ஏன் ‘கிளாசிக்கு’களைப் படிக்க வேண்டும்?

Italo calvinoசில தெரிவிக்கப்பட்ட வரையறைகளிலிருந்து நாம் தொடங்கலாம்.

(1) கிளாசிக்குகள் என்னும் புத்தகங்கள் பற்றி நாம் பொதுவாக மக்கள் இப்படிச் சொல்லக் கேட்டிருக்கிறோம்: “நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். . .” என்று சொல்வதற்குப் பதிலாக “நான் மறுபடியும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். . . ”     இது குறைந்த பட்சம் “மெத்தப் படித்தவர்கள்” என்று தங்களைக் கருதிக் கொள்பவர்களிடத்தில் நடக்கிறது. முதன் முதலாக இந்த உலகினை எதிர்கொள்ளும் நிலையிலிருக்கும் இளவயதுக்காரர்களுக்கு இது பொருந்தாது. மேலும் கிளாசிக்குகள் அவர்களின் அந்த உலகின் ஒரு பாகமாக இருக்கும். வாசித்தல் என்ற வினைச் சொல்லின் முன்னால் இடம் பெறும் அழுத்தத்திற்காக முன்னிடை வேண்டுமானால் ஒரு பிரபலமான புத்தகத்தினை படிக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்வதற்கு அவமானமாக உணர்பவர்களின் பங்கில் இருக்கும் ஒரு சிறிதளவேயான பாசாங்காக இருக்கக் கூடும். அவர்களுக்கு மறுஉறுதிப்பாடளிக்க, நாம் அவதானிக்க வேண்டியது இவ்வளவுதான்: ஒரு மனிதனின் அடிப்படைப் படிப்பென்பது எந்த அளவு விரிவானதாக இருப்பினும் அவனால் படிக்கப்பட்டிராத அடிப்படைப் புத்தகங்கள் ஏராளமான எண்ணிக்கையில் இன்னும் பாக்கி இருக்கும்.

Continue Reading →

நூல் மதிப்புரை: பாகிஸ்தான் சிறுகதைகள்!

[பாகிஸ்தான் சிறுகதைகள்; தொகுப்பு இந்தஜார் ஹுஸேன். தமிழாக்கம் மா. இராமலிங்கம் “எழில் முதல்வன்” வெளியீடு சாகித்ய அகாடமி, [பாகிஸ்தான் சிறுகதைகள்; தொகுப்பு இந்தஜார் ஹுஸேன். தமிழாக்கம் மா. இராமலிங்கம் “எழில் முதல்வன்” வெளியீடு சாகித்ய அகாடமி, குணா பில்டிங்ஸ், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, சென்னை-600 001 பக்கங்கள் 503 விலை ரூ 220  ] பாகிஸ்தான் சிறுகதைகள் தொகுப்பு இது. பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து மத அடைப்படையில், பிரிந்து அறுபது வருடங்களுக்கு மேலாகிறது.  முஸ்லீம்கள் மத அடிப்படையில் மாத்திரம் ஹிந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் இல்லை என்றும். அவர்கள் கலாசாரமும் ,வாழ்நோக்கும், சரித்திரமும் வேறு. என்றும் அவர்கள் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் சிறுபான்மையினராக இருந்துகொண்டு அவர்களது வாழ்வையும் அடையாளங்களையும் காத்துக்கொள்ள முடியாது என்றும் வாதித்து கலவரங்கள் செய்து பிரிந்து சென்றார்கள். அறுபது வருட காலம் இரண்டு தலைமுறைக்கும் மேற்பட்ட காலம் தான். இன்று அறுபது வயதாகிவிட்ட எந்த பாகிஸ்தானியும் அவன் பயந்த ஹிந்து அரசின் கீழும் வாழாதவன் தான். தன் சக மதத்தினராலேயே ஆளப்படுகிறவன். தான் அந்த வாழ்க்கை, அந்த மனிதர்கள் உலகம் அவன் கண்ட கனவுகள் பற்றி இந்தக் கதைகள் சொல்லும் அல்லவா?

