவை சந்திரனின் பொறுப்பில் இருக்கும் புத்தக வெளியீட்டு நிறுவனம். அதிகம் தெரியவராத சின்ன அளவிலான தனிமனித முயற்சி. இரண்டு பேரையும் சேர்த்து பிரஸ்தாபிப்பதற்கான காரணம் இருவருக்கும் சற்றுப் பொதுவான ஒன்று உண்டு,. சொல்கிறேன். கடைசியில். ஸிந்துஜாவை இந்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியாக வேண்டும் என்று நினைக்கிறேன். போன நூற்றாண்டின் எழுபதுகளின் முற்பாதியில் பத்திரிகைப் பரிச்சயம் கொண்டிருந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். குறிப்பாக இலக்கியச் சிறுபத்திரிகைளின் பரிச்சயம் கொண்டிருந்தவர்களுக்கு, “டாகூர் சுடலைமாடன் தெருவுக்கு வருகிறார்” என்றோ, இல்லை ”சுடலை மாடன் தெருவில் டாகூர்” என்றோ திருநெல்வேலி சுடலைமாடன் தெருவில் வசிக்கும் கலாப்ரியா தாகூர் கவிதைகள் சிலவற்றைத் தழுவி தன் பெயரில் வெளியிட்டதைக் குறிப்பிட்டு எழுதிய கட்டுரை ஸிந்துஜாவின் ஆளுமையைப் பற்றியும் சொன்னது. பெரும் பரபரப்பைக் கிளப்பிய எழுத்து அது. அப்போது கலாப்ரியா ஒரு நல்ல கவிஞராக கவனம் பெற்றுக் கொண்டிருந்த சமயம். ”டாகூர் கவிதைகள் பிடித்துப் போனதால் நான் திரும்பி எழுதிப் பார்த்தேன். எனக்கு தாகூர் கவிதைகள் என்றால் ரொம்பப் பிடிக்குமாக்கும். எனவே தாகூர் சுடலை மாடன் தெருவுக்கு மறுபடியும் வருவார்” என்ற ரீதியில் கலாப்ரியா பதில் அளித்திருந்தார். அது பெரும் பரபரப்பான கால கட்டம். ஜாக் லண்டன் அசோக மித்திரன் கதைத் தொகுப்பில் புகுந்து கொண்ட காலம். ஒரு கட்டத்தில் பேசித் தன் தரப்பை உரத்த குரலில் சொல்ல வேண்டிய சமயத்தில், “மௌனமாக இருப்பதுதான் பலம் வாய்ந்தது. அதில் தான் ஒரு கலாசாரத்தின் மலர்ச்சி காப்பாற்றப் படுகிறது” என்று ந.முத்துசாமி தனக்கு சௌகரியத்துக்கு ஒரு புதியதும் வேடிக்கையானதுமான சித்தாந்தத்தை சிருஷ்டித்து ஒரு புத்தகத்தின் பின் அட்டையில் பிரகடனம் செய்த போது ஸிந்துஜா, “To sin by silence, when they should protest, makes cowards of men” என்று Abraham Lincoln. சொன்னதை மேற்கோளாக்கி அதே புத்தகத்துக்கு தன் முன்னுரையைத் தொடங்கியவர் ஸிந்துஜா. இது 1973-ல்.
6-ம் அத்தியாயம்: டாக்டர் சுரேஷ்
ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் ‘மனக்கண்’. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ‘பதிவுகளில்’ ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான ‘களனி வெள்ளம்’ , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். ‘தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். – பதிவுகள்] – ஸ்ரீதர் “எஸ்கிமோ”வுக்கு முன்னால் பத்மாவைப் பிரிந்து டாக்ஸி மூலம் ஹோர்ட்டன் பிளேசுக்குப் புறப்பட்டவன், திடீரெனக் கோட்டைக்குப் போய் ஓவியம் வரைவதற்கு வேண்டிய சில பொருள்களை வாங்க வேண்டுமென்ற நினைவு வர, டாக்ஸி டிரைவரிடம் கோட்டைக்குப் போகும் படி உத்தரவிட்டான். ஏற்கனவே அவன் கொண்டு வந்திருந்த வண்ண மைகளும், ஓவியத் தாள்களும் தீர்ந்து போயிருந்ததால் அவன் அவற்றை இன்று சற்று அதிகமாகவே வாங்க வேண்டியிருந்தது. பொதுவாக ஸ்ரீதரின் பொழுதுபோக்குக் கலைகளில் சித்திரம் எழுதுவது முக்கியமான ஒன்றேயாயினும் இன்று அவன் அதில் இவ்வளவு நினைவாயிருந்ததற்குப் புதிய காரணம் ஒன்றும் இருக்கிறது. தன் காதலி பத்மாவின் படமொன்றைத் தன் கையால் எழுத வேண்டுமென்று அவன் “ஐஸ்கிறீம் பார்லரி”ல் தனக்குள் முடிவு செய்திருந்ததே அது.