Continue Reading →

நினைவுகளின் சுவட்டில் – (73)

எழுத்தாளரும், விமர்சகருமான வெங்கட் சாமிநாதன்சோப்ராவின் தங்கையுடன் பேசிக்கொண்டிருக்கலாம் கொஞ்ச நேரம் என்ற நினைப்பில் நான் சீக்கிரமே அவன் வீட்டுக்குக் கிளம்பினேன். அண்ணனிடம் அவ்வளவு பிரியம் அவளுக்கு. அவன் இல்லாது இருக்க முடியவில்லை அந்த 10 – 11 வயது தங்கைக்கு. திருட்டுத் தனமாக கொஞ்சம் பணம் சேர்த்துக் கொண்டு கிளம்பிவிட்டால், ரோஹ்தக்கிலிருந்து. இது என்ன தில்லியிலிருந்து காஜியாபாத் போகிற மாதிரியா இல்லை க்ரோம்பெட்டிலிருந்து மாம்பலம் போகிற சமாசாரமா? இல்லை நான் அவள் வயதில் வீட்டிலிருந்து ஓடி நிலக்கோட்டை பார்க் கட்டிட தாழ்வாரத்தில் படுத்துத் தூங்கிய சமாசாரமா? ரோஹ்தக்கிலிருந்து பஸ்ஸில் ரயிலில் தில்லி வந்துவிடலாம் தான். ஆனால் தில்லியிலிருந்து ஒரிஸ்ஸாவிலிருக்கும் புர்லா காம்ப்புக்கு வருவது வயதானவர்களுக்கே சிரமம் தரும் காரியம். வழி சிக்கலானது. அங்கங்கே கேட்டு விசாரித்துக்கொண்டு வரவேண்டும் இது அந்நாட்களின் (1950) சமாசாரம். தில்லியில் அவள் இறங்குவது பழைய தில்லி ரயில் நிலையமாக இருக்கும். அங்கிருந்து புது தில்லி  நிலையம் வந்து ரயில் ஏறவேண்டும். தில்லியிலிருந்து ‘பீனா’வில் இறங்க வேண்டும். பின் பீனாவிலிருந்து கட்னி வரை பயணம். பின் மறுபடியும் இறங்கி கட்னியிலிருந்து ஜெர்சகுடா.  வண்டி ஜெர்ஸகுடா வரை நேரே போகுமா இல்லை பிலாஸ்பூரில் இறங்கி கல்கத்தா மெயில் பிடித்து ஜெர்ஸகுடா போகணுமா என்பது இப்போது நினைவில் இல்லை. ஜெர்சகுடாவில் இறங்கி ஒரு பாஸஞ்சர் வண்டி சம்பல்பூருக்குப் போக. சம்பல்பூர் ரோட் (சம்பல்பூர் மெயின் அல்ல) நிலையத்தில் இறங்கி புர்லாவுக்கு பஸ் பிடிக்க வேண்டும். இந்த நாலைந்து இடங்களில் ஏறல் இறங்கல்; பதினோரு வயசுப் பெண், ரோஹ்தக்ககைத் தாண்டி அறியாதவள், கையில் காசில்லாமல் வந்து சேர்ந்து விட்டாள்.  சாதாரண காரியமா?. சாப்பாட்டுக்கு அங்கங்கே என்ன செய்தாள்? என்னவோ வந்து சேர்ந்து விட்டாள் பத்திரமாக. தன்னைச் செல்லம் கொஞ்சும் அண்ணனைத் தேடி. அம்மா அப்பா வேண்டாம். ரோஹ்தக் தோழிகள் வேண்டாம். அண்ணன் போது.ம்.