இந்தக் கட்டுரைத் தொடரை ஆரம்பித்ததே 1961- ல் நான் எழுதிய கட்டுரை ஒன்றில் தமிழ் சமூகம் என்றைக்காவது ஒரு கலை உணர்வு கொண்ட சமூகமாக இருக்குமா என்பதில் எனக்கு சந்தேகம் என்ற எழுதியிருந்ததையும் அந்த மிகக் கசப்பான ஆரூடம் போன்ற தமிழ் சமூகத்தின் குணச்சித்திரம் அன்று என் மனத்தில் பட்டது இன்று வரை மெய்யாகிக் கொண்டிருக்கும் அவலத்தைச் சுட்டிக் காட்டிச் சொல்லியே ஆரம்பித்தேன். அறுபது வருடங்கள் கடந்து விட்டன. அது பற்றி இன்று மறுபடியும் யோசிக்கும்போதுகூட அந்த ஆரூடம், இனியாவது என்றாவது பொய்த்துப் போகக்கூடும் என்று சொல்லுவதற்கான சூசகங்கள் ஏதும் அடி வானம் பூமியைத் தொடும் எல்லையில் கூட, ஒரு சிறு கரும்புள்ளியாகக் கூடத் தென்படுவாதாயில்லை.
வில்லியம் ஃபாக்னர் நவீன அமெரிக்க நாவலாசிரியர்களில் மிக உயர்ந்த இடத்தைப் பெறுபவர். இலக்கியத்திற்கான நோபல் பரிசு 1950ஆம் ஆண்டு ஃபாக்னருக்கு வழங்கப்பட்டது. பத்து நாவல்களையும், ஒரு சிறுகதைத் தொகுப்பையும் எழுதியிருக்கிறார். முதல் உலகப் போரின் போது Royal Air Forceஇல் விமான ஓட்டுனராகப் பணியாற்றினார். எழுத்தின் மூலம் பணம் வருவது தட்டுப்பட்ட போது, ஹாலிவுட்டில் எம். ஜி. எம். நிறுவனத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதினார். சினிமாவுகாக அவர் செய்த வேலைகள் அவரது இலக்கியத் தரத்தைப் பாதிக்கவில்லை. விமானம் ஓட்டுதல், வீடுகளுக்கு வாணம் பூசுதல், படகு ஓட்டுதல் போன்ற தொழில்களைச் செய்து, தனக்கு வேண்டிய சிறிது விஸ்கி, புகையிலை, எழுதுதாள்கள், உணவு ஆகியவற்றைப் பெறுவதற்கான பணத்தைச் சம்பாதித்துக் கொண்டார்.
‘லௌகீகம் வியாபித்த வாழ்வியற்தளம் தனி பொதுவாழ்வின் தரிசனங்களாய் விரிகின்றபோது நான் தரிசித்த, என்னைத் தட்டிவிட்ட நிகழ்வுகள் என் ஜீவனிலேறி அவை சிறுகதைகளாக வடிவம் பெற்றன’’ எனக் கூறும் கவிஞர் கிண்ணியா ஏ எம்.எம் அலியின் இரண்டாவது நூல்தான் ஒரு தென்னைமரம் சிறுகதைத் தொகுப்பு. 1974 இல் இலக்கிய உலகில் தடம் பதித்த கவிஞர் கிண்ணியா ஏ.எம்.எம் அலி அவர்களின் ஆக்கங்கள் தாங்கி வராத தேசிய பத்திரிகைகள்,சஞ்சிகைகளே இல்லையென்றுதான் சொல்லவேண்டும். தேசிய சர்வதேச ரீதியில் நடாத்தப் பட்ட ஏராளமான இலக்கியப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுகளையும் விருதுகளையும் பட்டங்களையும் அள்ளிக் குவித்ததோடு அண்மையில் இலக்கியத்திற்கான கலாபூஷணம் அரச கௌரவத்தையும்பெற்றிருப்பது றிப்பிடத்தக்கது.
இவரின்முதல்கவிதைத்தொகுப்பு குடையும் அடைமழையும். கவிஞர் அண்ணல் அவர்களின் கவிதைத் தொகுப்புக்குப்பின். கிண்ணியாவில் வெளியான கனதியான மரபுக் கவிதைத் தொகுப்பாக குடையும் அடைமழையும் தொகுப்பைத்தான் கூறவேண்டும். உண்மையில் கவிஞர்களின் உரைநடைகள் கவித்துவம் மிக்கவை.வரிகளை விட்டும் விலக விடாது ஒரு காந்தம்போலே விழிகளை ஈர்த்துநிற்பவை.அதிலும் நாம் சார்ந்த சூழற்பின்னணியில் பின்னப்பட்டவையெனில் சொல்லவும் வேணுமா?