Continue Reading →

ஜோர்ஜ் லூயி போர்ஹே: ஒரு முன்னுரை

ஜோர்ஜ் லூயி போர்ஹே (1899--1986) வின் பெயர் பல காரணங்களுக்காக சர்வதேசஇலக்கியத்திலும் நவீன தமிழ் இலக்கியத்திலும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. ஒரு நாவல் கூட எழுதாமல் நவீன- பின் நவீனத்துவ புனைகதை எழுத்தை மாற்றியமைத்த போர்ஹே, லத்தீன் அமெரிக்க நாவலின் தந்தை என்று கருதப்படுகிறார். அடிப்படையில் போர்ஹே ஒரு கவிஞர். பிறகுதான் அவர் சிறுகதை எழுத்தாளர். எப்படி ஷேக்ஸ்பியரை முதலில் கவிஞர் என்று  அழைத்து பிறகு நாடகாசிரியர் என்று சொல்வோமோ அப்படி.  ஆங்கில- -அமெரிக்க இலக்கியங்களின் சங்கமங்கள் நடப்பதும் போர்ஹேவின் புனைகதைகளில்தான்[பதிவுகள் இதழில் ஏற்கனவே வெளிவந்த படைப்புகள் அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. பதிவுகள் தனது கடந்த காலத்தில் தமிழ் இலக்கியத்திற்கு, குறிப்பாகக் கணித்தமிழ் இலக்கிய உலகிற்கு ஆற்றிய வளமான பங்களிப்பினை இவ்வித மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால், அன்றைய கணித்தமிழின் ஆரம்ப காலத்தில் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் தமிழ்ப் படைப்பாளிகள் எவ்வளவு ஆர்வத்துடன் பதிவுகள் இதழுடனிணைந்து தங்கள் பங்களிப்பினை நல்கினார்களென்பதையும் இவ்வகையான மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால் இவை முக்கியத்துவம் பெறுகின்றன; இவற்றை மீள் பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன]   ஜோர்ஜ் லூயி போர்ஹே (1899–1986) வின் பெயர் பல காரணங்களுக்காக சர்வதேசஇலக்கியத்திலும் நவீன தமிழ் இலக்கியத்திலும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. ஒரு நாவல் கூட எழுதாமல் நவீன- பின் நவீனத்துவ புனைகதை எழுத்தை மாற்றியமைத்த போர்ஹே, லத்தீன் அமெரிக்க நாவலின் தந்தை என்று கருதப்படுகிறார். அடிப்படையில் போர்ஹே ஒரு கவிஞர். பிறகுதான் அவர் சிறுகதை எழுத்தாளர். எப்படி ஷேக்ஸ்பியரை முதலில் கவிஞர் என்று  அழைத்து பிறகு நாடகாசிரியர் என்று சொல்வோமோ அப்படி.  ஆங்கில- -அமெரிக்க இலக்கியங்களின் சங்கமங்கள் நடப்பதும் போர்ஹேவின் புனைகதைகளில்தான். வாழ்தலின்  பிரதான கேள்விகளையும், மர்மங்களையும், சிக்கல்களையும் போர்ஹேவால் ஒரு குண்டூசியின் தலையில் உட்கார வைக்க முடியும். தனக்கென ஒரு விவரணை மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அவர் மேற்கொண்ட பயணத்தின் வாயிலாக லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களுக்கும் அதன் இலக்கியத்திற்கும் பெரும் பயனை ஈட்டிக் கொடுத்தவர். அவர் எழுதத் தொடங்கிய போது  இருந்த ஸ்பானிய மொழியின் போதாமையை உணர்ந்து, பிரக்ஞைபூர்வமாக இலக்கிய வகைமைகளை முன்னில்லாத வகையில் பிணைத்தும், லத்தீன் அமெரிக்காவின் பாரம்பரியங்களை மீட்டெடுத்தும், மறுகட்டுமானம்  செய்தும், மொழி ரீதியான  கெட்ட பழக்கங்களை ஒதுக்கியும் ஒரு துல்லியமான மொழியை உண்டாக்கினார். 

Continue Reading →

கா. விசயரத்தினத்தின் ‘பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்’

எழுத்தாளர் கா. விசயரத்தினம்கிடைக்கப் பெற்றோம்![‘பதிவுகள்’ இணையத் தளத்தில் உங்களது நூல்கள் பற்றிய விபரங்களை வெளியிட விரும்பினால், பிரதியொன்றினை எமக்கு அனுப்பி வையுங்கள். அனுப்ப விரும்பினால் எம்முடன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com – பதிவுகள் -] இலண்டனில் வசிக்கும் எழுத்தாளர் கா. விசயரத்தினத்தின் ‘பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்’ ( Ancient Tamils Social Imbalances’) நூல் கிடைக்கப் பெற்றோம். ஆசிரியரின் 20 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. தமிழர் இலக்கியம், சமயம், அரசியல், கட்டடக்கலை,  எனப் பல்வேறு விடயங்களை உள்ளடக்கித் தொகுப்பின் ஆக்கங்கள் அமைந்திருக்கின்றன.  மனுநீதி போன்ற  நூல்கள் போதிக்கும் தீண்டாமை, உடன் கட்டை ஏறுதல் போன்ற பெண்களுக்கெதிராக நிலவிய அடக்குமுறைகளைப் பற்றியெல்லாம் தனது எதிர்ப்பினைத் தெரிவிக்கும் ஆசிரியரின் மேற்படி நூலினை வாங்க விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் வருமாறு:

Continue Reading →

தொடர் நாவல்: மனக்கண் (4)

4-ம் அத்தியாயம்: தங்கமணி

ஐஸ்கிறீம் பார்லரில் காதலர்கள்அறிஞர் அ.ந.கந்தசாமி[ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் ‘மனக்கண்’. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ‘பதிவுகளில்’ ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான ‘களனி வெள்ளம்’ , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். ‘தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். – பதிவுகள்

“வழமையான இடம்” என்று கடிதத்தில் குறிக்கப்பட்டிருந்த இடம் பல்கலைக் கழக நூல் நிலையத்துக்குச் சமீபமாக அமைந்திருந்த ஒரு நடை சாலையாகும். உயர்ந்து, தூண்களுடனும் சிமெந்துத் தரையுடனும் விளங்கிய அந்நடைசாலை மாணவர்கள் சந்தித்துப் பேச வாய்ப்பான இடமாயிருந்தது. அந்நடைசாலையின் ஒரு புறத்தில் மேல் வீட்டுக்குச் செல்லும் அகலமான படிக்கட்டுக்கு அருகாமையில் இரண்டு தூண்களுக்கு இடையிலிருந்த இடைவெளியே பத்மாவும் ஸ்ரீதரும் சந்திக்கும் “வழமையான இடம்.” இந்த இடத்தைத் தெரிந்தெடுத்துப் பழக்கப்படுத்தியதில் ஸ்ரீதரைவிட பத்மாவுக்கே முக்கிய பங்குண்டு. எவரும் அதிகம் சந்தேகிக்காதபடி “ஏதோ தற்செயலாகச் சந்தித்தவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்று எண்ணக்கூடிய முறையில் ஓர் ஆணும் பெண்ணும் சந்தித்துப் பேசுவதற்கு இது போன்ற நல்ல இடம் கிடையாதென்பதே பத்மாவின் எண்ணம். ஒரு நாள் இக் கருத்தைப் பத்மா கூற, ஸ்ரீதரும் அறை ஏற்றுக் கொண்டு விட்டதால், அதுவே இப்பொழுது ஸ்ரீதரின் எண்ணமுமாகிவிட்டது. பார்க்கப் போனால், நல்ல விஷயத்தைக் கூட இருளில் மூலையில் தனித்திருந்து பேசினால் காண்பவர்களுக்குச் சந்தேகமேற்படுகிறது. ஆனால் அதே விஷயத்தை ஒளிவு மறைவில்லாத திறந்த இடத்தில் இருவர் பேசிக்கொண்டு நின்றால் அவ்வித ஐயப்பாடு ஏற்படுவதில்லை. மற்ற மாணவர்களோ ஆசிரியர்களோ தங்களைக் காதலர்கள் என்று சந்தேகிக்கக் கூடாதென்ற எண்ணத்தினாலேயே பத்மாவும் ஸ்ரீதரும் இந்த இடத்தைத் தெரிந்தெடுத்திருந்தார்கள். ஆனால் உண்மையிலேயே மற்றவர்கள் ஏமாறினார்களா என்பது வேறு விஷயம். ஓர் ஆணுக்கும் பெண்ணும் – சங்க மரபில் ஒரு தலைவனுக்கும் தலைவிக்கும் – காதல் ஏற்பட்டதும் அவர்களுக்கு எவ்வளவு கள்ளப் புத்திகள் எல்லாம் தோன்றிவிடுகின்றன! தம்மிடையே இருக்கும் காதலை மறைக்க அவர்கள் எத்தனை உபாயங்களைக் கைக்கொள்கிறார்கள்? அதனால் தான் நமது முன்னோர் காதலைக் களவென்று அழைத்தார்கள். எவ்வளவு பொருத்தமான பெயர்!

Continue Reading →

குறுநாவல்: ‘பிள்ளைக்காதல்’

வ.ந.கிரிதரனின் குறுநாவல்: 'பிள்ளைக் காதல்'1.ஸ்கார்பரோ நூலகக் கிளையொன்றில் பன்மொழிப் பிரிவினில் தமிழ் நூல்களைத் தேடிக்கொண்டிருந்த பானுமதியின் கவனத்தை “பானு” என்ற வியப்புடன் கூடிய ஆண் குரலொன்று கலைத்துவிடவே குரல் வந்த திசையினை நோக்கித் திரும்பினாள். அவளால் நம்பவே முடியவேயில்லை. எதிரிலிருந்தவன் சேகரனேதான். எத்தனை வருடங்களுக்குப் பிறகு அவனை அவள் சந்திக்கின்றாள். குறைந்தது இருபத்தைந்து வருடங்களாகவாவதிருக்கும். காலம்தான் எவ்வளவு விரைவாக ஓடி விட்டது. நாட்டு நிலைமை காரணமாகப் புலம்பெயர்ந்து வந்தது நேற்றுத்தான் போலிருக்கிறது. அதற்குள் இத்தனை வருடங்கள் கழிந்தோடி விட்டனவா! வியப்பு நீங்காதவளாக அவனை நோக்கிச் சில கணங்கள் பேச்சற்று நின்றாள் பானுமதி.

Continue Reading →

நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு’

மந்திரிமனையின் உட்தோற்றமொன்று..ஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண அரசர்களின் காலத்தில் இராஜதானியாகத் திகழ்ந்த நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு எவ்விதம் இருந்திருக்கலாமென்பதை வரலாற்று நூல்கள், வெளிக்கள ஆய்வுகள் (Field Work) , தென்னிந்தியக் கட்டடக் கலை நூல்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் விளைந்த தர்க்கத்தின் அடிப்படையில் உய்த்துணர முயன்றதின் விளைவாக உருவானதே இந்த நூல். இதன் முதற்பதிப்பு ஏற்கனவே 1996 டிசம்பரில் ஸ்நேகா (தமிழகம்) மற்றம் மங்கை பதிப்பகம் (கனடா) ஆகிய பதிப்பகங்களின் கூட்டு முயற்சியாக வெளிவந்திருந்தது. இது பற்றிய மதிப்புரைகள் கணயாழி, ஆறாந்திணை (இணைய இதழ்) மற்றும் மறுமொழி (கனடா) ஆகிய சஞ்சிகை இணைய இதழ்களில் வெளிவந்திருந்தன. இலங்கையிலிருந்து கே.எஸ்.சிவகுமாரன் இலங்கையிலிருந்து வெளிவரும் ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகையில் இதுபற்றியதொரு விமரிசனத்தை எழுதியிருந்தார். ஈழத்திலிருந்து வேறெந்தப் பத்திரிகை, சஞ்சிகைகளில் இதுபற்றிய தகவல்கள் அல்லது விமரிசனங்களேதாவது வந்ததாயென்பதை நானாறியேன். இருந்தால் அறியத்தாருங்கள் (ஒரு பதிவுக்காக).

Continue Reading →

நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு’

மந்திரிமனையின் உட்தோற்றமொன்று..நல்லூர் ராஜதானி நகர அமைப்புஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண அரசர்களின் காலத்தில் இராஜதானியாகத் திகழ்ந்த நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு எவ்விதம் இருந்திருக்கலாமென்பதை வரலாற்று நூல்கள், வெளிக்கள ஆய்வுகள் (Field Work) , தென்னிந்தியக் கட்டடக் கலை நூல்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் விளைந்த தர்க்கத்தின் அடிப்படையில் உய்த்துணர முயன்றதின் விளைவாக உருவானதே இந்த நூல். இதன் முதற்பதிப்பு ஏற்கனவே 1996 டிசம்பரில் ஸ்நேகா (தமிழகம்) மற்றம் மங்கை பதிப்பகம் (கனடா) ஆகிய பதிப்பகங்களின் கூட்டு முயற்சியாக வெளிவந்திருந்தது. இது பற்றிய மதிப்புரைகள் கணயாழி, ஆறாந்திணை (இணைய இதழ்) மற்றும் மறுமொழி (கனடா) ஆகிய சஞ்சிகை இணைய இதழ்களில் வெளிவந்திருந்தன. இலங்கையிலிருந்து கே.எஸ்.சிவகுமாரன் இலங்கையிலிருந்து வெளிவரும் ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகையில் இதுபற்றியதொரு விமரிசனத்தை எழுதியிருந்தார். ஈழத்திலிருந்து வேறெந்தப் பத்திரிகை, சஞ்சிகைகளில் இதுபற்றிய தகவல்கள் அல்லது விமரிசனங்களேதாவது வந்ததாயென்பதை நானாறியேன். இருந்தால் அறியத்தாருங்கள் (ஒரு பதிவுக்காக).

Continue Reading →

நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு’

மந்திரிமனையின் உட்தோற்றமொன்று..நல்லூர் ராஜதானி நகர அமைப்புஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண அரசர்களின் காலத்தில் இராஜதானியாகத் திகழ்ந்த நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு எவ்விதம் இருந்திருக்கலாமென்பதை வரலாற்று நூல்கள், வெளிக்கள ஆய்வுகள் (Field Work) , தென்னிந்தியக் கட்டடக் கலை நூல்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் விளைந்த தர்க்கத்தின் அடிப்படையில் உய்த்துணர முயன்றதின் விளைவாக உருவானதே இந்த நூல். இதன் முதற்பதிப்பு ஏற்கனவே 1996 டிசம்பரில் ஸ்நேகா (தமிழகம்) மற்றம் மங்கை பதிப்பகம் (கனடா) ஆகிய பதிப்பகங்களின் கூட்டு முயற்சியாக வெளிவந்திருந்தது. இது பற்றிய மதிப்புரைகள் கணயாழி, ஆறாந்திணை (இணைய இதழ்) மற்றும் மறுமொழி (கனடா) ஆகிய சஞ்சிகை இணைய இதழ்களில் வெளிவந்திருந்தன. இலங்கையிலிருந்து கே.எஸ்.சிவகுமாரன் இலங்கையிலிருந்து வெளிவரும் ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகையில் இதுபற்றியதொரு விமரிசனத்தை எழுதியிருந்தார். ஈழத்திலிருந்து வேறெந்தப் பத்திரிகை, சஞ்சிகைகளில் இதுபற்றிய தகவல்கள் அல்லது விமரிசனங்களேதாவது வந்ததாயென்பதை நானாறியேன். இருந்தால் அறியத்தாருங்கள் (ஒரு பதிவுக்காக).

Continue Reading →